போஸ்டர்ர்ர்...

31-Jul-2013
1 / 20
உருப்படியான காரியம்...: படவிளக்கம்:

பிளாஸ்டிக்கை ஒழிப்போம் என்று சும்மா சொல்லிக்கொண்டு இருக்காமல் திருவள்ளூர் அதிமுகவினர் ஒரு உருப்படியான காரியம் செய்துள்ளனர். பிளாஸ்டிக் பைக்கு மாற்றாக துணிப்பை உபயோகிக்கும் விதத்தில் முதல்வர் படம் போட்ட ஏராளமான துணிப் பைகளை பொதுமக்களுக்கு விநியோகித்து வருகின்றனர். விளம்பர நோக்கம் என்றாலும் நல்லாயிருக்கிற சுவரில் கரிக்கட்டையால் எழுதி நாசம் செய்து விளம்பரம் தேடுவதைவிட இப்படி விளம்பரம் தேடிக்கொள்ளலாம் தப்பில்லை.


படம்:சீனிவாசன், திருவள்ளூர்.

நீங்களும் இது போன்ற வித்தியாசமான படங்கள், போஸ்டர், பேனர், சுவர் ஓவியம் போன்றவைகளை கீழே உள்ள முகவரிக்கு மின்னஞ்சல் செய்யலாம். நீங்கள் அனுப்பும் படங்கள் தரமானதாகவும், உண்மையானதாகவும், உங்களுக்கு சொந்தமானதாகவும் இருக்கட்டும், மறக்காமல் போன் எண்ணைக் குறிப்பிடவும், நன்றி!2 / 20
தாய் நாடு பாரீர்...: உ.பி.,முன்னாள் முதல்வர் முலாயம் சிங்கும்,தமிழக முதல்வர் ஜெயலலிதாவும்தான் நடைபெறும் லோக்சபா தேர்தலில் யார் நாட்டை ஆளப்போவது என்பதை தீர்மானிப்பார்கள் என்று ஒரு செய்தி வெளியானதும் ரத்தத்தின் ரத்தங்கள் வரைந்து வைத்துள்ள சுவர் ஒவியம் இது.படம்:ரகுபதிநீங்களும் இது போன்ற வித்தியாசமான சுவர் ஒவியம்,போஸ்டர்,பேனர் போன்றவைகளை படம் எடுத்து கிழே உள்ள முகவரிக்கு மின்னஞ்சல் செய்யவும். நீங்கள் அனுப்பும் படங்கள் தரமானதாகவும், உண்மையானதாகவும், உங்களுக்கு சொந்தமானதாகவும் இருக்கட்டும், மறக்காமல் உங்கள் போன் எண்ணைக்குறிப்பிடவும்,நன்றி!
3 / 20
எம்ஜிஆர் அழைக்கிறார்...: சென்னையில் மழை வருவது போல மேகமூட்டம் எல்லாம் ஏற்படுகிறது, ஆனால் மழை மட்டும் வரவேமாட்டேன் என்கிறது. இறைவன் எம்ஜிஆர் பக்தர்கள் என்ற அமைப்பினர் மழையை எம்ஜிஆர் அழைப்பது போல ஊரின் மையத்தில் பேனர் வைத்துவிட்டனர். வாவா நதி அலையே என்ற வரியைக்கூட வாவா மழை மேகமே என்று மாற்றிவிட்டனர்.படம்:எல்.சீனிவாசன்,சென்னை.நீங்களும் இது போன்ற வித்தியாசமான போஸ்டர், பேனர், சுவர் ஒவியம் போன்றவைகளை படம் எடுத்து கிழே உள்ள முகவரிக்கு மின்னஞ்சல் செய்யவும். நீங்கள் அனுப்பும் படங்கள் வித்தியாசமானதாகவும், உண்மையானதாகவும், உங்களுக்கு சொந்தமானதாகவும் இருக்கட்டும், மறக்காமல் உங்கள் போன் எண்ணைக்குறிப்பிடவும், நன்றி!
4 / 20
என்னோட பாட்டி கர்ப்பமாயிட்டா...: புள்ளி ராஜாவிற்கு எய்ட்ஸ் வருமா? என்று கேட்டு வந்த விளம்பரத்தை பார்த்து கொஞ்ச நாள் குழம்பித்திரிந்தோம்,பிறகு திவ்யாவிற்கு ஷ்யூரா கிடைக்குமா? என்று ஏக்கத்தோடு எதிர்பார்த்து கிடந்தோம்,அந்த வரிசையில் இப்போது சென்னையின் பல இடங்களில் ‘என்னோட பாட்டி கர்ப்பமாயிட்டா! ’என்று ஆங்கிலத்தில் வைக்கப்பட்டுள்ள விளம்பர பேனரை பார்த்து, இதன் மூலம் என்ன சொல்ல போறாங்களோ என்று பயந்து கிடக்கிறோம்.படம்:சிவா,சென்னைநீங்களும் இது போன்று வித்தியாசமான போஸ்டர்,பேனர்,சுவர் ஓவியம் போன்றவைகளை படம் எடுத்து கீழே உள்ள முகவரிக்கு மின்னஞ்சல் செய்யவும்.நீங்கள் அனுப்பும் படங்கள் தரமானதாகவும்,உண்மையானதாகவும்,உங்களுக்கு சொந்தமானதாகவும் இருக்கட்டும்.மறக்காமல் தொடர்பு எண்ணைக் குறிப்பிடவும்,நன்றி!
5 / 20
எப்போதிருந்து...: நடிகர் சரத்குமார் படம் இடம் பெற்ற ஒரு பேனர்வடசென்னையில் இடம் பெற்றுள்ளது.இதில் அவருக்கு புரட்சி திலகம் என்ற பட்டம் கொடுக்கப்பட்டு உள்ளது.புரட்சி தலைவரிடம் இருந்து புரட்சியையும்,நடிகர் திலகத்திடம் இருந்து திலகத்தையும் பெற்று இவுரு 'புரட்சி திலகமாயிட்டாரு' போல,யாரும் கொடுத்தார்களா அல்லது இவுகளா வச்சுக்கிட்டாகளான்னும் தெரியல.படம்:சந்திரசேகர்,சென்னை.நீங்களும் இது போல பேனர்,போஸ்டர்,போன்றவைகளை படம் எடுத்து கீழே உள்ள முகவரிக்கு மின்னஞ்சல் செய்யவும்.நீங்கள் அனுப்பும் படங்கள் தரமானதாகவும், உண்மையானதாகவும், உங்களுக்கு சொந்தமானதாகவும் இருக்கட்டும்,மறக்காமல் போன் எண்ணைக்குறிப்பிடவும், நன்றி!
6 / 20
அவரு இன்னும் சொல்லலியே...: சென்னையில் வலம்வந்த ஒரு சைக்கிளில் ராகுல் பிரதமராக வாக்களிப்பீர் என்ற வாசகம் எழுதப்பட்ட போர்டு வைக்கப்பட்டு இருந்தது.யாரோ ஒரு காங்.ஆதரவாளர் என்பது தெரிகிறது.ஆனால் நான் பிரதமர் பதவிக்கு போட்டியிடுகிறேன் என்று இன்னும் அவர் வாய் திறந்து சொல்லவில்லையே.படம்:எல்.சீனிவாசன்,சென்னைநீங்களும் இது போன்ற வித்தியாசமான படங்கள், பேனர், போஸ்டர் போன்றவைகளை படம் எடுத்து கிழே உள்ள முகவரிக்கு மின்னஞ்சல் செய்யவும். நீங்கள் அனுப்பும் படங்கள் தரமானதாகவும், உண்மையானதாகவும், உங்களுக்கு சொந்தமானதாகவும் இருக்கட்டும், மறக்காமல் போன் எண்ணைக்குறிப்பிடவும்,நன்றி!
7 / 20
இந்த இடம்தான் கிடைச்சுதா...: தென் சென்னை பகுதியில் அரசு செலவில் வைக்கப்பட்டுள்ள மின்மாற்றியின் (டிரான்ஸ்பார்மர்) கீழே வைத்துள்ள மின் மீட்டரை விளம்பர பலகையாக கருதி யாரோ ஒரு புண்ணியவான் டிரைவர் தேவை என விளம்பரம் செய்துள்ளார். வேலை தேடும் டிரைவர் போன் செய்வாரோ இல்லியோ, இவருக்கு மின்பிரிவில் இருந்தே போன் செய்து செம டோஸ் விடப்போவது நிச்சயம்.படம்: சி. மாரியப்பன்.நீங்களும் இது போன்ற வித்தியாசமான படங்கள், போஸ்டர், பேனர் போன்றவைகளை படம் எடுத்து கீழே உள்ள முகவரிக்கு மின்னஞ்சல் செய்யவும். நீங்கள் அனுப்பும் படங்கள் தரமானதாகவும், உண்மையானதாகவும், உங்களுக்கு சொந்தமானதாகவும் இருக்கட்டும், மறக்காமல் போன் எண்ணைக்குறிப்பிடவும். நன்றி!
8 / 20
நீக்கிட வேண்டியதுதான்..: நாட்டில் சாதிகள் ஒழிந்தால்தான் மனிதம் மலரும் என்பதை வலியுறுத்தும் வகையில் சென்னை ஊர்வலத்தில் கொண்டுவரப்பட்ட போஸ்டர்.தெரு,பாலத்தில் உள்ள சாதியின் பெயரை நீக்கச் சொல்லி அதில் எழுதப்பட்டு இருந்தது.படம்:சத்யசீலன்,சென்னைநீங்களும் இது போன்ற வித்தியாசமான போஸ்டர்,பேனர் போன்றவைகளை படம் எடுத்து கிழே உள்ள முகவரிக்கு மின்னஞ்சல் செய்யவும்.நீங்கள் அனுப்பும் படங்கள் தரமானதாகவும், உண்மையானதாகவும்,உங்களுக்கு சொந்தமானதாகவும் இருக்கட்டும் மறக்காமல் போன் எண்ணைக்குறிப்பிடவும்,நன்றி!
9 / 20
தமிழுக்கும் வேண்டும் மடிக்கணினி...: ஆங்கிலத்தின் ஆதிக்கத்தால் தமிழ் படாதபாடு பட்டுக்கொண்டு இருக்கிறது.,இதை மாற்ற, தமிழைக்காப்பாற்ற வார்த்தைகளால் அல்லாமல் செயலிலும் இறங்க வேண்டும். பாருங்களேன் தமிழ் வழிக்கல்வி பயிலும் மாணவர்கள் என்ன பாவம் செய்தார்கள்,அவர்களுக்கு மடிக்கணினி கிடையாதாம்.கோபம் கொண்ட செங்கல்பட்டு மாணவர்கள் போரட்டத்தில் குதித்துவிட்டனர். முதலில் இவர்களுக்கு வழங்கிவிட்டுதான் வேறு யாருக்கும் வழங்கியிருக்கவேண்டும்.படம்:மாசிலாமணி,காஞ்சிபுரம்.நீங்களும் இது போன்ற சமூக பிரச்னைகளை சொல்லும் பேனர்,போஸ்டர் போன்றவைகளை படம் எடுத்து கிழே உள்ள முகவரிக்கு மின்னஞ்சல் செய்யவும். நீங்கள் அனுப்பும் படங்கள் தரமானதாகவும், உண்மையானதாகவும், உங்களுக்கு சொந்தமானதாகவும் இருக்கட்டும், மறக்காமல் போன் எண்ணைக்குறிப்பிடவும்,நன்றி!
10 / 20
ஆண்களின் காதல் வரலாறாம்...: பெண்களின் காதல் என்பது நாடகமாம்,ஆண்களின் காதல் என்பது சரித்திரமாம்,விழுப்புரத்தில் உலாவரும் மோட்டார் பைக் நம்பர் பிளேட்டில் எழுதப்பட்டுள்ள வாசகம் இது.படம்:ரமேஷ்,விழுப்புரம்நீங்களும் இது போன்ற வித்தியாசமான விஷயங்கள்,போஸ்டர்,பேனர் போன்றவைகளை படம் எடுத்து கீழே உள்ள முகவரிக்கு மின்னஞ்சல் செய்யவும்,நீங்கள் அனுப்பும் படங்கள் தரமானதாகவும்,உண்மையானதாகவும்,உங்களுக்கு சொந்தமானதாகவும் இருக்கட்டும்,மறக்காமல் உங்கள் போன் எண்ணைக்குறிப்பிடவும்,நன்றி!
11 / 20
நல்லாயிரு தங்கச்சி...: இத்தனை நாள் ஹலோ மச்சான்ஸ்னு சொல்லி கம்பி வித்திட்டு இருந்த இந்த தங்கச்சி இப்ப டாஸ்மாக் கடை வாசல் பேனரில் இருந்து கொண்டு ஹலோ அண்ணா நம்ம பார்ல குடிக்கலாம் வாங்கன்னு கூப்பிடுது.அண்ணனை குடிக்கலாம்னு கூப்பிட்ட ஒரே தங்கச்சி நீயாத்தாம்மா இருக்கும்,நல்லாயிரு தங்கச்சி.படம்:மதன் குமார்நீங்களும் இது போன்ற வித்தியாசமான போஸ்டர்,பேனர் போன்றவைகளை படம் எடுத்து கீழே உள்ள முகவரிக்கு மின்னஞ்சல் செய்யவும்.நீங்கள் அனுப்பும் படங்கள் தரமானதாகவும், உண்மையானதாகவும்,உங்களுக்கு சொந்தமானதாகவும் இருக்கட்டும்,மறக்காமல் போன் எண்ணைக்குறிப்பிடவும்,நன்றி!
12 / 20
கபட நாடகமாம்...: கனி மொழியை ராஜ்ய சபா எம்.பி.,ஆக்குவதற்காக திமுக தலைவர் கருணாநிதி-காங்கிரசாருடன் போட்ட கபட நாடகம் என்று சென்னை முழுவதும் போஸ்டர் ஒட்டியுள்ளனர்.ஜெயிக்கும் வரை ஒரு முகத்தையும்,ஜெயித்தபிறகு வேறு முகத்தையும் காட்டுவதைப் பார்த்தால் அப்படித்தான் தெரிகிறது என்கின்றனர் பொதுஜனம்.படம்:திருப்பதி,சென்னைநீங்களும் இது போன்ற போஸ்டர்,பேனர்,சுவர் ஓவியம் போன்றவைகளை படம் எடுத்து கீழே உள்ள முகவரிக்கு மின்னஞ்சல் செய்யவும்.நீங்கள் அனுப்பும் படங்கள் தரமானதாகவும்,உண்மையானதாகவும்,உங்களுக்கு சொந்தமானதாகவும் இருக்கட்டும்,மறக்காமல் உங்கள் தொடர்பு எண்ணைக்குறிப்பிடவும்,நன்றி!
13 / 20
ரொம்ப ‘நல்ல’ ஆசிரியர்...: கோவை மாவட்டம் சிறுமுகை பேரூராட்சி காரமடை ஊராட்சி ஒன்றியம் இலுப்பம்பாளையம் பள்ளியில் படித்து, அதே பள்ளியில் ஆசிரியராக வேலைக்கு சேர்ந்து பின் அதே பள்ளியில் தலைமையாசிரியராகி ஓய்வு பெற்றவர் டி.கே.ராமசாமி.மாநில மற்றும் தேசிய நல்லாசிரியர் விருது பெற்றவர்.தான் படித்த,பணியாற்றிய பள்ளியின் மீது மிகவும் நேசமும்,பாசமும் கொண்ட இவர் பள்ளியின் சுற்றுச்சுவரில் தேசிய தலைவர்கள்,மரம் வளர்ப்பதன் அவசியம்,மழை நீரின் முக்கியத்துவம் குறித்து தனது சொந்த பணம் முப்பதாயிரம் ரூபாய் செலவழித்து ஓவியங்கள் வரைந்து வைத்ததுடன், அதனை அவ்வப்போது துடைத்து பராமரித்தும் வருகிறார்.இவரைப்பற்றி முழுமையாக அறிய இந்த வாரம் நமது இணையதளத்தில் உள்ள 'நிஜக்கதை' பகுதியை கிளிக் செய்து பார்க்கவும்.படம்:பாலாஜி,மேட்டுப்பாளையம்.நீங்களும் இது மாதிரி வித்தியாசமாக சுவர் ஓவியங்கள்,போஸ்டர்,பேனர் போன்றவைகளை படம் எடுத்து கீழே உள்ள முகவரிக்கு மின்னஞ்சல் செய்யவும்.நீங்கள் அனுப்பும் படங்கள் தரமானதாகவும்,உண்மையானதாகவும்,உங்களுக்கு சொந்தமானதாகவும் இருக்கட்டும்,மறக்காமல் போன் எண்ணை குறிப்பிடவும்,நன்றி!
14 / 20
இது யாரோட புலம்பல்...: கோவை நகர தெருக்களில் வலம்வரும் ஆட்டோ ஒன்றின் முதுகில் நடிகர் ரஜினி படம் ஒட்டப்பட்டு அருகிலேயே ‘நன்றி கெட்ட உலகமடா ராமா’ என எழுதப்பட்டுள்ளது.இது யாரோட புலம்பல்னு புரியவில்லை,நன்றி கெட்டுப்போகும் அளவிற்கு ரஜினிக்கு எதுவும் நடந்தமாதிரியும் தெரியவில்லை,ஒரு வேளை ‘என் மாமானாரால் எனக்கு பிளஸ் இல்லை’ என்று மருமகன் தனுஷ் சொன்னதன் எதிரொலியா?அல்லது இது ஆட்டோக்காரர் தனது சொந்த புலம்பலுக்கு ரஜினியின் படத்தை உபயோகித்துக் கொண்டாரா? பார்க்கிறவர்கள் தலையை ஆட்டோக்காரர் பிய்த்துக்கொள்ள வைத்துவிட்டார்,அது மட்டும் நிஜம்.படம்:சிவசுப்பிரமணியன்,கோவைநீங்களும் இது போன்ற வித்தியாசமான போஸ்டர்,பேனர்,சுவர் ஓவியம் போன்றவைகளை படம் எடுத்து கீழே உள்ள முகவரிக்கு மின்னஞ்சல் செய்யவும்.நீங்கள் அனுப்பும் படங்கள் தரமானதாகவும்,உண்மையானதாகவும்,உங்களுக்கு சொந்தமானதாகவும் இருக்கட்டும்,மறக்காமல் போன் எண்ணைக்குறிப்பிடவும்,நன்றி!
15 / 20
மானம்,மரியாதையும் போயிடும்...: உலக போதை ஒழிப்பு விழிப்புணர்வு ஊர்வலம் ஆங்காங்கே மாணவர்களைக் கொண்டு நடத்தப்பட்டது.டாஸ்மாக் கடைகளில் இந்த விழிப்புணர்வு பிரச்சாரத்தை நடத்தினால் நாலு பேராவது திருந்துவார்கள்,மாணவர்களிடம் பதாகைகளை கொடுத்து நடத்தியதால் யாருக்கு என்ன பிரயோசனமோ?,சரி பராவாயில்லை குறைந்தபட்சமாக மதுவின் தீமைகளை அறிந்து, இந்த மாணவர்களாவது குடிக்கு அடிமையாகாமல் இருப்பார்கள்.இவர்கள் ஏந்திவந்த பதாகைகளில் மதுவினால் வேலை வாய்ப்பு போகும் என்று எழுதியிருந்தது,வேலை வாய்ப்பு மட்டுமா போகும், குடிக்கு அடிமையானால் மானம்,மரியாதை,சொத்து ,சுகம் ,உறவு,நட்பு என்று எல்லாமும் போய்விடும்.படம்:சீனிவாசன்,திருவள்ளூர்.நீங்களும் இது போன்ற பாததைகள்,போஸ்டர்,பேனர் போன்றவைகளைப் படம் எடுத்து கீழே உள்ள முகவரிக்கு மின்னஞ்சல் செய்யவும்.நீங்கள் அனுப்பும் படங்கள் தரமானதாகவும்,உண்மையானதாகவும்,உங்களுக்கு சொந்தமானதாகவும் இருக்கட்டும்,மறக்காமல் போன் எண்ணைக்குறிப்பிடவும்,நன்றி!
16 / 20
போலீசா? ரௌடியா?: சென்னை மயிலாப்பூரில் உள்ள ஆட்டோ டிரைவரை போலீசார் தாக்கியதை கண்டித்து சக ஆட்டோ ஒட்டுனர் ஒருவர் தன் ஆட்டோவின் முதுகில் கண்டன வாசகம் எழுதிவைத்துள்ளார். போலீசுக்கு உள்ள தனி அதிகாரமே அடிப்பதுதான்,ஆனால் அந்த அதிகாரத்தை பிரியாணி கொடுக்காட்டி பயன்படுத்தறது,ஆட்டோ வரலைன்னா அடிக்கிறதுன்னு ரொம்ப மட்டமா பயன்படுத்தி காக்கியின் கவுரத்துக்கே கெட்ட பெயர் எடுத்துக்கொடுத்துடுங்றா சில பேரு,அப்புறம் எழுதுன வாசகத்துல ஒரு எழுத்த காணோம் அதுக்கு வேற அடிக்கப்போறாங்க.படம்:சத்தியசீலன்,சென்னைநீங்களும் இது போன்ற வித்தியாசமான போஸ்டர்,பேனர்,சுவர் ஒவியம் போன்றவைகளை படம் எடுத்து கிழே உள்ள முகவரிக்கு மின்னஞ்சல் செய்யவும் .நீங்கள் அனுப்பும் படங்கள் தரமானதாகவும், உண்மையானதாகவும், உங்களுக்கு சொந்தமானதாகவும் இருக்கட்டும்,நன்றி!
17 / 20
அதுக்கு எதுக்கு பீர் குடிக்கணும்...: தண்ணீரை சேமியுங்கள் என்று எழுதிவிட்டு அப்படியே கிழே பீர் குடிக்கவும் என்று எழுதிஒட்டியுள்ளதைப் பார்த்தால் தம்பி ஒரு மார்க்கமான பார்ட்டி போல தெரியுதே.படம்:சிவாநீங்களும் இது போன்ற வித்தியாசமான படங்கள்,போஸ்டர்,பேனர் போன்றவைகளை படம் எடுத்து கிழே உள்ள முகவரிக்கு மின்னஞ்சல் செய்யவும்.நீங்கள் அனுப்பும் படங்கள் தரமானதாகவும்,உண்மையானதாகவும்,உங்களுக்கு சொந்தமானதாகவும் இருக்கட்டும்,மறக்காமல் உங்கள் போன் எண்ணைக்குறிப்பிடவும்,நன்றி!
18 / 20
நல்லா பல் விலக்குங்க...: திருவள்ளூர் மாவட்டம் ஜெகநாதபுரம் ஊராட்சி மன்ற காம்பவுண்டு சுவற்றில் பொதுமக்களுக்கான வேண்டுகோள் வாசகம் எழுதிவைத்துள்ளனர்.காலையிலும்,மாலையிலும் பல் துலக்க வேண்டும் சோப்பு தேய்த்து (கவனிக்கவும் சோப்பு போட்டு அல்ல தேய்த்து)தினமும் குளித்திட வேண்டும் என்று எழுதிவைத்துள்ளனர்.‘நம் மக்களுக்கு இன்னமும் பல் விலக்குங்க’ என்று சொல்லித்தரவேண்டி இருக்குப்பா என்று இதை பார்ப்பவர்கள் வேடிக்கையாக சொல்லி செல்கின்றனர்படம்:சீனிவாசன்,திருவள்ளூர்நீங்களும் இது போன்ற வித்தியாசமான சுவர் வாசகம்,போஸ்டர்,பேனர் போன்றவைகளை பார்த்தால் அதனை படமெடுத்து கீழே உள்ள முகவரிக்கு மின்னஞ்சல் செய்யவும்.நீங்கள் அனுப்பும் படங்கள் தரமானதாகவும்,உண்மையானதாகவும்,உங்களுக்கு சொந்தமானதாகவும் இருக்கட்டும் மறக்காமல் உங்கள் போன் எண்ணைக்குறிப்பிடவும் நன்றி!
19 / 20
மூடை தூக்க சம்பளம் ரூ. 15000 !: ஒரு பக்கம் வேலை வாய்ப்பு இல்லை என்ற புலம்பல் இருந்தாலும் இன்னொரு பக்கம் வேலை பார்க்க சரியான ஆள் இல்லை என்பதும் உண்மையே.கோவை பகுதியில் மூடை தூக்கி பேக்கிங் செய்ய ஆட்கள் தேவை சம்பளம் ரூ.15 ஆயிரம் கொடுப்பதுடன் சாப்பாடு போட்டு தங்குமிடமும் இலவசமாக தரப்படும் என்று விளம்பரம் கொடுத்துள்ளனர்.படம்:ராஜகோபால்நீங்களும் இது போன்ற வித்தியாசமான போஸ்டர்,பேனர் போன்றவைகளை படம் எடுத்து கீழே உள்ள முகவரிக்கு மின்னஞ்சல் செய்யவும்.நீங்கள் அனுப்பும் படங்கள் தரமானதாகவும், உண்மையானதாகவும்,உங்களுக்கு சொந்தமானதாகவும் இருக்கட்டும், மறக்காமல் உங்கள் போன் எண்ணைக்குறிப்பிடவும்,நன்றி!
20 / 20
வீடு போலத்தானே வச்சுருக்கோம்...: சென்னை மெரினா கடற்கரையில் புதிதாக ஒரு போர்டு வைத்துள்ளனர்.,அதில், இது உங்கள் கடற்கரை, உங்கள் வீட்டைப் போல சுத்தமாக வைத்துக்கொள்ள குப்பையை தொட்டியில் போடவும் என்று எழுதிவைத்துள்ளனர்.,இதில் கடற்கரையை வீட்டைப் போல வைத்துக்கொள்ளுங்கள் என்ற வார்த்தையை மட்டும் எடுத்துக்கொண்டு , வீட்டில் சாப்பிடுவது போன்று வகை,வகையான உணவுகளை கொண்டுவந்து சாப்பிட்டுவிட்டு அதன் குப்பையை அப்படியே போட்டுவிட்டு போய்விடுகிறார்கள்.படம்:எம்.ராஜேஷ்,சென்னைநீங்களும் இது போன்ற வித்தியாசமான போஸ்டர்,பேனர்,சுவர் ஓவியம் போன்றவைகளை படம் எடுத்து கிழே உள்ள முகவரிக்கு அனுப்பிவைக்கவும்.நீங்கள் அனுப்பும் படங்கள் தரமானதாகவும்,உண்மையானதாகவும்,உங்களுக்கு சொந்தமானதாகவும் இருக்கட்டும்,மறக்காமல் போன் எண்ணைக்குறிப்பிடவும்,நன்றி!
Advertisement