போஸ்டர்ர்ர்...

20-மார்-2017
1 / 20
தீபா மட்டும்தான் மாதவன் இல்லை...: தீபாவிற்கும் கணவர் மாதவன் பேட்ரிக்கிற்கும் உரசல் ஏற்பட்டதை அடுத்து தீபா பேரவை பேனரில் இருந்த மாதவன் பெயர் கிழிக்கப்பட்டுள்ளது.இடம்:சென்னை.
2 / 20
பாட்டிலை போடாதே...: சமூகத்தில் உள்ளவர்களில் பெரும்பாலானவர்களை குடிக்கு அடிமையாக்கியாச்சு...அதனால இனி குடிக்காதே என்று சொன்னால் கேட்கப்போவது இல்லை, குறைந்தபட்சமாக இதெல்லாம் முக்கியமான இடம் அதுனால குடிச்சுட்டு பாட்டிலை போடாதே என்றுதான் சொல்ல வேண்டியுள்ளது.இடம்:கோவை அனுப்பர்பாளையம் கிராம நிர்வாக அலுவலகம்.படம்:சதீஷ்குமார்
3 / 20
படவிளக்கம்: ரேஷன் பொருட்கள் கிடைக்காதததை கண்டித்து சென்னையில் திமுகவினர் ரேஷன் கடை முன் ஆர்ப்பாட்டம் நடத்தினர். படம்:எஸ்.ரமேஷ்.
4 / 20
வாங்கய்யா வந்து மாத்துங்கய்யா: ரஜினியை அரசியலுக்கு வரச்சொல்லி அவரது ரசிகர்கள் இது போல போஸ்டர் மூலம் அழைப்பு விட்டு அந்த அழைப்பிற்கு வெள்ளி விழாவே முடிந்துவிட்டது ஆனாலும் அழைப்பு விடுவதை ரசிகர்கள் விடுவதாக இல்லை.கோவை ரசிகர்கள் ஒட்டியுள்ள போஸ்டர்.படம்:சதீஷ்குமார்,கோவை.
5 / 20
படிச்சதா வரணும்...: பிளஸ் டூ, பத்தாம் வகுப்பு தேர்வு நடந்து வரும் வேளை இது.மாணவ,மாணவியரின்பிரார்த்தனைகள் அதிகரித்து வருகிறது.
6 / 20
'மலர்'ந்த முகமே வருக: மகளிர் தினத்தை வரவேற்கும் விதத்தில், சென்னை கல்லுாரி மாணவி ஒருவர் தன் முகத்தில் மகளிர் தின வரவேற்பு வாசகங்களும், அதற்கான வண்ணங்களும் இடம் பெறும்படி செய்துவிட்டார்.படம்:சந்திரசேகர்.
7 / 20
என்னய்யா சொல்ல வர்றீங்க...: சென்னையில் முக.ஸ்டாலின் பிறந்த நாளை முன்னிட்டு கட்டப்பட்டு இருந்த பிளக்ஸ் போர்டில் செம்மொழிக் கலைஞரின் செல்பியே என்று வாழ்த்தியிருந்தனர்.படம்:எஸ்.ரமேஷ்,சென்னை.
8 / 20
வேண்டும் வேகத்தடை...: சென்னை ஆவடியைச் சேர்ந்த பொதுமக்கள் தங்கள் பகுதியில் வேகமாக செல்லும் வா கனங்களை கட்டுப்படுத்த வேகத்தடை வேண்டும் என்று கோரிக்கையை எழுதி போஸ்டராக ஒட்டியுள்ளனர்.
9 / 20
ஜெ., படம் மறைப்பு: திருச்சி அண்ணாநகரில் உள்ள அம்மா உணவகத்தின் வாசலில் இருந்த ஜெயலலிதா படம் மறைக்கப்பட்டுள்ளது ஏனோ? படம்:மணிகண்டன்,திருச்சி.
10 / 20
அழகான படம்...: ஊட்டி மலை ரயிலின் அழகில் மயங்காதோர் யார் இருக்கிறார்கள்...அந்த அழகை அப்படியே எடுத்துக்கொண்டு வரும்வகையில், ஊட்டி ரயில் நிலையத்தில் விற்பனை செய்யப்பட்டு வரும் வாழ்த்து அட்டை.
11 / 20
இணைந்த கரங்கள்...: முதல்வர் பன்னீர் செல்வம் வீட்டுக்கு வந்த ஜெ.தீபா.,இருவரும் இணைந்து இரு கரங்களாக செயல்படுவோம் என்றார் அதற்கேற்ப சென்னையில் ஒட்டப்பட்டு வரும் போஸ்டர்கள்.
12 / 20
போயஸ் தோட்டத்து தீர்ப்பு?: கோர்ட் தீர்ப்பை அடுத்து, அங்கு திரண்டு இருந்தவர்கள் கலைந்து சென்றுவிட்ட நிலையில் பாதுகாப்பு தடுப்பை ஒரமாக தள்ளிவைத்துவிட்டு சென்றனர்.தடுப்பிற்கு பின்னால் சசிகலாவின் சுவர் ஒவியம்...படம்:சுரேஷ் கண்ணன்.
13 / 20
தீபா இனி செல்லம்மா...: ஊரே 'சின்னம்மா'வால் ரணகளப்பட்டு கிடக்க இப்போது தீபாவை 'செல்லம்மா' என்று அழைத்து போஸ்டர் ஒட்டியுள்ளனர். படம்:இ.பாண்டியன், ஆர்.கே.பேட்டை.
14 / 20
எங்க எம்எல்ஏ.,க்களை காணோம்...: எங்க ஊர் எம்எல்ஏ.,க்களை காணோம் என்று கோவை பகுதி அதிமுகவினர் மாவட்ட கலெக்டர் மற்றும் போலீஸ் கமிஷனரிடம் புகார் கொடுக்க வந்தனர்.
15 / 20
ஊர்வலம் போவோமா...: ஊர் ஊராக சென்று மக்களை சந்தித்து ஆதரவை திரட்டப்போகிறேன் என்று முதல்வர் பன்னீர்செல்வம் சொல்லியிருக்கிறார்.அவரைப் பொறுத்தவரை ஜெ.,சமாதியைவிட்டு வெளியே வரும்போதே திரண்டிருந்த மக்கள் மத்தியில் ஊர்வலமாகத்தான் வந்தார். படம்:எல்.முருகராஜ்.
16 / 20
மாணவர்களே பிடியுங்கள் துணிப்பை: திருப்பூரில் உள்ள ஈரநில அமைப்பினர் மாணவர்களுக்கு புத்தகங்கள் கொண்டு செல்ல பிளாஸ்டிக் பைகளுக்கு பதிலாக துணிப்பை வழங்கிவருகின்றனர்.
17 / 20
காதி பவனில் நம்மூர் குளிர்பானங்கள்...: ஜல்லிக்கட்டு தொடர்பான போராட்டத்திற்கு பிறகு பன்னாட்டு குளிர்பானங்கள் மீதான மோகம் குறைந்துவரும் அதே நேரத்தில் நம்நாட்டு பானங்கள் மீதான விருப்பமும் பெருகி வருகிறது.வரவேற்கத்தக்க இந்த மாற்றத்தின் முதற்படியாக சென்னை காதிபவனில் அடுக்கிவைக்க பட்டிருக்கும் நம்ம ஊரு பானங்கள்.
18 / 20
ஜியைக் காணோம் ஜி: சென்னையில் உள்ள மல்டி ஸ்பெஷாலிட்டி மருத்துவமனையின் முகப்பில் ஆங்கிலத்தில் உள்ள ஜி யைக்காணோம்.
19 / 20
எல்லோரும் வாக்களிக்க வேண்டும்..: தேசிய வாக்காளர் தினத்தை முன்னிட்டு சென்னை காயிதே மில்லத் கல்லூரியில் நடந்த விழிப்புணர்வு நிகழ்ச்சியில் அனைவரும் வாக்களிக்க வேண்டும் என்பதை வலியுறுத்தி தங்கள் கையெழுத்துகளை பதிவு செய்த கல்லூரி மாணவிகள்.படம்:சத்யசீலன்
20 / 20
பன்னாட்டு பானங்களுக்கு குட்பை: ஜல்லிக்கட்டு போராட்டம் பல கருத்துக்களை முன்வைத்தே சென்றுள்ளது.அதில் ஒன்று பன்னாட்டு குளிர்பானங்களை விடுத்து உடலுக்கு ஊறு விளைக்காத நம்நாட்டு பானங்களை அருந்துவது என்பதாகும்.அதை வலியுறுத்தும் வகையில் கோவையில் ஒரு குளிர்பானம் விற்கும் கடையில் தொங்கவிடப்பட்டுள்ள பேனர்.
Advertisement