போஸ்டர்ர்ர்...

04-Dec-2012
1 / 20
தப்பு தப்பாய்....: ஆந்திர மாநிலம் திருப்பதியில் உள்ள அலமேலு மங்கை கோவிலுக்கும், திருமலையில் உள்ள சீனிவாசப் பெருமாள் கோவிலுக்கும் தமிழகத்தில் இருந்து நிறைய பக்தர்கள் சென்று வருகின்றனர். அவர்களுக்கு உதவும் வகையில் கழிப்பறை மற்றும் குடிநீர் உள்ள இடங்களில் தமிழிலும் போர்டு எழுதி வைத்துள்ளனர். குளிர்ந்த குடிநீர் என்று எளிமையாக சொல்லியிருக்க வேண்டியவர்கள், ஆங்கிலத்தில் உள்ளதை அப்படியே தமிழ்ப்படுத்துவதாக நினைத்து தமிழை தப்பு, தப்பாய் படுத்தி எடுத்துள்ளனர். படம்: பத்மநாபன்நீங்களும் இது போன்ற வித்தியாசமான போஸ்டர், பேனர், சுவர் ஓவியம், கேலிச்சித்திரம் போன்றவைகளை கீழே உள்ள முகவரிக்கு மின்னஞ்சல் செய்யலாம். அனுப்பும் படங்கள் தரமானதாகவும், உங்களுக்கு சொந்தமானதாகவும் இருக்கட்டும். பேஸ்புக் போன்ற சமூக வலைத்தளத்தில் உலாவரும் படங்களை எடுத்து அனுப்பவேண்டாம். நன்றி!
2 / 20
என்னமோ நடக்குது...: கட்சிக்குள் தகராறு பிரச்னை என்றால் முன்பு அந்தந்த மாவட்ட தலைமையிடமே புகாராக சொல்லி சரி செய்து கொள்வார்கள். ஆனால் இப்போது அந்தந்த மாவட்ட தலைமையே சரியில்லை போலிருக்கிறது. ஆகவே கட்சியின் பொதுச்செயலாளருக்கு தகவல் போனால் சரி என்ற நோக்கில், அம்மா தாயே திருவள்ளூர் தெற்கு மாவட்டத்தை காப்பாற்றுங்கள் என்று பேனர் கட்டி தொங்க விட்டு விட்டனர். இதன் காரணமாக சம்பந்தபட்டவர்கள் மீது கட்சி மேலிடம் நடவடிக்கை எடுக்கப்போகிறதா அல்லது இந்த பேனர் கட்டியவர்களை கட்டி தொங்கவிடப் போகிறதா என்பது தெரியவில்லை. படம்: எல். சீனிவாசன், சென்னைநீங்களும் இது போன்ற வித்தியாசமான போஸ்டர், பேனர், சுவர் ஓவியம், கேலிச்சித்திரம் போன்றவைகளை கீழே உள்ள முகவரிக்கு மின்னஞ்சல் செய்யலாம். அனுப்பும் படங்கள் தரமானதாகவும், உங்களுக்கு சொந்தமானதாகவும் இருக்கட்டும். பேஸ்புக் போன்ற சமூக வலைத்தளத்தில் உலாவரும் படங்களை எடுத்து அனுப்பவேண்டாம். நன்றி!
3 / 20
பவானிக்கு கண்ணீர் அஞ்சலி!: ராமேஸ்வரம் கோயில் யானை பவானி கடந்த 46 வருடங்களாக ராமேஸ்வரம் ராமநாதசுவாமி கோயிலின் ஒரு அடையாளமாக இருந்து வந்தது. அனைத்து சுப காரியங்களுக்கும் முன்நின்று ஆசி வழங்கி வந்தது. மேட்டுப்பாளையம் புத்துணர்வு முகாமில் கலந்து கொள்ள சென்ற போது யாரும் எதிர்பாராத சூழ்நிலையில் பவானி இறந்து போனது. பக்தர்களும், ராமேஸ்வரம் வாழ் பொதுமக்களும் பவானியின் இழப்பை தாங்கிக்கொள்ள முடியாமல் இறுதி ஊர்வலத்தில் கலந்து கொண்டு கண்ணீர் விட்டனர். அங்குள்ள யாத்திரை பணியாளர் சங்கம் தங்களது அஞ்சலியை போஸ்டர் அடித்து செலுத்தியிருந்தனர். படம்: சீனிவாசன்நீங்களும் இது போன்ற வித்தியாசமான போஸ்டர், பேனர், சுவர் ஓவியம், கேலிச்சித்திரம் போன்றவைகளை கீழே உள்ள முகவரிக்கு மின்னஞ்சல் செய்யலாம். அனுப்பும் படங்கள் தரமானதாகவும், உங்களுக்கு சொந்தமானதாகவும் இருக்கட்டும். பேஸ்புக் போன்ற சமூக வலைத்தளத்தில் உலாவரும் படங்களை எடுத்து அனுப்பவேண்டாம். நன்றி!
4 / 20
ஒட்டு விழுந்தமாதிரிதான்....: திமுக தலைவர் கருணாநிதியைப் பொறுத்தவரை மு.க.அழகிரி மத்திய அமைச்சரா இருக்கணும்,அதற்காக அந்நிய முதலீடு குறித்தெல்லாம் கவலைப்படுவதாக இல்லை.இதை சொல்வதற்கு வெட்கப்பட்டு சுற்றி வளைத்து பேசி மத்திய அரசுக்கு ஆதரவு என்று கூறினார்.அவர் எப்படி கூறினாலும் தொண்டர்களும்,மக்களும் எப்படி எடுத்துக்கொண்டு உள்ளார்கள் என்பதை இப்படி போஸ்டர் ஒட்டி ஊருக்கே காங்கிரசார் வெளிச்சம் போட்டு காட்டிவிட்டனர்.,வரக்கூடிய லோக்சபா தேர்தலில் சில்லரை வியாபாரிகளிடம் எப்படித்தான் ஒட்டு வாங்கப்போகிறார்களோ...படம்:சென்னை சத்யசீலன்நீங்களும் இது போன்ற போஸ்டர்,பேனர்,சுவர் ஒவியம்,கேலிச்சித்திரம் போன்றவைகளை படம் எடுத்து கிழே உள்ள முகவரிக்கு மின்னஞ்சல் செய்யவும்.நீங்கள் அனுப்பும் படங்கள் தரமானதாகவும்,உங்கள் சொந்த சரக்காகவும் இருக்கட்டும்.பேஸ்புக் போன்ற வலைத்தளத்தில் உலாவரும் படங்களை எடுத்து அனுப்பவேண்டாம்.நன்றி!
5 / 20
அதென்னது ராஜ கலைஞன்...: கருணாநிதியின் பேரனும், ஸ்டாலின் மகனுமான உதயநிதி நடித்து இதுவரை ஒரு படம் தான் வெளிவந்துள்ளது. ஆனால் அதற்குள் அவருக்கு ‘ராஜகலைஞன்’ என்று பட்டம் கொடுத்து போஸ்டர் ஒட்டியுள்ளனர். தவிர உதயநிதிக்கு பட்டி தொட்டி எல்லாம் ரசிகர் மன்றம் இருப்பது போலவும், அதற்கெல்லாம் தலைமையகம் போல, அகில உலக ரசிகர் மன்றம் அமைத்து, அதற்கு ஒரு தலைவர் நியமிக்கப்பட்டுள்ளதாக வேறு போஸ்டர் சொல்கிறது. தலைவராகயிருப்பவர் ஏதோ சமூக சேவைக்கு விருது வாங்குவது போல, இந்த பதவி பெற்றதற்கு தான் படித்த எம்சிஏ படிப்பை வேறு போட்டுக் கொண்டுள்ளார். படம்: சீனிவாசன், சென்னை.நீங்களும் இது போன்ற வித்தியாசமான போஸ்டர், பேனர், சுவர் ஓவியம், கேலிச்சித்திரம் போன்றவைகளை கீழே உள்ள முகவரிக்கு மின்னஞ்சல் செய்யலாம். அனுப்பும் படங்கள் தரமானதாகவும், உங்களுக்கு சொந்தமானதாகவும் இருக்கட்டும். பேஸ்புக் போன்ற சமூக வலைத்தளத்தில் உலாவரும் படங்களை எடுத்து அனுப்பவேண்டாம். நன்றி!
6 / 20
அர்த்தம், அனர்த்தமாகி விட்டதே...: மதுவின் கொடுமைகளை விளக்கும் போராட்டத்தை கையில் எடுத்துக்கொண்டுள்ள ம.தி.மு.க., அடித்துள்ள போஸ்டர் இது. பூரண மதுவிலக்கை அமுல்படுத்தக் கோருவதற்கு பதிலாக, பூரண மதுவிலக்கை தடை செய்யக்கோரி வார்த்தைகள் இடம் பெற்றுள்ளன. அநேகமாக மதுவிலக்கு என்பதன் அர்த்தம் தெளிவாக புரியாததால் ஏற்பட்ட கோளாறாக இருக்கலாம். ஆகவே நல்ல விஷயத்தை கையில் எடுத்துக்கொண்டு இருக்கிறீர்கள், அவசரத்தில் தவறு செய்வது இயல்பு தான், இனியாவது உஷாராகயிருந்தால் சரி. படம்: சந்திரசேகர், சென்னை.நீங்களும் இது போன்ற வித்தியாசமான போஸ்டர், பேனர், சுவர் ஓவியம், கேலிச்சித்திரம் போன்றவைகளை கீழே உள்ள முகவரிக்கு மின்னஞ்சல் செய்யலாம். அனுப்பும் படங்கள் தரமானதாகவும், உங்களுக்கு சொந்தமானதாகவும் இருக்கட்டும். பேஸ்புக் போன்ற சமூக வலைத்தளத்தில் உலாவரும் படங்களை எடுத்து அனுப்பவேண்டாம். நன்றி!
7 / 20
மின்னல் ராணிக்கு அஞ்சலி: உயிராய் உணர்வாய் பழகிய மனிதர்களையே மறந்து விடும் இந்த காலத்தில் தங்களுக்கு உபயோகப்பட்ட குதிரையை மறக்காமல் அதற்கு முதலாம் ஆண்டு நினைவஞ்சலி கடைபிடித்த கோவை, வெங்கிட்டாபுரம் மக்களை உண்மையிலேயே பாராட்ட வேண்டியதுதான். படம்: சிவகுருநாதன், கோவை. நீங்களும் இது போன்ற வித்தியாசமான போஸ்டர், பேனர், சுவர் ஓவியம், கேலிச்சித்திரம் போன்றவைகளை கீழே உள்ள முகவரிக்கு மின்னஞ்சல் செய்யலாம். அனுப்பும் படங்கள் தரமானதாகவும், உங்களுக்கு சொந்தமானதாகவும் இருக்கட்டும். பேஸ்புக் போன்ற சமூக வலைத்தளத்தில் உலாவரும் படங்களை எடுத்து அனுப்பவேண்டாம். நன்றி!
8 / 20
அது என்ன ‘கப்பு?’: சென்னை முகப்பேரைச் சேர்ந்த பூபதி கார்மேகம், தனது ஏரியா வழியாக செல்லும் போது இந்தியன் பேங்க் வாசலில் தொங்கவிடப்பட்டிருந்த பேனரை பார்த்து நின்றுவிட்டார். காரணம் பாதுகாப்பு என்று வருவதற்கு பதிலாக பாதுகப்பு என்று எழுதியிருந்ததால். பேங்க்கில் வேலை பார்ப்பவர்கள் எல்லாம் படித்தவர்களாயிற்றே, மேலதிகாரி முதல் கீழ் உள்ள அதிகாரி வரை பேனரை பார்த்து படித்துவிட்டு தானே தொங்கவிட்டு இருப்பார்கள். எப்படி இப்படி தப்பான வார்த்தையுடன் தொங்க விட்டுள்ளார்கள் என்று ஒரு யோசனை. பிறகு அப்படி ஒரு பெட்டக வசதி ஏதும் இருக்குமோ என்று வேறு சந்தேகம். எதுக்கு குழம்புவானேன், இருக்கவே இருக்கு நம்ம தினமலர்.காமின் போஸ்டர் பகுதி.,அதற்கு அனுப்பிவைத்தால் வாசகர்கள் விவரம் சொல்வார்கள் என்று எண்ணி அனுப்பிவைத்துள்ளார். படம்: பூபதி கார்மேகம். நீங்களும் இது போன்ற வித்தியாசமான பேனர், போஸ்டர், சுவர் ஓவியம், கேலிச்சித்திரம் போன்றவைகளை படம் எடுத்து கீழே உள்ள முகவரிக்கு மின்னஞ்சல் செய்யலாம். அனுப்பும் படங்கள் தரமானதாகவும்,உங்களுக்கு சொந்தமானதாகவும் இருக்கட்டும். பேஸ்புக் போன்ற வலைத்தளத்தில் வரும் படங்களை எடுத்து அனுப்ப வேண்டாம். நன்றி!
9 / 20
வியாபாரத்திலும் நேர்மை: உடுமலையில் பிரிண்டிங் பிரஸ் வைத்திருப்பவரான ரவிக்குமார், வியாபார நிமித்தமாக புதுச்சேரி போயிருந்த போது, அங்கு இருந்த ஒரு ஓட்டலின் வாசலில் இருந்த வாசகங்கள் பிடித்துப்போனதும், படம் எடுத்து நமது போஸ்டர் பகுதிக்கு அனுப்பியுள்ளார். காசு வந்து, கல்லாபெட்டி நிறைந்தால் போதும், எதையும் விற்கலாம் எப்படியும் விற்கலாம் என்ற எண்ணம் கொண்ட வியாபார உலகத்தில், போதையுடன் வருபவர்களும் (அதுவும் புதுச்சேரியில்), அரைகுறை உடையுடன் வருபவர்களும் அனுமதிக்கப்படமாட்டார்கள் என்று எழுதிவைத்துள்ள இந்த கடைக்காரரின் துணிச்சலும், நேர்மையும் பாராட்டப்பட வேண்டியதுதான்.

படம்:உடுமை,ஆர்.ரவிக்குமார்.


நீங்களும் இது போன்ற வித்தியாசமான போஸ்டர், பேனர், சுவர் ஓவியம், கேலிச்சித்திரம் போன்றவைகளை படம் எடுத்து அனுப்பலாம். நீங்கள் அனுப்பும் படம் தரமானதாகவும், உங்களுக்கு சொந்தமானதாகவும் இருக்கட்டும். பேஸ்புக் போன்ற வலைத்தளத்தில் உலாவரும் படங்களை எடுத்து அனுப்பவேண்டாம்.நன்றி!
10 / 20
தூங்காதே... தூங்காதே...: அரசியல் கட்சியினரில் மக்கள் பிரச்னையை கையில் எடுத்துக்கொள்வதில் கம்யூனிஸ்ட் கட்சியினருக்கு பிறகு மதிமுக கட்சியினரைச் சொல்லலாம் போலும். சென்னை திருநின்றாவூரில் மழை காரணமாக குண்டும், குழியுமான பாதைகளை கண்டு கொள்ளாமல் தூங்கும் நெடுஞ்சாலைத் துறையை கிண்டலடித்து ‘தூங்காதே... தூங்காதே’ என்று பேனர் கட்டிவைத்துள்ளனர்.எல்லாம் சரி... நெடுஞ்சாலை துறையை ‘துரை’ யாக்கிவிட்டீர்களே... மத்த நேரமாக இருந்தால் பரவாயில்லை, எப்போதும் வைகோ தன் மகன் துரையை மையமாக வைத்தே செயல்படுகிறார் என்று ஏற்கனவே நாஞ்சில் சம்பத் குற்றம் சாட்டிக் கொண்டு இருக்கும் நிலையில், வைகோவின் தொண்டர்களும் ‘துரை’ ஞாபகமாகவே இருக்கிறார்களோ என்று எண்ணப்போகிறார்கள்.

படம்:சென்னை, நந்தகோபால்.


நீங்களும் இது போன்ற வித்தியாசமான பேனர், போஸ்டர், சுவர் ஒவியம், கேலிச்சித்திரம் போன்றவைகளை படம் எடுத்து அனுப்பலாம். அனுப்பும் படங்கள் தரமானதாகவும், உங்களுக்கு சொந்தமானதாகவும் இருக்கட்டும். பேஸ்புக் போன்ற வலைத்தளத்தில் உலாவரும் படங்களை எடுத்து அனுப்ப வேண்டாம். நன்றி!
11 / 20
தேவை கழிவு நீர்...: ஊர் முழுவதும் டெங்கு காய்ச்சல் பாடாய் படுத்துகிறது; இதற்கு தேங்கிக்கிடக்கும் கழிவு நீரும் முக்கிய காரணம் என்று பிரச்சாரம் செய்யப்படுகிறது.,ஆனால் சென்னை ஆவடியில் ஏற்கனவே சேரும் கழிவு நீர் போதாது என்று, வேறு எங்கோ இருந்து கொண்டுவரப்படும் கழிவு நீரும் இங்குதான் கொட்டப்படுகிறதாம். இதனால் கொதித்து போனவர்கள் இந்த கழிவு நீரெல்லாம் போதாது, இன்னும் நிறைய கொண்டுவந்து கொட்டுங்க, அப்போதுதான் கழிவு நீர் பண்ணையே வைக்கலாம் என்று கிண்டல் செய்து வைத்துள்ள பேனர் இது. அவ்வளவுதானே என நிஜமாகவே கொண்டுவந்து கொட்டிவிடப்போகிறார்கள்.

படம்:சென்னை, நந்தகோபால்.


நீங்களும் இது போன்ற வித்தியாசமான பேனர், போஸ்டர், சுவர் ஓவியம், தட்டியில் வரையப்பட்ட கேலிச்சித்திரம் போன்றவைகளை படம் எடுத்து அனுப்பலாம்.அனுப்பும் படங்கள் தரமானதாகவும், உங்களுக்கு சொந்தமானதாகவும் இருக்கட்டும். பேஸ்புக் போன்ற வலைத்தளத்தில் உலாவரும் படங்களை எடுத்து அனுப்பவேண்டாம். நன்றி!


12 / 20
இது அவ்வளவு கஷ்டமோ?: பொதுவாக வேலை தேடுபவர்களுக்கும்,கொடுப்பவர்களுக்கும் படிப்புதான் இது வரை தகுதியாக இருந்தது.,ஆனால் இங்கே ஒருவர் அதெல்லாம் வேண்டாம்,நேர்மையான ஆளா இருந்தா போதும்,வேலை தருகிறேன் என்று போஸ்டர் அடித்து ஒட்டியுள்ளார்.நேர்மை என்பது அடிப்படை குணமாக இருந்தது போய் ,இப்போது அது அபூர்வமான குணமாகிவிட்டது போலும்.அதுனால்தான் அப்படிப்பட்ட ஆட்களை இப்படி விளம்பரம் செய்து தேடுகிறார்கள் ,இது ஒன்றும் சந்தோஷப்பட வேண்டிய விஷயமில்லை என்பது மட்டும் புரிகிறது.படம்:பார்த்தீபன்.நீங்களும் இது போன்ற போஸடர்,சுவர் ஒவியம்,கேலிச்சித்திரம் போன்றவைகளை படம் எடுத்து அனுப்பலாம்.அனுப்பும் படம் தரமானதாகவும்,உங்களுக்கு சொந்தமானதாகவும் இருக்கட்டும்.பேஸ்புக் போன்ற வலைத்தளங்களில் உலாவரும் படங்களை எடுத்து அனுப்பவேண்டாம்.நன்றி!
13 / 20
ரொம்ப நல்லவங்களா இருக்காங்களே...: மதுரையைச் சேர்ந்த முகமறியாத நண்பர் காளமேகம்.,நமது தினமலர்.காமில் வெளியாகும் போஸ்டர் பகுதியின் தீவிர ரசிகர்.,ஒவ்வொரு நாளும் வெளியாகும் படத்தை பார்த்து, ரசித்து உடனடியாக போனில் தனது கமெண்ட்டை சொல்லிவிடுவார்.நாளடைவில் ஒரு சிறிய கேமிரா வாங்கி அவரே போஸ்டருக்கான படங்களை எடுக்க ஆரம்பித்தார்.,அவர் அனுப்பிவைத்த படங்கள் பலவும் பிரசுரத்திற்கு ஏற்றதாக இல்லை என்பதால் இதுவரை பிரசுரமாகாமல் இருந்தது.,ஆனால் மனிதர் அசராமல் அனுப்பிவைப்பார்.,இப்போது அவர் அனுப்பியுள்ள இந்த போஸ்டர் படம் நன்றாக இருந்ததால் பிரசுரமாகியுள்ளது.வாழ்த்துக்கள் காளமேகம்.,தொடர்ந்து இது போன்ற படங்களை அனுப்பிவையுங்கள்.எப்படி இருக்கீங்க என்று கேட்டுவிட்டு பதிலுக்கு கூட காத்திராமல் பறக்கும் இன்றைய ‘பிரியமான’ உலகில், இவ்வளவு தூரம் உறவையும்,நட்பையும் மதித்து அன்புடன் வரவேற்கும், இந்த வீட்டார் உள்ளபடியே ரொம்ப நல்லவர்கள்தான்.படம்:மதுரை,காளமேகம்.
14 / 20
மின்சார ராசிபலன்: துன்பம் வரும் வேளையில சிரிங்க...என்று சொல்லி வைத்ததற்கு ஏற்ப இன்றைய தமிழக மின்சார நிலமை மாறிவிட்டது.மின்வெட்டு பெருமளவில் துயரத்தை தந்தாலும், இன்னொரு பக்கம் மக்களின் நகைச்சுவை உணர்வை பலவகையில் துõண்டிவிட்டு உள்ளது.அதன் ஒரு கட்டம்தான் இந்த மின்சார ராசிபலன்.படம்:கோவை,செல்வகுமார்.நீங்களும் இது போன்ற போஸ்டர்,சுவர் ஓவியம்,கேலிச்சித்திரம் போன்றவைகளை படம் எடுத்து அனுப்பலாம்.அனுப்பும் படங்கள் தரமானதாகவும்,உங்கள் சொந்த படமாகவும் இருக்கட்டும்.பேஸ்புக் போன்ற வலைத்தளங்களில் உலாவரும் படங்களை எடுத்து அனுப்பவேண்டாம்.நன்றி!
15 / 20
நாங்க பொறுப்பில்லை...: நாட்டில் சட்டம்,ஓழுங்கை மட்டுமல்ல குற்ற நடவடிக்கைகளையும் தடுக்கவேண்டிய பெரும் பொறுப்பில் காவல்துறை உள்ளது.இதன் காரணமாக முன் எச்சரிக்கையாக ,இதற்கெல்லாம் நாங்கள் பொறுப்பில்லை என்று சொல்லிவிட்டால், அப்புறம் யாரும் புகார் கொடுக்க வரமாட்டார்கள் பாருங்கள்.அப்படியே வந்தாலும் நாங்கதான் முன்னாடியே சொல்லியிருக்கிறோம்ல என்று புகாரை தட்டிக்கழித்துவிடலாம் பாருங்கள். சென்னை மாம்பலம் ரயில் நிலையம் பகுதியில் போலீசார் வைத்துள்ள எச்சரிக்கை போர்டு இது.இங்கு வாகனங்களை நிறுத்தி திருடுபோனால் நாங்கள் பொறுப்பல்ல என்று எழுதிவைத்துள்ளனர். இவ்வளவையும் மீறி இங்கு நிறைய வாகனங்கள் நிறுத்தி வைக்கப்படுவதுதான் இன்னும் வேடிக்கை.படம்:குமரேஷ்.நீங்களும் இது போன்ற வித்தியாசமான போஸ்டர்,சுவர் ஒவியம்,கேலிச்சித்திரம் போன்றவைகளை படம் எடுத்து கிழே உள்ள முகவரிக்கு மின்னஞ்சல் செய்யவும்.நீங்கள் அனுப்பும் படம் தரமானதாகவும்,உங்கள் சொந்த படைப்பாகவும் இருக்கட்டும்.நன்றி!
16 / 20
அன்பின் மிகுதியிது...: அன்பின் மிகுதியால் தலைவரை, தந்தையாக பாவித்துக் கொள்வோரில் இந்த பாபுவும் ஒருவர் போலும். வருகின்ற டிசம்பர் 24 ந்தேதி எம்.ஜி.ஆரின் நினைவு தினம் வருகிறது. அந்த தினத்தில் எந்த மாதிரியான நிகழ்ச்சிகள் நடத்தலாம் என்பது குறித்த ஆலோசனைக் கூட்டம் தொடர்பான போஸ்டர் இது. படம்: சத்யசீலன், சென்னை. நீங்களும் இது போன்ற வித்தியாசமான போஸ்டர், சுவரோவியம்,கேலிச்சித்திரம் போன்றவைகளை படம் எடுத்து அனுப்பலாம். நீங்கள் அனுப்பும் படம் தரமானதாகவும், உங்களுக்கு சொந்தமானதாகவும் இருக்கட்டும்.பேஸ்புக் போன்ற சமூக வலைத்தளத்தில் வரும் படங்களை எடுத்து அனுப்ப வேண்டாம்.
17 / 20
யார் அந்த நரகாசுரன்...: தேமுதிக தலைவர் விஜயகாந்தை உதாசீனப்படுத்திவிட்டு முதல்வர் ஜெயலலிதாவை பார்த்த நான்கு தேமுதிக எம்எல்ஏக்களில் நெல்லை மாவட்டம் ராதாபுரம் தொகுதி எம்எல்ஏ மைக்கேல் ராயப்பனும் ஒருவர்.இந்த நிலையில் அந்த பகுதியில் தேமுதிக சார்பில் ஒட்டப்பட்டுள்ள தீபாவளி வாழ்த்து போஸ்டரில் தீபாவளி வாழ்த்தைவிட ‘ஒழிந்தான் நரகாசுரன்’ என்பதே கொட்டை எழுத்தில் அச்சிடப்பட்டுள்ளது. போஸ்டர் ஒட்டியவர்களைப் பொறுத்தவரை ‘நரகாசுரன்’ யார் என்பதில் தெளிவாக இருக்கிறார்கள் என்பது புரிகிறது.
படம்:திருநெல்வேலி எஸ்.முப்பிடாதி.
நீங்களும் இதுபோன்ற வித்தியாசமான போஸ்டர், சுவரொவியம், கேலிச்சித்திரம் போன்றவைகளை படம் எடுத்து கிழே உள்ள முகவரிக்கு மின்னஞ்சல் செய்யவும். அனுப்பும் படங்கள் தரமானதாகவும்,உங்கள் சொந்த படமாகவும் இருக்கட்டும். பேஸ்புக் போன்ற வலைத்தளத்தில் உலாவரும் படங்களை எடுத்து அனுப்ப வேண்டாம்.
18 / 20
தீபாவளி ஸ்பெஷலா இருக்குமோ?: தீபாவளி என்றாலே அசைவத்தை ஒரு கை பார்க்கும் அசைவ பிரியர்கள் அநேகம் பேர் உண்டு. அவர்களும் காலம், காலமாக ஆடு, கோழி, மீன் இவைகளுக்குள்ளேயே சுற்றி, சுற்றி வருகிறார்கள். ஒரு மாற்றத்திற்காக ஒட்டகக்கறி சாப்பிட்டு பார்க்கட்டுமே என்று நினைத்த மயிலாடுதுறை பக்கம் உள்ள சங்கரன்பந்தல் பகுதியைச் சேர்ந்தவர்கள் ஒட்டியுள்ள போஸ்டர் இது.

படம்:குருசாமி


நீங்களும் இது போன்ற வித்தியாசமான போஸ்டர், சுவரொவியம், கேலிச்சித்திரம் போன்றவைகளை கீழே உள்ள முகவரிக்கு மின்னஞ்சல் செய்யலாம். அனுப்பும் படம் வித்தியாசமானதாக, தரமானதாக அனைத்திற்கும் மேலாக உங்கள் சொந்த படமாக இருக்கட்டும். பேஸ்புக் போன்ற வலைத்தளத்தில் வரும் படங்களை எடுத்து அனுப்ப வேண்டாம்.


19 / 20
நாய் கடிக்கும் முன்பா.? பின்பா.?: சங்கராபுரம் பேரூராட்சியில் அங்கிங்கெனாதபடி எங்கும் நாய்கள் நீக்கமற நிறைந்திருக்கின்றன.,வீட்டைவிட்டு வெளியே போனால் நாயிடம் கடி வாங்காமல் திரும்ப வரவேண்டுமே என்பதே, இப்போது அவர்களது அன்றாட பிரச்னை மட்டும் பிரார்த்தனை.இதனை எத்தனை முறை சொன்னாலும்“ பார்த்துக்கலாம்...பார்த்துக்கலாம்” என்று பேரூராட்சி நிர்வாகம் சொல்கிறதாம்..நாய் கடித்த பின் பார்த்துக்கொள்ளலாம் என்கிறார்களா ?என்பது தெரியாத நிலையில், அங்குள்ள ஸ்டார் கிளப் உறுப்பினர்கள் அனைவரின் கவனத்தை கவரும் வகையில் இப்படி ஒரு போஸ்டர் அடித்து ஊர் முழுவதும் ஒட்டி விட்டனர்.

படம்:முகமது ரபி.


நீங்களும் இது போன்ற வித்தியாசமான போஸ்டர்,சுவரொவியம்,கேலிச்சித்திரம் போன்றவைகளை படம் எடுத்து கிழே உள்ள முகவரிக்கு மின்னஞ்சல் செய்யவும்.அனுப்பும் படங்கள் தரமானதாகவும் ,உங்கள் சொந்த சரக்காகவும் இருக்கட்டும்.பேஸ்புக் போன்ற வலைத்தளத்தில் உலாவரும் படங்களை எடுத்து அனுப்பவேண்டாம்.


20 / 20
சிறந்த முறையில் இலவசமாக பரப்பப்படும்....: டெங்கு காய்ச்சல்தான் தற்போது நாடு முழுவதும் பாடாய்படுத்தி வருகிறது. இதற்கு காரணமான கொசுக்களை ஒழிக்கும் முயற்சியில் அரசு பல இடங்களில் மெத்தனமாகவே செயல்படுகிறது. அப்படிப்பட்ட இடங்களில் சிவகாசியும் ஒன்றாக உள்ளது. கொசு உற்பத்தியாக தேவையான தேங்கிக் கிடக்கும் கழிவு நீரை சுத்தம் செய்யச் சொல்லி அலுத்துப்போன அங்குள்ள இளைஞர்கள், வித்தியாசமான போஸ்டர் எழுதி வைத்துவிட்டனர். போஸ்டரில் இது கொசுக்கள் உற்பத்தி மையம் சிவகாசி நகராட்சிக்கு சொந்தமானது, இங்கு கொசுக்கள் சிறந்த முறையில் பாராமரிக்கப்பட்டு, இலவசமாக டெங்கு போன்றவை பரப்பப்படும் என்று எழுதிவைத்துள்ளனர். இதை பார்த்துவிட்டு சிவகாசி நகராட்சி இந்நேரம் அதிரடியாக சுத்தம் செய்து இருக்குமே என்று நினைத்தீர்கள் என்றால் அது பெரிய தப்பு, அதிரடியாக செய்த காரியம் என்று ஒன்று உண்டு என்றால் அது இந்த போஸ்டரை மக்கள் பார்த்துவிடாமல் எடுத்துச் சென்றதுதான்.

படம்:சிவகாசி பி.ரவி.


Advertisement