போஸ்டர்ர்ர்...

18-Dec-2012
1 / 20
உள்ளே ஒண்ணும் இல்லியாம்...: முன்னாள் முதல்வர் கருணாநிதி மின்வெட்டை கண்டித்து சென்னையில் போராட்டம் நடத்தினார். அதற்கு பாராட்டு வந்ததோ இல்லியோ ,போராட்டம் நடக்கும் இடத்தை சுற்றி எதிர்ப்பை சொல்லும் போஸ்டர்கள் நிறைய ஒட்டப்பட்டு இருந்தது. அந்த போஸ்டரில் ஒன்று தான் இது. மின்வெட்டின் காரணகர்த்தரான கருணாநிதி, தற்போது போராட்டம் போன்ற செயல்களில் ஈடுபடுகிறராம். அதை அ.தி.மு.க., விசுவாசிகள் கடுமையான வார்த்தை பிரயோகத்துடன் போஸ்டராக ஒட்டியுள்ளனர். படம்: எல்.சீனிவாசன், சென்னை. நீங்களும் இது போன்ற போஸ்டர், பேனர், சுவர் ஓவியம், கேலிச்சித்திரம் போன்றவைகளை படம் எடுத்து அனுப்பலாம். அனுப்பும் படங்கள் தரமானதாகவும், உங்களுக்கு சொந்தமானதாகவும் இருக்கட்டும். பேஸ்புக் போன்ற வலைத்தளங்களில் உலா வரும் படங்களை எடுத்து அனுப்ப வேண்டாம். நன்றி!
2 / 20
உள்ளத்தில் நல்ல உள்ளம்...: சரியான நேரத்தில் ரத்தம் கிடைக்காததால் பலியாகும் உயிர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. ரத்தம் கிடைக்காததால் தள்ளிப்போகும் அறுவை சிகிச்சைகள் அநேகம். ரத்த தானம் குறித்து, பிரச்சாரம் மேற்கொண்ட போதும், அதிக விழிப்புணர்வு இல்லை என்றே சொல்லவேண்டும். இந்த நிலையில் எப்போது கேட்டாலும் நான் ரத்தம் கொடுக்க தயார். எனது ரத்தம் இந்த குரூப் என்று டி. வடிவேல் என்பவர் தனது மோட்டார் பைக்கில் எழுதிப்போட்டுள்ளார். கட்டாயம் இவரைப் பாராட்ட வேண்டும். படம்: ரபீக் பாஷா நீங்களும் இது போன்ற வித்தியாசமான வார்த்தைகள், போஸ்டர், பேனர், சுவர் ஓவியம், கேலிச்சித்திரம் போன்றவைகளை படம் எடுத்து கீழே உள்ள முகவரிக்கு மின்னஞ்சல் செய்யவும். அனுப்பும் படங்கள் தரமானதாகவும், உங்களுக்கு சொந்தமானதாகவும் இருக்கட்டும். பேஸ்புக் போன்ற வலைத்தளத்தில் உலாவரும் படங்களை எடுத்து அனுப்பவேண்டாம். நன்றி!
3 / 20
லஞ்சமோ... லஞ்சம்...: இப்போது எல்லாம் லஞ்சம் கேட்டால் அவர்களைப்பற்றி ரகசியமாக புகார் கடிதம் கொடுப்பது ஒரு வகை. இன்னோரு வகை இது போல போஸ்டர் அடித்து ஒட்டுவது. சென்னை விருகம்பாக்கத்தில் ஒரு உயர் அதிகாரி தொட்டதற்கு எல்லாம் லஞ்சம் வாங்குகிறராம், பொறுமை இழந்த குடியிருப்போர் நலசங்கத்தினர் இப்படி போஸ்டர் அடித்து ஒட்டிவிட்டனர். படம்: ரமேஷ், சென்னை. நீங்களும் இது போன்ற போஸ்டர், பேனர், சுவர் ஓவியம், கேலிச்சித்திரம் போன்றவைகளை எடுத்து கீழே உள்ள முகவரிக்கு அனுப்பலாம். அனுப்பும் படங்கள் தரமானதாகவும், உங்கள் சொந்த சரக்காகவும் இருக்கட்டும். பேஸ்புக் போன்ற வலைத்தளத்தில் உலாவரும் படங்களை எடுத்து அனுப்பவேண்டாம். நன்றி!
4 / 20
அப்புறம் நட்பு முறிஞ்சிடும்!: ஒவ்வொருவருக்கும் பகிர்ந்து கொள்ள முடியாத ஒரு தனிப்பட்ட ‘பெர்சனல்’ விஷயம் இருக்கும். என்ன தான் நட்பு என்றாலும் அதை பகிர்ந்து கொள்ள முடியாது. ஆனால் அதை வெளியில் சொல்லவும் முடியாது. அப்படிப்பட்ட விஷயங்களில் ஒன்று தான் வாகனங்களை இரவல் கேட்பது. இரவல் தரும் யாருமே முழு மனதுடன் தருவதில்லை. அதை புரிந்து கொள்ளாமல் திரும்ப திரும்ப இரவல் கேட்பவர்களிடம் இருந்து நாசூக்காக தப்பிக்க, வேறு வழியில்லாமல் வாகனத்தின் பின்னாலேயே இவர் எழுதிப்போட்டு விட்டார். படம்: எல்.சீனிவாசன், சென்னை நீங்களும் இது போன்ற வித்தியாசமான காட்சி, போஸ்டர், பேனர், சுவர் ஓவியம், கேலிச்சித்திரம் போன்றவைகளை பார்த்தால் படம் எடுத்து அனுப்புங்கள். நீங்கள் அனுப்பும் படம் தரமானதாகவும், உங்களுக்கு சொந்தமானதாகவும் இருக்கட்டும். பேஸ்புக் போன்ற சமூக வலைத்தளங்களில் உலாவரும் படங்களை எடுத்து அனுப்பவேண்டாம். நன்றி!
5 / 20
இவுரு இப்ப இரணடாவது கலைஞராம்...: மு.க.ஸ்டாலினை இரண்டாவது கலைஞராக வர்ணித்து திருச்சி மணச்சநல்லூர் பகுதியில் வைக்கப்பட்டுள்ள பேனர் இது. முரசொலியில் கடிதம் எழுதியதாலோ, நடைப்பயணம் மேற்கொண்டதாலோ இந்த இரண்டாவது கலைஞர் பட்டத்தை கொடுத்திருப்பார்கள் போலும். என்ன செய்தாலும் முதல் கலைஞர் இந்த இரண்டாவது கலைஞருக்கு தலைமை பதவியை தருவது போல தெரியவில்லையே... படம்: தியாகராஜன் நீங்களும் இது போன்ற வித்தியாசமான போஸ்டர், பேனர், சுவர் ஓவியம், கேலிச்சித்திரம் போன்றவைகளை படம் எடுத்து கீழே உள்ள முகவரிக்கு மின்னஞ்சல் செய்யவும். அனுப்பும் படங்கள் தரமானதாகவும், உங்கள் சொந்த சரக்காகவும் இருக்கட்டும். நன்றி!
6 / 20
கல்வெட்டு வைக்கிற அளவிற்கு போயிருச்சா?: கோயில் சொத்துக்கு ஆசைப்பட்டா குலம் விளங்காது என்பதற்காகத்தான் ‘சிவன் சொத்து கொலை நாசம்’ என்கின்றனர்.,ஆனால் இப்போது கோயில் சொத்தை கொள்ளை அடித்தால்தான் குலம் விளங்கும் என்பது போல சிலர் செயல்படுகின்றனர். கோயில் இடத்தை ஆக்ரமிப்பது எங்கு நடக்கிறதோ.அங்கு அறநிலையத்துறை தலையிட்டு நோட்டீஸ் ஒட்டும்,சுவரில் எழுதிப்போடுவர்., ஆனால் சென்னை மருந்தீஸ்வரர் கோவிலில் கோயில் இடத்தை விற்கவோ, உள்வாடகைக்குவிடவோ யாருக்கும் அதிகாரமில்லை என்று சொல்லி ஒரு கல்வெட்டே வைத்துவிட்டனர்.நிலமை அந்த அளவிற்கு மோசமாக இருக்கும் போலிருக்கு.படம்:எம்.திருப்பதி,சென்னைநீங்களும் இது போன்ற வித்தியாசமான படம்,போஸ்டர்,பேனர்,சுவர் ஓவியம்,கேலிச்சித்திரம் போன்றவைகளை படம் எடுத்து கிழே உள்ள முகவரிக்கு மின்னஞ்சல் செய்யவும்.அனுப்பும் படங்கள் தரமானதாகவும்,உங்களுக்கு சொந்தமானதாகவும் இருக்கட்டும்.நன்றி!
7 / 20
நிம்மதியா தூங்கப்பாருங்க....: தேவைக்கு மேல் உள்ளது எல்லாம் தெய்வத்திற்கே என்ற நிலை போய், இப்போது தேவைக்கு மேல் கிடைக்கவேண்டும் என்பதற்காக, பணத்திற்கு பின்னால் உலகம் ஒடிக்கொண்டு இருக்கிறது. இதற்காக லஞ்சம்,ஊழல்,பொய்,திருட்டு என்று எந்த நிலைக்கு போகவும் சமூகம் தயராகிவிட்டது.இப்படி போனால் நீங்கள் விரட்டிச் செல்வது வேண்டுமானால் கிடைக்கலாம் ஆனால் நிம்மதியான,தூக்கம் என்பது போய்விடும் என்பதை இந்த ஆட்டோ வாசகம் சொல்கிறது.சரிதானே.படம்: ராம்குமார் கணேஷ்நீங்களும் இது போன்ற வித்தியாசமான போஸ்டர்,பேனர்,சுவர் ஓவியம்,கேலிச்சித்திரம் போன்றவைகளை படம் எடுத்து கிழே உள்ள முகவரிக்கு மின்னஞ்சல் செய்யவும்.அனுப்பும் படங்கள் தரமானதாகவும்,உங்களுக்கு சொந்தமானதாகவும் இருக்கட்டும்.பேஸ்புக் போன்ற வலைத்தளத்தில் உலாவரும் படங்களை எடுத்து அனுப்ப வேண்டாம்.நன்றி!
8 / 20
இவுரு வஞ்சகமில்லாத அண்ணனாம்...: கட்சியில் பொறுப்பில் இருக்கும் வரை ‘அண்ணே...அண்ணே’...என்று பொய்யான வாஞ்சை, பாசத்துடன் வலம் வருவதும், அந்த ‘அண்ணன்’ கட்சியை விட்டு விலகினாலோ, விலக்கப்பட்டாலோ உடனே வஞ்சகனே... என போஸ்டர் அடித்து ஒட்டி தலைமையிடம் விசுவாச வேடமிடுவதும் எல்லா கட்சியிலும் நடக்கும் நாடகம் தான்.அந்த நாடகம் இப்போது மதிமுகவிலும் நடக்கிறது போலும். நாஞ்சில் சம்பத் கட்சியை விட்டு விலகியதும் அவரை விமர்சிக்கும் வகையில் கோவையில் ஒட்டப்பட்டுள்ள போஸ்டர். போஸ்டர் அடித்துள்ள செல்வக்குமார் வஞ்சகமறியாத அண்ணனாம், இதன் மூலம் நாஞ்சில் சம்பத் வஞ்சக எண்ணம் கொண்டிருந்த அண்ணன் என்கிறார் போலும். இது போல எத்தனையோ பேரை பார்த்தாகிவிட்டது, இது எத்தனை நாளைக்கோ என்கின்றார் ஒரு மூத்த அரசியல் விமர்சகர். படம்: அ.சிவகுருநாதன், கோவை. நீங்களும் இது போன்ற வித்தியாசமான போஸ்டர், பேனர், சுவர் ஓவியம், கேலிச்சித்திரம் போன்றவைகளை படம் எடுத்து அனுப்பலாம். அனுப்பும் படங்கள் தரமானதாகவும், உங்களுக்கு சொந்தமானதாகவும் இருக்க வேண்டும்.பேஸ்புக் போன்ற வலை தளத்தில் இருந்து படங்களை எடுத்து அனுப்ப வேண்டாம். நன்றி!
9 / 20
அழுவதா...சிரிப்பதா...: இன்றைய தலைமுறை ஒரு பக்கம் கல்வியிலும்,தொழில்நுட்பத்திலும் கலக்கிக்கொண்டு இருக்கின்றது. இன்னொரு பக்கம் எதற்கும் கவலையில்லாமல் இருக்கிறது. ஒரு பொது இடத்தில் காதலிக்க ஆட்கள் தேவை என்றும், இப்போதைக்கு காதல் செய்ய தயராக உள்ளவர்கள் என்று ஏழு பேர் பெயரையும் எழுதி போட்டுள்ளனர். இதை யார் எப்படி எடுத்துக்கொண்டாலும் இவர்களைப் பெற்றவர்கள் நிச்சயமாக சந்தோஷமாக எடுத்துக்கொள்ள மாட்டார்கள். படம்: மைலாப்பூர் குட்டி. நீங்களும் இது போன்ற வித்தியாசமான சுவர் கிறுக்கல், கேலிச்சித்திரம், போஸ்டர், பேனர் போன்றவைகளை பார்த்தால் படம் எடுத்து அனுப்பவும். நீங்கள் அனுப்பும் படம் தரமானதாகவும், உங்கள் சொந்த சரக்காகவும் இருக்கட்டும். பேஸ்புக் போன்ற வலைத்தளத்தில் உலாவரும் படங்களை எடுத்து அனுப்ப வேண்டாம். நன்றி!
10 / 20
இது வேற குட்டி யானை!: குட்டி யானை வாடகைக்கு விடப்படும் என்ற இந்த போர்டை பார்த்துவிட்டு, நிஜமாகவே தும்பிக்கையுடன் கூடிய குட்டி யானை வாடகைக்கு விடப்படுகிறதோ? என எண்ணிவிடாதீர்கள். டாடா ஆட்டோமொபைல் நிறுவனம் விட்டுள்ள டாடா ஏஸ் கமர்சியல் வாகனத்தைத்தான் இப்படி குட்டி யானை என்று எழுதி போட்டுள்ளார்.இந்த வாகனம் அறிமுகம் செய்தபோது குட்டி யானை போல பொருள் சுமக்கும் என்பதை சொல்வதற்காக குட்டியானை என்று அடைமொழி கொடுத்தார்கள்.கடைசியில் வாகனத்தின் பெயரே குட்டி யானை என்றால்தான் தெரியும் என்றளவில் ஆகிவிட்டது.ஒரு விளம்பரம் திரும்ப,திரும்ப சொல்லும் போது அது மக்கள் மனதில் எந்த அளவிற்கு பதிந்து போகும் என்பதற்கு இந்த படமே சாட்சி.படம்:அருண்குமார் கிருஷ்ணன்நீங்களும் இது போன்ற வித்தியாசமான போஸ்டர்,பேனர்,சுவர் ஓவியம்,கேலிச்சித்திரம் போன்றவைகளை படம் எடுத்து கிழே உள்ள முகவரிக்கு மின்னஞ்சல் செய்யவும்.அனுப்பும் படங்கள் தரமானதாகவும்,உங்களுக்கு சொந்தமானதாகவும் இருக்கட்டும்.பேஸ்புக் போன்ற வலைத்தளத்தில் உலாவரும் படங்களை எடுத்து அனுப்பவேண்டாம்.நன்றி!
11 / 20
தப்பு தப்பாய்....: ஆந்திர மாநிலம் திருப்பதியில் உள்ள அலமேலு மங்கை கோவிலுக்கும், திருமலையில் உள்ள சீனிவாசப் பெருமாள் கோவிலுக்கும் தமிழகத்தில் இருந்து நிறைய பக்தர்கள் சென்று வருகின்றனர். அவர்களுக்கு உதவும் வகையில் கழிப்பறை மற்றும் குடிநீர் உள்ள இடங்களில் தமிழிலும் போர்டு எழுதி வைத்துள்ளனர். குளிர்ந்த குடிநீர் என்று எளிமையாக சொல்லியிருக்க வேண்டியவர்கள், ஆங்கிலத்தில் உள்ளதை அப்படியே தமிழ்ப்படுத்துவதாக நினைத்து தமிழை தப்பு, தப்பாய் படுத்தி எடுத்துள்ளனர். படம்: பத்மநாபன்நீங்களும் இது போன்ற வித்தியாசமான போஸ்டர், பேனர், சுவர் ஓவியம், கேலிச்சித்திரம் போன்றவைகளை கீழே உள்ள முகவரிக்கு மின்னஞ்சல் செய்யலாம். அனுப்பும் படங்கள் தரமானதாகவும், உங்களுக்கு சொந்தமானதாகவும் இருக்கட்டும். பேஸ்புக் போன்ற சமூக வலைத்தளத்தில் உலாவரும் படங்களை எடுத்து அனுப்பவேண்டாம். நன்றி!
12 / 20
என்னமோ நடக்குது...: கட்சிக்குள் தகராறு பிரச்னை என்றால் முன்பு அந்தந்த மாவட்ட தலைமையிடமே புகாராக சொல்லி சரி செய்து கொள்வார்கள். ஆனால் இப்போது அந்தந்த மாவட்ட தலைமையே சரியில்லை போலிருக்கிறது. ஆகவே கட்சியின் பொதுச்செயலாளருக்கு தகவல் போனால் சரி என்ற நோக்கில், அம்மா தாயே திருவள்ளூர் தெற்கு மாவட்டத்தை காப்பாற்றுங்கள் என்று பேனர் கட்டி தொங்க விட்டு விட்டனர். இதன் காரணமாக சம்பந்தபட்டவர்கள் மீது கட்சி மேலிடம் நடவடிக்கை எடுக்கப்போகிறதா அல்லது இந்த பேனர் கட்டியவர்களை கட்டி தொங்கவிடப் போகிறதா என்பது தெரியவில்லை. படம்: எல். சீனிவாசன், சென்னைநீங்களும் இது போன்ற வித்தியாசமான போஸ்டர், பேனர், சுவர் ஓவியம், கேலிச்சித்திரம் போன்றவைகளை கீழே உள்ள முகவரிக்கு மின்னஞ்சல் செய்யலாம். அனுப்பும் படங்கள் தரமானதாகவும், உங்களுக்கு சொந்தமானதாகவும் இருக்கட்டும். பேஸ்புக் போன்ற சமூக வலைத்தளத்தில் உலாவரும் படங்களை எடுத்து அனுப்பவேண்டாம். நன்றி!
13 / 20
பவானிக்கு கண்ணீர் அஞ்சலி!: ராமேஸ்வரம் கோயில் யானை பவானி கடந்த 46 வருடங்களாக ராமேஸ்வரம் ராமநாதசுவாமி கோயிலின் ஒரு அடையாளமாக இருந்து வந்தது. அனைத்து சுப காரியங்களுக்கும் முன்நின்று ஆசி வழங்கி வந்தது. மேட்டுப்பாளையம் புத்துணர்வு முகாமில் கலந்து கொள்ள சென்ற போது யாரும் எதிர்பாராத சூழ்நிலையில் பவானி இறந்து போனது. பக்தர்களும், ராமேஸ்வரம் வாழ் பொதுமக்களும் பவானியின் இழப்பை தாங்கிக்கொள்ள முடியாமல் இறுதி ஊர்வலத்தில் கலந்து கொண்டு கண்ணீர் விட்டனர். அங்குள்ள யாத்திரை பணியாளர் சங்கம் தங்களது அஞ்சலியை போஸ்டர் அடித்து செலுத்தியிருந்தனர். படம்: சீனிவாசன்நீங்களும் இது போன்ற வித்தியாசமான போஸ்டர், பேனர், சுவர் ஓவியம், கேலிச்சித்திரம் போன்றவைகளை கீழே உள்ள முகவரிக்கு மின்னஞ்சல் செய்யலாம். அனுப்பும் படங்கள் தரமானதாகவும், உங்களுக்கு சொந்தமானதாகவும் இருக்கட்டும். பேஸ்புக் போன்ற சமூக வலைத்தளத்தில் உலாவரும் படங்களை எடுத்து அனுப்பவேண்டாம். நன்றி!
14 / 20
ஒட்டு விழுந்தமாதிரிதான்....: திமுக தலைவர் கருணாநிதியைப் பொறுத்தவரை மு.க.அழகிரி மத்திய அமைச்சரா இருக்கணும்,அதற்காக அந்நிய முதலீடு குறித்தெல்லாம் கவலைப்படுவதாக இல்லை.இதை சொல்வதற்கு வெட்கப்பட்டு சுற்றி வளைத்து பேசி மத்திய அரசுக்கு ஆதரவு என்று கூறினார்.அவர் எப்படி கூறினாலும் தொண்டர்களும்,மக்களும் எப்படி எடுத்துக்கொண்டு உள்ளார்கள் என்பதை இப்படி போஸ்டர் ஒட்டி ஊருக்கே காங்கிரசார் வெளிச்சம் போட்டு காட்டிவிட்டனர்.,வரக்கூடிய லோக்சபா தேர்தலில் சில்லரை வியாபாரிகளிடம் எப்படித்தான் ஒட்டு வாங்கப்போகிறார்களோ...படம்:சென்னை சத்யசீலன்நீங்களும் இது போன்ற போஸ்டர்,பேனர்,சுவர் ஒவியம்,கேலிச்சித்திரம் போன்றவைகளை படம் எடுத்து கிழே உள்ள முகவரிக்கு மின்னஞ்சல் செய்யவும்.நீங்கள் அனுப்பும் படங்கள் தரமானதாகவும்,உங்கள் சொந்த சரக்காகவும் இருக்கட்டும்.பேஸ்புக் போன்ற வலைத்தளத்தில் உலாவரும் படங்களை எடுத்து அனுப்பவேண்டாம்.நன்றி!
15 / 20
அதென்னது ராஜ கலைஞன்...: கருணாநிதியின் பேரனும், ஸ்டாலின் மகனுமான உதயநிதி நடித்து இதுவரை ஒரு படம் தான் வெளிவந்துள்ளது. ஆனால் அதற்குள் அவருக்கு ‘ராஜகலைஞன்’ என்று பட்டம் கொடுத்து போஸ்டர் ஒட்டியுள்ளனர். தவிர உதயநிதிக்கு பட்டி தொட்டி எல்லாம் ரசிகர் மன்றம் இருப்பது போலவும், அதற்கெல்லாம் தலைமையகம் போல, அகில உலக ரசிகர் மன்றம் அமைத்து, அதற்கு ஒரு தலைவர் நியமிக்கப்பட்டுள்ளதாக வேறு போஸ்டர் சொல்கிறது. தலைவராகயிருப்பவர் ஏதோ சமூக சேவைக்கு விருது வாங்குவது போல, இந்த பதவி பெற்றதற்கு தான் படித்த எம்சிஏ படிப்பை வேறு போட்டுக் கொண்டுள்ளார். படம்: சீனிவாசன், சென்னை.நீங்களும் இது போன்ற வித்தியாசமான போஸ்டர், பேனர், சுவர் ஓவியம், கேலிச்சித்திரம் போன்றவைகளை கீழே உள்ள முகவரிக்கு மின்னஞ்சல் செய்யலாம். அனுப்பும் படங்கள் தரமானதாகவும், உங்களுக்கு சொந்தமானதாகவும் இருக்கட்டும். பேஸ்புக் போன்ற சமூக வலைத்தளத்தில் உலாவரும் படங்களை எடுத்து அனுப்பவேண்டாம். நன்றி!
16 / 20
அர்த்தம், அனர்த்தமாகி விட்டதே...: மதுவின் கொடுமைகளை விளக்கும் போராட்டத்தை கையில் எடுத்துக்கொண்டுள்ள ம.தி.மு.க., அடித்துள்ள போஸ்டர் இது. பூரண மதுவிலக்கை அமுல்படுத்தக் கோருவதற்கு பதிலாக, பூரண மதுவிலக்கை தடை செய்யக்கோரி வார்த்தைகள் இடம் பெற்றுள்ளன. அநேகமாக மதுவிலக்கு என்பதன் அர்த்தம் தெளிவாக புரியாததால் ஏற்பட்ட கோளாறாக இருக்கலாம். ஆகவே நல்ல விஷயத்தை கையில் எடுத்துக்கொண்டு இருக்கிறீர்கள், அவசரத்தில் தவறு செய்வது இயல்பு தான், இனியாவது உஷாராகயிருந்தால் சரி. படம்: சந்திரசேகர், சென்னை.நீங்களும் இது போன்ற வித்தியாசமான போஸ்டர், பேனர், சுவர் ஓவியம், கேலிச்சித்திரம் போன்றவைகளை கீழே உள்ள முகவரிக்கு மின்னஞ்சல் செய்யலாம். அனுப்பும் படங்கள் தரமானதாகவும், உங்களுக்கு சொந்தமானதாகவும் இருக்கட்டும். பேஸ்புக் போன்ற சமூக வலைத்தளத்தில் உலாவரும் படங்களை எடுத்து அனுப்பவேண்டாம். நன்றி!
17 / 20
மின்னல் ராணிக்கு அஞ்சலி: உயிராய் உணர்வாய் பழகிய மனிதர்களையே மறந்து விடும் இந்த காலத்தில் தங்களுக்கு உபயோகப்பட்ட குதிரையை மறக்காமல் அதற்கு முதலாம் ஆண்டு நினைவஞ்சலி கடைபிடித்த கோவை, வெங்கிட்டாபுரம் மக்களை உண்மையிலேயே பாராட்ட வேண்டியதுதான். படம்: சிவகுருநாதன், கோவை. நீங்களும் இது போன்ற வித்தியாசமான போஸ்டர், பேனர், சுவர் ஓவியம், கேலிச்சித்திரம் போன்றவைகளை கீழே உள்ள முகவரிக்கு மின்னஞ்சல் செய்யலாம். அனுப்பும் படங்கள் தரமானதாகவும், உங்களுக்கு சொந்தமானதாகவும் இருக்கட்டும். பேஸ்புக் போன்ற சமூக வலைத்தளத்தில் உலாவரும் படங்களை எடுத்து அனுப்பவேண்டாம். நன்றி!
18 / 20
அது என்ன ‘கப்பு?’: சென்னை முகப்பேரைச் சேர்ந்த பூபதி கார்மேகம், தனது ஏரியா வழியாக செல்லும் போது இந்தியன் பேங்க் வாசலில் தொங்கவிடப்பட்டிருந்த பேனரை பார்த்து நின்றுவிட்டார். காரணம் பாதுகாப்பு என்று வருவதற்கு பதிலாக பாதுகப்பு என்று எழுதியிருந்ததால். பேங்க்கில் வேலை பார்ப்பவர்கள் எல்லாம் படித்தவர்களாயிற்றே, மேலதிகாரி முதல் கீழ் உள்ள அதிகாரி வரை பேனரை பார்த்து படித்துவிட்டு தானே தொங்கவிட்டு இருப்பார்கள். எப்படி இப்படி தப்பான வார்த்தையுடன் தொங்க விட்டுள்ளார்கள் என்று ஒரு யோசனை. பிறகு அப்படி ஒரு பெட்டக வசதி ஏதும் இருக்குமோ என்று வேறு சந்தேகம். எதுக்கு குழம்புவானேன், இருக்கவே இருக்கு நம்ம தினமலர்.காமின் போஸ்டர் பகுதி.,அதற்கு அனுப்பிவைத்தால் வாசகர்கள் விவரம் சொல்வார்கள் என்று எண்ணி அனுப்பிவைத்துள்ளார். படம்: பூபதி கார்மேகம். நீங்களும் இது போன்ற வித்தியாசமான பேனர், போஸ்டர், சுவர் ஓவியம், கேலிச்சித்திரம் போன்றவைகளை படம் எடுத்து கீழே உள்ள முகவரிக்கு மின்னஞ்சல் செய்யலாம். அனுப்பும் படங்கள் தரமானதாகவும்,உங்களுக்கு சொந்தமானதாகவும் இருக்கட்டும். பேஸ்புக் போன்ற வலைத்தளத்தில் வரும் படங்களை எடுத்து அனுப்ப வேண்டாம். நன்றி!
19 / 20
வியாபாரத்திலும் நேர்மை: உடுமலையில் பிரிண்டிங் பிரஸ் வைத்திருப்பவரான ரவிக்குமார், வியாபார நிமித்தமாக புதுச்சேரி போயிருந்த போது, அங்கு இருந்த ஒரு ஓட்டலின் வாசலில் இருந்த வாசகங்கள் பிடித்துப்போனதும், படம் எடுத்து நமது போஸ்டர் பகுதிக்கு அனுப்பியுள்ளார். காசு வந்து, கல்லாபெட்டி நிறைந்தால் போதும், எதையும் விற்கலாம் எப்படியும் விற்கலாம் என்ற எண்ணம் கொண்ட வியாபார உலகத்தில், போதையுடன் வருபவர்களும் (அதுவும் புதுச்சேரியில்), அரைகுறை உடையுடன் வருபவர்களும் அனுமதிக்கப்படமாட்டார்கள் என்று எழுதிவைத்துள்ள இந்த கடைக்காரரின் துணிச்சலும், நேர்மையும் பாராட்டப்பட வேண்டியதுதான்.

படம்:உடுமை,ஆர்.ரவிக்குமார்.


நீங்களும் இது போன்ற வித்தியாசமான போஸ்டர், பேனர், சுவர் ஓவியம், கேலிச்சித்திரம் போன்றவைகளை படம் எடுத்து அனுப்பலாம். நீங்கள் அனுப்பும் படம் தரமானதாகவும், உங்களுக்கு சொந்தமானதாகவும் இருக்கட்டும். பேஸ்புக் போன்ற வலைத்தளத்தில் உலாவரும் படங்களை எடுத்து அனுப்பவேண்டாம்.நன்றி!
20 / 20
தூங்காதே... தூங்காதே...: அரசியல் கட்சியினரில் மக்கள் பிரச்னையை கையில் எடுத்துக்கொள்வதில் கம்யூனிஸ்ட் கட்சியினருக்கு பிறகு மதிமுக கட்சியினரைச் சொல்லலாம் போலும். சென்னை திருநின்றாவூரில் மழை காரணமாக குண்டும், குழியுமான பாதைகளை கண்டு கொள்ளாமல் தூங்கும் நெடுஞ்சாலைத் துறையை கிண்டலடித்து ‘தூங்காதே... தூங்காதே’ என்று பேனர் கட்டிவைத்துள்ளனர்.எல்லாம் சரி... நெடுஞ்சாலை துறையை ‘துரை’ யாக்கிவிட்டீர்களே... மத்த நேரமாக இருந்தால் பரவாயில்லை, எப்போதும் வைகோ தன் மகன் துரையை மையமாக வைத்தே செயல்படுகிறார் என்று ஏற்கனவே நாஞ்சில் சம்பத் குற்றம் சாட்டிக் கொண்டு இருக்கும் நிலையில், வைகோவின் தொண்டர்களும் ‘துரை’ ஞாபகமாகவே இருக்கிறார்களோ என்று எண்ணப்போகிறார்கள்.

படம்:சென்னை, நந்தகோபால்.


நீங்களும் இது போன்ற வித்தியாசமான பேனர், போஸ்டர், சுவர் ஒவியம், கேலிச்சித்திரம் போன்றவைகளை படம் எடுத்து அனுப்பலாம். அனுப்பும் படங்கள் தரமானதாகவும், உங்களுக்கு சொந்தமானதாகவும் இருக்கட்டும். பேஸ்புக் போன்ற வலைத்தளத்தில் உலாவரும் படங்களை எடுத்து அனுப்ப வேண்டாம். நன்றி!
Advertisement