போஸ்டர்ர்ர்...

09-Jan-2013
1 / 20
எண்ணெய் தடவாதீங்கப்பா..: பெரும்பாலான கோவில்களில் தீபம் ஏற்றும் பக்தர்கள், கையில் படும் எண்ணெயை துணியில் துடைத்துக்கொள்வது இல்லை.,கோயில்களுக்குள் இருக்கும் தூண்களிலும், நந்தியின் மீதும் துடைத்துவிட்டு வருவார்கள்.இதனை நாசூக்காக நந்திகேசுவரரே சொல்வது போல ஒரு பக்தர் போர்டு எழுதிவைத்துள்ளார்.நல்லா சொன்னாலே கேட்கமாட்டார்கள்,நாசூக்காக சொல்லியா கேட்கப்போகிறார்கள்.படம்:குமரேஷ்.நீங்களும் இது போன்ற வித்தியாசமான போஸ்டர்,பேனர்,சுவர் ஓவியம்,கேலிச்சித்திரம் போன்றவைகளை படம் எடுத்து கிழே உள்ள முகவரிக்கு மின்னஞ்சல் செய்யவும்.நீங்கள் அனுப்பும் படங்கள் தரமானதாகவும்,உங்களுக்கு சொந்தமானதாகவும் இருக்கட்டும்.நன்றி!
2 / 20
எண்ணெய் தடவாதீங்கப்பா..: பெரும்பாலான கோவில்களில் தீபம் ஏற்றும் பக்தர்கள், கையில் படும் எண்ணெயை துணியில் துடைத்துக்கொள்வது இல்லை.,கோயில்களுக்குள் இருக்கும் தூண்களிலும், நந்தியின் மீதும் துடைத்துவிட்டு வருவார்கள்.இதனை நாசூக்காக நந்திகேசுவரரே சொல்வது போல ஒரு பக்தர் போர்டு எழுதிவைத்துள்ளார்.நல்லா சொன்னாலே கேட்கமாட்டார்கள்,நாசூக்காக சொல்லியா கேட்கப்போகிறார்கள்.படம்:குமரேஷ்.நீங்களும் இது போன்ற வித்தியாசமான போஸ்டர்,பேனர்,சுவர் ஓவியம்,கேலிச்சித்திரம் போன்றவைகளை படம் எடுத்து கிழே உள்ள முகவரிக்கு மின்னஞ்சல் செய்யவும்.நீங்கள் அனுப்பும் படங்கள் தரமானதாகவும்,உங்களுக்கு சொந்தமானதாகவும் இருக்கட்டும்.நன்றி!
3 / 20
அதுக்கு ஏன் செருப்பு?: பொதுமக்கள் சார்பில் குப்பை கொட்டவேண்டாம் என்று எழுதி, அறிவிப்பு என்பதற்கு பதிலாக அரிவிப்பு என்று தப்பாக எழுதியது கூட தப்பில்லை,ஆனால் போர்டில் செருப்பையும் சேர்த்து தொங்கவிட்டுள்ளீர்கள் அதுதான் ஏன்?என்பது புரியவில்லை. படம்:சென்னை,நந்தகோபால்.நீங்களும் இது போன்ற வித்தியாசமான போஸ்டர்,பேனர்,சுவர் ஓவியம்,கேலிச்சித்திரம் போன்றவைகளை படம் எடுத்து கிழே உள்ள முகவரிக்கு மின்னஞ்சல் செய்யவும்.அனுப்பும் படங்கள் தரமானதாகவும்,உங்களுக்கு சொந்தமானதாகவும் இருக்கட்டும்.நன்றி!
4 / 20
செயின்ட் ஜார்ஜ் கோட்டை பேசுகிறது...: மணி அடித்து முதல்வரை உட்கார வைத்ததில் இருந்தே இங்குள்ள அதிமுகவினர் மத்திய அரசு மீது கோபமாகத்தான் இருக்கின்றனர். தங்கள் கோபத்தை பல்வேறு விதத்தில் வெளிப்படுத்தி வருகின்றனர். அதில் ஒரு வழியே இது. முதல்வர் ஆள்வதால் செயின்ட் ஜார்ஜ் கோட்டை பிரமாதமாக இருக்கிறதாம். விரைவில் டில்லி செங்கோட்டையிலும் பொறுப்பேற்று அதனையும் முதல்வர் பிரமாதப்படுத்துவராம். படம்: எஸ்.ரமேஷ். நீங்களும் இது போன்ற வித்தியாசமான போஸ்டர், பேனர், சுவர் ஓவியம், கேலிச்சித்திரம் போன்றவைகளை படம் எடுத்து கீழே உள்ள முகவரிக்கு மின்னஞ்சல் செய்யவும். நீங்கள் அனுப்பும் படங்கள் தரமானதாகவும், உங்களுக்குச் சொந்தமானதாகவும் இருக்கட்டும். நன்றி!
5 / 20
எங்கேயோ பார்த்த மாதிரி இருக்கே!: பத்து விரல்களிலும் பத்து மோதிரம், கழுத்து நிறைய செயின், கைச்செயின் என்று நடமாடும் நகைக்கடை போல சில வருடங்களுக்கு முன் வடசென்னையில் வலம் வந்தவரை, திடீரென ஒரு நாள் பல்வேறு மோசடி குற்றச்சாட்டு காரணமாக போலீசார் பிடித்து சென்றனர். அதற்கு பிறகு ரொம்ப நாளாக ஆளையே காணோம். இப்போது திடீரென வடசென்னையில் திரும்பிய பக்கமெல்லாம் கர்ணன் கெட்டப்பில் அவரது பேனர். விசாரித்த போது ஆள் வெளியே வந்து ரொம்ப நாளாச்சு, அண்ணன் இப்ப கர்ணன் மாதிரி நிறைய தானம் தர்மம் எல்லாம் பண்றார்ல அதுதான் பேனர் என்றனர் அவரது விசுவாசிகள். படம்: எஸ்.சந்திரசேகர் நீங்களும் இது போன்ற வித்தியாசமான பேனர்,போஸ்டர்,சுவர் ஓவியம்,கேலிச்சித்திரம் போன்றவைகளை படம் எடுத்து கீழே உள்ள முகவரிக்கு மின்னஞ்சல் செய்யவும். நீங்கள் அனுப்பும் படங்கள் தரமானதாகவும்,உங்களுக்கு சொந்தமானதாகவும் இருக்கட்டும். நன்றி!
6 / 20
‘லவ்’விற்கு இப்படி ஒரு அர்த்தமா?: ‘லவ்’ என்றால் காதல் என்று தானே பொருள். ஆனால் இந்த மோட்டார் சைக்கிள் ஓட்டுனரோ ‘லவ்’ என்றால் பணம், நேரம், மனம், வாழ்க்கை எல்லாம் பாழ் என்ற அர்த்தத்தில் எழுதி வைத்துள்ளார். ரொம்ப பாதிக்கப்பட்டு இருப்பாரோ? படம்: வேல்முருகன். நீங்களும் இது போன்ற வித்தியாசமான எழுத்துக்கள், போஸ்டர், பேனர், கேலிச்சித்திரம் போன்றவைகளை படம் எடுத்து கீழே உள்ள முகவரிக்கு மின்னஞ்சல் செய்யவும். நீங்கள் அனுப்பும் படங்கள் தரமானதாகவும், உங்களுக்கு சொந்தமானதாகவும் இருக்கட்டும். நன்றி!
7 / 20
‘பார்’க்காம போயிடக்கூடாதுல்ல...: இங்கே பள்ளிக்கூடம் இருக்கிறது பார்த்து செல்லவும். இங்கே ஆஸ்பத்திரி இருக்கிறது ஹார்ன் அடிக்காமல் வாகனத்தை செலுத்தவும் என்பது போன்ற போர்டுகள் தான் மக்கள் பார்க்கும் படியாக, முன்பெல்லாம் வைப்பார்கள். ஆனால் இப்போது அப்படியில்லை. நிலைமை மாறிவிட்டது. குடித்து விட்டு வண்டி ஓட்டக்கூடாது என்று சொல்வதை நம்பி யாரும் குடிக்காமல் போய்விடப்போகிறார்களே என்ற ‘அக்கறையுடன்’, ஓட்டுனர்கள் பார்க்கும்படியாக நடுரோட்டில் வைக்கப்பட்டுள்ள டாஸ்மாக் விளம்பரம். படம்: சீனிவாசன், திருவள்ளூர். நீங்களும் இது போன்ற வித்தியாசமான போஸ்டர், பேனர், சுவர் ஓவியம், கேலிச்சித்திரம் போன்றவைகளை படம் எடுத்தால் கீழே உள்ள முகவரிக்கு மின்னஞ்சல் செய்யவும். நீங்கள் அனுப்பும் படங்கள் தரமானதாகவும், உங்களுக்கு சொந்தமானதாகவும் இருக்கட்டும். நன்றி!
8 / 20
நல்லாயிருக்கே...: கூட்டல், கழித்தல், பெருக்கல், வகுத்தல் போன்ற கணித குறியீடுகளைக் கொண்ட அழகான வாழ்க்கை கணக்கு இது. படம்: கிருஷ்ணகுமார் ஒரு விளக்கம்: கடந்த போஸ்டர் படமானது மணமக்கள் பெயர்களைக் கொண்ட பேனரில் அவர்களது படிப்பு தொடர்பாக குறும்பாக சில படிப்புகள் இடம் பெற்றிருந்தது. உண்மையில் அப்படி ஏதும் இடம் பெறவில்லை. ஆனால் உண்மையில் இடம் பெற்றது போல கிராபிக்ஸ் செய்து சிவகாசி வாசகர் ஜெகன் அனுப்பி பிரசுரமாகி விட்டது. இதனை திரு. வெங்கடேஷ் என்ற வாசகர் நாகரீகமாக சுட்டிக்காட்டியிருந்தார். வாசகர்களை மலை போல நம்புகிறோம். ஆகவே திரும்ப, திரும்ப வேண்டிக்கொள்வது எல்லாம் உண்மையை மட்டுமே அனுப்புங்கள் என்பதைத்தான். இப்போதும் அதையே தான் சொல்கிறோம். தயவு செய்து எந்த வாசகரும் இந்த கிராபிக்ஸ் தவறை இன்னொருமுறை செய்யாதீர்கள். வாசகர் ஜெகனின் தவறு என்றாலும் பொறுப்பாளர் என்ற முறையில் இதற்கு மன்னிப்பு கேட்டுக் கொள்கிறோம்.
9 / 20
இது உடையல்ல... உணர்வு.: வீரத்துறவி சுவாமி விவேகானந்தரின் 150வது பிறந்த தின விழா வருகின்ற 12/1/13 ந்தேதி வருகிறது.அன்று துவங்கி வருடம் முழுவதும் இவரது பிறந்த நாள் கொண்டாட்டம் நடைபெறுகிறது. இதற்காக நாடு முழுவதும் திட்டமிடல் நடந்துகொண்டு இருக்கிறது.இது தொடர்பாக விற்பனைக்கு வந்துள்ள ‘டிசர்ட்’ ஒன்றினை அணிந்துள்ளார் இவர்., வெறுனே விவேகானந்தர் படம் மட்டும் என்று இல்லாமல் அவரது வார்த்தைகளும் இடம் பெற்றுள்ளதால், ‘டிசர்ட்டை’ பார்ப்பதுடன் படிக்கவும் செய்கின்றனர்.படம்:பிரகாஷ் நீங்களும் இது போன்ற போஸ்டர்,பேனர்,சுவர் ஓவியம்,கேலிச்சித்திரம் போன்றவைகளை படம் எடுத்து கிழே உள்ள முகவரிக்கு மின்னஞ்சல் செய்யவும்.நீங்கள் அனுப்பும் படங்கள் தரமானதாகவும்,உங்களுக்கு சொந்தமானதாகவும் இருக்கட்டும்.நன்றி!
10 / 20
உடனே தூக்கில் போடு: படம் விளக்கம்:டில்லியில் ஓடும் பஸ்சில் கயவர்களால் கற்பழிக்கப்பட்ட மருத்துவ மாணவி 13 நாள் போராட்டத்தில் தோற்று மரணம் அடைந்துவிட்டார். இதற்கு காரணமான குற்றவாளிகளை உடனே தூக்கில் ‌போட வேண்டும் என்று பள்ளி மாணவிகள் பதாகைகளை தாங்கிச்சென்றனர்.படம் உதவி: அசோசியட் பிரஸ்.
11 / 20
விழித்தெழு,கொதித்தெழு....:

டில்லியில், மருத்துவ மாணவிக்கு நடந்த பாலியியல் கொடுமை காரணமாக தேசமே கொதித்தெழுந்துள்ளது.,போலீஸ்காரர் மரணத்தை காரணம்வைத்து போராடுபவர்களை களங்கப்படுத்தவும்,பலவீனப்படுத்தவும் நடந்த முயற்சிகள் தோற்றுப்போயுள்ளது.போதும் போததற்கு ஜனாதிபதி மகன் வேறு இந்த விஷயத்தில் மூக்கை நுழைத்து வாங்கிக்கட்டிக்கொண்டு இருக்கிறார்.மக்கள் ,குறிப்பாக இளைய சமுதாயம் வெகுண்டு எழுந்துள்ளது.இப்போது இந்த போராட்டம் சென்னையில் மையம் கொண்டுள்ளது.அதன் எதிரொலியே இந்த போஸ்டர்.


படம்:மகபூப்பாட்ஷா


நீங்களும் இது போன்ற போஸ்டர்,பேனர்,சுவர் ஓவியம்,கேலிச்சித்திரம் போன்றவைகளை படம் எடுத்து அனுப்பலாம்.அனுப்பும் படங்கள் தரமானதாகவும்,உங்களுக்கு சொந்தமானதாகவும் இருக்கட்டும்.பேஸ்புக் போன்ற வலைத்தளத்தில் உலாவும் படங்களை எடுத்து அனுப்பவேண்டாம்.நன்றி!


12 / 20
புதிய ஆத்திசூடி: இல்லாத மின்சாரத்தை சேகரிக்க எப்படியெல்லாம் சொல்லிக்கொடுக்கிறார்கள் பாருங்கள்.அ,ஆ எழுத்தை பயன்படுத்தி சேலம் மின் பகிர்மான கோட்டத்தினர்(இப்பல்லாம் வேலை இல்லாததால் நிறைய நேரம் இருக்கும் போலும்) நிறையவே யோசிக்கின்றனர் போலும்...நீங்களும் இது போன்ற வித்தியாசமான நோட்டீஸ்,போஸ்டர்,பேனர்,சுவர் ஓவியம்,கேலிச்சித்திரம் போன்றவைகளை படம் எடுத்து கிழே உள்ள முகவரிக்கு மின்னஞ்சல் செய்யவும்.அனுப்பும் படங்கள் தரமானதாகவும்,உங்களுக்கு சொந்தமானதாகவும் இருக்கட்டும்.நன்றி!
13 / 20
பொருத்தமில்லாத படம் போடலாமா?: எத்தனை ஆண்டுகளானாலும் மறக்க முடியாத சோகத்தை சுமந்து கொண்டிருப்பது தான் சுனாமி. எட்டு ஆண்டுகளுக்கு முன் இதே நாளன்று சுனாமியால் பலியான பல்வேறு உயிர்களுக்கு அஞ்சலி செலுத்தும் நிகழ்ச்சி சென்னையில் இன்று (26/12/12) நடைபெற்றது. அம்மாவின் ஆணைக்கிணங்க இந்த நிகழ்ச்சியை நடத்துவதாக பேனர் கட்டிய அதிமுகவினர், பேனரில் முதல்வர் ஜெயலலிதாவின் சிரித்த முகத்தை போட்டதற்கு பதிலாக, சாதாரணமான படத்தை போட்டு இருக்கலாம், அல்லது படமே போடாமல் கூட விட்டிருக்கலாம். இந்த சிரிப்பு சோகத்தின் கனத்தை குறைத்து மதிப்பிடும் என்பதை இனியாவது உணர்வார்களா.? படம்: எஸ். ரமேஷ், சென்னை நீங்களும் இது போன்ற வித்தியாசமான பேனர், போஸ்டர், சுவர் ஓவியம், கேலிச்சித்திரம் போன்றவைகளை படம் எடுத்து கீழே உள்ள முகவரிக்கு மின்னஞ்சல் செய்யவும். அனுப்பும் படங்கள் தரமானதாகவும், உங்களுக்கு சொந்தமானதாகவும் இருக்கட்டும்.
14 / 20
கிணத்தைக் காணோம்...: சினிமாவில் அவ்வப்போது நகைச்சுவைக்காக கையாளப்படும் ‘கிணத்தைக் காணோம்’ விஷயம், கன்னியாகுமரி மாவட்டம் களியாக்காவிளை பகுதியில் மெய்யாலுமே நடந்து விட்டது போலும். அங்குள்ள காம்ரேட்கள் போஸ்டர் அடித்து ஒட்டியுள்ளனர். காணாமல் போன கிணத்தை திருடியவர்கள் வந்த விலைக்கு பக்கத்து மாநிலமான கேரளாவிற்கு விற்றுவிடப்போகிறார்கள். அதற்குள் கண்டுபிடித்துவிடுங்கள். படம்: முகமது கனி நீங்களும் இது போன்ற வித்தியாசமான போஸ்டர், பேனர், சுவர் ஓவியம், கேலிச்சித்திரம் போன்றவைகளை படம் எடுத்து அனுப்பலாம். அனுப்பும் படங்கள் தரமானதாகவும், உங்களுக்குச் சொந்தமானதாகவும் இருக்கட்டும். நன்றி!
15 / 20
ஐயாவுக்கு நாலு தோசை...: காஞ்சிபுரம் மாவட்டம், கூடுவாஞ்சேரி டி. 3, காவல் நிலையத்தின் உதவி ஆய்வாளருக்கு, சட்டம் ஒழுங்கை கட்டிக்காக்கும் கண்ணியமான வேலைப்பளுவின் போது ஏற்பட்ட களைப்பினை போக்கிக் கொள்ள, நாலு தோசை சாப்பிட வேண்டி இருந்திருக்கிறது. நடந்து போய் சாப்பிடக்கூட முடியாத அளவு களைத்துப் போனார் போலும். அதனால் தனது முத்திரையை ஒரு பேப்பரில் பொறித்து தனது கையெழுத்தையும் போட்டு, நான்கு தோசை கொடுத்தனுப்பவும் என கால் கடுதாசி கொடுத்தனுப்பிய விஷயமே இது., தோசைக்கு காசு கொடுத்தார? காவல்துறை முத்திரையை இதற்கு பயன்படுத்தலாமா? என்பதெல்லாம் கேட்கக்கூடாத கேள்விகள். படம்: வேல்முருகன்நீங்களும் போஸ்டர், பேனர், சுவர் ஓவியம், கேலிச்சித்திரம் போன்றவைகளை படம் எடுத்து அனுப்பலாம். அனுப்பும் படங்கள் தரமானதாகவும், உங்களுக்குச் சொந்தமானதாகவும் இருக்கட்டும். நன்றி!
16 / 20
கருணாநிதிக்கு கண்டனம்: முன்னாள் முதல்வர் கருணாநிதிக்கு அவரது நாக்கு தான் பலமும், பலவீனமும். சமீபத்தில் மின்வெட்டைக் கண்டித்து அவர் நடத்திய ஆர்ப்பாட்டத்திற்கு போதிய வரவேற்பு கிடைக்காததால் வெறுத்துப் போனவர், பேசும் போது தேவையில்லாமல் தினமலர் பற்றி கருத்து வெளியிட்டு இருந்தார். அவரது கருத்திற்கு தற்போது பல பக்கங்களில் இருந்தும் கண்டனம் கிளம்பியுள்ளது. மதுரையில் ஒட்டப்பட்டுள்ள கண்டன போஸ்டர் இது. படம்: வி.காளமேகம். நீங்களும் போஸ்டர், பேனர், சுவர் ஓவியம், கேலிச்சித்திரம் போன்றவைகளை படம் எடுத்து அனுப்பலாம். அனுப்பும் படங்கள் தரமானதாகவும், உங்களுக்குச் சொந்தமானதாகவும் இருக்கட்டும். நன்றி!
17 / 20
ரொம்ப நல்லவங்க...: தவித்த வாய்க்கு தண்ணீர் தருவதற்காக, யாரோ ஒரு புண்ணியவான், சென்னை செங்குன்றம் பகுதியில் தண்ணீர் தருவதற்கு ஏற்பாடு செய்திருந்தார். சில நாட்கள் நன்றாகத்தான் போய்க்கொண்டு இருந்தது. நிறைய பேர் தண்ணீர் குடித்து தாகம் தீர்ந்து சென்றனர். திடீரென யாரோ ஒரு புண்ணியவான் தண்ணீர் பிடித்துக் குடிக்க பயன்பட்டுக் கொண்டிருந்த, சங்கிலியால் கட்டப்பட்டிருந்த டம்ளரையும், தண்ணீர் வரும் குழாயையும் திருடிச் சென்றுவிட்டார். ரெண்டையும் விற்றால் அதிகபட்சம் கால் கிலோ பேரீச்சம்பழம் தான் கிடைத்திருக்கும். ஆனால் அவர் செய்த இந்த நல்ல காரியத்தால் இப்போது அங்கு தண்ணீர் தர்மம் செய்வது நிறுத்தப்பட்டு அதற்கான காரணம் எழுதிப்போடப்பட்டுள்ளது. படம்: நந்தகோபால், சென்னை நீங்களும் இது போன்ற வித்தியாசமான எழுத்து கொண்ட போர்டு, பேனர், சுவர் ஓவியம், கேலிச்சித்திரம் போன்றவைகளை பார்த்தால் படம் எடுத்து கீழே உள்ள முகவரிக்கு மின்னஞ்சல் செய்யவும். நீங்கள் எடுக்கும் படம் கூடுமானவரை தரமானதாகவும், உங்களுக்கு சொந்தமானதாகவும் இருக்கட்டும். நன்றி!
18 / 20
அதுக்குள்ள கடன கொடுத்தரணும்:

படம் விளக்கம்


வரும் 21-ம் தேதி உலகம் அழியப்போகிறது என்ற வதந்தி பள்ளிக்குழந்தைகளிடம் இருந்து இப்போது பெரியவர்களுக்கும் பரவிவிட்டது. திருச்சியில் மொபைல் போன் தொடர்பான பொருள் விற்பவர் ஒருவர் இதை சீரியசாக எடுத்துக்கொண்டாரா? இல்லை வேடிக்கையாக எடுத்துக் கொண்டாரா என்பது தெரியவில்லை.தனது கடை வாசலில் எனக்கு தரவேண்டிய கடனை வரும் 20-ம் தேதிக்குள் கொடுத்துவிடவும் என்று எழுதிபோட்டுள்ளார்.படம் தியாகராஜன்


நீங்களும் இது போன்ற வித்தியாசமான போஸ்டர், பேனர், சுவர் ஓவியம்,கேலி சித்திரம், போன்றவைகளை படம் எடுத்து கீழே உள்ள முகவரிக்கு மின்னஞ்சல் செய்யவும், அனுப்பும் உங்கள் படம் தரமானதாகவும், உங்களுக்கு சாந்தமானதாகவும் இருக்கட்டும் நன்றி..


19 / 20
உள்ளே ஒண்ணும் இல்லியாம்...: முன்னாள் முதல்வர் கருணாநிதி மின்வெட்டை கண்டித்து சென்னையில் போராட்டம் நடத்தினார். அதற்கு பாராட்டு வந்ததோ இல்லியோ ,போராட்டம் நடக்கும் இடத்தை சுற்றி எதிர்ப்பை சொல்லும் போஸ்டர்கள் நிறைய ஒட்டப்பட்டு இருந்தது. அந்த போஸ்டரில் ஒன்று தான் இது. மின்வெட்டின் காரணகர்த்தரான கருணாநிதி, தற்போது போராட்டம் போன்ற செயல்களில் ஈடுபடுகிறராம். அதை அ.தி.மு.க., விசுவாசிகள் கடுமையான வார்த்தை பிரயோகத்துடன் போஸ்டராக ஒட்டியுள்ளனர். படம்: எல்.சீனிவாசன், சென்னை. நீங்களும் இது போன்ற போஸ்டர், பேனர், சுவர் ஓவியம், கேலிச்சித்திரம் போன்றவைகளை படம் எடுத்து அனுப்பலாம். அனுப்பும் படங்கள் தரமானதாகவும், உங்களுக்கு சொந்தமானதாகவும் இருக்கட்டும். பேஸ்புக் போன்ற வலைத்தளங்களில் உலா வரும் படங்களை எடுத்து அனுப்ப வேண்டாம். நன்றி!
20 / 20
உள்ளத்தில் நல்ல உள்ளம்...: சரியான நேரத்தில் ரத்தம் கிடைக்காததால் பலியாகும் உயிர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. ரத்தம் கிடைக்காததால் தள்ளிப்போகும் அறுவை சிகிச்சைகள் அநேகம். ரத்த தானம் குறித்து, பிரச்சாரம் மேற்கொண்ட போதும், அதிக விழிப்புணர்வு இல்லை என்றே சொல்லவேண்டும். இந்த நிலையில் எப்போது கேட்டாலும் நான் ரத்தம் கொடுக்க தயார். எனது ரத்தம் இந்த குரூப் என்று டி. வடிவேல் என்பவர் தனது மோட்டார் பைக்கில் எழுதிப்போட்டுள்ளார். கட்டாயம் இவரைப் பாராட்ட வேண்டும். படம்: ரபீக் பாஷா நீங்களும் இது போன்ற வித்தியாசமான வார்த்தைகள், போஸ்டர், பேனர், சுவர் ஓவியம், கேலிச்சித்திரம் போன்றவைகளை படம் எடுத்து கீழே உள்ள முகவரிக்கு மின்னஞ்சல் செய்யவும். அனுப்பும் படங்கள் தரமானதாகவும், உங்களுக்கு சொந்தமானதாகவும் இருக்கட்டும். பேஸ்புக் போன்ற வலைத்தளத்தில் உலாவரும் படங்களை எடுத்து அனுப்பவேண்டாம். நன்றி!
Advertisement