போஸ்டர்ர்ர்...

30-Jan-2013
1 / 20
கும்பாபிஷேகத்தில் கருணாநிதி...: தனக்கும் கடவுளுக்கும் ரொம்ப தூரம் என்று தி.மு.க., தலைவர் கருணாநிதி சொல்லியுள்ளது அவர்களது தொண்டர்களுக்கு தெரியாதா, அல்லது தெரிந்தும் அவரை கிண்டல் செய்கின்றனரா என்று தெரியவில்லை. திருச்சி உக்கிரகாளியம்மன் கோயில் விழா தொடர்பாக தி.மு.க.,வினர் வைத்துள்ள பேனரில் அம்மன், கோபுர படத்துடன் கருணாநிதி படமும் இடம் பெற்றுள்ளது. படம்: திருச்சி தியாகராஜன் நீங்களும் இது போன்ற வித்தியாசமான படங்கள், பேனர், கேலிச்சித்திரம், சுவர் ஓவியம் போன்றவைகளை படம் எடுத்து கீழே உள்ள முகவரிக்கு மின்னஞ்சல் செய்யவும். நீங்கள் அனுப்பும் படங்கள் தரமானதாகவும், உங்களுக்குச் சொந்தமானதாகவும் இருக்கட்டும். நன்றி!
2 / 20
இதயம் துடிக்க மறுத்தால்...: கண்ட இடங்களில் கிறுக்கக் கூடாது தான். ஆனாலும் சில நேரங்களில் அந்த கிறுக்கல்க பல நல்ல தத்துவங்களைக் கொண்டிருக்கும். அப்படிப்பட்ட தத்துவக்குவியல் தான் இது. படம்: சிவானந்தன் நீங்களும் இது போன்ற வித்தியாசமான போஸ்டர், பேனர், சுவர் ஓவியம், கேலிச்சித்திரம் போன்றவைகளை படம் எடுத்து அனுப்பலாம். அனுப்பும் படங்கள் தரமானதாகவும், உங்களுக்கு சொந்தமானதாகவும் இருக்கட்டும். நன்றி!
3 / 20
எம் பிள்ளைய பார்த்தீங்களா?: சென்னை குரோம்பேட்டையைச் சேர்ந்த தெரு நாய் ஒன்று இரண்டு குட்டிகளை போட்டது. தனது குழந்தைகளை கொஞ்ச நேரம் கொஞ்சிவிட்டு அதற்கு சாப்பாடு கொடுப்பதற்காக வெளியே போய் கிடைத்த இரையோடு திரும்பிய தாய் நாய்க்கு அதிர்ச்சி. அங்கு இருந்த இரண்டு குட்டிகளையும் காணவில்லை. அந்த இடத்தை சுற்றி,சுற்றி வந்த அதன் கண்களில் கண்ணீர். இந்த காட்சியை எல்லாம் மாடியில் இருந்து பார்த்த சுரேஷ் என்பவர் நாயின் கவலையை எழுதி நோட்டீசாக ஒட்டிவிட்டார். படம்: எஸ்.சுரேஷ்நீங்களும் இது போன்ற வித்தியாசமான பேனர், போஸ்டர், கேலிச்சித்திரம்,சுவர் ஓவியம் போன்றவைகளை பார்த்தால் படம் எடுத்து அனுப்பவும். நீங்கள் அனுப்பும் படங்கள் தரமானதாகவும், உங்களுக்கு சொந்தமானதாகவும் இருக்கட்டும்.
4 / 20
கண்டு பிடிச்சிட்டீங்களா?: தமிழகத்தில் இருந்து ஆந்திரா பக்கம் உள்ள திருத்தலங்களுக்கு பயணம் மேற்கொள்பவர்கள் மொழிப்பிரச்னை காரணமாக திண்டாடக்கூடாதே என்பதற்காக அவர்களுக்கு தெரிந்த அளவில் தமிழில் எழுதிவைத்துள்ளனர்.,பாராட்டவேண்டிய விஷயம்தான்,ஆனால் எழுதும்போது தமிழ் நன்கு தெரிந்தவர்களை வைத்து எழுதுவது நல்லது.இதில் என்ன எழுதி உள்ளார்கள் என்பதை புரிந்து கொண்டவர்கள் பின்னனூட்டம் போடுங்கள்.படம்:எட்பெல்நீங்களும் இதுபோன்ற வித்தியாசமான படங்களை கிழே உள்ள முகவரிக்கு மின்னஞ்சல் செய்யவும்.நீங்கள் அனுப்பும் படங்கள் தரமானதாகவும்,உங்களுக்கு சொந்தமானதாகவும் இருக்கட்டும்.நன்றி!
5 / 20
இதற்கு என்ன தண்டனை?: ரயிலில் பட்டாசு எடுத்துச் சென்றால் மூன்று ஆண்டுகள் தண்டனை என்று எழுத வந்த திருச்சி ரயில்வே போலீசார், தண்டனை என்று எழுதுவதற்கு பதிலாக தண்டை என்று எழுதி வைத்துள்ளனர். தமிழ் ஆர்வலர்கள் இதற்கு என்ன தண்டனை கொடுக்கப்போகிறார்களோ? படம்: திருச்சி முருகேசன். நீங்களும் இது போன்ற வித்தியாசமான போர்டு, பேனர், போஸ்டர் போன்றவைகளை படம் எடுத்து கீழே உள்ள முகவரிக்கு மின்னஞ்சல் செய்யவும். நீங்கள் அனுப்பும் படங்கள் தரமானதாகவும், உங்களுக்கு சொந்தமானதாகவும் இருக்கட்டும். நன்றி!
6 / 20
எல்லாமே ஏழு!: எம்.ஜி.ஆரின் பிறந்த நாளை முன்னிட்டு ஒட்டப்பட்டிருந்த பல போஸ்டர்களில் பலரது கவனத்தையும் கவர்ந்தது இந்த போஸ்டர். காரணம் எம்.ஜி.ஆரின் வாழ்க்கையில் பிறந்தது முதல் உலகை.விட்டு பிரிந்தது வரை எல்லாமே ஏழில் தான் முடிவாகியுள்ளது. இந்த தகவல்கள் சரியாக இருந்தால், தகவல் சேகரித்தவரை பாராட்டலாம். படம்: எஸ். ஜெய்சங்கர். நீங்களும் இது போன்ற வித்தியாசமான போஸ்டர், பேனர், கேலிச்சித்திரம், சுவர்ஒவியம் போன்றவைகளை படம் எடுத்து கீழே உள்ள முகவரிக்கு மின்னஞ்சல் செய்யவும். நீங்கள் அனுப்பும் படங்கள் தரமானதாகவும், உங்களுக்கு சொந்தமானதாகவும் இருக்கட்டும். நன்றி!
7 / 20
துணைவேந்தரா...வாரிய தலைவரா...: சென்னைப் பல்கலைக்கழகத்தின் துணைவேந்தராக பேராசிரியர் தாண்டவன் என்பவர் நியமனம் செய்யப்பட்டுள்ளார். இவரை வரவேற்று கட்டியிருந்த பேனர்களை பார்த்த போது, எல்லோருக்கும் பொதுவான,கல்வித்துறையின் மேன்மையான பதவியான துணைவேந்தர் பதவி ஏற்க வந்தவரைப்போல வரவேற்கவில்லை,ஏதோ முதல்வரின் ஆசியால் கிடைத்த வாரியத்தலைவர் பதவி ஏற்க வந்தவர் போல வரவேற்கப்பட்டார். படம்:எம்.ராஜேஷ் நீங்களும் இது போன்ற வித்தியாசமான பேனர், போஸ்டர், கேலிச்சித்திரம்,சுவர் ஓவியம் போன்றவைகளை பார்த்தால் படம் எடுத்து அனுப்பவும்.நீங்கள் அனுப்பும் படங்கள் தரமானதாகவும், உங்களுக்கு சொந்தமானதாகவும் இருக்கட்டும்.
8 / 20
முதல்ல எதிர்காலம்...: இப்போதெல்லாம் மீசை முளைக்க ஆரம்பித்ததுமே இளைஞர்கள் செய்யும் முதல் காரியம் தனக்கான ஜோடியை தேடுவது என்றாகி விட்டது. அதற்கு சினிமா ஒரு பக்கம் காரணம் என்றால், “இன்னுமாடா உனக்கு ஒரு பிகர் படியல” என்று உடனிருந்து வேப்பிலை அடிக்கும் நண்பர்கள் மற்றொரு காரணம். இதெல்லாம் தப்பு முதல்ல எதிர்காலம் சிறப்பா அமைய தேவையான விஷயங்களைப் பாருங்க, அப்புறம் ‘பிகர்களை’ பார்க்கலாம் என்ற நல்ல ஆலோசனையை தனது ஆட்டோவின் பின் இவர் எழுதியுள்ளார். படம்: சுவர்ணராஜ் நீங்களும் இதுபோன்ற விஷயங்களை படம் எடுத்து அனுப்பலாம். அனுப்பும் படங்கள் தரமானதாகவும், உங்களுக்கு சொந்தமானதாகவும் இருக்கட்டும். நன்றி!
9 / 20
இப்போதைக்கு கடன் தரமாட்டீங்க?: இந்த கடைக்காரர் கடன் கொடுத்து ரொம்பவே நொந்து போய்விட்டார் போலும்,ஆனாலும் கடன் இப்போதைக்கு இல்லை என்பதை நாசூக்காக சொல்லிவிட்டார்.படம்:எஸ்.சுரேஷ்குமார்.நீங்களும் இது போன்ற வித்தியாசமான போஸ்டர்,பேனர்,சுவர் ஓவியம்,கேலிச்சித்திரம் போன்றவைகளை படம் எடுத்து கிழே உள்ள முகவரிக்கு மின்னஞ்சல் செய்யவும்.அனுப்பும் படங்கள் தரமானதாகவும்,உங்களுக்கு சொந்தமானதாகவும் இருக்கட்டும்.நன்றி!
10 / 20
உள்ளே வராதே...: குடிப்பவர்களால் தொல்லை என்பதை உணர்ந்து அவர்களை தள்ளிவைக்கும் சம்பவங்கள் வேலை பார்க்கும் இடத்தில் துவங்கி தியேட்டர் வரை தொடர்கிறது. ஆனாலும் விற்பனையில் டாஸ்மாக் சரக்குகள் சாதனை படைக்கிறது எனும் போது அந்த வேதனையை என்னவென்று சொல்வது. படம்: சுந்தர் நீங்களும் இது போன்ற வித்தியாசமான போஸ்டர், பேனர், சுவர் ஓவியம், கேலிச்சித்திரம் போன்றவைகளை படம் எடுத்து கீழே உள்ள முகவரிக்கு மின்னஞ்சல் செய்யவும். அனுப்பும் படங்கள் தரமானதாகவும், உங்களுக்கு சொந்தமானதாகவும் இருக்கட்டும். நன்றி!
11 / 20
ஒன்லி காபி!: கோவையில் உள்ள காபி நிறுவனம் தனது நிறுவனத்தில் காபி சாப்பிட்டால் சாப்பிட வருபவர்களின் மனோபாவம் படிப்படியாக காபி குடித்தே ஆக வேண்டும் என்ற நிலைக்கு மாறும் என்பதை விளக்கி வைத்துள்ள போஸ்டர் பலரையும் கவர்ந்து வருகிறது.படம்:அ.சிவகுருநாதன்நீங்களும் இது போன்ற போஸ்டர்,பேனர்,சுவர் ஓவியம்,கேலிச்சித்திரம் போன்றவைகளை படம் எடுத்து கிழே உள்ள முகவரிக்கு மின்னஞ்சல் செய்யவும்.அனுப்பும் படங்கள் கூடுமானவரை தரமானதாகவும்,உங்களுக்கு சொந்தமானதாகவும் இருக்கட்டும்.,நன்றி!
12 / 20
இன்றைய இன்வெர்ட்டரான பவர் ஸ்டார்...: அது என்னமோ தெரியலை இன்றைய தேதிக்கு சூப்பர் ஸ்டாரைப்பத்தி தெரியாதவங்க கூட,பவர் ஸ்டாரைப்பற்றி தெரிந்து வைத்துள்ளார்கள். அதற்கு முக்கிய காரணம்., யார்,எவ்வளவு கேவலமாக கிண்டல் செய்தாலும் தாங்கிக்கொள்ளும் குணமாகத்தான் இருக்கவேண்டும்.அவர் நடித்து வெளியாகியுள்ள ‘கண்ணா லட்டு திங்க ஆசையா’ படம் ஒரு லட்சம் நாட்கள் ஒடவேண்டி அவரது ரசிகர்கள் ஒட்டியுள்ள போஸ்டர்.போஸ்டரின் ஒவ்வொரு வாசகமுமே காமெடிதான்படம்:செ.கார்த்திகேயன்நீங்களும் இது போன்ற வித்தியாசமான போஸ்டர்,பேனர்,கேலிச்சித்திரம்,சுவர் ஓவியம் போன்றவைகளை படம் எடுத்து அனுப்பவும்.அனுப்பும் படங்கள் தரமானதாகவும்,உங்களுக்கு சொந்தமானதாகவும் இருக்கட்டும்.நன்றி!
13 / 20
தலைவா...வா..: நடிகர் ரஜினிகாந்தை பழையபடி அரசியலுக்கு அழைக்கும் போஸ்டர்களை அவரது ரசிகர்கள் சென்னை முழுவதும் ஒட்டியுள்ளனர்.அவர் எப்ப,எப்படி வருவார்னு யாருக்கும் தெரியாதுதான் ஆனால் குறைந்த பட்சமாக அவருக்காவது தெரிந்தால் சரி. நூறாவது போஸ்டர், படம் - எம். ராஜேஸ், சென்னை. முக்கிய குறிப்பு:வாசகர்களே உங்கள் அனைவருக்கும் பொங்கல் நல்வாழ்த்துக்கள்.தினமலர் இணையதளத்தில் வாசகர்கள் பங்களிப்புடன் முதன் முதலாக அரங்கேற்றப்பட்ட ஆன் லைன் போஸ்டர் பகுதியின் நூறாவது போஸ்டர் இது.விளையாட்டு போல நேற்றுதான் ஆரம்பித்தது போல இருக்கிறது,ஆனால் தங்கு தடையின்றி நூறு போஸ்டர் ஒடிவிட்டது.இந்த வெற்றிக்கு முழுமுதல் காரணம் நீங்கள்தான்.பல்வேறு ரசனைகளுடன் நீங்கள் அனுப்பிய படங்கள்தான் இந்த போஸ்டர் பகுதியின் பெரிய பலம்.தொடர்ந்து நீங்கள் இது போல போஸ்டர் பகுதிக்கு படங்கள் அனுப்பவும்.நன்றி!
14 / 20
பள்ளிக்கூடம்தான் வேண்டும்....: ஒராசிரியர் பள்ளி,ஆசிரியர் வராத பள்ளி,ஆசிரியர் இல்லாத பள்ளி என்று ஓரு பக்கம் செய்தி வந்துகொண்டு இருக்கிறது.,இன்னோரு பக்கம் சகலவசதிகளும் நிறைந்த டிலைட் மதுபானக்கடை திறப்பு விழா என்றும் செய்தி வந்துகொண்டு இருக்கிறது.பள்ளிக்கூடத்தை திறந்து, சீரமைத்து, பராமரிக்க வேண்டிய அரசாங்கம் மதுபானக்கடைகள் திறப்பில் அக்கறை காட்டலாமா என வருத்தப்பட்டு திருப்பூரில் நடந்த ஆர்ப்பாட்டத்தில் பங்கேற்ற ஒரு சிறுமி ஏந்தி நின்ற போஸ்டர்.படம்:திருப்பூர்,கோபால்.நீங்களும் இது போன்ற வித்தியாசமான போஸ்டர்,பேனர்,சுவர் ஓவியம்,கேலிச்சித்திரம் போன்றவைகளை படம் எடுத்து கிழே உள்ள முகவரிக்கு மின்னஞ்சல் செய்யவும்.நீங்கள் அனுப்பும் படங்கள் தரமானதாகவும்,உங்களுக்கு சொந்தமானதாகவும் இருக்கட்டும்.நன்றி!
15 / 20
தொட்டால் எரியும்: கொஞ்ச நாள் கஷ்டப்படுவ,அப்புறம் பழகிப்போகும் என்று நகைச்சுவையாக சொல்வார்கள்,அது போலத்தானாகிவிட்டது தமிழகத்தின் மின்வெட்டு நிலமை . இது குறித்து ஆக்கபூர்வமான பேச்சு இல்லாததால் வெறுத்துப்போய், கொஞ்ச நாள் இதைவைத்து காமெடி கூட செய்யாமல் இருந்தவர்கள், இப்போது மீண்டும் ஆரம்பித்துவிட்டார்கள்.படம்:என்.கணேஷ்பாபுநீங்களும் இது போன்ற போஸ்டர்,பேனர்,சுவர் ஓவியம்,கேலிச்சித்திரம் போன்றவைகளை படம் எடுத்து கிழே உள்ள முகவரிக்கு மின்னஞ்சல் செய்யவும்.நீங்கள் அனுப்பும் படங்கள் கூடுமானவரை தரமானதாகவும்,உங்களுக்கு சொந்தமானதாகவும் இருக்கட்டும்.நன்றி!
16 / 20
மக்காத பைதான் வேண்டும்.: படவிளக்கம்: பிளாஸ்டிக்கின் அபாயம் குறித்து சில ஆண்டுகளுக்கு முன் நல்லதொரு விழிப்புணர்வு நாட்டில் ஏற்பட்டு இருந்தது.நல்ல விஷயம் என்றாலும் அதனை தொடர்ந்து சொல்லவில்லை என்றால் மக்கள் மறந்துவிடுவார்கள் அது போலத்தான் இந்த விஷயமும் மாறிவிட்டது.மீண்டும் பரவலாக பிளாஸ்டிக்கின் பயன்பாடு அதிகரித்துக்கொண்டே வருகிறது.இந்த நிலையில் சென்னையில் உள்ள சுற்றுச்சுழல் துறையினர் ,துணிப்பையே சிறந்தது எனச்சொல்லி மக்களிடம் விநியோகித்து வருகின்றனர்.இந்த நல்ல விஷயத்தை புத்தகதிருவிழாவில் இடம் பெறும் புத்தகவிற்பனையாளர்கள் அனைவரும் கடைபிடிக்கவேண்டும்.ஐந்து ரூபாய் தனியாக வாங்கினால் கூட பரவாயில்லை ஆனால் விற்கும் புத்கங்களை துணிப்பையில் போட்டு விற்கவேண்டும். படம்:சி.மாரியப்பன் படவிளக்கம்: நீங்களும் இது போன்ற வித்தியாசமான விஷயங்களைப் பார்த்தால் படம் எடுத்து கிழே உள்ள முகவரிக்கு மின்னஞ்சல் செய்யவும்.அனுப்பும் படங்கள் தரமானதாகவும்,உங்களுக்கு சொந்தமானதாகவும் இருக்கட்டும்.நன்றி!
17 / 20
எண்ணெய் தடவாதீங்கப்பா..: பெரும்பாலான கோவில்களில் தீபம் ஏற்றும் பக்தர்கள், கையில் படும் எண்ணெயை துணியில் துடைத்துக்கொள்வது இல்லை.,கோயில்களுக்குள் இருக்கும் தூண்களிலும், நந்தியின் மீதும் துடைத்துவிட்டு வருவார்கள்.இதனை நாசூக்காக நந்திகேசுவரரே சொல்வது போல ஒரு பக்தர் போர்டு எழுதிவைத்துள்ளார்.நல்லா சொன்னாலே கேட்கமாட்டார்கள்,நாசூக்காக சொல்லியா கேட்கப்போகிறார்கள்.படம்:குமரேஷ்.நீங்களும் இது போன்ற வித்தியாசமான போஸ்டர்,பேனர்,சுவர் ஓவியம்,கேலிச்சித்திரம் போன்றவைகளை படம் எடுத்து கிழே உள்ள முகவரிக்கு மின்னஞ்சல் செய்யவும்.நீங்கள் அனுப்பும் படங்கள் தரமானதாகவும்,உங்களுக்கு சொந்தமானதாகவும் இருக்கட்டும்.நன்றி!
18 / 20
எண்ணெய் தடவாதீங்கப்பா..: பெரும்பாலான கோவில்களில் தீபம் ஏற்றும் பக்தர்கள், கையில் படும் எண்ணெயை துணியில் துடைத்துக்கொள்வது இல்லை.,கோயில்களுக்குள் இருக்கும் தூண்களிலும், நந்தியின் மீதும் துடைத்துவிட்டு வருவார்கள்.இதனை நாசூக்காக நந்திகேசுவரரே சொல்வது போல ஒரு பக்தர் போர்டு எழுதிவைத்துள்ளார்.நல்லா சொன்னாலே கேட்கமாட்டார்கள்,நாசூக்காக சொல்லியா கேட்கப்போகிறார்கள்.படம்:குமரேஷ்.நீங்களும் இது போன்ற வித்தியாசமான போஸ்டர்,பேனர்,சுவர் ஓவியம்,கேலிச்சித்திரம் போன்றவைகளை படம் எடுத்து கிழே உள்ள முகவரிக்கு மின்னஞ்சல் செய்யவும்.நீங்கள் அனுப்பும் படங்கள் தரமானதாகவும்,உங்களுக்கு சொந்தமானதாகவும் இருக்கட்டும்.நன்றி!
19 / 20
அதுக்கு ஏன் செருப்பு?: பொதுமக்கள் சார்பில் குப்பை கொட்டவேண்டாம் என்று எழுதி, அறிவிப்பு என்பதற்கு பதிலாக அரிவிப்பு என்று தப்பாக எழுதியது கூட தப்பில்லை,ஆனால் போர்டில் செருப்பையும் சேர்த்து தொங்கவிட்டுள்ளீர்கள் அதுதான் ஏன்?என்பது புரியவில்லை. படம்:சென்னை,நந்தகோபால்.நீங்களும் இது போன்ற வித்தியாசமான போஸ்டர்,பேனர்,சுவர் ஓவியம்,கேலிச்சித்திரம் போன்றவைகளை படம் எடுத்து கிழே உள்ள முகவரிக்கு மின்னஞ்சல் செய்யவும்.அனுப்பும் படங்கள் தரமானதாகவும்,உங்களுக்கு சொந்தமானதாகவும் இருக்கட்டும்.நன்றி!
20 / 20
செயின்ட் ஜார்ஜ் கோட்டை பேசுகிறது...: மணி அடித்து முதல்வரை உட்கார வைத்ததில் இருந்தே இங்குள்ள அதிமுகவினர் மத்திய அரசு மீது கோபமாகத்தான் இருக்கின்றனர். தங்கள் கோபத்தை பல்வேறு விதத்தில் வெளிப்படுத்தி வருகின்றனர். அதில் ஒரு வழியே இது. முதல்வர் ஆள்வதால் செயின்ட் ஜார்ஜ் கோட்டை பிரமாதமாக இருக்கிறதாம். விரைவில் டில்லி செங்கோட்டையிலும் பொறுப்பேற்று அதனையும் முதல்வர் பிரமாதப்படுத்துவராம். படம்: எஸ்.ரமேஷ். நீங்களும் இது போன்ற வித்தியாசமான போஸ்டர், பேனர், சுவர் ஓவியம், கேலிச்சித்திரம் போன்றவைகளை படம் எடுத்து கீழே உள்ள முகவரிக்கு மின்னஞ்சல் செய்யவும். நீங்கள் அனுப்பும் படங்கள் தரமானதாகவும், உங்களுக்குச் சொந்தமானதாகவும் இருக்கட்டும். நன்றி!
Advertisement