போஸ்டர்ர்ர்...

05-Mar-2013
1 / 20
அவென்யூ படும்பாடு?: சின்ன சின்ன வார்த்தைக்கு கூட பெரிய அளவில் தடுமாறுவது நம்மாளுகளாகத்தான் இருக்கும்.,அரசு அதிகாரிகளின் மேற்பார்வையில் எழுதப்பட்ட வழிகாட்டி பலகையில் தமிழும்,ஆங்கிலமும் தடுமாறுது..படம்:ஏ.எஸ்.ரவிநீங்களும் இது போன்ற வித்தியாசமான விஷயங்களை படம் எடுத்து கிழே உள்ள முகவரிக்கு மின்னஞ்சல் செய்யவும்.நீங்கள் அனுப்பும் படங்கள் தரமானதாகவும்,உங்களுக்கு சொந்தமானதாகவும் இருக்கட்டும்.நன்றி!
2 / 20
ரொம்ப கரெக்டுங்க...: விவசாய தொழில் செய்வோர் வேறு ஏதாவது மாற்றுத்தொழில் பார்த்துக்கொள்வது நல்லது என்று பிரதமர் போன்றவர்களே சொல்லிவரும் இந்த காலத்தில், விவசாயம் செய்பவர்களும் தெய்வத்திற்கு சமமானவர்களே என்று சொல்லியிருப்பது ரொம்பவும் சரியான வார்த்தை,ஆனால் இப்போது விவசாயம் செய்ய ஆட்கள் இல்லை இன்னும் கொஞ்ச காலத்தில் (ரியல் எஸ்டேட் புண்ணியத்தில்)விவசாயம் செய்ய இடமும் இல்லை என்றாகிவிடும்.படம்:பி.வேல்முருகன்நீங்களும் இது போன்ற வித்தியாசமான போஸ்டர்,பேனர்,சுவர் ஓவியம்,கேலிச்சித்திரம் போன்றவைகளை படம் எடுத்து கீழே உள்ள முகவரிக்கு மின்னஞ்சல் செய்யவும்.நீங்கள் அனுப்பும் படங்கள் தரமானதாகவும்,உங்களுக்கு சொந்தமானதாகவும் இருக்கட்டும்.நன்றி!
3 / 20
சென்னை’க்கு வந்த சோதனை?: பெங்களூர்-சென்னை மார்க்கத்தில் ஓடும் தமிழக அரசின் விரைவு பஸ்சில் தமிழ் தெரியாதவர்களுக்காக ஆங்கிலத்தில் எழுதப்பட்டுள்ள சென்னையில்தான் எத்தனை கோளாறு,கொட்டை எழுத்துக்களில் எழுதும் போதே இத்தனை கோளாறா?தாங்கமுடியலடா சாமி.படம்:பெங்களூரு,மணிகண்டன்நீங்களும் இது போன்ற வித்தியாமான விஷயங்கள்,போஸ்டர்,பேனர் போன்றவைகளை படம் எடுத்து கீழே உள்ள முகவரிக்கு மின்னஞ்சல் செய்யவும்.நீங்கள் அனுப்பும் படங்கள் தரமானதாகவும்,உங்களுக்கு சொந்தமானதாகவும் இருக்கட்டும்.நன்றி!
4 / 20
இது கவுண்டம்பட்டி ரவுசு...: நாட்டிலே எத்தனையோ போஸ்டர்,பேனர் பார்த்து இருப்போம்,ஆனா இப்படி ஒரு பேனரை பார்த்தது இல்லை என்றே சொல்லவேண்டும்.ஊரில் நடக்கும் கும்பாபிஷேகத்திற்கு அழைப்பு விடுத்தவர் திடீரென ஒருதலைக் காதலனாக மாறி புலம்புவதை என்னவென்று சொல்வது,மகா சூலினி மாரியம்மன் தான் கேட்கவேண்டும்.படம்:ஆதி, திருச்சிநீங்களும் இது போன்ற வித்தியாசமான பேனர்,போஸ்டர்,கேலிச்சித்திரம் போன்றவைகளை படம் எடுத்து கீழே உள்ள முகவரிக்கு மின்னஞ்சல் செய்யவும்.நீங்கள் அனுப்பும் படங்கள் தரமானதாகவும்,உங்களுக்கு சொந்தமானதாகவும் இருக்கட்டும். நன்றி!
5 / 20
பழகிப்பார் பாசம் புரியும்.: கிராமத்தில் உள்ளவர்கள் தங்கள் வீட்டு விலங்குகளை மிகவும் நேசிப்பார்கள்,இது மனிதர்களை மனிதர்களே நேசிக்காத நகரத்து மக்களுக்கு கொஞ்சம் புரிவது கடினம்தான்.அந்த வகையில் தங்கள் குடும்பத்தில் ஒன்றாக இருந்து,வளர்ந்து,இறந்துவிட்ட மாட்டினை நேசித்து பெரிய ஊர் சேரி கிராமத்தினர் ஒட்டியுள்ள போஸ்டர் இது.படம்:பி.வேல்முருகன்நீங்களும் இது போன்ற வித்தியாசமான போஸ்டர்,பேனர்,கேலிச்சித்திரம்,சுவர் ஒவியம் போன்றவைகளை படம் எடுத்து கிழே உள்ள முகவரிக்கு மின்னஞ்சல் செய்யவும்.நீங்கள் அனுப்பும் படங்கள் தரமானதாகவும்,உங்களுக்கு சொந்தமானதாகவும் இருக்கட்டும்.நன்றி!
6 / 20
வேண்டாமே ‘டிப்ஸ்’...: இப்போதெல்லாம் ஒட்டலில் சர்வரிடம் கொஞ்சமும் கூடுதலாக சட்னி கேட்டால் கூட அந்த நன்றிக்கடனுக்கு கூடுதலாக டிப்ஸ் தரவேண்டும் என்று எதிர்பார்க்கிறார்கள் ஒட்டல் சர்வர்கள்.,இந்த நிலையில் பட்டுக்கோட்டையில் உள்ள ஒரு ஒட்டலில் எங்களுக்கு டிப்ஸ் கொடுக்காதீர்கள்,விரும்பினால் ஏழைக்குழந்தைகளுக்கு உதவுங்கள் என்று எழுதிவைத்துள்னர்,பாராட்டவேண்டிய விஷயம்தான்.படம்:கார்த்திகேயன்,பட்டுக்கோட்டை.நீங்களும் இதுபோன்ற வித்தியாசமான சுவர் விளம்பரம்,போஸ்டர்,பேனர்,கேலிச்சித்திரம்,சுவர் ஓவியம் போன்றவைகளை படம் எடுத்து கிழே உள்ள முகவரிக்கு மின்னஞ்சல் செய்யவும்.,நீங்கள் அனுப்பும் படங்கள் தரமானதாகவும்,உங்களுக்கு சொந்தமானதாகவும் இருக்கட்டும்.நன்றி!
7 / 20
இதுதான் முதல் தேவை...: கழிப்பறையை சுத்தமாக வைத்துக்கொள்ளுங்கள் அதுதான் சுகாதாரத்தின் அடிப்படை என்ற கோஷம் எங்கும் முழங்குகிறது.,அதே நேரம் கழிப்பறையை இல்லாமல் இருக்கும் கிராமங்கள் மற்றும் சிறியஊர்களில் கழிப்பறை கட்டித்தரவேண்டியதும் அவசியம் என்பதை இந்த வாசகம் வலியுறுத்துகிறது.படம்:திருவள்ளூர்,சீனிவாசன்நீங்களும் இது போன்ற வித்தியாசமான சுவர் எழுத்து,பேனர்,போஸ்டர்,கேலிச்சித்திரம் போன்றவைகளை படம் எடுத்து கீழே உள்ள முகவரிக்கு மின்னஞ்சல் செய்யவும்.நீங்கள் அனுப்பும் படங்கள் தரமானதாகவும்,உங்களுக்கு சொந்தமானதாகவும் இருக்கட்டும்.நன்றி!.
8 / 20
வாழ்த்துக்கள் நண்பா....: படவிளக்கம்:நாய் நன்றியுள்ள பிராணி தெரியும்,அந்த நாய்க்கு நன்றி தெரிவிக்கும் விதமாக வித்தியாசமாக ஒட்டப்பட்டுள்ள போஸ்டர்.படம்:சுரேஷ்நீங்களும் இது போன்ற வித்தியாசமான போஸ்டர்,பேனர்,கேலிச்சித்திரம்,சுவர் ஓவியம் போன்றவைகளை படம் எடுத்து கிழே உள்ள முகவரிக்கு மின்னஞ்சல் செய்யவும்.,நீங்கள் அனுப்பும் படங்கள் தரமானதாகவும்,உங்களுக்கு சொந்தமானதாகவும் இருக்கட்டும்.,நன்றி!
9 / 20
மட்டையாய் கிடக்கிறாயே மனிதா?: குடியின் பிடியில் கொஞ்சம்,கொஞ்சமாய் தமிழகம் அழிந்து வருவதை உணர்த்த ,இது தொடர்பான விழிப்புணர்வு போஸ்டர்களை சிலர் சமுதாய தொண்டாக அடித்து ஒட்டிவருகின்றனர்.,அந்த போஸ்டர்களில் ஒன்றுதான் இது.படம்:ஈச்சனாரி,சுரேஷ்.நீங்களும் இது போன்ற போஸ்டர்,பேனர்,கேலிச்சித்திரம்,சுவர் ஓவியம் போன்றவைகளை படம் எடுத்து கிழே உள்ள முகவரிக்கு மின்னஞ்சல் செய்யவும்.நீங்கள் அனுப்பும் படங்கள் தரமானதாகவும்,உங்களுக்கு சொந்தமானதாகவும் இருக்கட்டும்.நன்றி!
10 / 20
அன்று...இன்று...,: தமிழின விரோதியாக கருதப்படும் இலங்கை அதிபர் ராஜபக்ஷே சமீபத்தில் இந்தியா வந்த போது அவரது வருகையை கண்டித்து தி.மு.க.,தலைவர் கருணாநிதி தலைமையில் அவரது மகள் கனிமொழி எம்.பி., உள்ளீட்டோர் உண்ணாவிரதம் இருந்ததையும்,இதே கனிமொழி ராஜபக்ஷேயை நேரில் பார்த்தபோது சிரித்தபடி கைநீட்டி பரிசு வாங்குவதையும் இணைத்து, தமிழர்களே சிந்திப்பீர் என்று கேட்டு ஊர் முழுவதும் போஸ்டர் கட்டப்பட்டுள்ள பேனர் பரபரப்பபை ஏற்படுத்தியுள்ளது. படம்:எஸ்.ரமேஷ்நீங்களும் இது போன்ற வித்தியாசமான பேனர்,போஸ்டர்,சுவர் ஓவியம்,கேலிச்சித்திரம் போன்றவைகளை படம் எடுத்து கிழே உள்ள முகவரிக்கு மின்னஞ்சலாக அனுப்பலாம்.நீங்கள் அனுப்பும் படங்கள் தரமானதாகவும்,உங்களுக்கு சொந்தமானதாகவும் இருக்கட்டும்.நன்றி!
11 / 20
ராஜாக்கள் பேரம் பேசுவதில்லை...: சென்னையைச் சேர்ந்த தினமலர் இணையதள வாசகர் ,சூரத்தில் உள்ள துணிக்கடை ஒன்றிக்கு சென்ற போது அங்கு ஆங்கிலத்தில் இருந்த வாசகம்(வாடிக்கையாளர்கள் அரசர்களைப் போன்றவர்கள்,அரசர்கள் ஒருபோதும் பேரம் பேசுவதில்லை)அவரை ஈர்த்துவிட உடனே கையில் இருந்த கேமிராவில் கிளிக் செய்து நமது போஸ்டர் பகுதிக்கு அனுப்பிவிட்டார்.படம்:மாதேஸ்வரராஜ்
12 / 20
அப்ப இதுக்கு பெயர் சிங்கம் இல்லீயா?: மிருகக்காட்சி சாலைக்கு வரும் குழந்தைகள் தெரிந்துகொள்ளவேண்டும் என்பதற்காக சிரமப்பட்டு மிருகங்களின் படங்களை வரைந்து வைத்துள்ளனர்.,அந்த படங்களின் மீது சிலர் கொஞ்சமும் நாகரிகம் இல்லாமல் தங்களது பெயரை எழுதிவிடுகின்றனர்.சென்னையில் உள்ள மிருகக்காட்சி சாலையில் சிங்கம் இருக்கும் பகுதியில் வரையப்பட்டுள்ள படத்தின் மீது ஒருவர் தன் பெயரை எழுதி ,பார்ப்போர் அனைவரிடமும் திட்டுவாங்கிக்கொண்டு இருக்கிறார்.படம்:சி.மாரியப்பன்நீங்களும் இது போன்ற வித்தியாசமான படம்,போஸ்டர்,கேலிச்சித்திரம்,சுவர் ஓவியம் போன்றவைகளை படம் எடுத்து கிழே உள்ள முகவரிக்கு மின்னஞ்சல் செய்யவும்.நீங்கள் அனுப்பும் படங்கள் தரமானதாகவும்,உங்களுக்கு சொந்தமானதாகவும் இருக்கட்டும்.நன்றி!
13 / 20
பெல்ஜியத்தின் விஸ்வரூபமாம்!: வெளிநாடு வாழ் நண்பர்களை நமது ஆட்கள் வரவேற்கும் விதமே தனிதான். முன்னாடியெல்லாம் ரயில் நிலையம்,விமான நிலையம் போய் வரவேற்பார்கள். இப்போது அதெல்லாம் இரண்டாம் பட்சம் தான், முதல்ல போஸ்டர் அடிப்பதே பிரதானமாகி விட்டது.படம்: விஜய்.நீங்களும் இது போன்ற வித்தியாசமான போஸ்டர், சுவர் ஓவியம், கேலிச்சித்திரம் போன்றவைகளை படம் எடுத்து அனுப்புங்கள். நீங்கள் அனுப்பும் படங்கள் தரமானதாகவும், உங்களுக்குச் சொந்தமானதாகவும் இருக்கட்டும். நன்றி!
14 / 20
இப்ப எல்லாருமே வருங்கால முதல்வர் தான்..: நண்பர்களுக்குள் போஸ்டர் அடித்து வாழ்த்து தெரிவிப்பது என்பது இன்றைய கலாச்சாரமாகி விட்டது. அடிக்கும் போஸ்டரில் தவறாமல் வருங்கால முதல்வரே என்று வாசகம் இடம் பெறுவதும் வாடிக்கையாகி விட்டது.படம்: ஆதி ரமேஷ்நீங்களும் இது போன்ற வித்தியாசமான போஸ்டர்,பேனர், கேலிச்சித்திரம், சுவர் ஓவியம் போன்றவைகளை படம் எடுத்து அனுப்பலாம். அனுப்பும் படங்கள் தரமானதாகவும், உங்களுக்குச் சொந்தமானதாகவும் இருக்கட்டும். நன்றி!
15 / 20
எனக்கு பழம் வேண்டாம்...: பக்தியின் காரணமாகவோ அல்லது பாசத்தின் காரணமாகவோ இந்த யானைக்கு அதிகப்படியாக கொடுக்கப்பட்ட பழங்களை சாப்பிட்டு,சாப்பிட்டு இப்போது யானைக்கு ‘சுகர் பிராப்ளம்’ வந்துருச்சாம்.,அதுனால எனக்கு பழம் வேண்டாம் என்று யானை தன் உடம்பில் எழுதப்பட்ட வாசகம் மூலம் சொல்லிவருகிறது.படம்:ராஜேஷ்நீங்களும் இது போன்ற வித்தியாசமான படங்கள்,போஸ்டர்,பேனர்,கேலிச்சித்திரம்,சுவர் ஓவியம் போன்றவைகளை படம் எடுத்து கிழே உள்ள முகவரிக்கு மின்னஞ்சல் செய்யவும்.அனுப்பும் படங்கள் தரமானதாகவும்,உங்களுக்கு சொந்தமானதாகவும் இருக்கட்டும்,நன்றி!
16 / 20
இது என்டே கேரளாவில்...: தமிழர்கள் அதிகம் செல்லக்கூடிய கேரள மாநிலம் சோட்டாணிக்கரை பகவதி அம்மன் கோவிலின் வாசலில், தமிழர்கள் மொழிப்பிரச்னையால் சிரமப்படக்கூடாதே என்பதற்காக, தமிழிலேயே போர்டு வைத்துள்ளனர். ஆனால் இந்த போர்டை பார்த்து படிப்பதற்குள் தமிழர்கள் ரொம்பவே குழம்பிப் போகின்றனர். படம்: பாலமுருகன் நீங்களும் இது போன்ற வித்தியாசமான போர்டு, பேனர்,போஸ்டர், கேலிச்சித்திரம், சுவர் ஓவியம் போன்றவைகளை படம் எடுத்து அனுப்பவும். நீங்கள் அனுப்பும் படங்கள் தரமானதாகவும், உங்களுக்குச் சொந்தமானதாகவும் இருக்கட்டும். நன்றி!
17 / 20
விஸ்வரூபத்திற்கு வரவேற்பு...: கோடிகளை கொட்டி நடிகர் கமல் எழுதி, இயக்கியுள்ள ‘விஸ்ரூபம்’ படம் தமிழக திரைக்கு வருவதற்குள் படாத பாடுபட்டு விட்டது. ஒருவழியாக வெளிவந்துள்ளது. இதனால் உற்சாகமடைந்துள்ள கமல் ரசிகர்கள் வைத்துள்ள வரவேற்பு பேனர். படம்: வேல்முருகன். நீங்களும் இது போன்ற வித்தியாசமான பேனர், போஸ்டர், சுவர் ஓவியம், கேலிச்சித்திரம் போன்றவைகளை படம் எடுத்து கீழே உள்ள முகவரிக்கு மின்னஞ்சல் செய்யவும். நீங்கள் அனுப்பும் படங்கள் தரமானதாகவும், உங்களுக்குச் சொந்தமானதாகவும் இருக்கட்டும். நன்றி!
18 / 20
ஆட்டோவின் நன்றி!: மும்பைவாழ் தமிழ்ப்பெண்ணான பிரேமா சி.ஏ.,தேர்வில் அகில இந்திய அளவில் முதலிடத்தை பெற்றதற்கு வாழ்த்து தெரிவித்து முதல்வர்,முன்னாள் முதல்வர்,மத்திய அமைச்சர் ஆகியோர் பரிசாக பணம் கொடுத்து பாராட்டியுள்ளனர்.இவர் ஒரு ஆட்டோ ஒட்டும் தொழிலாளியின் மகள் என்பது குறிப்பிடத்தக்கது.இதன் காரணமாக சென்னையில் உள்ள ஒரு ஆட்டோ ஒட்டுனர் தனது மகிழ்ச்சியை தனது ஆட்டோவின் பின்னால் பகிர்ந்து கொண்டுள்ளார்.படம்:சீனிவாசன்நீங்களும் இது போன்ற பேனர்,போஸ்டர்,கேலிச்சித்திரம்,சுவர் ஒவியம் போன்றவைகளை படம் எடுத்து கிழே உள்ள முகவரிக்கு மின்னஞ்சல் செய்யவும்.நீங்கள் அனுப்பும் படங்கள் தரமானதாகவும்,உங்களுக்கு சொந்தமானதாகவும் இருக்கட்டும்.நன்றி!
19 / 20
இது எதிர்க்கட்சிகளுக்கு மட்டுமே...: அரசுக்கு சொந்தமான சுவர்களில் விளம்பரம் செய்யக்கூடாது. மீறி செய்தால் அபாராதம் விதிக்கப்படும். விளம்பரமும் தார் பூசி அழிக்கப்படும் என்று சென்னை மாநகராட்சி விதி வகுத்துள்ளது. ஆனால் இந்த விளம்பரத்தை பார்க்கும் போது அந்த விதியெல்லாம் எதிர்கட்சியினருக்கு மட்டும் தானோ என்று எண்ண வேண்டியிருக்கிறது. படம்: எஸ்.ரமேஷ். நீங்களும் இதுபோன்ற வித்தியாசமான சுவர் விளம்பரம், போஸ்டர், பேனர், கேலிச்சித்திரம் போன்றவைகளை படம் எடுத்து கீழே உள்ள முகவரிக்கு மின்னஞ்சல் செய்யவும். நீங்கள் அனுப்பும் படங்கள் தரமானதாகவும், உங்களுக்கு சொந்தமானதாகவும் இருக்கட்டும். நன்றி!
20 / 20
இதுக்கெல்லாம் ஏது நேரம்...: அரசு பஸ் ஒன்றில் தமிழ்நாடு என்று எழுதப்பட்டதில் த என்று எழுத்து விடுபட்டு ‘ மிழ்நாடு’ என்ற பெயருடன் ஒடிக்கொண்டிருக்கிறது.பார்ப்பவர்கள் சிரிக்கிறார்கள்.படம்:தர்மேந்திரன்நீங்களும் இது போன்ற போஸ்டர்,பேனர்,சுவர் ஓவியம்,கேலிச்சித்திரம் போன்றவைகளை படம் எடுத்து கிழே உள்ள முகவரிக்கு மின்னஞ்சல் செய்யவும்.நீங்கள் அனுப்பும் படங்கள் தரமானதாகவும்,உங்களுக்கு சொந்தமானதாகவும் இருக்கட்டும்.நன்றி!
Advertisement