போஸ்டர்ர்ர்...

20-Mar-2013
1 / 20
தேடுங்கள் ரோஸியை,பிடியுங்கள் தங்கத்தை...: வளர்ப்பு நாய் மீது சில மனிதர்கள் வைத்திருக்கும் பாசத்திற்கு அளவேயில்லை,அது சாப்பிடாவிட்டால் தானும் சாப்பிடாமல் பட்டினிகிடப்போர் கூட நிறைய பேர் உண்டு. அப்படிப்பட்ட கோவையைச் சேர்ந்த பாசக்காரர் ஒருவர் வீட்டு நாயைக்காணோம், கண்டுபிடித்து கொடுத்தால் தங்க நாணயம் தருவதாக போஸ்டர் போட்டுள்ளார். போஸ்டரில் இரண்டு நாய் இருக்கிறது,இதில் எது ரோஸி,சரி புளூ பெல்ட் போட்டதுதான் ரோஸி என்பதால் பார்த்தால் தகவல் கொடுத்து தங்க நாணயம் பெறுங்கள். நாணயத்தை விட பெரியது நாயை அதன் அன்பான உரிமையாளரிடம் சேர்ப்பிக்கும் போது கிடைக்கும் சந்தோஷம்.படம்:கோவை,சிவாநீங்களும் இது போன்ற வித்தியாசமான போஸ்டர்,பேனர்,சுவர் ஒவியம் போன்றவைகளை கிழே உள்ள முகவரிக்கு மின்னஞ்சலாக அனுப்பவும்.நீங்கள் அனுப்பும் போஸ்டர்கள் தரமானதாகவும்,உண்மையானதாகவும்,உங்களுக்கு சொந்தமானதாகவும் இருக்கட்டும்.உங்கள் போன் நம்பர் இல்லாமல் வரும் போஸ்டர் பரீசீலனைக்கு எடுத்துக்கொள்ளப்படாது.நன்றி
2 / 20
நல்ல காரியம் நடக்கட்டும்...: மாணவப்பருவத்தினருக்கு வாழ்க்கையில் முக்கிய திருப்பத்தை தருவது பத்தாம் வகுப்பு மற்றும் பிளஸ் டூ தேர்வு முடிவுகள்தான். மாணவர்களுக்கு நம்பிக்கைதரும் விதத்தில் ஆங்காங்கே பொது பிரார்த்தனை நடத்தி அதில் மாணவர்களை பங்கேற்க செய்வதுடன் அவர்களுக்கு எழுதுகோல் போன்றவைகளும் வழங்கப்படுகின்றன. நம்பிக்கைதரும் இந்த நல்ல விஷயம் நாளை சென்னையில் நடைபெறுவதை சொல்லும் போஸ்டர் இது.படம்:ஆர்.மணிவண்ணன்.நீங்களும் இது போன்ற போஸ்டர்,பேனர்,சுவர் ஒவியம்,கேலிச்சித்திரம் போன்றவைகளை படம் எடுத்து கிழே உள்ள முகவரிக்கு மின்னஞ்சல் செய்யவும்.நீங்கள் அனுப்பும் படங்கள் தரமானதாகவும்,உண்மையானதாகவும்,உங்களுக்கு சொந்தமானதாகவும் இருக்கட்டும்.நன்றி!
3 / 20
எங்கே சரியா சொல்லுங்க?: ஆந்திரா மாநிலம் திருப்பதியில் உள்ள பெருமாளை தரிசிக்கவரும் தமிழக பக்தர்களுக்கு உதவுவதற்காக ஆங்காங்கே அவர்களுக்கு தெரிந்த அளவில் தமிழில் போர்டு எழுதி வைத்துள்ளனர்,கூட்டிக்கழித்து கொஞ்சம் மூளையை கசக்கிக்கொண்டால் என்ன எழுதிவைத்துள்ளனர் என்பது புரியும், ஆனாலும் சில வார்த்தைகள் புரியவே புரியாது, இந்த வார்த்தை அதில் சேர்ந்ததாக்கும்!இந்த வார்த்தைக்கு என்ன அர்த்தம் என்று தெரிந்தவர்கள் சொல்லுங்கள் .படம்:பிரதீப் கண்ணா.நீங்களும் இது போன்ற வித்தியாசமான போஸ்டர்,பேனர்,சுவர் ஒவியம்,கேலிச்சித்திரம் போன்றவைகளை படம் எடுத்து கிழே உள்ள முகவரிக்கு மின்னஞ்சல் செய்யவும்.நீங்கள் அனுப்பும் படங்கள் தரமானதாகவும்,உங்களுக்கு சொந்தமானதாகவும் இருக்கட்டும்.நன்றி!
4 / 20
2016 லே வருகிறாராம்: ரஜினிகாந்த் அரசியலுக்கு வரவேண்டும் என்று வேன் மீது ஏறிநின்று சீட்டியடித்த தொண்டர்கள் பலர், இப்போது பஸ்சில் கூட ஏற முடியாத அளவிற்கு வயசாகிப்போய்விட்டார்கள்,ஆனால் அவர் மட்டும் அரசியலுக்கு வருவதாக இல்லை.இந்த நிலையில் ‘ நான் 2016ல் வருகிறேன், அதுவும் முதல்வராக’ என்று அர்த்தம்தரும் தொனியில் கோவை எங்கும் போஸ்டர் ஒட்டியுள்ளனர், இந்த போஸ்டர் ஒட்டியது எந்த தலைமுறையோ,இவர்களுக்கு பல் விழுவதற்கு முன்பாவது ஐயா அரசியலுக்கு வருவாரா?படம்:கோவை,பிரபுநீங்களும் இது போன்ற வித்தியாசமான போஸ்டர்,பேனர்,கேலிச்சித்திரம்,சுவர் ஒவியம் போன்றவைகளை படம் எடுத்து கிழே உள்ள முகவரிக்கு மின்னஞ்சல் செய்யவும்.நீங்கள் அனுப்பும் படங்கள் தரமானதாகவும்,உங்களுக்கு சொந்தமானதாகவும் இருக்கட்டும்,நன்றி!
5 / 20
லேப் டாப்' ஜாக்கிரதை: முன்பெல்லாம் ரயில் நிலையத்தில் ஜேப்படி திருடர்கள் ஜாக்கிரதை என்று எழுதி வைத்திருப்பார்கள். ஆனால் இப்போது லேப்-டாப் திருடர்கள் ஜாக்கிரதை என்று எழுதி வைத்துள்ளனர். ரயில் பயணிகளின் தோன்றாத்துணையாகிவிட்ட மடிக்கணினி தான் இப்போது அதிகம் திருடுபோவதால் இந்த மாதிரியான அறிவிப்பு.படம்: நந்தகோபால், சென்னை.நீங்களும் இது போன்ற போஸ்டர், பேனர், கேலிச்சித்திரம், சுவர் ஓவியம் போன்றவைகளை படம் எடுத்து கீழே உள்ள முகவரிக்கு மின்னஞ்சல் செய்யவும். நீங்கள் அனுப்பும் படங்கள் தரமானதாகவும், உங்களுக்கு சொந்தமானதாகவும் இருக்கட்டும். நன்றி!
6 / 20
வழிகாட்டி பலகை என்ன செஞ்சுச்சு...: முதல்வர் ஜெயலலிதாவிற்கு, அரசியல் எதிரியாகிவிட்ட திமுக தலைவர் கருணாநிதி வீடு இருக்கும், கோபாலபுரம் பகுதிக்கு போக வழிகாட்டும் பெயர்ப்பலகையில் உள்ள பெயிண்ட் உதிர்ந்ததால், பெயரையே கண்டுபிடிக்கமுடியவில்லை. இதை சரிசெய்தால் கூட ‘அம்மா’வின் கோபத்திற்கு ஆளாக நேரிடுமோ என்ற பயமோ தயக்கமோ தெரியவில்லை, இந்த பெயர் பலகை மட்டும் பாவமாக காட்சிதருகிறது.படம்:எல்.சீனிவாசன்நீங்களும் இது போன்ற வித்தியாசமான படங்கள் போஸ்டர்,கேலிச்சித்திரம்,சுவர் ஓவியம் போன்றவைகளை படம் எடுத்து கிழே உள்ள முகவரிக்கு மின்னஞ்சல் செய்யவும்.நீங்கள் அனுப்பும் படங்கள் தரமானதாகவும்,உங்களுக்கு சொந்தமானதாகவும் இருக்கட்டும்.நன்றி!
7 / 20
காதலர்களை பிரிக்கிறாராம்...: ஜோசியம்,பரிகாரம் பார்ப்பதற்கு ஒரு எல்லையே இல்லாமல் போய்க்கொண்டு இருக்கிறது.இங்கே ஒரு ஜோசியர் தான் செய்யும் பரிகாரங்களை பட்டியலிட்டுள்ளார்,பிரிந்த மணைவியை சேர்ப்பது,மாடலிங்துறையில் வெற்றி பெறச்செய்வது என்பது கூடப்பரவாயில்லை,ஆனால் கருத்தொருமித்து காதலிப்பவர்களை பெற்றோர்கள் கேட்டுக்கொண்டால் பிரித்து வைப்பதற்கும் பரிகாரம் சொல்வராம்.,காதலர்களிடம் வாங்கிக்கட்டாமல் இருந்தால் சரி.படம்:ஜெய்கணேஷ்நீங்களும் இது போன்ற வித்தியாசமான காட்சிகளைக்கண்டால் படம் எடுத்து அனுப்பவும்.நீங்கள் அனுப்பும் படங்கள் தரமானதாகவும்,உங்களுக்கு சொந்தமானதாகவும் இருக்கட்டும்;நன்றி!
8 / 20
இப்படியும் வாழ்த்து சொல்லலாமோ!: இந்த நாட்டின், நமது வீட்டின் கண்களாகிய பெண்களை பெருமைப்படுத்தும் விதத்தில், கொண்டாடப்படவுள்ள மகளிர் தின வாழ்த்தை பலர் தங்கள் அகம் குளிர வெளிப்படுத்தும் நேரத்தில், சென்னை மாணவி ஒருவர் தன் முகம் குளிர வாழ்த்து சொல்கிறார்.படம்: சந்திரசேகர்நீங்களும் இது போன்ற வித்தியாசமான படம்,போஸ்டர், பேனர், கேலிச்சித்திரம், சுவர் ஓவியம் போன்றவைகளை படம் எடுத்து கீழே உள்ள முகவரிக்கு மின்னஞ்சல் செய்யலாம். நீங்கள் அனுப்பும் படங்கள் தரமானதாகவும், உங்களுக்குச் சொந்தமானதாகவும் இருக்கட்டும். நன்றி!
9 / 20
எக்காரணத்தைக் கொண்டும்...: ரயில் பயணிகளுக்கான ஒரு அறிவிப்பு போர்டு இது. எக்காரணத்தைக் கொண்டும் ரயில் பயணிகள் ரயில் நிலையங்களிலோ, ரயில் பயணத்தின் போதே புகைபிடிக்கக்கூடாது என்று சொல்ல வந்தவர்கள், புகைகிடிக்கக்கூடாது என்று எழுதிவைத்துள்ளனர். சொந்தமாக செலவு செய்து எழுதிவைத்திருந்தால் ஒழுங்காக எழுதி வைத்திருப்பார்கள். இதுபோல ‘ஸ்பான்சர்’பிடித்து எழுதினால் இப்படித்தான் எழுதப்படுமோ?படம்: வீரமுத்துநீங்களும் இது போன்ற வித்தியாசமான போஸ்டர், பேனர், கேலிச்சித்திரம், சுவர் ஓவியம் போன்றவைகளை படம் எடுத்து கீழே உள்ள முகவரிக்கு மின்னஞ்சல் செய்யவும். நீங்கள் அனுப்பும் படங்கள் தரமானதாகவும், உங்களுக்குச் சொந்தமானதாகவும் இருக்கட்டும். நன்றி!
10 / 20
அவென்யூ படும்பாடு?: சின்ன சின்ன வார்த்தைக்கு கூட பெரிய அளவில் தடுமாறுவது நம்மாளுகளாகத்தான் இருக்கும்.,அரசு அதிகாரிகளின் மேற்பார்வையில் எழுதப்பட்ட வழிகாட்டி பலகையில் தமிழும்,ஆங்கிலமும் தடுமாறுது..படம்:ஏ.எஸ்.ரவிநீங்களும் இது போன்ற வித்தியாசமான விஷயங்களை படம் எடுத்து கிழே உள்ள முகவரிக்கு மின்னஞ்சல் செய்யவும்.நீங்கள் அனுப்பும் படங்கள் தரமானதாகவும்,உங்களுக்கு சொந்தமானதாகவும் இருக்கட்டும்.நன்றி!
11 / 20
ரொம்ப கரெக்டுங்க...: விவசாய தொழில் செய்வோர் வேறு ஏதாவது மாற்றுத்தொழில் பார்த்துக்கொள்வது நல்லது என்று பிரதமர் போன்றவர்களே சொல்லிவரும் இந்த காலத்தில், விவசாயம் செய்பவர்களும் தெய்வத்திற்கு சமமானவர்களே என்று சொல்லியிருப்பது ரொம்பவும் சரியான வார்த்தை,ஆனால் இப்போது விவசாயம் செய்ய ஆட்கள் இல்லை இன்னும் கொஞ்ச காலத்தில் (ரியல் எஸ்டேட் புண்ணியத்தில்)விவசாயம் செய்ய இடமும் இல்லை என்றாகிவிடும்.படம்:பி.வேல்முருகன்நீங்களும் இது போன்ற வித்தியாசமான போஸ்டர்,பேனர்,சுவர் ஓவியம்,கேலிச்சித்திரம் போன்றவைகளை படம் எடுத்து கீழே உள்ள முகவரிக்கு மின்னஞ்சல் செய்யவும்.நீங்கள் அனுப்பும் படங்கள் தரமானதாகவும்,உங்களுக்கு சொந்தமானதாகவும் இருக்கட்டும்.நன்றி!
12 / 20
சென்னை’க்கு வந்த சோதனை?: பெங்களூர்-சென்னை மார்க்கத்தில் ஓடும் தமிழக அரசின் விரைவு பஸ்சில் தமிழ் தெரியாதவர்களுக்காக ஆங்கிலத்தில் எழுதப்பட்டுள்ள சென்னையில்தான் எத்தனை கோளாறு,கொட்டை எழுத்துக்களில் எழுதும் போதே இத்தனை கோளாறா?தாங்கமுடியலடா சாமி.படம்:பெங்களூரு,மணிகண்டன்நீங்களும் இது போன்ற வித்தியாமான விஷயங்கள்,போஸ்டர்,பேனர் போன்றவைகளை படம் எடுத்து கீழே உள்ள முகவரிக்கு மின்னஞ்சல் செய்யவும்.நீங்கள் அனுப்பும் படங்கள் தரமானதாகவும்,உங்களுக்கு சொந்தமானதாகவும் இருக்கட்டும்.நன்றி!
13 / 20
இது கவுண்டம்பட்டி ரவுசு...: நாட்டிலே எத்தனையோ போஸ்டர்,பேனர் பார்த்து இருப்போம்,ஆனா இப்படி ஒரு பேனரை பார்த்தது இல்லை என்றே சொல்லவேண்டும்.ஊரில் நடக்கும் கும்பாபிஷேகத்திற்கு அழைப்பு விடுத்தவர் திடீரென ஒருதலைக் காதலனாக மாறி புலம்புவதை என்னவென்று சொல்வது,மகா சூலினி மாரியம்மன் தான் கேட்கவேண்டும்.படம்:ஆதி, திருச்சிநீங்களும் இது போன்ற வித்தியாசமான பேனர்,போஸ்டர்,கேலிச்சித்திரம் போன்றவைகளை படம் எடுத்து கீழே உள்ள முகவரிக்கு மின்னஞ்சல் செய்யவும்.நீங்கள் அனுப்பும் படங்கள் தரமானதாகவும்,உங்களுக்கு சொந்தமானதாகவும் இருக்கட்டும். நன்றி!
14 / 20
பழகிப்பார் பாசம் புரியும்.: கிராமத்தில் உள்ளவர்கள் தங்கள் வீட்டு விலங்குகளை மிகவும் நேசிப்பார்கள்,இது மனிதர்களை மனிதர்களே நேசிக்காத நகரத்து மக்களுக்கு கொஞ்சம் புரிவது கடினம்தான்.அந்த வகையில் தங்கள் குடும்பத்தில் ஒன்றாக இருந்து,வளர்ந்து,இறந்துவிட்ட மாட்டினை நேசித்து பெரிய ஊர் சேரி கிராமத்தினர் ஒட்டியுள்ள போஸ்டர் இது.படம்:பி.வேல்முருகன்நீங்களும் இது போன்ற வித்தியாசமான போஸ்டர்,பேனர்,கேலிச்சித்திரம்,சுவர் ஒவியம் போன்றவைகளை படம் எடுத்து கிழே உள்ள முகவரிக்கு மின்னஞ்சல் செய்யவும்.நீங்கள் அனுப்பும் படங்கள் தரமானதாகவும்,உங்களுக்கு சொந்தமானதாகவும் இருக்கட்டும்.நன்றி!
15 / 20
வேண்டாமே ‘டிப்ஸ்’...: இப்போதெல்லாம் ஒட்டலில் சர்வரிடம் கொஞ்சமும் கூடுதலாக சட்னி கேட்டால் கூட அந்த நன்றிக்கடனுக்கு கூடுதலாக டிப்ஸ் தரவேண்டும் என்று எதிர்பார்க்கிறார்கள் ஒட்டல் சர்வர்கள்.,இந்த நிலையில் பட்டுக்கோட்டையில் உள்ள ஒரு ஒட்டலில் எங்களுக்கு டிப்ஸ் கொடுக்காதீர்கள்,விரும்பினால் ஏழைக்குழந்தைகளுக்கு உதவுங்கள் என்று எழுதிவைத்துள்னர்,பாராட்டவேண்டிய விஷயம்தான்.படம்:கார்த்திகேயன்,பட்டுக்கோட்டை.நீங்களும் இதுபோன்ற வித்தியாசமான சுவர் விளம்பரம்,போஸ்டர்,பேனர்,கேலிச்சித்திரம்,சுவர் ஓவியம் போன்றவைகளை படம் எடுத்து கிழே உள்ள முகவரிக்கு மின்னஞ்சல் செய்யவும்.,நீங்கள் அனுப்பும் படங்கள் தரமானதாகவும்,உங்களுக்கு சொந்தமானதாகவும் இருக்கட்டும்.நன்றி!
16 / 20
இதுதான் முதல் தேவை...: கழிப்பறையை சுத்தமாக வைத்துக்கொள்ளுங்கள் அதுதான் சுகாதாரத்தின் அடிப்படை என்ற கோஷம் எங்கும் முழங்குகிறது.,அதே நேரம் கழிப்பறையை இல்லாமல் இருக்கும் கிராமங்கள் மற்றும் சிறியஊர்களில் கழிப்பறை கட்டித்தரவேண்டியதும் அவசியம் என்பதை இந்த வாசகம் வலியுறுத்துகிறது.படம்:திருவள்ளூர்,சீனிவாசன்நீங்களும் இது போன்ற வித்தியாசமான சுவர் எழுத்து,பேனர்,போஸ்டர்,கேலிச்சித்திரம் போன்றவைகளை படம் எடுத்து கீழே உள்ள முகவரிக்கு மின்னஞ்சல் செய்யவும்.நீங்கள் அனுப்பும் படங்கள் தரமானதாகவும்,உங்களுக்கு சொந்தமானதாகவும் இருக்கட்டும்.நன்றி!.
17 / 20
வாழ்த்துக்கள் நண்பா....: படவிளக்கம்:நாய் நன்றியுள்ள பிராணி தெரியும்,அந்த நாய்க்கு நன்றி தெரிவிக்கும் விதமாக வித்தியாசமாக ஒட்டப்பட்டுள்ள போஸ்டர்.படம்:சுரேஷ்நீங்களும் இது போன்ற வித்தியாசமான போஸ்டர்,பேனர்,கேலிச்சித்திரம்,சுவர் ஓவியம் போன்றவைகளை படம் எடுத்து கிழே உள்ள முகவரிக்கு மின்னஞ்சல் செய்யவும்.,நீங்கள் அனுப்பும் படங்கள் தரமானதாகவும்,உங்களுக்கு சொந்தமானதாகவும் இருக்கட்டும்.,நன்றி!
18 / 20
மட்டையாய் கிடக்கிறாயே மனிதா?: குடியின் பிடியில் கொஞ்சம்,கொஞ்சமாய் தமிழகம் அழிந்து வருவதை உணர்த்த ,இது தொடர்பான விழிப்புணர்வு போஸ்டர்களை சிலர் சமுதாய தொண்டாக அடித்து ஒட்டிவருகின்றனர்.,அந்த போஸ்டர்களில் ஒன்றுதான் இது.படம்:ஈச்சனாரி,சுரேஷ்.நீங்களும் இது போன்ற போஸ்டர்,பேனர்,கேலிச்சித்திரம்,சுவர் ஓவியம் போன்றவைகளை படம் எடுத்து கிழே உள்ள முகவரிக்கு மின்னஞ்சல் செய்யவும்.நீங்கள் அனுப்பும் படங்கள் தரமானதாகவும்,உங்களுக்கு சொந்தமானதாகவும் இருக்கட்டும்.நன்றி!
19 / 20
அன்று...இன்று...,: தமிழின விரோதியாக கருதப்படும் இலங்கை அதிபர் ராஜபக்ஷே சமீபத்தில் இந்தியா வந்த போது அவரது வருகையை கண்டித்து தி.மு.க.,தலைவர் கருணாநிதி தலைமையில் அவரது மகள் கனிமொழி எம்.பி., உள்ளீட்டோர் உண்ணாவிரதம் இருந்ததையும்,இதே கனிமொழி ராஜபக்ஷேயை நேரில் பார்த்தபோது சிரித்தபடி கைநீட்டி பரிசு வாங்குவதையும் இணைத்து, தமிழர்களே சிந்திப்பீர் என்று கேட்டு ஊர் முழுவதும் போஸ்டர் கட்டப்பட்டுள்ள பேனர் பரபரப்பபை ஏற்படுத்தியுள்ளது. படம்:எஸ்.ரமேஷ்நீங்களும் இது போன்ற வித்தியாசமான பேனர்,போஸ்டர்,சுவர் ஓவியம்,கேலிச்சித்திரம் போன்றவைகளை படம் எடுத்து கிழே உள்ள முகவரிக்கு மின்னஞ்சலாக அனுப்பலாம்.நீங்கள் அனுப்பும் படங்கள் தரமானதாகவும்,உங்களுக்கு சொந்தமானதாகவும் இருக்கட்டும்.நன்றி!
20 / 20
ராஜாக்கள் பேரம் பேசுவதில்லை...: சென்னையைச் சேர்ந்த தினமலர் இணையதள வாசகர் ,சூரத்தில் உள்ள துணிக்கடை ஒன்றிக்கு சென்ற போது அங்கு ஆங்கிலத்தில் இருந்த வாசகம்(வாடிக்கையாளர்கள் அரசர்களைப் போன்றவர்கள்,அரசர்கள் ஒருபோதும் பேரம் பேசுவதில்லை)அவரை ஈர்த்துவிட உடனே கையில் இருந்த கேமிராவில் கிளிக் செய்து நமது போஸ்டர் பகுதிக்கு அனுப்பிவிட்டார்.படம்:மாதேஸ்வரராஜ்
Advertisement