போஸ்டர்ர்ர்...

10-May-2013
1 / 20
பழகவா? பகைக்கவா?: இப்பல்லாம் இரண்டு சக்கர வாகனத்தில் என்னவேண்டுமானாலும் எழுதலாம் என்றாகி விட்டது., இங்கே ஒருவர் பழகிப்பார் பாசம் தெரியும், பகைத்துப்பார் வீரம் தெரியும் என்று எழுதி வைத்துள்ளார்., நீ,யாரு, எவரு என்றே தெரியாமல் நான் ஏன்? உங்கிட்ட பழகணும், அப்புறம் பகைச்சுக்கணும் என்று யாராவது கேட்கமாட்டார்களா?படம்: கந்தசாமிநீங்களும் இது போன்ற வித்தியாசமான படம்,போஸ்டர்,பேனர், சுவர் ஓவியம் போன்றவைகளை படம் எடுத்து கீழே உள்ள முகவரிக்கு மின்னஞ்சல் செய்யவும். நீங்கள் அனுப்பும் படங்கள் தரமானதாகவும், உண்மையானதாகவும், உங்களுக்கு சொந்தமானதாகவும் இருக்கட்டும், நன்றி!
2 / 20
மொட்டை போடுமிடம்...: நாகை மாவட்டம் வேளாங்கண்ணியில் உள்ள வேளாங்கண்ணி ஆலயத்தின் விசேஷம் பழனி முருகன் கோவிலில் போடுவது போலவே நிறைய பேர் இங்கு வந்து மொட்டை போட்டு செல்வதுதான்.,இதற்காக அங்கு நிறைய மொட்டை போடும் இடங்கள் உள்ளன.அந்த இடத்தினை அடையாளம் காட்டும் அறிவிப்புதான் இது.சிம்பிளாக மொட்டை போடும் இடம் என்று அச்சிடுவதற்கு பதிலாக,ஏதோ தலையை எடுப்பது போல தலைமுடி எடுக்கும் இடம் என்று மிரட்டும் தொனியில் அச்சிட்டுள்ளனர்.படம்:அந்தோணி.நீங்களும் இது போன்ற வித்தியாசமான பேனர்,போஸ்டர்,சுவர் ஓவியம்,கேலிச்சித்திரம் போன்றவைகளை படம் எடுத்து கீழே உள்ள முகவரிக்கு மின்னஞ்சல் செய்யலாம்.நீங்கள் அனுப்பும் படங்கள் தரமானதாகவும்,உண்மையானதாகவும்,உங்களுக்கு சொந்தமானதாகவும் இருக்கட்டும்,அவசியம் உங்கள் தொடர்பு எண்ணைக்குறிப்பிடவும்.நன்றி!
3 / 20
பாவம் கிராமத்து மக்கள்...: ராமதாஸ் உள்ளிட்ட தலைவர்கள் ‘உள்ளே’ இருப்பதற்கும், கிராமத்தில் ஒடும் பஸ்களுக்கும் எந்த சம்பந்தமும் இல்லை.,ஆனால் இந்த பஸ்கள்தான் காரணம் என்பது போல, பல பஸ்கள் எரிக்கப்பட்டுவிட்டன.,விளைவு பகலில் மட்டுமே பஸ்கள் இயக்கப்படுகின்றன.,மாலை 6 மணிக்கு மேல் மறுநாள் காலை 6 மணி வரை அரசாங்க பஸ்கள் எதுவும் இயக்கப்படுவது இல்லை.அமைச்சர்கள்,அதிகாரிகள்,நகரவாசிகள் யாருக்கும் இந்த பஸ்களின் அருமை தெரியாததால், அவர்கள் தத்தம் வேலையை பார்த்துக்கொண்டு உள்ளனர்.,ஆனால் கிராமத்து மக்களின் மிகப்பெரிய தொடர்பு இந்த அரசு பஸ்கள்தான்.,இதனால் அந்த பகுதி மக்கள் பலரின் அன்றாட பிழைப்பு கேள்விக்குறியாகி இருப்பது எத்தனை பேருக்கு தெரியும்...எதையும் தாங்கும் கிராமத்து மக்கள் பாவம் இதையும் தாங்கிக்கொண்டு இருக்கின்றனர்.படம்:ஆர்.கோபாலகிருஷ்ணன்,பொன்னேரி.நீங்களும் இதுபோன்ற வித்தியாசமான சுவரொட்டி,போஸ்டர்,போன்றவைகளை படம் எடுத்து கிழே உள்ள முகவரிக்கு மின்னஞ்சல் செய்யவும்.நீங்கள் அனுப்பும் படங்கள் தரமானதாகவும்,உண்மையானதாகவும்,உங்களுக்கு சொந்தமானதாகவும் இருக்கட்டும்.,நன்றி!
4 / 20
கூடங்குளத்தை காத்தவள்...: படவிளக்கம்:கூடங்குளம் அணு மின் நிலையம் செயல்பட வேண்டும் திருப்பூர் சிவசேனா குழுவினர் அங்குள்ள மாசாணி அம்மனை வேண்டிக்கொண்டார்களாம்.,இப்போது சுப்ரீம் கோர்ட் கூடங்குளத்திற்கு ஆதரவாக வெளிவந்தவுடன்,மாசாணி அம்மனுக்கு நன்றி தெரிவித்து வித்தியாசமாக போஸ்டர் ஒட்டிவிட்டனர்.படம்:அரவிந்த்,திருப்பூர்.நீங்களும் இது போன்ற வித்தியாசமான போஸ்டர்,பேனர்,கேலிச்சித்திரம்,சுவர் ஓவியம் போன்றவைகளை படம் எடுத்துகீழே உள்ள முகவரிக்கு மின்னஞ்சல் செய்யவும்.நீங்கள் அனுப்பும் படங்கள் தரமானதாகவும்,உண்மையானதாகவும்,உங்களுக்கு சொந்தமானதாகவும் இருக்கட்டும்.,நன்றி!
5 / 20
காந்தி பொம்மையாயிட்டாரே...: தீயதை பார்க்காதே,தீயதை பேசாதே,தீயதை கேட்காதே என்ற காந்தி பொம்மையின் வடிவத்தில் பிரதமரை சித்தரித்து சென்னையில் ஒட்டப்பட்டுள்ள போஸ்டர் இது.படம்:எல்.சீனிவாசன்,சென்னைநீங்களும் இது போன்ற வித்தியாசமான போஸ்டர்,பேனர்,கேலிச்சித்திரம்,சுவர் ஒவியம் போன்றவைகளை படம் எடுத்து கீழே உள்ள முகவரிக்கு மின்னஞ்சல் செய்யவும்.நீங்கள் அனுப்பும் படங்கள் தரமானதாகவும்,உண்மையானதாகவும்,உங்களுக்கு சொந்தமானதாகவும் இருக்கட்டும்,நன்றி!
6 / 20
அப்படின்னா...: மதுரை புதூரில் உள்ள ஒட்டல் ஒன்றுக்கான விளம்பர போஸ்டரில் ஐம்பது புரோட்டா சாப்பிடுபவர்களுக்கு 500 ரூபாய் பரிசு என்று அறிவித்துள்ளனர். எங்கள் ஒட்டல் புரோட்டா ஐம்பது கூட சாப்பிடலாம் என்றால் அது ஒட்டலுக்கு பெருமை கொடுக்கும்... இல்லாவிட்டால் இதைப்படித்துவிட்டு, இந்த ஒட்டல் புரோட்டா ஐந்துகூட சாப்பிடமுடியாது போல என்று கிண்டல்தான் செய்வார்கள். படம்:அருண் நீங்களும் இது போன்ற வித்தியாசமான போஸ்டர்,பேனர்,சுவர் ஒவியம்,கேலிச்சித்திரம் போன்றவைகளை படம் எடுத்து கிழே உள்ள முகவரிக்கு மின்னஞ்சல் செய்யவும்.நீங்கள் அனுப்பும் படங்கள் தரமானதாகவும், உண்மையானதாகவும், உங்களுக்கு சொந்தமானதாகவும் இருக்கட்டும்,நன்றி!
7 / 20
எப்படியெல்லாம் சிந்திக்கிறாங்கய்யா..: பொதுத்தேர்தலை மிஞ்சும் விதத்தில் ரயில்வே சங்க தேர்தல் நடந்து முடிந்துள்ளது.,யார் ஜெயித்தாலும் போஸ்டர் ஒட்டி நாறடித்த ரயில்வேக்கு சொந்தமான பொதுச்சுவர்களை சுத்தப்படுத்தப்போவதில்லை என்பது வேறு விஷயம்...ஒட்டிய போஸ்டரில் ஒன்றில், தொழிலாளியாய் இருக்கும் வரை எதிரி உன்னைவிட மாட்டான்,ரோஜாபூ சின்னத்தில் வாக்களி எதிரி உன்னை தொடமாட்டான் என்று எதுகை மோனைக்கு குறைவின்றி அச்சடித்துள்ளனர்., எல்லாம் சரி ரோஜாபூ சின்னத்திற்கு ஓட்டளித்தால் ஒன்றும் முதலாளியாகி விடப்போவதில்லையே அப்போதும் தொழிலாளிதானே.. படம்:எஸ்.சேர்மராஜ்.சென்னை நீங்களும் இது போன்ற வித்தியாசமான போஸ்டர்,பேனர்,சுவர் ஒவியம், கேலிச்சித்திரம் போன்றவைகளை படம் எடுத்து கிழே உள்ள முகவரிக்கு மின்னஞ்சல் செய்யலாம். நீங்கள் அனுப்பும் படங்கள் உண்மையானதாகவும்,தரமானதாகவும்,உங்களுக்கு சொந்தமானதாகவும் இருக்கட்டும்,அவசியம் உங்கள் போன் எண்ணைக்குறிப்பிடவும்.நன்றி!
8 / 20
பாட்டனை ‘வால்’ ஏந்தவிடவில்லை...: நாம் தமிழர் இயக்கத்தினர் தமிழைமுன்னிறுத்தி பல இடங்களில் போஸ்டர் ஒட்டிவருகின்றனர்.,மற்றவர்கள் தமிழில் பிழை செய்தால் பரவாயில்லை ,ஆனால் மூச்சுக்கு முன்னூறு தரம் தமிழை முன்னிறுத்தும் இவர்கள் அடிக்கும் போஸ்டர்களில், நிறைய தமிழ் பிழைகள்,உதாரணத்திற்கு பாட்டன் சோழன் வாளேந்தினான் என்று வரவேண்டிய இடத்தில் வாழேந்தினான் என்று அடித்துள்ளனர்.,நல்லவேளை வால் ஏந்தினான் என்று அடிக்காமல் போனார்கள்.படம்:தமிழ்விரும்பிநீங்களும் இது போன்ற வித்தியாசமான போஸ்டர்,பேனர்,சுவர் ஒவியம்,கேலிச்சித்திரம் போன்றவைகளை படம் எடுத்து கீழே உள்ள முகவரிக்கு மின்னஞ்சல் செய்யலாம்.நீங்கள் அனுப்பும் படங்கள் தரமானதாகவும்,உண்மையானதாகவும்,உங்களுக்கு சொந்தமானதாகவும் இருக்கட்டும்,அவசியம் உங்கள் தொடர்பு எண்ணைக்குறிப்பிடவும்.,நன்றி!
9 / 20
மனசுல பதிய வைக்கிறாங்களாம்...: மாணவ,மாணவியருக்கு லேப்-டாப் என்ற விலை உயர்ந்த மடிக்கணினி வழங்கிய போது, அதன் மேல் முதல்வர் படத்தை ஒட்டி கொடுத்தவர்கள், தற்போது பள்ளி சிறார்கள் பயன்படுத்தும் ஜாமென்ட்ரி பாக்சிலும் முதல்வர் படத்தை ஒட்டி கொடுத்துள்ளனர்.படம்:பாலசுப்பிரமணியம்.நீங்களும் இது போன்ற வித்தியாசமான படம்,போஸ்டர்,பேனர்,சுவர்ஒவியம் போன்றவைகளை படம் எடுத்து கிழே உள்ள முகவரிக்கு மின்னஞ்சல் செய்யலாம்.நீங்கள் அனுப்பும் படங்கள் தரமானதாகவும்,உண்மையானதாகவும்,உங்களுக்கு சொந்தமானதாகவும் இருக்கட்டும்,அவசியம் உங்கள் தொடர்பு எண்ணைக்குறிப்பிடவும்.நன்றி!
10 / 20
சொன்னா கேளுங்க...: சென்னையில் மின்சார ரயிலில் அடிபட்டு இறப்பவர்களின் எண்ணிக்கை அதிகரித்துக்கொண்டே போகிறது.,இதற்கு பெரும்பாலும் அவர்கள் செய்யும் சின்ன,சின்னத்தவறுகள்தான் காரணம்,அந்த தவறுகளை தவிர்க்கும்படி கேட்டு பொறுப்புடன் திருவள்ளூர் ரயில் நிலையத்தில் பேனர் கட்டிவைத்துள்ளனர்...மக்கள் கடைபிடிக்கவேண்டும்.படம்:சீனிவாசன்,திருவள்ளூர்.நீங்களும் இது போன்ற வித்தியாசமான போஸ்டர்,பேனர்,கேலிச்சித்திரம் போன்றவைகளை படம் எடுத்து கீழே உள்ள முகவரிக்கு மின்னஞ்சல் செய்யலாம்.நீங்கள் அனுப்பும் படங்கள் தரமானதாகவும்,உண்மையானதாகவும்,உங்களுக்கு சொந்தமானதாகவும் இருக்கட்டும்.அவசியம் உங்கள் போன் எண்ணைக்குறிப்பிடவும், நன்றி!
11 / 20
பட்ஜெட்டை இப்படியும் விளக்கலாமோ...: பட்ஜெட்டை பொது மக்களிடம் விளக்குவதற்காக அதிமுகவினர் பொதுக்கூட்டங்கள் நடத்திவருகின்றனர்.,கூட்டத்திற்கு ஆள் சேர்க்க குத்தாட்டம் போடும் கோஷ்டியினரின் நடனம் நடத்தப்படுகிறது.கூட்டமும் கூடுகிறது,பட்ஜெட் பற்றி பேச ஆரம்பித்ததும் கூட்டம் கலைய ஆரம்பித்துவிடுகிறது.,பேசாமல் இந்த குத்தாட்ட குழுவினர் வாயாலயே பட்ஜெட் பற்றி இடையிடையே பேசச்சொல்லிவிடலாம்..குடும்பகட்டுப்பாடு திட்டத்தை வில்லிசையில் சொல்வது போல..படம்:திருப்பதி,கிழக்கு சென்னைநீங்களும் இது போன்ற படங்கள்,போஸ்டர்,பேனர்,சுவர் ஒவியம்,கேலிச்சித்திரம் போன்றவைகளை படம் எடுத்து கிழே உள்ள முகவரிக்கு மின்னஞ்சல் செய்யலாம்.நீங்கள் அனுப்பும் படங்கள் தரமானதாகவும்,உண்மையானதாகவும்,உங்களுக்கு சொந்தமானதாகவும் இருக்கட்டும்,அவசியம் உங்கள் போன் எண்ணை தெரிவிக்கவும்.நன்றி!
12 / 20
முதல்ல நீங்க கடைபிடிங்க..: ரயில்வே சொத்து என்பது பொதுச்சொத்து. ஆகவே பொதுமக்கள் ரயில் நிலையங்களையும், ரயில் பெட்டிகளையும் சுத்தமாக வைத்திருக்கும்படி கேட்டுக்கொள்வதாக அடிக்கடி சொல்லும் ரயில்வே நிர்வாகம், அந்த வார்த்தையை முதலில் தனது ஊழியர்களுக்கு சொல்லுமா?தெரியவில்லை., காரணம் திருவள்ளூர் மார்க்கத்தில் ஓடும் மின்சார ரயிலில், ரயில்வே சங்க தேர்தலை முன்னிட்டு மானாவாரியாக ஒட்டப்பட்டுள்ள போஸ்டர்கள்., இவர்கள் இப்படி தங்கள் வீட்டு சுவர்களில் ஒட்டுவார்களா?படம்: நலம்விரும்பி, திருவள்ளூர்.நீங்களும் இது போன்ற வித்தியாசமான போஸ்டர், பேனர், சுவர் ஓவியம், கேலிச்சித்திரம் போன்றவைகளை படம் எடுத்து கீழே உள்ள முகவரிக்கு மின்னஞ்சல் செய்யவும். நீங்கள் அனுப்பும் படங்கள் தரமானதாகவும், உண்மையானதாகவும், உங்களுக்கு சொந்தமானதாகவும் இருக்கட்டும்., நன்றி!
13 / 20
யாரும் விடுபடலையே...: மாமல்லபுரத்தில் கோடி பேரை கூட்டுவதற்காக கூட்டுவதற்காக சேலம் மாவட்டம் மேச்சேரியில் வைக்கப்பட்டிருந்த பிரம்மாண்டமான பேனர்,யாரல்லாம் விழாவிற்கு வருகீறீர்களோ... அவர்கள் படம் எல்லாம் பேனரில் போடப்படும் என்று சொல்லியிருப்பார்கள் போலும், நிறைய பேர் படம் இடம் பெற்றுள்ளது.,இதில் ஒருவர் தன் படம் எங்கே என்று கண்டுபிடித்துவிடுவதற்குள் விழாவே முடிந்துவிடுவது நிச்சயம்.படம்:சேலம்,பாலசுப்பிரமணியம்நீங்களும் இது போன்ற வித்தியாசமான போஸ்டர்,பேனர்,கேலிச்சித்திரம்,சுவர் ஒவியம் போன்றவைகளை படம் எடுத்து கீழே உள்ள முகவரிக்கு மின்னஞ்சல் செய்யவும்.நீங்கள் அனுப்பும் படங்கள் தரமானதாகவும்,உண்மையானதாகவும்,உங்களுக்கு சொந்தமானதாகவும் இருக்கட்டும்,நன்றி!
14 / 20
தாங்கமுடியலடா சாமி...: ரயில்வே சங்க தேர்தல் நடக்குதாம்,நல்ல நடக்கட்டும்,இதற்கும் பொதுமக்களுக்கும் எந்த சம்பந்தமில்லை ஆனால் அவர்கள் மனதில் பொருமித்தள்ளும் விதத்தில் ரயில்வே சுவர்களை நாசப்படுத்தி எங்கெங்கும் போஸ்டர் ஒட்டியுள்ளனர்.என்ன கலாசாரம் இது...விழுப்புரம் ரயில் நிலையத்தின் சுவர்களே தெரியாத அளவிற்கு படு அசிங்கமாய் ஒட்டியுள்ள போஸ்டர்கள் இவை.படம்:எஸ்.ரமேஷ்,விழுப்புரம்.நீங்களும் இது போன்ற போஸ்டர்,பேனர்,சுவர் ஒவியம்,கேலிச்சித்திரம் போன்றøவைகளை படம் எடுத்து கிழே உள்ள முகவரிக்கு மின்னஞ்சல் செய்யவும்.நீங்கள் அனுப்பும் படங்கள் தரமானதாகவும்,உண்மையானதாகவும்,உங்களுக்கு சொந்தமானதாகவும் இருக்கட்டும், நன்றி!
15 / 20
பூத்து கோவில் தெரியுமா?: தெலுங்கு தேச மக்களின் தமிழ் அன்பிற்கு ஒரு அளவே இல்லாமல் போய்விட்டது,புத்து கோவில் என்று எழுதியதாக நினைத்துள்ளார்கள் ஆனால் அது பூத்து கோவிலாகியுள்ளது.படம்:ஜெகன்நீங்களும் இது போன்ற வித்தியாசமான பெயர் பலகை,போஸ்டர்,சுவர் ஒவியம்,கேலிச்சித்திரம் போன்றவைகளை படம் எடுத்து கிழே உள்ள முகவரிக்கு மின்னஞ்சல் செய்யலாம்.நீங்கள் அனுப்பும் படங்கள் தரமானதாகவும்,உண்மையானதாகவும்,உங்களுக்கு சொந்தமானதாகவும் இருக்கட்டும்.,நன்றி!
16 / 20
இதை முன்னாடியே செஞ்சிருக்கலாம்...: மேட்டுப்பாளையத்தில் உள்ள பில்லூர் அணையில் இருந்து பவானி ஆற்றில் திறந்துவிடப்பட்ட தண்ணீரில் முழ்கி, ஒரே குடும்பத்தை சேர்ந்த ஐந்து பேர் இறந்து போன சோக சம்பவத்தை தொடர்ந்து தற்போது ஆங்காங்கே எச்சரிக்கை பேனர் வைத்துள்ளனர்.,இதை முன்கூட்டியே செய்திருந்தால் அநியாயமாக உயிர் பலியானதை தடுத்து நிறுத்தியிருக்கலாம்.படம்:ஆர்.பாலாஜி,மேட்டுப்பாளையம்.நீங்களும் இது போன்ற வித்தியாசமான பேனர்,போஸ்டர்,சுவர் ஒவியம்,கேலிச்சித்திரம் போன்றவைகளை படம் எடுத்து கிழே உள்ள முகவரிக்கு மின்னஞ்சல் செய்யவும்.நீங்கள் அனுப்பும் படங்கள் தரமானதாகவும்,உண்மையானதாகவும்<,உங்களுக்கு சொந்தமானதாகவும் இருக்கட்டும்,நன்றி!
17 / 20
வெல்லாதது அது...: முயல் ,ஆமை ஒட்டப்பந்தயத்தின் போது எங்கே ஆமை தன்வேகத்திற்கு இணையாக வரப்போகிறது என்று எண்ணி முயல் அசந்து தூங்கியதாம்.,பொறுமையாக வந்த ஆமை வென்றதாம்.,சிறு வயதில் சொல்லிக்கொடுத்த இந்த கதையின் நோக்கம் பொறுமை எப்படியிருந்தாலும் வெல்லும் என்பதுதான்..இங்கே அந்தக்கதையை வேறு மாதிரி எடுத்துக்கொண்டு போர்டு போட்டுள்ளார் இவர்.முயலும் வெல்லும்,ஆமையும் வெல்லும் ஆனால் முயலாமைதான் வெல்லாது அதாவது முயற்சிக்காமல் விட்டால்தான் வெல்லமுடியாது என்று சொல்லியுள்ளார்.சரிதான்.
18 / 20
இருக்கிறதே இருநூறு ரூபாதான்...: மலிவு விலை உணவகத்தை தேடி,தேடி சாப்பிடக்கூடிய, வசதி குறைந்த, பாங்க் இருப்பே இரு¡று ரூபாய் வைத்திருக்ககூடியவர்கள் இந்த அறிவிப்பை பார்த்தால் நொந்துதான் போவார்கள்.படம்:சீனிவாசன்நீங்களும் இது போன்ற வித்தியாசமான போஸ்டர்,பேனர்,கேலிச்சித்திரம்,சவர் ஓவியம் போன்றவைகளை படம் எடுத்து கிழே உ<ள்ள முகவரிக்கு மின்னஞ்சல் செய்யவும்.நீங்கள் அனுப்பும் படங்கள் தரமானதாகவும்,உண்மையானதாகவும்<,<உங்களுக்கு சொந்தமானதாகவும் இருக்கட்டும்.நன்றி!
19 / 20
அவரும் தெய்வமே...: தாய், தந்தை, குரு மட்டும் தெய்வம் அல்ல... வேளாண் புரிபவரும் தெய்வமே என்று எழுதி வைத்துள்ள இந்த இந்த விளம்பர பலகை உள்ளபடியே ஆழமான அர்த்தம் கொண்டுள்ளதுபடம்: பி.வேல்முருகன்.நீங்களும் இது போன்ற வித்தியாசமான போஸ்டர், பேனர், சுவர் ஓவியம் போன்றவைகளை படம் எடுத்து கீழே உள்ள முகவரிக்கு மின்னஞ்சல் செய்யவும். நீங்கள் அனுப்பும் படங்கள் தரமானதாகவும், உண்மையானதாகவும், உங்களுக்கு சொந்தமானதாகவும் இருக்கட்டும். நன்றி!
20 / 20
பார்ரா...மனிதநேயத்தை...: மூலப்பொருட்கள் விலையேறும் போது ஏற்றிய விலையை யாரும் குறைப்பது இல்லை,அதிலும் குறிப்பாக ஒட்டல்காரர்களைப் பொறுத்தவரை ஒன்வேதான்.,விலையை ஏற்றினால் ஏற்றியதுதான்.இந்த நிலையில் சென்னை சைதாப்பேட்டையில் உள்ள ஒட்டலில் மூலப்பொருட்கள் விலை குறைந்ததால் தாங்களும் உணவுப்பொருளின் விலையை குறைத்தாக எழுதிவைத்துள்ளனர்.பாரட்டப்பட வேண்டிய விஷயம்தான்.படம்:பி.வேல்முருகன்நீங்களும் இது போன்ற வித்தியாசமான போஸ்டர்,பேனர்,சுவர் ஒவியம்,கேலிச்சித்திரம் போன்றவைகளை படம் எடுத்து கிழே உள்ள முகவரிக்கு மின்னஞ்சல் செய்யலாம்.நீங்கள் அனுப்பும் படங்கள் தரமானதாகவும்,உண்மையானதாகவும்,உங்களுக்கு சொந்தமானதாகவும் இருக்கட்டும்.நன்றி!
Advertisement