போட்டூன்

13-Jul-2013
1 / 20
இவரு இந்த மாசம்...: இப்போது அதிமுகவினரால் பரிதி இளம்வழுதியை வைத்து நிறைய பொதுக்கூட்டம் நடத்தப்படுகிறது.அவரும் சென்னைத் தமிழில் கருணாநிதி குடும்பத்தை திட்டி அதிமுக விசுவாசத்தை வெளிப்படுத்தி வருகிறார்,ஆனால் இதைவிட ஆவேசமாக,கோர்வையாக,போன மாசம் வரை நாஞ்சில் சம்பத் என்பவர் பொங்கி எழுந்தாரே இப்போது அவர் எங்கே இருக்கிறார் என்று தெரிந்தவர்கள் சொல்லுங்கள்
2 / 20
பைக்கும் படகாகும்...: பின்னாடி உட்கார்ந்திருக்கிற ஆளைப்பொறுத்து வீரம் காட்டும் இளைஞர்கள் இங்கே சென்னை இசிஆர் ரோட்டில் மட்டுமல்ல, வடமாநிலத்திலும் இருக்கத்தான் செய்கிறார்கள்.என்ஜீனில் தண்ணீர் புகுந்தாலும் பரவாயில்லை என்று மோட்டார் பைக்கை, படகு போல தண்ணீரில் ஒட்டிச் செல்லும் இளைஞர் இவர்.அப்பா காசில் வாங்கிய பைக்காக இருக்கும் அதுதான் அருமை தெரியவில்லை.
3 / 20
துரத்தாதீங்க...திருத்தப்பாருங்க...: சென்னையில் உள்ள சுமார் 2ஆயிரத்து 500 ரவுடிகளை சென்னையை விட்டு வெளியூருக்கு துரத்தப்போறாங்களாம்,இது என்ன நியாயம்.துரத்தப்பட்டவர்கள் வெளியூரில் போய் அராஜகம் செய்தால் அது தப்பில்லையா?ஒண்ணு ரவுடிகளை திருத்தப்பாருங்க,இல்லைன்னா பிடிச்சு உள்ளே போடுங்க. உங்க விசேஷ அதிகாரத்தை வைச்சு நாலு பேரை போட்டுத்தள்ளினீங்கன்னா மத்தவங்க எல்லாரும் தண்ணாலே திருந்திட்டு போறாங்க.அதைவிட்டுவிட்டு வெளியூர் துரத்தற வேலை எல்லாம் பிரயோசனப்படாது.
4 / 20
சல்யூட் நம் ராணுவத்தினருக்கு...: உத்தரகண்ட் மாநிலத்தில் வெள்ளம் ஏற்பட்ட நாள் முதல் ஊன்,உறக்கம் பாராது உழைத்து பல ஆயிரம் உயிர்களை காப்பாற்றியவர்கள் நமது ராணுவத்தினரே. அவர்களை எவ்வளவு பாராட்டினாலும் தகும்.இவர்களில் 19 பேர் இன்னுயிரான தங்கள் தன்னுயிரையும் கூட தந்திருக்கிறார்கள்.அவர்களது செயலை பாராட்டி பல கார்ட்டூன்கள் வந்தாலும் நெஞ்சைத்தொட்ட கார்ட்டூன் இதை வரைந்தவருக்கும், அனுப்பியவருக்கும் நன்றி!
5 / 20
அந்த 99 ரூபாய் என்னாச்சு...: சமீபத்தில் காங்.தலைவர் சோனியா ஒரு பொதுக்கூட்டத்தில் பேசும்போது ஒரு கதை சொன்னார்,ஒரு அப்பா தனது மூன்று மகன்களை அழைத்து ஒவ்வொருவருவர் கையிலும் நூறு ரூபாய் கொடுத்தார்,இந்த பணத்தைக் கொண்டு இந்த அறையை நீங்கள் முழுமையாக நிறைக்கவேண்டும் என்று சொன்னார்.முதல் மகன் நூறு ரூபாய்க்கு மரப்பலகைகளை வாங்கிவந்து அறையில் போட்டார்,ஆனாலும் அறை முழுமையடையவில்லை,இரண்டாவது மகன் நூறு ரூபாய்க்கு பஞ்சு வாங்கிவந்து அறையை நிரப்பினார்,ஆனாலும் அறையானது நிரம்பவில்லை,மூன்றாவது மகன் ஒரே ஒரு ரூபாய்க்கு ஒரு மெழுகுதிரி வாங்கிவந்து, அதனை கொளுத்தி அறையின் நடுவே வைத்தார்,அறை முழுவதும் வெளிச்சம் பரவி நிரம்பியது,அறை முழுமையடைந்தது.என் மகன் ராகுல் மூன்றாவது மகன் போல,அவரது புத்திசாலித்தனத்தால் இந்த நாடு விரைவில் ஒளிமயமாயமாகும்,சுபிட்சம் பொங்கும்,செழுமை பெறும் என்று சொல்லியிருக்கிறார்.இதைக்கேட்ட குஜராத் முதல்வர் மோடி எல்லாம் சரி,மூன்றாவது மகனிடம் செலவழிக்க கொடுத்தததில் மீதமான 99 ரூபாயின் கதி என்னாச்சு? அதே நிலமைதான் இங்கேயும் நடக்குமா?என்று கிண்டலாக கேட்டுள்ளார்.
6 / 20
காரு எப்ப தருவீங்க...: பா.ம.க., முன்னாள் மத்திய அமைச்சர் பொன்னுசாமி பா.ம.க.,வில் இருந்து விலகி அதிமுகவில் தன்னை ஐக்கியப்படுத்திக் கொண்டுள்ளார்.அவருக்கும் செயற்குழு உறுப்பினர் பதவி வழங்கப்பட்டுள்ளது.மத்திய அமைச்சர் பதவியே வகித்தவருக்கு செயற்குழு உறுப்பினர் பதவி ஒரு பெரிய விஷயமாக இருக்கப்போவது இல்லை.மற்றபடி கட்சி மாறி வந்தா காரு கொடுப்பாங்கன்னு சொல்றாங்களே, இவருக்கு என்ன காரு ரெடியாயிருக்குன்னு தெரியலையே.
7 / 20
அது நான் அப்ப சொன்னது...: மகாபாரதத்தில் அபிமன்யு போல என் ஓருவனின் முதுகில் மொத்த பாரத்தையும் கொடுத்து சட்டசபையில் சுற்றி சுழன்று வார்த்தைகளால் வாள் வீச அனுமதி கொடுத்த டாக்டர் கலைஞர் இதோ இன்று கழக கொடியினை ஏற்றிவைக்கும் பாக்கியத்தை கொடுத்துள்ளார்,இந்த ஒரு பாக்கியம் போதாதா? இந்த பரிதி இளம்வழுதி வாழ்நாளல்லாம் நன்றிக்கடன் பட்டுக்கிடக்க, எனக்குள்ள ஆசை,வேண்டுகோள்,விருப்பம் எல்லாம் ஒன்றுதான்,அது , கழக கொடியினால் போர்த்தப்பட்ட நிலையில்தான் என் உடல் மயானத்திற்கு கொண்டு போகப்படவேண்டும்”.. இப்படி தன் வாழ்நாளல்லாம் தி.மு கழகத்திற்கு கடமைப்பட்டவன் என்று சொல்லி, திமுகவின் அமைச்சராக,துணைப்பொதுச் செயலாளராக இருந்த பரிதி இளம் வழுதி இன்று காலை போயஸ் தோட்டம் சென்று ஜெயலலிதா முன்னிலையில் அ.தி.மு.க.வில் தன்னை இணைத்துக்கொண்டுள்ளார்.
8 / 20
இது கனிமொழிக்கு கிடைத்த ஆதரவு: ஆக கடைசியில் கனிமொழி எம்.பி.,ஆவதற்கு காங்கிரசின் தயவு கிடைத்துவிட்டது.இதற்காக தமிழக காங்கிரசாரை பார்த்து கனிமொழி நன்றி தெரிவித்துள்ளார்.இது காங்கிரஸ், கனிமொழிக்கு தந்த ஆதரவு தானே தவிர திமுகவிற்கு தந்த ஆதரவு இல்லை என்று முத்தமிழ் காவலர் ஏதாவது கல்யாண வீட்டில் பேசி குழப்பாமல் இருந்தால் சரி.
9 / 20
நாம ஆட்டையில இல்லீயா...: பிரதமர் பெயருக்கு எல்லார் பெயரும் அடிபடுது,முலாயம் கூட நாற்பது சீட் இருந்தா போதும் நான் பிரதமராகிவிடுவேன் என்கிறார்,நாடறிந்த நம்ம பெயரை ஏன் பிரதமர் ரேஞ்சுக்கு யாரும் சிந்திக்கமாட்டேங்குறாங்க...
10 / 20
வருடம் முழுவதும் ஷாப்பிங்...: சென்னை திநகரில் மக்கள் அப்படி என்னதான் வாங்குவார்களோ. வருடம் முழுவதும் ஷாப்பிங் செய்கிறார்கள்,வாழ்க்கை முழுவதும் ஷாப்பிங் செய்கிறார்கள்.செய்துவிட்டு போகட்டும் அதனால் என்ன என்கிறீர்களா தெரியாத்தனமாக வாகனத்தில் இந்த கூட்டத்திற்குள் போய் சிக்கிவிட்டால் அப்புறம் வெளியேறுவது என்பது நம் கையில் இல்லை,இந்த வழியாக 108 வந்தால் கூட இடம் கிடைக்காது அப்பிடி ஓரு கூட்டம் அப்பியபடியே இருக்கிறது.
11 / 20
இப்ப நாம என்ன செய்யலாம்...: வயசாயிடுச்சு ஆளவிடுங்கப்பான்னாலும் கேட்காம பழையபடி பொறுப்புல கொண்டுவந்து விட்டுட்டாங்க,ஆன என்ன சொன்னாலும் மோடி பேச்சைத்தான் கேட்கிறாங்க நாம இப்ப என்ன செய்யலாம்னு பா.ஜ.க.,மூத்த தலைவர் இப்பல்லாம் ரொம்பவே யோசிக்கிறாரராம்.வெள்ளம் பாதித்த உத்தர்கண்ட் மாநில நிலமைதான் இப்ப படு மோசமா இருக்கு. அறிக்கை கதை கட்டுரைன்னு வாசிக்காம ‘டக்குனு’ எங்க ஊரு கேப்டன் பத்து லட்சத்தை எடுத்து நிவாரணநிதியா கொடுத்துட்டாரு. நீங்க ரொம்ப யோசிக்காம நிவாரணநிதியா பெருந்தொகையை கட்சி சார்பா அறிவிச்சுடுங்க,அப்புறம் தொண்டர்களை களம் இறக்கிவிடுங்க பிறகு பாருங்க உங்க மரியாதை எவ்வளவு கூடுதுன்னுட்டு.
12 / 20
எதுக்கு நிக்கிறாங்கன்னே தெரியலை...: எந்த கடை வைக்க இடம் கிடைக்காதோ,இல்லீயோ? டாஸ்மாக் கடை வைக்கமட்டும் எப்படியும், எங்கேயும் இடம் கிடைத்துவிடுகிறது.சென்னை பாரதி சாலையில் நியாயவிலைக்கடை பக்கத்திலேயே டாஸ்மாக் கடைவைத்துள்ளனர்.இரண்டுக்குமே கூட்டம் அப்புகிறது.மக்கள் எந்த கடைக்கு போறதுக்கு கூட்டமா நிக்கிறாங்கன்னே தெரியமாட்டேங்குது.நியாயவிலை கடைக்கு சரக்கு வாங்க போன மனுஷன் அந்த காசுல ‘சரக்கு’ அடிச்சுட்டு வந்துடுவாரோங்ற பயம் இந்த பகுதி தாய்மார்களுக்கு கொஞ்சம் அதிகம்தான்.
13 / 20
முயற்சி திருவினையாகட்டும்...: நான் எனது அமைச்சரவை சகாக்களிடம் சொல்லிவிட்டேன்,உங்களது சொல்லும்,செயலும் நேர்மையாக இருக்க வேண்டும் என்று”,‘வீட்டில் இருந்தே தூய்மையான நிர்வாகத்தை துவங்க வேண்டும் என்றும்’ கேட்டுக்கொண்டுள்ளேன், வெளிப்படையான ஊழல் இல்லாத நிர்வாகத்தை அளிப்பேன் என்றெல்லாம் செய்தியாளர்களிடம் பேசிய கர்நாடகா முதல்வர் சித்தராமையா கடைசியாக சொன்னதுதான் ஹைலைட்,நேர்மையான ஆட்சி நடத்தவே நாங்கள் முயற்சி செய்கிறோம் என்பதுதான் அது.,உங்கள் முயற்சியை திருவினையாகட்டும்.
14 / 20
ஒண்ணும் புரியலையே...: பிரதமர் மன்மோகன் சிங் கடந்த வாரம் மீண்டும் ஒரு முறை அமைச்சரவையை மாற்றியமைத்தார்.,(யார் அமைச்சராக வந்தும் எதுவும் நடக்கபோவதில்லை, என மேற்கு வங்க முதல்வர் மம்தா ஆவேசமாக குரல் கொடுத்தது பற்றிய விவாதம் அல்ல தற்போது)அவரது அமைச்சரவையில் புதிதாக பதவி ஏற்ற சிஸ்ராம் ஓலா என்பவருக்கு வயது மிகவும் குறைவு, ஜஸ்ட் 86 தான். இவ்வளவு குறைந்த வயது உள்ளவருக்கு இளைஞர் நலத்துறை அமைச்சரவை கொடுத்திருக்கலாம் ஆனால் வேலை வாய்ப்புதுறைக்கான கேபினட் அமைச்சராக்கியிருக்கிறார். சிஸ்ராம் ஓலா பதவி ஏற்பு வார்த்தையை படிப்பதற்குள் ரொம்பவே சிரமப்பட்டுவிட்டார்,பேப்பரை கண்ணுக்கு பக்கத்தில் கொண்டு போயும் கூட பல வார்த்தைகள் அவருக்கு பிடிபடவில்லை, ஆனாலும் நாட்டிற்கு தனது கடமையை செய்ய வேண்டுமே என்ற தாகத்துடன் தட்டுத்தடுமாறி படித்துவிட்டார்.அவருக்கு உள்ள முக்கிய தகுதி ராஜஸ்தான் மாநிலத்தில் பெருவாரியாக உள்ள ஜாட் இனத்தை சார்ந்தவர் என்பதுதான்.,வரக்கடிய லோக் சபா தேர்தலில் ஜாட் இன ஒட்டுகளை இப்படித்தானே வாங்கவேண்டியுள்ளது.வாழ்க பாரதம்.
15 / 20
முயற்சி திருவினையாகட்டும்...: "நான் எனது அமைச்சரை சகாக்களிடம் சொல்லிவிட்டேன்,உங்களது சொல்லும்,செயலும் நேர்மையாக இருக்கவேண்டும் என்று”,‘வீட்டில் இருந்தே தூய்மையான நிர்வாகத்தை துவங்க வேண்டும் என்றும்’ கேட்டுக்கொண்டுள்ளேன்,வெளிப்படையான ஊழல் இல்லாத நிர்வாகத்தை அளிப்பேன் என்றெல்லாம் பத்திரிகையாளர்களிடம் பேசிய கர்நாடகா முதல்வர் சித்தராமையா கடைசியாக சொன்னதுதான் ஹைலைட், நேர்மையான ஆட்சி நடத்தவே நாங்கள் முயற்சி செய்கிறோம் என்பதுதான் அது., உங்கள் முயற்சி திருவினையாகட்டும்.
16 / 20
ரொம்ப யோசிக்காதீங்கன்னா?: நடிகர் விஜய் தனது பிறந்த நாளான கடந்த 8-ந்தேதி சென்னை ஜெயின் கல்லுõரிவளாகத்தில் பிரம்மாண்டமாக விழா நடத்தி, அப்படியே சுமார் ஒரு கோடி ரூபாய் மதிப்பிலான உபகரணங்களை 3 ஆயிரது 900 மாற்றுத்திறனாளிகளுக்கு வழங்குவதற்கு இருந்தார்.,ஏதோ காரணத்தால் கல்லூரி நிர்வாகம் விழா நடத்த அனுமதி மறுக்கவே, விழா கொண்டாடப்படவில்லை. இது பற்றி நடிகர் விஜய் பேசும்போது, “விழா நடக்காதது கூட கவலை இல்லை ஆனால் 3ஆயிரத்து 900 மாற்றுத்திறனாளிகள் பயனடையாமல் போய்விட்டார்களே என்பதுதான் என் கவலை” என்று தற்போது கூறிவருகிறார், ஏனுங்கண்ணே ஒரு சந்தேகம், கொடுக்கிறதுன்னு முடிவு பண்ணிட்டா, அதுக்கு மேடை, பந்தல், விழா, விளக்கு அலங்காரம், ஆர்ப்பாட்டம், விளம்பரமெல்லாம் தேவைங்களான்னா... அமைதியா எல்லோரையும் மெரீனா கடற்கரைக்கு வரச்சொல்லி கொடுத்துரலாமேன்னா...
17 / 20
விழவேண்டும்...கொஞ்சம் அழவேண்டும்...: ஏற்கனவே கருணாநிதி சொன்னது போல கனிவாக மொழி பேசும் தன் மகள் கனிமொழியை ராஜ்ய சபா எம்.பி.,பதவிக்கு களமிறக்கிவிட்டுள்ளார், (இந்த நேரத்தில்திருச்சி சிவா போன்ற பொது வேட்பாளரை ஏன் களமாடவிடவில்லை என பொறுப்பில்லாமல் கேட்கக்கூடாது),86 ம் ஆண்டில் 22 பேரை வைத்தே எம்பி பதவி பெற்றவர் எங்கள் தலைவர்(அப்பாதானுங்க),இப்போது 23 எம்எல்ஏவை வைத்து எப்படி எம்.பி பதவி பெறுகிறார் என்று பாருங்கள் என வேட்புமனு தாக்கல் செய்த கையோடு கனிமொழி பேட்டியளித்துள்ளார்கள். தே.மு.தி.க.,காங், பாமக, கம்யூனிஸ்ட்,கட்சிகளிடம் சாஷ்டாங்கமாக விழ வேண்டும், கொஞ்சம் ஓவென்று அழவேண்டும்(அவ்வளவுதானே).....ஜெயித்ததும் பாருங்கள் இந்திய நாடாளுமன்ற வரலாற்றிலேயே மிகபெரிய மாற்றத்தினை கொண்டு வருகிறாரா இல்லையா என்று... அரசியலில் ஊழல் என்ற பேச்சே இல்லாமல் போய் விடும். இவரது முழக்கம் கேட்டு கர்நாடக முதல்வர் காவிரியில் தனக்கு கூட வைத்து கொள்ளாமல் அம்புட்டு தண்ணியையும் தமிழகத்துக்கு திறந்து விட்டுவிட்டு தமிழ்நாடு அரசு முன் கைகட்டி வாய் புதைத்து நிற்பார்... இலங்கை தமிழர்கள் தனி ஈழம் பெற்றுவிடுவர்.மேலும் தமிழர்கள் அனைவர் வீட்டிலும் மறுநாளிலிருந்து செல்வமும், சுபிஷமும் கூரையை பொத்துக்கொண்டு கொட்டும்.,இவ்வளவு நல்லது நடக்க இருக்கிறது,ஜீன் 27 ந்தேதி வரை பொறுத்திருங்களேன் வாழ்த்து சொல்ல..
18 / 20
நான் வெட்டிவிடவில்லை...: கல்யாண வீட்டில் அரசியல் பேசக்கூடாது என்று சொல்லிவிட்டு , தற்போது காங்கிரசில் இருக்கும் திருநாவுக்கரசு வீட்டு திருமண நிகழ்வில் கலந்து கொண்ட திமுக தலைவர் கருணாநிதி,"காங்கிரசோடு ஒட்டியிருந்த என்னை வெட்டிவிட்டவர்கள் யார்? என்பது திருநாவுக்கரசுக்கே தெரியும்” என்று பேசியிருக்கிறார். இத்தனை நாளும் ஈழத்தமிழர் பிரச்னைக்காக மத்திய அரசில் இருந்து விலகினார்கள் என்றுதான் நினைத்துக்கொண்டு இருந்தோம். இப்போதுதான் தெரிகிறது காங்கிரசார்தான் கழுத்தை பிடித்து தள்ளாத குறையாக வெட்டிவிட்டனர் என்பது., இப்போது யார் அந்த காரியத்தை செய்திருப்பார்கள் என்ற கேள்வி தங்கள் பக்கம் திரும்பாதிருக்க, கருணாநிதியை ‘மரியாதை நிமித்தமாக’மூத்த தலைவர்கள் சந்தித்து வருகின்றனர், அவர்களில் ஜெயந்தி நடராஜனும் ஒருவர்.
19 / 20
சென்னையில் ‘பல’நாள்...: எல்லா ஊரிலும் பெய்யும் மழை ,சென்னையில் எட்டிப்பார்க்க ரொம்பவே தயங்குகிறது. விளைவு தண்ணீர் லாரியைப் பார்த்த மாத்திரத்தில் மக்கள் குடங்களுடன் பாய்ந்து விடுகின்றனர். சீக்கிரம் நல்ல மழை பெய்ய வேண்டும். எல்லா மக்களும் தண்ணீர் பிரச்னையின்றி வாழ வேண்டும்.
20 / 20
காசு, பணம், துட்டு எதுவும் இல்லை...: மது பாட்டிலும் கையுமாக கிரிக்கெட்டை பார்வையிடுபவராக, எப்போதும் இளம் பெண்களுடன் நின்று போஸ் கொடுப்பவராக, அதிகம் செலவு செய்து கவர்ச்சிகரமான காலண்டர் வெளியிடுபவராகவே பெரிதும் அறியப்பட்ட கிங் பிஷர் விமான நிறுவன தலைவர் விஜய் மல்லையா சமீப காலமாக கடனில் முழ்கியுள்ளாராம். கிட்டத்தட்ட ஓராண்டாக கிங்பிஷர் நிறுவன ஊழியர்களுக்கு சம்பள பாக்கியாம். நேற்று இதில் இறுதியான, உறுதியான முடிவை எடுப்பதற்காக ஊழியர்கள் சட்ட நிபுணர்களுடன் போய் பார்த்த போது, என்கிட்ட காசு, பணம், துட்டு, மணி என்று எதுவும் கிடையாது என்று சொல்லிவிட்டாராம். என்ன செய்வது என்று ஊழியர்கள் முழித்துக்கொண்டுள்ளனர்.
Advertisement