போட்டூன்

20-மார்-2017
1 / 20
மோர் சாப்பிடுங்க கூலா இருங்க...: வெயிலில் நின்று வேலை பார்க்கும் திருச்சி போக்குவரத்து து போலீசாருக்கு நீர் மோர் வழங்கும் திட்டம் செயல்பட்டு வருகிறது. நல்லா மோர் சாப்பிடுங்க கூலா வேலை செய்யுங்க.படம்:வீரமணிகண்டன்.
2 / 20
பட்ஜெட் பெட்டியுடன்...: பட்ஜெட் சமர்ப்பிப்பதற்கு முன் ஜெ.,நினைவிடத்தில் நிதி அமைச்சர் ஜெயக்குமார் பட்ஜெட் பெட்டியை வைத்து வணங்கி ஆசி பெறுகிறார .உருப்படியான பட்ஜெட்டை சமர்ப்பித்து மக்கள் ஆசீர்வாதத்தை பெறுவது இதைவிட முக்கியம்.படம்:எஸ்.ரமேஷ்.
3 / 20
அடுத்து ஒரு அ.எ.அ.,தி.மு.க.,: அடுத்து ஒரு அ.எ.அ.,தி.மு.க.,- திருச்சியில் எம்ஜிஆர் அண்ணன் மகன் எம்ஜிசந்திரனால் அண்ணா எம்ஜிஆர் அம்மா திராவிட முன்னேற்ற கழகம் கட்சி துவங்கப்பட்டுள்ளது. படம்:வீரமணிகண்டன்.
4 / 20
ஆத்தி எம்புட்டு ஆவேசம்...: சென்னை மைலாப்பூரில் நடந்த சசி அணி அதிமுக பொதுக்கூட்டத்தில் பேசிய முன்னாள் அமைச்சர் வளர்மதியின் ஆவேசம்.படம்:சத்யசீலன்,சென்னை
5 / 20
புதுவீடு...: அமைச்சராக இருந்த வீட்டை காலி செய்யுங்கள் என்று சொன்னபிறகு, தாமதம் செய்யாமல் சென்னை கீரின்வேஸ் சாலையில் இருந்த வீட்டை காலிசெய்துவிட்டு ஆழ்வார்பேட்டை வீனஸ்காலனி வீட்டிற்கு குடிபுகுந்துவிட்டார் முன்னாள் முதல்வர் பன்னீர்.
6 / 20
முழங்கட்டும் மாணவியின் பறையிசை...: கல்லுாரி மாணவியர் என்றால் கர்நாடக சங்கீதமும்,பரதநாட்டியமும் தான் ஆடவேண்டுமா?இதோ பண்ணிசையில் எங்கள் மண் இசையாம் பறைஇசையை இசைக்கிறேன் கேளுங்கள் என்றபடி மகளிர் தின கொண்டாட்டமாக பறையிசை இசைத்த சென்னை கல்லுாரி மாணவி விஜயலட்சுமி.படம்:எல்.முருகராஜ்
7 / 20
முதல்ல வேட்டியக்கட்டுய்யா...: சென்னையில் முக.ஸ்டாலின் பிறந்த நாள் கொண்டாட்டத்தில் பங்கேற்று அவருக்கு புத்தகம் பரிசாக வழங்கவந்த தொண்டர் ஒருவர், நெரிசலில் தன் வேட்டியை பறிகொடுத்த நிலையில் மேடையில் தோன்றி அனைவரது சிரிப்புக்கும் ஆளானார்.படம்:சுரேஷ்கண்ணன்,சென்னை.
8 / 20
எல்லோருக்கும் சைரன் கார்...: கோபியில் நடந்த விழாவில் அமைச்சர் செங்கோட்டையன் கலந்து கொள்ள வந்த போது அவருடன் வந்தவர்களும் தனியாக சிவப்பு விளக்கு பொருத்திய சைரன் காரில் வந்தனர்.
9 / 20
வாரிசு வந்தாச்சு...: சட்டசபை சம்பவத்தை கண்டித்து தமிழகம் முழுவதும் திமுகவினர் உண்ணாவிரதப் போராட்டம் நடத்தினர். சென்னை ஆதம்பாக்கத்தில் நடந்த போராட்டத்தில் உதயநிதி ஸ்டாலின் கலந்து கொண்டார். படம்:திருப்பதி,சென்னை
10 / 20
ஓடு கண்ணு..ஓடு...: சென்னை பூங்காக்களில் வைக்கப்பட்டுள்ள கடிகாரங்கள் பலவும் போதுமான பராமரிப்பு இல்லாத காரணத்தால் ஓடுவதில்லை.மைலேடி பூங்காவில உள்ள கடிகாரத்தை பூங்கா வாட்ச்மேன் ஒருவர் 'வாட்ச்' மேனாக இருந்து ஓடவிடுகிறார்.படம்:சந்திரசேகர்,சென்னை
11 / 20
ஒங்கி அடிச்சா ஒன்றரை டன்?: ஜெயிலுக்கு போவதற்கு முன் ஜெ.,நினைவிடம் வந்த சசிகலா திடீர் ஆவேசம் வந்தவர் போல சமாதியில் ஓங்கி ஓங்கி மூன்று முறை அடித்துவிட்டு(சபதமாம்)பின் சென்றார்.படம்:காயத்ரி,சென்னை
12 / 20
இந்த பார்வைக்கு என்ன அர்த்தம்...: கோர்ட் தீர்ப்பை அடுத்து சென்னையில் உள்ள ஒபிஎஸ் வீட்டு முன்பு சந்தோஷமாக திரண்ட தொண்டர்களை பேட்டி எடுக்க வடமாநிலங்களில் இருந்து அதிகமான மீடியாக்காரர்கள் திரண்டனர்.பேட்டியாளரின் கண்ணைப் பார்த்தால் கேள்வி ரொம்ப 'புரிஞ்சு' போன மாதிரி தெரியுது.படம்:எல்.முருகராஜ்
13 / 20
ஏதாவது ஒண்ணு செய்யுங்க...: முதல்வர் அல்லது ஜனாதிபதி ஆட்சி ஏதாவது ஒரு ஆட்சிய கொண்டு வாங்கப்பா ஒரு வேலையும் நடக்கமாட்டேங்குது என்று கொதித்து போன தென்னிந்திய விவசாய சங்க பிரதிநிதிகள் திருச்சியில் கழுத்தில் துாக்கு போட்டுக்கொள்ளும் அடையாள போராட்டம் நடத்தினர். படம்:வீரமணிகண்டன், திருச்சி.
14 / 20
ஜல்லிக்கட்டு நல்லாருக்கில்ல...: அலங்காநல்லுாரில் மத்திய அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணனும் ,திமுக செயல்தலைவர் ஸ்டாலினும் ஜல்லிக்கட்டை வேடிக்கை பார்க்கின்றனர்.படம்:கண்ணன்.
15 / 20
இதுக்குதான் தியானம் செய்யணுமோ...: அதிகம் பேசாத முதல்வர் என்று அழைக்கப்படும் பன்னீர் செல்வம் ஜெ.,சமாதியில் நாற்பது நிமிடம் தியானம் செய்தவர்தான் அதன்பிறகு இப்போது வரை பேசிக்கொண்டேதான் இருக்கிறார். தியானத்திற்கு எவ்வளவு மகிமை பாருங்கள்...படம்:எல்.முருகராஜ்
16 / 20
சும்மா ஒரு டீ சாப்பிடலாமேன்னு...: காட்டு யானைகள் என்பது ஒரு கா த்தில் காட்டுக்குள் இருந்தது.ஆனால் எப்போது நாம் காட்டை அழிக்க ஆரம்பித்தோமோ?அப்போது முதல் காட்டு யானைகள் நாட்டுக்குள் வர ஆரம்பித்துவிட்டது.மூணாறு அருகே மாட்டுப்பட்டி எக்கோ பாயிண்ட்டில் உள்ள டீக்கடைக்கு வந்த காட்டு யானை அங்கேயே நீண்ட நேரம் நின்றுவிட்டு டீயும் குடிக்காமல் சென்றுவிட்டது.
17 / 20
கால்களையும் வெளியே நீட்டாதீர்...: பஸ்சில் பயணம் செய்யும் போது ஜன்னலுக்கு வெளியே கைகளை வெளியே நீட்டாதீர் என்று பயணிகள் மீது அக்கறையோடு செய்யப்படும் விளம்பரத்தை பார்த்து இருப்பீர்கள்.,இதோ இவர் பயணம் செய்வதைப் பார்த்தால் ஜன்னலுக்கு வெளியே கால்களையும் நீட்டாதீர் எ ன்று சொல்லவேண்டும் போலிருக்கிறதே.
18 / 20
நீங்க என்ன நினைக்கிறீங்க...: சென்னை கோட்டையில் நடைபெற்ற காந்தி நினைவு தின நிகழ்வில் திமுக., துரைமுருகனும்.,அதிமுக.,செம்மலையும் பேசிக்கொண்டிருந்தனர்.அநேகமாக காந்தியைப்பற்றிய நினைவுகளாகத்தான் இருக்கவேண்டும்.படம்:எஸ்.ரமேஷ்
19 / 20
குடியரசு தினத்தை கொண்டாடுவோம்...: முகத்திலும் கைகளிலும் தேசிய மூவர்ண கொடியை வர்ணமாக பூசி குடியரசு தினத்தை கொண்டாட தயராகி வரும் பாட்னா மாணவியர்.
20 / 20
விடாது 'பச்சை' மோகம்...: சென்னையில் ஜல்லிக்கட்டு போராட்டம் நடந்த கடற்கரை பகுதியை சுத்தம் செய்து குடியரசு தினவிழாவிற்காக தயார் செய்து கொண்டிருக்கின்றனர்.அதன் ஒரு கட்டமாக நடைபாதை ஒரம் பச்சை வண்ணம் பூசப்படுகிறது.படம்:எல்.முருகராஜ்