போட்டூன்

27-ஜூன்-2017
1 / 20
பார்த்து எவ்வளவு நாளாச்சு...: ஆற்றில் நீர் நிறைந்து ஓடுவதை பார்த்து எவ்வளவு நாளாச்சு.மழை காரணமாக வால்பாறை நடுமலை ஆற்றில் நீர் கரை புரண்டு ஒடுகிறது.தண்ணீர் இல்லாத சிரமத்தை ரொம்பவே அனுபவித்துவிட்டோம் ஆகவே இப்போதாவது இயற்கை தரும் இந்த நீரை சேமித்து நல்லபடியாக பயன்படுத்த கற்றுக்கொள்வோம்.
2 / 20
தண்ணீர் பிடிக்க போகலாம் வாங்க...: போதுமான மழை இல்லாததால் குடிநீரை தேடி அலைவது எல்லா ஊர்களிலும் தொடர்கதையாகவே இருக்கிறது, சென்னை அனகபுத்துார் பகுதியில் குடும்பம் குடும்பமாக தண்ணீர் தேடி செல்கின்றனர்.
3 / 20
சி.டி.,ஒண்ணு வச்சிருக்கேன்...: நடந்துவரும் சட்டசபை கூட்டத்திற்கு வருகைதந்த மு.க.ஸ்டாலின்.,கூவத்துாரில் எம்எல்ஏக்களை பேரம் பேசியது தொடர்பான வீடியோ ஆதாரம் என்னிடம் உள்ளது என்று சி.டி.,ஒன்றை காட்டியபடி வந்தார்.
4 / 20
ஜெயக்குமார் வந்துட்டாரு...: சென்னை தலைமைச் செயலகத்தில் நடந்த ஆலோசனை கூட்டத்தில் கலந்து கொள்ள வந்த அமைச்சர்களில் ஜெயக்குமாருக்குதான், அதிக வரவேற்பும் அதிக எதிர்பார்ப்பும் இருந்தது.படம்:சுரேஷ் கண்ணன்.
5 / 20
முதல்வர் போட்டோ மாட்டியாச்சு...: எடப்பாடி பழனிசாமி முதல்வராக பொறுப்பேற்று நுாறு நாட்களான நிலையில் சரி அவரது படத்தை அமைச்சர்கள் மற்றும் அரசு அ லுவலகங்களில் மாட்டலாம் என முடிவு செய்து படத்தை மாட்டிவருகின்றனர்.
6 / 20
லஞ்ச எஸ்.ஐ: அரசாங்கம் எவ்வளவோ சம்பளமும் சலுகையும் கொடுக்கிறது ஆனாலும் காசு ஆசையால் லஞ்சம் வாங்கும் போக்கு சிலரை ஆட்டிப்படைக்கிறது.மாட்டிக்கொள்ளும் போது எவ்வளவு அவமானம்.மதுரை மாவட்டம் காடுபட்டி எஸ்.ஐ.,ராஜ்குமார் பதினைந்தாயிரம் லஞ்சம் வாங்கிய சம்பவத்தில் கைது செய்யப்பட்டு போகும் போது தலையில் துண்டைப்போட்டு செல்கிறார்.
7 / 20
ரொம்பத்தான் சுறுசுறுப்பு...: சென்னை நுங்கம்பாக்கத்தில் ஐ.டி ஊழியர் சுவாதி கொலை சம்பவம் நடந்து கிட்டத்தட்ட ஒரு வருடமான நிலையில், இப்போதுதான் கேமிரா பொருத்தும் வேலை நடைபெறுகிறது.
8 / 20
அளவா குளிடா மகனே...: வெயில் அதிகமாக இருக்கு தண்ணீர் குறைவா இருக்கு என்ன செய்ய மகனை சட்டியில் நிற்கவைத்து அளவோடு குளிப்பாட்டுகிறார் அந்த தண்ணீரையும் வீணாக்காமல் பயன்படுத்தக்கொள்வார் போலும்...படம்:சுரேஷ் கண்ணன்
9 / 20
பன்னீருக்கு இன்னும் ஏன் கண்ணீர்?: அதிமுகவின் பொதுச் செயலாளராக சசிகலா நீடிக்ககூடாது,சசி தரப்பினர் அதிமுக தலைமையகத்தை பயன்படுத்த தடைவிதிக்க வேண்டும் என்று டில்லி தேர்தல் ஆணையத்திடம் மனு கொடுத்துவிட்டு திரும்பிய ஒபிஎஸ் கண்ணை துடைத்துக் கொண்டே வந்தார்.
10 / 20
வேட்டிய கழட்டு...: பஸ் ஸ்டிரைக்கை முறியடிக்கும் வகையில், திண்டிவனத்தில் அரசு பஸ்சை அதிமுக ஒன்றிய செயலாளர் ஒட்டினார். இதைப்பார்த்த போராட்டக்காரர் ஒருவர், கரை வேட்டிய கட்டிக்கிட்டு பஸ்சை ஒட்டாதே என்று கோபத்துடன் போலீஸ் தடுப்பையும் தாண்டிச் சென்று அவரது வேட்டியை உருவினார்.
11 / 20
திருநங்கைகளின் நற்பணி...: சென்னை எண்ணுார் சுனாமி வீட்டு வசதி வாரிய குடியிருப்பு பகுதியில் திருநங்கைகள் வெயில் பந்தல் வைத்து பொதுமக்களுக்கு நீர் மோருடன் தர்பூசணி பழங்களும் வழங்கினர்.
12 / 20
மடியேந்தி பிச்சை கேட்கிறோம்...: பீஹார் மாநிலத்தில், போலீசாருக்கு வழங்கும் சம்பளத்தை போலவே தங்களுக்கும் பாரபட்சமின்றி வழங்கவேண்டும் என்று கேட்டு ஊர்க்காவல் படையினர் பாட்னாவில் மடியேந்தி பிச்சை எடுக்கும் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
13 / 20
கத்ரி வெயில் துவங்கியாச்சு...: சாதாரணமாக அடிக்கும் வெயிலையே தாங்கமுடியவில்லை, இப்போது அக்னியும் பிறந்தாச்சு, கத்ரி வெயிலின் தாக்குதலை தாங்க முடியாமல் கையில் இருக்கும் பைகளின் நிழலில் தங்களது தலையை மறைத்துக் கொள்ளும் மக்கள்.இடம்:சென்னை.
14 / 20
சில்லரை பிரச்னை?: திருச்சியில் உள்ள பாங்கில் பத்து ரூபாய் நாணயம் வாங்காததன் காரணமாக, தனியார் பால் நிறுவனம் ஒன்று 34 லட்சம் ரூபாய்க்கு பத்து ரூபாய் நாணயங்களை கட்டி வைத்துள்ளனர்.
15 / 20
என்ன பேசலாம்...: தினகரன் கைதானதோடு கிட்டத்தட்ட சசிகலாவின் ஆதிக்கம் முடிவிற்கு வந்தது என்றே சொல்லலாம்...இப்போது பேசுவதை தாண்டி வேறு வழியில்லை என்ற நிலையில் ஒபிஎஸ் அணியினருடன் பேசுவதற்கு தயராகிவரும் இபிஎஸ் அணியினர்.
16 / 20
குடிக்கவா கடை வைக்கவா...: நெடுஞ்சாலைகளில் உள்ள மதுக்கடைகளை மூடும்படி கோர்ட் உத்திரவிட்டதை அடுத்து நிறைய மதுக்கடைகள் மூட ப்பட்டு வருகின்றன.இதனால் நகர்ப்பகுதிகளில் திறந்திருக்கும் மதுக்கடைகளில் இருந்து மது வாங்குபவர்களின் எண்ணிக்கையும் அதிகரித்திருக்கிறது வாங்கப்படும் மதுபாட்டில்களின் எண்ணிக்கையும் அதிகரித்திருக்கிறது.இது வடசென்னை மதுக்கடை வாசலில் ஒரு காட்சி.
17 / 20
நெஞ்சு பொறுக்குதில்லையே...: வறட்சி நிவாரணம் கேட்டு டில்லியில் போராடிக்கொண்டு இருக்கும் தமிழக விவசாயிகள் போராட்டத்தின் ஒரு கட்டமாக சிறுநீரை அருந்தினர்.
18 / 20
இனோவாவை பார்க் பண்ண வந்துருப்பாரு...: சசிகலா அணி கலகலத்துப் போன நிலையில் சென்னை அ.தி.மு.க. தலைமை அலுவலகம் ஆராவரமின்றி வெறிச்சோடிக் காணப்பட்டது.இந்த நிலையில் அங்கு வந்த அந்த அணியின் நாஞ்சில் சம்பத்.
19 / 20
நான் ஆணையிட்டால்..: புதுக்கோட்டை பழைய பஸ்நிலையத்தின் வாசலில் உள்ள எம்ஜிஆர் சிலையின் கையில் யாரோ ஒருவர் சாட்டை குச்சியை வைத்துள்ளார்.நாட்டு நடப்பு பிடிக்காமல் கொந்தளிப்புக்கு உள்ளான ஒரு தொண்டரின் வேலையாகத்தான் இது இருக்கும்.
20 / 20
தண்ணீர்..கண்ணீர்...: குடிப்பதற்கு கூட தண்ணீர் கிடைக்காத நிலை கிராமங்களிலும் ஏற்பட்டு வருகிறது.துாத்துக்குடி மாவட்டம் விளாத்திக்குளம் பகுதியில் ஆடு மேய்க்கும் பெரியவர் ரோட்டோராம் கசியும் தண்ணீரை குடிப்பதற்கு பிடிக்கிறார். அத்தியாவசிய தேவையான குடிநீர் கூட அனைவருக்கும் கொடுக்க முடியாத நிலையில் உள்ளது நமது நாட்டு நிர்வாகம்.படம்:எஸ்.முப்பிடாதி
Advertisement