போட்டூன்

16-Mar-2013
1 / 20
வேணாம்,சொன்னா கேளு...: இந்த சில்லரை நாணயங்கள் எல்லாம் எங்கே போய் மறைந்தன என்றே தெரியவில்லை,எங்கே பார்த்தாலும் இந்த ‘சில்லரை ’பிரச்னை பெரிய பிரச்னையாகிவருகிறது.விநாயகர் கோவில் உண்டியல் ,தனது சில்லரை பிரச்னையை தீர்க்கு ம் என்று வருபவரின் எண்ணத்தை உணர்ந்த விநாயகர், எப்படி எச்சரிக்கை விடுவார் என்பதன் கற்பனையே இந்த கார்ட்டூன்.கார்ட்டூன்:விஷ்ணுநீங்களும் இது போன்ற வித்தியாசமான கார்ட்டூன் படங்களை வரைந்து கிழே உளள முகவரிக்கு மின்னஞ்சல் செய்யவும்.நீங்கள் அனுப்பும் கார்ட்டூன் சுமாரக இருந்தால் கூட பராவாயில்லை ஆனால் உங்களுக்கு சொந்தமானதாக இருக்கட்டம்.நன்றி!
2 / 20
முதல்ல தூக்கிட்டு போ: பெத்தவர்கள் பிள்ளைய கொல்வதும், பிள்ளைகள் பெத்தவர்களை கொல்வதும், இப்போதெல்லாம் அன்றாட நிகழ்ச்சியாகிவிட்டது. முன்பெல்லாம் வெளிநாட்டு விவகாரமாக இருந்த இந்த சங்கதிகள் எல்லாம் இப்போது உள்நாட்டு விவகாரமாகிவிட்டன. சமீபத்தில் பெத்த பிள்ளையை வாஷிங்மெஷினில் போட்டு கொன்றார் ஒரு தமிழ்த்தாய். இந்த சம்பவம் எப்படி எல்லாம் எதிரொலிக்கலாம் என்பதன் கற்பனையே இங்கே கார்ட்டூனாகியுள்ளது.கார்ட்டூன்: விஷ்ணுநீங்களும் இது போன்ற கார்ட்டூன் வரைந்து கீழே உள்ள முகவரிக்கு மின்னஞ்சல் செய்யவும். நீங்கள் அனுப்பும் கார்ட்டூன்கள் சுமாராக இருந்தால் கூட பரவாயில்லை. ஆனால் உங்களுக்கு சொந்தமானதாக இருக்கட்டும். நன்றி!
3 / 20
அப்பா கண்ணுல நெத்திய காட்டாதே..: தயாளு அம்மா போட்டா இது குங்குமமும் இல்லை, இரத்தமும் இல்லை. யாராவது கேட்டா பகுத்தறிவு பல்பொடி என சொல்லி எஸ்கேப் ஆயிடு....முன்னாள் முதல்வர் கருணாநிதிக்கு எதிரே இருப்பவர்களை கேலி செய்து நோகடிப்பது என்றால், பொங்கல் சாப்பிடுவது மாதிரி ரொம்ப ரசித்து செய்வார். ஒரு சமயம் கருணாநிதியைப் பார்க்க ஆதிசங்கர் எம்.பி., வந்தபோது நெற்றியில் குங்குமம் வைத்திருந்தார். அதை பார்த்து, என்ன ஒய் நெற்றியில் ரத்தம் கசியுது என்று எல்லாரும் கேட்கும்படியாக அவர் செய்த கேலி, அவருக்கு எதிராக பூமராங் போல கிளம்பிவந்தது.அதில் முதல் பூமராங், முதலில் உங்கள் துணைவியார் தயாளுவின் நெற்றியில் வடியும் ரத்தத்தை சரி செய்யுங்கள் என்பதுதான்.,அதை இந்த வாசகர் மறக்கவில்லை போலும்,60 வது பிறந்த நாள் கொண்டாடிய மு.க.ஸ்டாலினை அவரது தாயார் என்ன சொல்லி வாழ்த்தினாரோ ஆனால் வாசகரின் கற்பனை வாழ்த்து இங்கே பிரமாதப்படுகிறது.
4 / 20
இதுதான் நோக்கமா?: திடீர்,திடீரென சிலருக்கு அரசு சார்பில் மணிமண்டபம் கட்டுவதன் நோக்கம் அவர்கள் புகழ் பரப்புவது மட்டுமல்ல என்ற அர்த்தத்தில் வரையப்பட்டுள்ளது இந்த கார்ட்டூன்.கார்ட்டூன்:ரவிகுமார்.நீங்களும் இது போன்ற கார்ட்டூன்களை வரைந்து அனுப்பலாம்.நீங்கள் அனுப்பும் கார்ட்டூன் சுமாராக இருந்தால் கூட பரவாயில்லை ஆனால் உங்களுக்கு சொந்தமானதாக இருக்கட்டும்.நன்றி!
5 / 20
ஆண் ’லைன் பாங்கிங்...: அறிவிக்கப்பட்ட பட்ஜெட்டில் முழுக்க,முழுக்க பெண்களால் மட்டுமே இயக்கப்படும் பாங்க் திறக்கப்படும் என்று ஒரு அறிவிப்பு வெளியாகியுள்ளது.முழுக்க,முழுக்க பெண்களால் செயல்படும் ஆஸ்பத்திரி திறந்தாலாவது பிரயோசனம் இப்படி பெண்களால் செயல்படும் பாங்க் திறப்பதால் என்ன நடந்துவிடப்போகிறது என்பது தெரியவில்லை,ஏதோ ஆண் வாடையே ஆகாது என்பது போல போடப்படும் இது போன்ற திட்டத்தை கிண்டல் செய்து வரையப்பட்டுள்ள கார்ட்டூன் இது.கார்ட்டூன்:ஸ்ரீராம் ராகவன்நீங்களும் இது போன்ற கார்ட்டூன் வரைந்துகீழே உள்ள முகவரிக்கு மின்னஞ்சல் செய்யலாம்,அனுப்பும் கார்ட்டூன் சுமாரக இருந்தால் கூட பராவாயில்லை ஆனால் உங்களுக்கு சொந்தமானதாக இருக்ககட்டும்.நன்றி!
6 / 20
சும்மா ஏறுங்க சார்...: ரயில்வே பட்ஜெட்டை பார்த்தால் பொதுமக்களுக்கு நன்மை செய்யறாங்காளா,இல்லீயான்னே தெரியாமாட்டேங்குது,அதை அடிப்படையாக வைத்து வரையப்பட்டுள்ள கார்ட்டூனிஸ்ட்.இந்த படத்தை வரைந்த கார்ட்டூனிஸ்ட் மதுரையில் உள்ள டூவீலர் மெக்கானிக்காவார்.,ஆர்வம் காரணமாக பென்சிலில் கார்ட்டூன் வரைந்து அதனை மொபைலில் படம் எடுத்து மொபைலில் உள்ள நெட்டை கனெக்ட் செய்து அனுப்பியுள்ளார்.அவரது முயற்சிக்கு பாராட்டுக்கள்.கார்ட்டூன்:பி.சசிக்குமார்.நீங்களும் இது போன்ற கார்ட்டூன் வரைந்து அனுப்பலாம்.அனுப்பும் கார்ட்டூன் சுமாராக இருந்தால் கூட பராவாயில்லை,ஆனால் உங்களுக்கு சொந்தமானதாக இருக்கட்டும்.நன்றி!
7 / 20
முதல்ல ரயிலை சுத்தமா விடுங்கய்யா..: சாதாரணமாக இருந்த ரயில் கட்டணத்தை உயர்த்தியபிறகு, மக்களை சமாதானப்படுத்தும் விதத்தில் ,ஒடும் ரயிலில் டி.வி.,பார்க்கும் வசதி செய்துதரப்படும் என மத்திய அரசு அறிவித்துள்ளது.,ஆனால் ரயில் என்பது கொஞ்சம் கூட சுத்தமும்,சுகாதாரமும் இல்லாத பகுதியாக மாறிவருவதை முதலில் சீர் செய்தாலே போதும்,டி.வி.,எல்லாம் வேண்டாம் என்பதே மக்கள் கருத்து..அந்த கருத்தை வலியுறுத்தும் வகையில் ஒவியர் வரைந்துள்ள கார்ட்டூன் இது.கார்ட்டூன்:விஷ்ணுநீங்களும் இது போன்ற கார்ட்டூன் வரைந்து கிழே உள்ள முகவரிக்கு மின்னஞ்சல் செய்யலாம்.,நீங்கள் அனுப்பும் கார்ட்டூன் சுமாராக இருந்தால் கூட பராவாயில்லை ஆனால் உங்களுக்கு சொந்தமானதாக இருக்கட்டும்.நன்றி!
8 / 20
நல்லாதான் சாப்பிடுறாரு...: கார்ட்டூன் விளக்கம்:சென்னையில் மாநகராட்சி சார்பில் திறக்கப்பட்டுள்ள மலிவு விலை உணவகத்திற்கு நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது.,ஒரு ரூபாய்க்கு ஒரு இட்லி,ஐந்து ரூபாய்க்கு சாம்பார் சாதம்,மூன்று ரூபாய்க்கு தயிர் சாதம் போன்றவை எளிய மக்களின் வரவேற்பை பெற்றுள்ளது.இதனை மையமாக வைத்து ஒவியர் வரைந்துள்ள கார்ட்டூன்கார்ட்டூன்:விஷ்ணுநீங்களும் இது போன்ற கார்ட்டூன் வரைந்து கிழே உள்ள முகவரிக்கு மின்னஞ்சல் செய்யலாம்.,அனுப்பும் ஒவியங்கள் சுமாராக இருந்தால் கூட பராவாயில்லை ஆனால் உங்களுக்கு சொந்தமானதாக இருக்கட்டும்.நன்றி!
9 / 20
மிஸ்ஸாயிடுச்சே...: மக்கள் இப்பல்லாம் பக்தி மார்கத்தில் ரொம்பவே மூழ்கிட்டாங்கன்னுதான் சொல்லணும். உ.பி.,யில நடக்கிற கும்பமேளாவா இருந்தாலும் பரவாயில்லைன்னு கிளம்பிடுறாங்க... இப்படி போறவங்க ரொம்ப பேர் அப்படியே காணாமல் போயிடறாங்க என்பது தான் வேதனையே... அந்த வேதனையை, வேடிக்கையான பார்வையில் கொடுத்துள்ளார் கார்ட்டூனிஸ்ட்.கார்ட்டூன்: விஷ்ணுநீங்களும் இது போன்ற கார்ட்டூன் வரைந்து அனுப்பலாம். அனுப்பும் கார்ட்டூன் சுமாராக இருந்தால் கூட பராவாயில்லை ஆனால் உங்களுக்கு சொந்தமானதாக இருக்கட்டும். நன்றி!
10 / 20
போலி டாக்டர் உஷார்...: நாடு முழுவதும் பொய்யான சான்றிதழ் கொடுத்து பல்வேறு துறையில் பணியாற்றுபவர்கள் பட்டியல் வரும்போதெல்லாம் கவலை மட்டுமே வரும். ஊழல் எப்படியெல்லாம் தலைவிரித்தாடுகிறது என வேதனையும் கூடவே வரும். ஆனால் போலி பட்டியலில் டாக்டர்களும் இடம் பெறும் போது அதிர்ச்சியே ஏற்படுகிறது. காரணம் உயிருடன் விளையாடும் விஷயமாயிற்றே... மிகவும் வேதனை தந்த விஷயத்தை வேடிக்கையாக்கியிருக்கிறார் கார்ட்டூனிஸ்ட்.கார்ட்டூன்: விஷ்ணுநீங்களும் இது போன்ற கார்ட்டூன் வரைந்து அனுப்பலாம்., நீங்கள் அனுப்பும் கார்ட்டூன் சுமாராக இருந்தால் கூட பரவாயில்லை. ஆனால் உங்களுக்குச் சொந்தமானதாக இருக்கட்டும், நன்றி!
11 / 20
ஒரம்போ...கலெக்டர் வரார்...: வீண் செலவுகளை குறைக்க மத்திய,மாநில அரசுகள் முடிவு என்ற செய்தி ஆயிரத்தொராவது முறையாக வெளிவந்துள்ளது.,ஆனால் ஒரு போதும் செலவை குறைத்தபாடில்லை.,முன்னாள் ஜனாதிபதி தனது வெளிநாட்டு பயணச்செலவில் பாதியைக்குறைத்திருந்தாலே வறுமையில் வாடும் தமிழக விவசாயிகள் அத்துணை பேருக்கு மானியம் வழங்கியிருக்கலாம்.,ஆனால் ஒரு போதும் தங்கள் செலவை யாரும் குறைக்கப்போவது இல்லை,சும்மா இப்படி சொல்லிக்கொண்டே இருப்பார்கள்.ஒரு வேளை அந்த அதிசயம் நடந்தால் என்னாகும் என்ற நமது கார்ட்டூனிஸ்டின் கற்பனையே இது.கார்ட்டூன்:விஷ்ணுநீங்களும் இது போல நாட்டு நடப்பை முன்வைத்து கார்ட்டூன் வரைந்து கிழே உள்ள முகவரிக்கு மின்னஞ்சல் செய்யவும்.நீங்கள் அனுப்பும் கார்ட்டூன் சுமாராக இருந்தால் கூட பராவாயில்லை ஆனால் உங்களுக்கு சொந்தமானதாக இருக்கட்டும்.நன்றி!
12 / 20
எப்ப வரும்னு சொல்லு கிளியே...: நூறு கோடி ரூபாய் முதலீடு செய்து எடுத்த தனது விஸ்வரூபம் படம் எப்போது வெளிவரும் என்று நடிகர் கமலஹாசானாலேயே சொல்லமுடியாத நிலமை உருவாக்கப்பட்டது உள்ளபடியே பரிதாபமான நிலமைதான்.அரசியல் விளையாட்டில் ஒரு கலைஞன் அநியாயத்திற்கு பந்தாடப்பட்டுவிட்டான்.ஜோசியம் சொல்லும் கிளி கூட கிறு,கிறுத்துப்போய்விடும் என்று தன் வேதனையை இங்கே கார்ட்டூனிஸ்ட் பதிவு செய்துள்ளார்.கார்ட்டூனிஸ்ட்:விஷ்ணுநீங்களும் இது போன்ற கார்ட்டூன் வரைந்து கிழே உள்ள முகவரிக்கு மின்னஞ்சல் செய்யவும்.நீங்கள் அனுப்பும் கார்ட்டூன் சுமாராக இருந்தால் கூட பராவாயில்லை ஆனால் உங்களுக்கு சொந்தமானதாக இருக்கட்டும்.நன்றி!
13 / 20
இதிலுமா போலி?: உ.பி.,யில் பணம் கொடுத்து பொய் சான்றிதழ் வாங்கியவர்கள் சுமார் இரண்டாயிரம் பேர் கைது என்ற செய்தியை படித்ததும், பிள்ளைகளின் மனதில் முதல் வித்தை போடும் ஆசிரியர்களில் கூட போலியா? என்று கவலையடைந்த கார்ட்டூனிஸ்ட்,போலியான ஆசிரியர் பாடம் நடத்தினால் எப்படி இருக்கும் என்று கற்பனை செய்து பார்த்திருக்கிறார். கார்ட்டூன்: விஷ்ணு நீங்களும் இது போன்ற கார்ட்டூன் வரைந்து கீழே உள்ள முகவரிக்கு மின்னஞ்சல் செய்யவும். நீங்கள் அனுப்பும் கார்ட்டூன் சுமாராக இருந்தால் கூட பரவாயில்லை ஆனால் உங்களுக்கு சொந்தமானதாக இருக்கட்டும்.
14 / 20
நடந்தே வந்தோம், நடந்தே போறோம்...: திடீரென ரயில் கட்டணத்தை உயர்த்தி, ஒரு ஆர்ப்பாட்டத்திற்கு கூட வழியில்லாமல் உடனடியாக கட்டண உயர்வையும் அமுல்படுத்திவிட்டனர். இதன் காரணமாக பழநி தைப்பூசத்திற்கு பாதயாத்திரையாக செல்பவர்கள், யாத்திரையையும் தரிசனத்தையும் முடித்து ரயிலிலோ, பஸ்சிலோ திரும்புவார்கள். ஆனால் ரயில் கட்டண உயர்வு காரணமாக நடந்தே திரும்புவதாக கார்ட்டூனிஸ்ட் இங்கே கற்பனை செய்திருக்கிறார். கார்ட்டூன்: விஷ்ணு நீங்களும் இது போன்ற கார்ட்டூன்களை வரைந்து அனுப்பலாம். நீங்கள் அனுப்பும் படங்கள் சுமாராக இருந்தால் கூட பராவாயில்லை ஆனால் உங்களுக்கு சொந்தமானதாக இருக்கட்டும். நன்றி!
15 / 20
சொன்னா கேளுய்யா....: தொடர்ந்து மூன்று நாள் மருந்துக்கடையை அடைச்சாக்கூட நம்ம மக்கள் தாங்கிக் கொள்வார்கள். ஆனால் டாஸ்மாக் கடையை ஒரு நாள் அடைத்தால் கூட நமது ‘குடி’ மக்களால் தாங்கிக்கொள்ளமுடியாத நிலைக்கு உள்ளாகி விட்டனர். அதன் எதிரொலியே இந்த கார்ட்டூன். கார்ட்டூன்: விஷ்ணு நீங்களும் இது போன்ற கார்ட்டூன் வரைந்து அனுப்பலாம். நீங்கள் அனுப்பும் கார்ட்டூன் சுமாராக இருந்தால் கூட பராவாயில்லை. ஆனால் உங்களுக்கு சொந்தமானதாக இருக்கட்டும். நன்றி!
16 / 20
சாப்பாடு லேட்டாகும்...: கோட்டாவில் இல்லாமல் வாங்கும் கேஸ் சிலிண்டர் விலை கூடுதல் என்பதால் பலரது குடும்பத்தில் கோட்டா சிலிண்டர் தீர்ந்ததும் வேறு எரிபொருள் மூலம் சமைக்கமுடியுமா என்று யோசித்து வருகின்றனர். ரொம்ப யோசனை செய்து சமைக்காமலே விட்டுவிடப்போகின்றனர் என்ற கவலை ஒரு பக்கம் இருந்தாலும் இப்போதைக்கு எப்படியெல்லாம் மக்கள் சமைக்கக்கூடும் என்ற கார்ட்டூனிஸ்டின் கற்பனையே இது. கார்ட்டூனிஸ்ட்: விஷ்ணு நீங்களும் இது போன்ற கார்ட்டூன் வரைந்து கீழே உள்ள முகவரிக்கு மின்னஞ்சல் செய்யவும். நீங்கள் அனுப்பும் கார்ட்டூன் சுமாராக இருந்தால் கூட பராவயில்லை ஆனால் சொந்தமானதாக இருக்கட்டும். நன்றி!
17 / 20
இன்று ‘காணும்’ பொங்கல்: அதே கடல், அதே அலை, அதே மணல்., ஆனாலும் காணும் பொங்கலான இன்று மட்டுமே பார்க்கவும், அனுபவிக்கவும் அனுமதி கிடைத்தது போல, சென்னையில் உள்ளோர் பலரும் கடற்கரையில் கூட்டமாய் கூடிடுவர். காணும் பொங்கல் என்பதற்கு நிஜத்தில் என்ன அர்த்தமோ, ஆனால் நமது ஓவியருக்கு கிடைத்த பழைய அனுபவத்தின் அடிப்படையில் ‘காணும்’ பொங்கலுக்கு இதையே அர்த்தமாக்கியுள்ளார். கார்ட்டூன்: விஷ்ணு. நீங்களும் இது போன்ற கார்ட்டூன் வரைந்து அனுப்பலாம்., நீங்கள் அனுப்பும் கார்ட்டூன் சுமாராக இருந்தால் கூட பராவயில்லை. ஆனால் உங்களுக்கு சொந்தமானதாக இருக்கட்டும். நன்றி!
18 / 20
எக்ஸாமாட முக்கியம்?: கல்லூரி என்பது கல்வி படிக்கும் இடம் என்ற நிலைமாறி நீயா?நானா? என்று போட்டியிட்டு ரத்தம் சிந்த மோதிக்கொள்ளும் இடமாக மாறிவருகிறது.கடந்த வாரம் சென்னை மற்றும் திருச்சி கல்லுõரி மாணவர்கள் மோதலில் இரண்டு பேர் பலியானார்கள்.பெற்ற மனசு என்ன பாடுபடும் என்பதை மாணவர்கள் கொஞ்சமாவது எண்ணிப்பார்த்தால் இனியும் இதுபோன்ற மோதல்களில் ஈடுபடுவார்களா?கார்ட்டூன்:விஷ்ணு
19 / 20
வெளியே வரும் வழியை பாருங்க...: ஒரு கார்ட்டூனுக்கு அதிகம் விளக்கம் இருக்கக்கூடாதுதான்,ஆனாலும் இந்த கார்ட்டூனில் உள்ள அருமையான விஷயத்தை யாரும் கவனிக்காமல் விட்டுவிடக்கூடாது என்பதற்காக இந்த விளக்கம். டாஸ்மாக் கடைக்கு உள்ளே நடந்து போகும்போது ‘நார்மலாக’ செல்பவர்கள் வரும்போது போதையில் தவழ்ந்தபடி வெளியே வருவார்கள் என்பதை சிம்பிளாக ஆனால் அற்புதமாக சொல்லியுள்ளார்.வாழ்த்துக்கள்.கார்ட்டூன்:பால்ஜி.நீங்களும் இது போன்ற கார்ட்டூன் வரைந்து கிழே உள்ள முகவரிக்கு மின்னஞ்சல் செய்யவும்.நீங்கள் அனுப்பும் கார்ட்டூன் சுமராக இருந்தால் கூட பராவாயில்லை ஆனால் உங்களுக்கு சொந்தமானதாக இருக்கட்டும்.நன்றி!
20 / 20
மறந்து போச்சே...: கொசு விரட்டி நிறுவன விளம்பரங்களின் எண்ணிக்கையை பார்த்தாலே, எந்த அளவிற்கு கொசுவால் நாம் பாதிக்கப்பட்டுள்ளோம் என்பது புரியும்.கொசு டெங்கு பாய்ச்சல் எடுத்த போது, கொஞ்சம் முயற்சி எடுத்து அழிக்கப்பார்த்தார்கள்,அப்புறம் மறந்தே போனார்கள்.,எங்கு போனாலும் கொசு நம்மைவிடாது துரத்தும் என்பதே இந்த கார்ட்டூன் சொல்லும் செய்தி.கார்ட்டூன்:ஸ்ரீராம் ராகவன்நீங்களும் இது போன்ற கார்ட்டூன் வரைந்து அனுப்பலாம்,சுமராக இருந்தாலும் பரவாயில்லை ஆனால் உங்களுக்கு சொந்தமான கார்ட்டூனாக இருக்கலாம்.மறந்தும் மற்றவர்கள் கார்ட்டூனை எடுத்து அனுப்பிவிடாதீர்கள்,நன்றி!
Advertisement