போட்டூன்

07-Apr-2013
1 / 20
ஸ்டார்டிங் பலமாத்தான் இருக்கு...: இளநீர் என்ன,பழங்கள் என்ன,கேன் பழரசம் என்ன ,நீர்மோர் என்ன,தர்பூசணி என்ன என்று வாரி வாரி வழங்குவது எல்லாம் இலவமாக என்றால் நம்ப முடிகிறதா ஆனால் நம்பித்தான் ஆக வேண்டும்.கோடையை சாமாளிக்க அதிமுகவினர் நீர்மோர் பந்தல் அமையுங்கள் என்று முதல்வர் சொன்ன வார்த்தை எடுத்துக்கொண்டு, பொதுமக்களுக்கு சென்னை அதிமுகவினர் கொஞ்சம் அதிகப்படியாக கொடுத்தனர்.,ஆரம்பம் ஜோராத்தான் இருக்கும், அப்புறமில்ல இருக்கு இந்த நீர் மோர் பந்தலின் நிலை என்கின்றனர்...பார்க்கலாம்.
2 / 20
உங்களை நெருக்குவாங்களா...: திருமலை (திருப்பதி)யில் இப்போதெல்லாம் எப்போது பார்த்தாலும் திருவிழா கூட்டம் தான். முப்பது நிமிடத்தில் பார்த்து வருவதற்காக துவக்கப்பட்ட முன்னூறு ரூபாய் டிக்கெட் எடுத்தாலும் இப்போது ஆறு மணி நேரமாகி விடுகிறது. கூட்டமும் நெருக்கித்தள்ளுகிறது. பல மணி நேரம் காத்திருக்கும் பக்தர்கள், அடிக்கடி பொறுமை இழந்து சத்தம் போடுகின்றனர். இதனால் திருமலைக்கு சாமிகும்பிட வந்த ஆந்திர முதல்வர் கிரண்குமார், வி.ஐ.பி., வழியாக செல்லாமல் பொதுமக்கள் செல்லும் வைகுந்த வாசல் வழியாக சென்று பார்த்துவிட்டு ஒண்ணும் பிரச்னை இல்லையே என்றாராம். முதல் அமைச்சராக இல்லாமல், சாதாரண பெருமாள் பக்தரா வந்து பாருங்கள் அப்ப தெரியும் நெரிசல் என்றால் என்னவென்று என்கிறார் பக்தர் ஒருவர்.
3 / 20
இது ‘ஒண்டிக்கு ஒண்டி’ கிரிக்கெட்: சென்னையில் ஐ.பி.எல்., கிரிக்கெட் போட்டிகள் ஆரம்பமாகி விட்டன., ஏற்கனவே எழுதின விடைத்தாள்கள் ‘எங்கே?’ போகுமோ என்ற பதட்டத்துடன் தேர்வு எழுதம் பத்தாம் வகுப்பு மாணவர்களின் மிச்ச தேர்வுகளில் தோனியும்,சச்சினும் பாதிப்பு ஏற்படுத்தாது இருப்பார்களாக... இன்னும் கொஞ்ச நாளைக்கு வயது வித்தியாசமில்லாமல் ஆளாளுக்கு கிரிக்கெட் பேட்டை எடுத்துக்கொண்டு அவர்களுக்கு தெரிந்த முறையில் கிரிக்கெட் விளையாடி (ரண)களம் காண இருக்கின்றனர். அதன் எதிரொலியே இந்த கார்ட்டூன்கார்ட்டூன்: விஷ்ணுநீங்களும் இது போன்ற கார்ட்டூன் வரைந்து கீழே உள்ள முகவரிக்கு மின்னஞ்சல் செய்யவும். நீங்கள் அனுப்பும் கார்ட்டூன் சுமாராக இருந்தால் கூட பராவாயில்லை ஆனால் உங்களுக்கு சொந்தமானதாக இருக்கட்டும். நன்றி!
4 / 20
இது ஐ.பி.எல்., கிரிக்கெட் கட்டிங்...: சென்னையில் ஐ.பி.எல்., கிரிக்கெட் போட்டிகள் துவங்குவதையொட்டி இங்குள்ள ரசிகர் ஒருவர் தனது தலைமுடியை ஐ.பி.எல்., கிரிக்கெட்டை வரவேற்கும் விதத்தில் வெட்டியுள்ளார். இதற்காக இவருக்கு சாதாரணமாக முடிவெட்டுவதை விட கூடுதலாக இரண்டு மணி நேரம் பிடித்ததாம். கிரிக்கெட் சீசன் முடியும் வரை இதில் அவ்வப்போது மாற்றம் இருக்கும் என்று வேறு பயமுறுத்துகிறார். ஐ.பி.எல்., கிரிக்கெட் விளையாடி பணத்தையும், புகழையும் அள்ளோ, அள்ளு என்று அள்ளப்போகும் எந்த நாட்டு விளையாட்டு வீரருக்கும் இல்லாத அளவு அக்கறை கொண்டுள்ள, இந்த தன்னிகரில்லாத்தமிழனை எப்படி வேண்டுமானாலும் நீங்கள் பாராட்டலாம். இந்த படத்தை நமக்கு மெயிலில் அனுப்பிய நண்பர் எஸ்.கனகராஜ்க்கு தனி பாராட்டுக்கள்.
5 / 20
கொலவெறிங்கிறது இதுதானோ...: அருள்வந்தால் குறைந்தபட்சமாக இரண்டு வார்த்தை சொல்லலாம், அதிக பட்சமாக திருநீறை எடுத்து வீசலாம்... ஆனால் இதென்ன, எல்லாரும் பார்க்கும் படியாக, குழந்தைகள் பயப்படும்படியாக, உயிருள்ள ஒரு ஆட்டை பிடிச்சு, அதன் குரல்வளையை கடிச்சு, ரத்தம் குடிச்சு...பார்க்க பெரியவகளான நமக்கே பயமாயிருக்கே...இதெல்லாம் கொஞ்சம் அதிகம்தான். இந்த மாதிரி அருளாளிகளோட பார்வை பாய்ச்சல் எல்லாம் அப்பிராணிகளான ஆடு,கோழிகள் மீதுதான் இருக்கும்... காட்டுக்குள்ளே போயி கரடி, புலிகிட்ட இந்த வீரத்தை காண்பிச்சா பரவாயில்லை,செய்வாகளா?
6 / 20
அஜீத்தை பாத்துட்டேன்க்கா...: படவிளக்கம்: இலங்கை தமிழர் பிரச்னைக்காக எல்லாரும் உண்ணாவிரதம், ஆர்ப்பாட்டம், போராட்டம் பண்ணிட்டாங்க, நாம மட்டும் சும்மாயிருக்கக்கூடாது என்று எண்ணி சென்னையில் நடிகர், நடிகை உண்ணாவிரதம் இருந்தார்கள். நடிகர், நடிகைகள் உண்ணாவிரதம் இருந்தால் அந்த விஷயம் பெரிதாக பேசப்பட வேண்டும் ஆனால் அப்படி நடந்தததாக தெரியவில்லை. எல்லோரும் வந்து வேடிக்கை பார்த்து சிரித்தனர், பதிலுக்கு நடிகர்களும் ரசிகர்களைப்பார்த்து கையாட்டி சிரித்தனர். பாதுகாப்பிற்கு வந்த பெண் போலீஸ் ஒருவர், நடிகர் அஜீத்தைப்பார்த்த சந்தோஷத்தில் மொபைலில் பகிர்ந்து கொள்கிறார்.
7 / 20
எங்கேய்யா போனீங்க...: பா.ஜ.,கவின் டில்லி முகாமில் இருந்து வரும் தகவல்கள் எல்லாம் குஜராத் முதல்வர் நரேந்திர மோடிக்கு கட்டியங்கூறுகின்றன.,நல்லது.அவர் ,முக்கிய முடிவுகளை எடுக்கும் பார்லிமெண்ட குழு உறுப்பினராக தேர்வாகி உள்ளார்.சந்தோஷம்.பிரதமர் வேட்பாளராக தடையின்றி முன்னேறி வருகிறார்,நடக்கட்டும்.,இவருக்கு பிறகு கொஞ்ச நாள் விலகியிருந்து பழையபடி சேர்ந்த உமாபாரதிக்கும் முக்கியத்துவம் கொடுக்கப்பட்டு உள்ளது.நாங்களும் நேரு குடும்பத்துல ஒரு ஆளை வச்சிருக்கிறோம்ல என்று அந்த பக்கம் ராகுல் என்றால் இந்த பக்கம் வருண் என்று அவருக்கும் முக்கியத்துவம் கொடுத்து உள்ளனர்.எல்லாம் சரி, ரொம்ப காலமா கட்சியின் சீனியரா இருக்கும் வெங்கய்யா நாயுடுவிற்கு சொல்லிக்கொள்ளும்படியா எதுவும் முக்கியவத்துவம் இல்லையா என்று சாமன்ய பார்வையாளர்கள் பக்கம் இருந்து கேள்வி வருகிறதே அதற்கு என்ன பதில்.
8 / 20
யார் எனத்தெரிகிறதா..: சவுக்கு கட்டைக்கு பின்னால்,நெருக்கி அடித்துக்கொண்டு,கலைந்த தலையுடன்,கசங்கிய உடையுடன் காணப்படும் இந்த இளைஞர்கள் யார் என நினைக்கிறீர்கள்?அம்மாவிற்கு உதவியாக நியாயவிலைக்கடையில் மண்ணெண்ணை,அரிசி வாங்க நிற்கிறார்கள் என்று நீங்கள் நினைத்துவிடாதீர்கள்,அப்படிப்பட்ட தப்பை(!)ஒரு காலத்திலும் இவர்கள் செய்யமாட்டார்கள்.நடக்குமா...நடக்காதா என்றே தெரியாத சென்னை ஐபிஎல் போட்டியைக்காண, ஆயிரம் ரூபாய் முதல் பத்தாயிரம் ரூபாய் வரையிலான டிக்கெட்டை எடுக்க போட்டிபோட்டுக்கொண்டு முதல் நாள் இரவிலிருந்தே வரிசையில் நின்றவர்கள்தான் இவர்கள்.இவர்களை எங்கேயாவது ,எப்போதாவது பஸ் டிக்கெட் விலை உயர்வு,பால் விலை உயர்வு போன்றவைகளை கண்டித்து நடக்கும் போராட்டங்களில் பார்த்தால், அந்த இடத்திலேயே நிற்காதே ‘ஒடிப்போ’ என்று சொல்லி விரட்டிவிடுங்கள்.கருத்து:எம்ஆர்.நீங்களும் இது போல போட்டூன்,கார்ட்டூன் போன்றவைகளை கிழே உள்ள முகவரிக்கு மின்னஞ்சல் செய்யலாம்.
9 / 20
அம்புட்டு கோவாமாப்பு...: இலங்கை தமிழர் பிரச்னை காரணமாக அமைதியாக போராட்டம் நடத்திக்கொண்டிருந்த மாணவர்கள், தற்போது காங்கிரஸ் மீது கடுமையான கோபம் கொண்டுள்ளனர்.இவர்களது கோபத்திற்கு திருச்சியில் காங். கொடிகள்,தோரணங்கள் முதல் பலியானது என்றால் அடுத்து சென்னை சத்யமூர்த்தி பவனில் வைக்கப்பட்டிருந்த தமிழக காங்.தலைவர் ஞானதேசிகன் படம் இரண்டவாதாக பலியாகி உள்ளது.பேனரில் உள்ள படத்தை இரண்டாக கிழித்திருப்பதைப் பார்த்தால் ,ரொம்பவே கோபமாக இருக்கிறார்கள் என்றே படுகிறது.கருத்து :எம்ஆர்.
10 / 20
இது தப்புங்கய்யா...: ரஜினி நடித்த சிவாஜி படத்தில்,நடுவர் பாப்பையா ஒரு டயலாக் விடுவார்,அங்க இல்லைன்னா என்னா?எங்கிட்ட இரண்டு பொண்ணு இருக்கு,வாங்க பழகிப்பாருங்க என்று கூப்பிடுவார்.அந்த பாணியில் சென்னையில் விளையாட முடியாட்டி என்னா? எங்க கேரள ஸ்டேட்ல இரண்டு மைதானம் ரெடியாயிருக்கு ,வந்து விளையாடுங்க என்று ஐபிஎல் கிரிக்கெட் அணியை கூப்பிட்டுள்ளார் கேரளா முதல்வர் உம்மன் சாண்டி.‘அண்ணன் எப்போ சாவான் திண்ணை எப்ப ரெடியாகும்’ என்ற கதையா பக்கத்து மாநிலமா இருந்தும், தமிழ்நாட்டோட உணர்வு புரிஞ்சுக்கலீயே இந்த உம்மன் சாண்டிகடைசிக்கட்ட போரின் போது கொத்து,கொத்தாக அப்பாவி தமிழ் மக்களை சுட்டுக்கொன்ற இலங்கைக்கு தரும் கண்டனமாகத்தானே இங்கே இந்த தடை விதிக்கப்பட்டுள்ளது என்பதை உணரவேண்டாமா,சக மாநிலமாக அல்ல சக மனிதனின் சங்கடமாகவாவது உணர்ந்திருந்தால் நெருக்கம் கூடியிருக்குமே.அரசியல் போகும் போக்கை பார்த்தால் வேதனைதான் மிஞ்சுகிறது.கருத்து:எம்ஆர்.
11 / 20
நான் ‘சும்மா’தானே விளையாடுறேன்...: இலங்கை வீரர்கள் சென்னை ஐபிஎல் கிரிக்கெட்டில் விளையாட தடை விதித்து இருப்பதால் ரொம்பவும் கவலைப்பட்டு இருப்பவர் இலங்கை அணியைச் சேர்ந்த முரளிதரன்தான்.சென்னை ரசிகர்களை மகிழ்ச்சிப்படுத்த முடியவில்லையே என்று ரொம்பவே விசனப்பட்டு உள்ளாராம். இவரது கவலை எல்லாம் தமிழ்நாட்டில் விளையாடுவதன் மூலம் வரும் வருமானம் போய்விடுமே என்பதுதான்.,ஐயா முரளிதரன் அவர்களே, எத்தனை கோடி சம்பாதித்தாலும் அந்த சம்பாத்தியத்தில் இருந்து, பத்து சதவீதம் வீடிழந்த யாழ்ப்பாண தமிழர்களுக்கும்,பத்து சதவீதம் படிக்கமுடியாத வவுனியா தமிழ் மாணவர்களுக்கும் தரப்போறீங்களா? இல்லீயே...அப்புறம் எதுக்கு தமிழ்நாட்டில் விளையாட முடியவில்லையே என்று ‘சீன்’ போடுகிறீர்கள்..தமிழ் உணர்வு இருந்தால் இலங்கை அணியில் இருந்து விலகிகாட்டுங்கள் பிறகு உங்கள் பேச்சை செவிமடுக்கலாம்.கருத்து: எம்ஆர்.
12 / 20
'முடியல' மதுரை வந்துட்டேன்...: தி.மு.க.,செயற்குழுவில் ‘அண்ணன் அழகிரி’யை காணோம்,காணோம் என்று ஆளாளுக்கு தேடிக்கொண்டிருக்க,அவர் அதே நேரம் சென்னையை விட்டு கிளம்பி மதுரை போய்க்கொண்டிருந்தார்.மதுரைக்கு போனதும்,“உடம்புக்கு முடியல, அதான் செயற்குழுவில கலந்துகொள்ளலை” என்றார்.செயற்குழுவில கலந்துக்கவே முடியாத உடம்பு(!) மதுரை வரை எப்படித்தான் தாங்கியதோ?.ஒண்ணு சென்னை ஆஸ்பத்திரியில் சேர்ந்திருக்கணும்,இல்லை என்றால் சென்னை வீட்டிலேயே தங்கியிருக்கணும்,இவரு ரெண்டையும் செய்யல.,உடம்ப பார்த்துக்கோங்கன்னு சொல்றத தவிர வேற என்ன சொல்ல...கருத்து :எம்ஆர்
13 / 20
ஹார்ன் சத்தமே !: அதிகப்படியான சத்தம் எழுப்புதல் என்பது, அதுவும் குறிப்பாக வாகனங்களில் ஒலிப்பானை கதறவிடுவது, இருக்கிற சுற்றுச்சூழல் கேட்டிலேயே மோசமானதாகும்.இதை உணர்ந்து ஆங்காங்கே விளம்பர பாததகை வைத்துள்ள காவல்துறை,ஒலிப்பானை இயக்காதிருக்கும் தினம் என்றும் கடந்தவாரம் கடைபிடித்தது.அந்த தினத்தில் நம்மூர் ஜனங்கள் எப்படி செயல்பட்டிருப்பார்கள் என்ற கற்பனையே இந்த கார்ட்டூன்.கார்ட்டூன்:விஷ்ணுநீங்களும் இது போன்ற கார்ட்டூன் வரைந்து கிழே உள்ள முகவரிக்கு மின்னஞ்சல் செய்யலாம்.,நீங்கள் அனுப்பும் கார்ட்டூன் சுமாராக இருந்தால் கூட பராவாயில்லை ஆனால் உங்களுக்கு சொந்தமானதாக இருக்கட்டும்.நன்றி!
14 / 20
வேணாம்,சொன்னா கேளு...: இந்த சில்லரை நாணயங்கள் எல்லாம் எங்கே போய் மறைந்தன என்றே தெரியவில்லை,எங்கே பார்த்தாலும் இந்த ‘சில்லரை ’பிரச்னை பெரிய பிரச்னையாகிவருகிறது.விநாயகர் கோவில் உண்டியல் ,தனது சில்லரை பிரச்னையை தீர்க்கு ம் என்று வருபவரின் எண்ணத்தை உணர்ந்த விநாயகர், எப்படி எச்சரிக்கை விடுவார் என்பதன் கற்பனையே இந்த கார்ட்டூன்.கார்ட்டூன்:விஷ்ணுநீங்களும் இது போன்ற வித்தியாசமான கார்ட்டூன் படங்களை வரைந்து கிழே உளள முகவரிக்கு மின்னஞ்சல் செய்யவும்.நீங்கள் அனுப்பும் கார்ட்டூன் சுமாரக இருந்தால் கூட பராவாயில்லை ஆனால் உங்களுக்கு சொந்தமானதாக இருக்கட்டம்.நன்றி!
15 / 20
முதல்ல தூக்கிட்டு போ: பெத்தவர்கள் பிள்ளைய கொல்வதும், பிள்ளைகள் பெத்தவர்களை கொல்வதும், இப்போதெல்லாம் அன்றாட நிகழ்ச்சியாகிவிட்டது. முன்பெல்லாம் வெளிநாட்டு விவகாரமாக இருந்த இந்த சங்கதிகள் எல்லாம் இப்போது உள்நாட்டு விவகாரமாகிவிட்டன. சமீபத்தில் பெத்த பிள்ளையை வாஷிங்மெஷினில் போட்டு கொன்றார் ஒரு தமிழ்த்தாய். இந்த சம்பவம் எப்படி எல்லாம் எதிரொலிக்கலாம் என்பதன் கற்பனையே இங்கே கார்ட்டூனாகியுள்ளது.கார்ட்டூன்: விஷ்ணுநீங்களும் இது போன்ற கார்ட்டூன் வரைந்து கீழே உள்ள முகவரிக்கு மின்னஞ்சல் செய்யவும். நீங்கள் அனுப்பும் கார்ட்டூன்கள் சுமாராக இருந்தால் கூட பரவாயில்லை. ஆனால் உங்களுக்கு சொந்தமானதாக இருக்கட்டும். நன்றி!
16 / 20
அப்பா கண்ணுல நெத்திய காட்டாதே..: தயாளு அம்மா போட்டா இது குங்குமமும் இல்லை, இரத்தமும் இல்லை. யாராவது கேட்டா பகுத்தறிவு பல்பொடி என சொல்லி எஸ்கேப் ஆயிடு....முன்னாள் முதல்வர் கருணாநிதிக்கு எதிரே இருப்பவர்களை கேலி செய்து நோகடிப்பது என்றால், பொங்கல் சாப்பிடுவது மாதிரி ரொம்ப ரசித்து செய்வார். ஒரு சமயம் கருணாநிதியைப் பார்க்க ஆதிசங்கர் எம்.பி., வந்தபோது நெற்றியில் குங்குமம் வைத்திருந்தார். அதை பார்த்து, என்ன ஒய் நெற்றியில் ரத்தம் கசியுது என்று எல்லாரும் கேட்கும்படியாக அவர் செய்த கேலி, அவருக்கு எதிராக பூமராங் போல கிளம்பிவந்தது.அதில் முதல் பூமராங், முதலில் உங்கள் துணைவியார் தயாளுவின் நெற்றியில் வடியும் ரத்தத்தை சரி செய்யுங்கள் என்பதுதான்.,அதை இந்த வாசகர் மறக்கவில்லை போலும்,60 வது பிறந்த நாள் கொண்டாடிய மு.க.ஸ்டாலினை அவரது தாயார் என்ன சொல்லி வாழ்த்தினாரோ ஆனால் வாசகரின் கற்பனை வாழ்த்து இங்கே பிரமாதப்படுகிறது.
17 / 20
இதுதான் நோக்கமா?: திடீர்,திடீரென சிலருக்கு அரசு சார்பில் மணிமண்டபம் கட்டுவதன் நோக்கம் அவர்கள் புகழ் பரப்புவது மட்டுமல்ல என்ற அர்த்தத்தில் வரையப்பட்டுள்ளது இந்த கார்ட்டூன்.கார்ட்டூன்:ரவிகுமார்.நீங்களும் இது போன்ற கார்ட்டூன்களை வரைந்து அனுப்பலாம்.நீங்கள் அனுப்பும் கார்ட்டூன் சுமாராக இருந்தால் கூட பரவாயில்லை ஆனால் உங்களுக்கு சொந்தமானதாக இருக்கட்டும்.நன்றி!
18 / 20
ஆண் ’லைன் பாங்கிங்...: அறிவிக்கப்பட்ட பட்ஜெட்டில் முழுக்க,முழுக்க பெண்களால் மட்டுமே இயக்கப்படும் பாங்க் திறக்கப்படும் என்று ஒரு அறிவிப்பு வெளியாகியுள்ளது.முழுக்க,முழுக்க பெண்களால் செயல்படும் ஆஸ்பத்திரி திறந்தாலாவது பிரயோசனம் இப்படி பெண்களால் செயல்படும் பாங்க் திறப்பதால் என்ன நடந்துவிடப்போகிறது என்பது தெரியவில்லை,ஏதோ ஆண் வாடையே ஆகாது என்பது போல போடப்படும் இது போன்ற திட்டத்தை கிண்டல் செய்து வரையப்பட்டுள்ள கார்ட்டூன் இது.கார்ட்டூன்:ஸ்ரீராம் ராகவன்நீங்களும் இது போன்ற கார்ட்டூன் வரைந்துகீழே உள்ள முகவரிக்கு மின்னஞ்சல் செய்யலாம்,அனுப்பும் கார்ட்டூன் சுமாரக இருந்தால் கூட பராவாயில்லை ஆனால் உங்களுக்கு சொந்தமானதாக இருக்ககட்டும்.நன்றி!
19 / 20
சும்மா ஏறுங்க சார்...: ரயில்வே பட்ஜெட்டை பார்த்தால் பொதுமக்களுக்கு நன்மை செய்யறாங்காளா,இல்லீயான்னே தெரியாமாட்டேங்குது,அதை அடிப்படையாக வைத்து வரையப்பட்டுள்ள கார்ட்டூனிஸ்ட்.இந்த படத்தை வரைந்த கார்ட்டூனிஸ்ட் மதுரையில் உள்ள டூவீலர் மெக்கானிக்காவார்.,ஆர்வம் காரணமாக பென்சிலில் கார்ட்டூன் வரைந்து அதனை மொபைலில் படம் எடுத்து மொபைலில் உள்ள நெட்டை கனெக்ட் செய்து அனுப்பியுள்ளார்.அவரது முயற்சிக்கு பாராட்டுக்கள்.கார்ட்டூன்:பி.சசிக்குமார்.நீங்களும் இது போன்ற கார்ட்டூன் வரைந்து அனுப்பலாம்.அனுப்பும் கார்ட்டூன் சுமாராக இருந்தால் கூட பராவாயில்லை,ஆனால் உங்களுக்கு சொந்தமானதாக இருக்கட்டும்.நன்றி!
20 / 20
முதல்ல ரயிலை சுத்தமா விடுங்கய்யா..: சாதாரணமாக இருந்த ரயில் கட்டணத்தை உயர்த்தியபிறகு, மக்களை சமாதானப்படுத்தும் விதத்தில் ,ஒடும் ரயிலில் டி.வி.,பார்க்கும் வசதி செய்துதரப்படும் என மத்திய அரசு அறிவித்துள்ளது.,ஆனால் ரயில் என்பது கொஞ்சம் கூட சுத்தமும்,சுகாதாரமும் இல்லாத பகுதியாக மாறிவருவதை முதலில் சீர் செய்தாலே போதும்,டி.வி.,எல்லாம் வேண்டாம் என்பதே மக்கள் கருத்து..அந்த கருத்தை வலியுறுத்தும் வகையில் ஒவியர் வரைந்துள்ள கார்ட்டூன் இது.கார்ட்டூன்:விஷ்ணுநீங்களும் இது போன்ற கார்ட்டூன் வரைந்து கிழே உள்ள முகவரிக்கு மின்னஞ்சல் செய்யலாம்.,நீங்கள் அனுப்பும் கார்ட்டூன் சுமாராக இருந்தால் கூட பராவாயில்லை ஆனால் உங்களுக்கு சொந்தமானதாக இருக்கட்டும்.நன்றி!