போட்டூன்

10-May-2013
1 / 20
சித்த பொறுங்கய்யா...: கர்நாடக முதல்வராக சித்த ராமையா தேர்வு செய்யப்பட்டு உள்ளார். அவருக்கு வாழ்த்து சொல்வோம். அப்படியே காவிரியில் கொஞ்சம் தண்ணீர் திறந்துவிடுங்கள் என்று கேட்டு வைப்போம், யார் முதல்வராக வந்தாலும் நாம் இதைத்தவிர வேறு என்ன கேட்கப்போகிறோம், அவர் சித்த பொறுங்கய்யா என்று சொன்னால் கூட பராவாயில்லை, ஆனால் வழக்கமாக யார் முதல்வராக வந்தாலும் சொல்வது போல ஒரு சொட்டு தண்ணீர் கூட தரமாட்டேன் என்று ஆவேசமாக சொல்லாமல் இருந்தால் சரி...
2 / 20
முதலிடமும்,பனிரெண்டாவது இடமும்...: பிளஸ் டூ தேர்வு முடிவுகளை மாணவ,மாணவியர் எதிர்பார்த்தது போலவே பொது ஜனங்களில் பலரும் திக்,திக் மனதோடு எதிர்பார்த்தார்கள்,காரணம் கடுமையான மின்வெட்டிற்கு நடுவேதான் தேர்வு எழுதினர்.இப்போது தேர்வு முடிவுகள் பயந்தபடி இல்லாமல் ஒரளவு திருப்தியாகவே வெளிவந்துள்ளது.இதில் என்ன வேடிக்கை என்றால் இரண்டு மணி நேரமே மின் வெட்டு இருந்த சென்னை தேர்ச்சி சதவீதத்தில் 12 வது இடத்தையும்,16 மணி நேர மின்வெட்டு இருந்த விருதுநகர் முதல் இடத்தையும் பெற்றிருப்பதுதான்.எங்கு இருந்தாலும் படிக்கிற பசங்க எந்த சூழ்நிலையிலும் ஒழுங்காக படிப்பார்கள் என்பதைத்தான் இது காட்டுகிறது.
3 / 20
நாடு நம்மள ரொம்பவே நம்புது...: அகில இந்திய அளவில் 2ஜி,நிலக்கரி,உரத்துறை என்று ஏகப்பட்ட ஊழல் விஷயங்களில் மாட்டிக்கொண்டு காங், .கட்சி முழித்துக்கொண்டு இருக்கிறது,.மக்களிடம் ரொம்பவே கெட்ட பெயர்,எப்படா என்று காத்துக்கொண்டு இருக்கிறார்கள் என்றெல்லாம் சொல்லப்பட்டது ,அதிலும் காவிரி ஆணையத்தை அரசிதழில் இடம் பெறச்செய்த மன்மோகன் மீது கர்நாடகா மக்கள் ரொம்பவே கோபமாக இருக்கின்றனர் என்றும் விமர்சிக்கப்பட்டது.,அனைத்து விஷயங்களையும் புறந்தள்ளிவிட்டு கர்நாடகா மக்கள், காங்கிரசே தங்களை ஆளத்தகுதியான கட்சி என தேர்வு செய்துள்ளனர்.இது மக்கள், காங்.மீது வைத்த நம்பிக்கையா? அல்லது பா.ஜ.,மீது ஏற்ப்பட்ட அவநம்பிக்கையா? என்பது போகப்போகத்தான் தெரியும்.
4 / 20
சிரிக்காம சொன்னாரே...: சிறையில் ராமதாசை பார்த்துவிட்டு வெளியே வந்த பா.ம.கா.,வைச் சேர்ந்த முன்னாள் மத்திய அமைச்சர் வேலுவிடம் ,“தொடர்ந்து வட மாவட்டங்களில் பஸ் எரிப்பு,கடைகளுக்கு தீவைப்பு சம்பவங்கள் நடக்கின்றதே.,மக்கள் இயல்பு வாழ்க்கை வாழ முடியாமல் சபித்துக்கொண்டிருக்கின்றனரே., தொண்டர்கள் அமைதி காக்கவும்னு மூத்த தலைவர்கள் யாருமே சொல்லமாட்டேங்கிறீங்களே” என்று கேட்டபோது.,நடக்கும் சம்பவத்திற்கும் பா.ம.கா.,விற்கும் எந்த தொடர்பும் இல்லை என்று, சிரிக்காமல் சீரியசாக சொல்லிவிட்டு போனார்., ஒரு வேளை அந்த பகுதிகள்ல அடிக்கிற வெயில் தாங்காமல் பஸ்களும்,கடைகளும் தானாய் தீபிடித்து எரியுதோ...என்னவோ.
5 / 20
அது எப்படிங்க பாண்டியன்...: மக்களிடம் அங்கீகாரம் பெற்ற அதிமுகவுடன் வரும் லோக்சபா தேர்தலில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி கூட்டணி அமைத்து போட்டியிடும் என சொல்லியுள்ள,கட்சியின் மாநில செயலாளரான தா.பாண்டியன் அவர்களே ,முதல் அமைச்சர்தான் நாற்பது தொகுதிகளிலும் அதிமுக தனித்து போட்டியிடும் என திட்டவட்டமாக அறிவித்துவிட்டாரே,அப்புறம் எப்படி,எந்த தொகுதியில் போட்டின்னு புரியலியே,வேணும்னா கூட்டணி வச்சுக்கலாமே தவிர வேறு என்ன செய்யமுடியும்.
6 / 20
சொன்னா கேளுய்யா...: தங்க நகைகள் வாங்குவதை மையமாகக்கொண்ட அட்சயதிருதியை தற்போது அனைத்து பொருட்களையும் வாங்குவதற்கான நல்ல நாளாக மாறிவிட்டது. இன்றைய தேதிக்கு உண்மையிலேயே மலிவாக கிடைக்கும் பொருள் என்று ஒன்று உண்டு என்றால் அது அம்மா உணவகத்தில் வழங்கப்படும் இட்லி மற்றும் சம்பார், தயிர்சாதம்தான்., அதைக்கூட அட்சயதிருதியை முன்னிட்டு தள்ளுபடியில் தரமுடியுமா என மக்கள் கேட்பதாக சொல்லும் கார்ட்டூன் இது. கார்ட்டூன்:விஷ்ணு நீங்களும் இது போன்ற கார்ட்டூன் வரைந்து கிழே உள்ள முகவரிக்கு மின்னஞ்சல் செய்யலாம். நீங்கள் அனுப்பும் கார்ட்டூன் சுமாராக இருந்தால் கூட பரவாயில்லை ஆனால் உங்களுக்கு சொந்தமானதாக இருக்கட்டும்.நன்றி!
7 / 20
நல்லா பார்த்துக்குங்க...: முன்னொரு காலத்தில் கோபத்தில் ரோட்டில் உள்ள மரங்களை எல்லாம் வெட்டி போட்டது என்னவோ நிஜந்தான்,ஆனால் இப்போது அப்படியில்லை,நாங்க ரொம்ப நல்லவங்களாயிட்டோம், அதுனால இனிமே யாரும் எங்களை பார்த்து ‘மரம் வெட்டி’ என்று கூப்பிடக்கூடாது என்று பாமக நிறுவனர் ராமதாஸ் அவ்வப்போது சொல்வார்,ஆனாலும் அவரது தொண்டர்கள் இப்போதும் பச்சை புள்ளையை வெட்டுவது போல மரங்களை வெட்டிக்கொண்டுதான் இருக்கின்றனர்,அவர் கைதானதைக்கண்டித்து காஞ்சிபுரம் பகுதியில் வெட்டி போடப்பட்ட பச்சைபனை மரம் இது.,வெட்டியதற்கு அடையாளமாக தங்கள் கட்சி கொடியையும் கட்டிவைத்துள்ளனர்.இப்படி செஞ்சால் மழை கொட்டிடும்,பயிர் விளைஞ்சுடும், நாடு வௌங்கிடும்.
8 / 20
லட்டு தின்ன ஆசை...: தே.மு.தி.க. தலைவர் விஜயகாந்தைப் பொறுத்தவரை நிறைய எதிர்பார்த்து அதைவிட நிறைய ஏமாற்றம் தருகிறாரோ என்ற எண்ணம் ஏற்பட்டுள்ளது. இவர் பேச வேண்டிய இடத்தில்,நேரத்தில் பேசமாட்டார் என்றும், பேசவேண்டாத இடத்தில் எதையாவது பேசுவார் என்பதும் கூடுதலாக இவரைச் சுற்றியுள்ள பேச்சாகும். சமீபத்தில் கட்சி அலுவலகத்தில் நடந்த விழாவில் இவர் வாய் திறந்து நிறைய பேசுவார் என்று எதிர்பார்த்து வந்தவர்கள் பலர்,ஆனால் வாயை திறந்து லட்டு சாப்பிட்டுவிட்டு போய்விட்டார்.
9 / 20
நான் ஜெயிலுக்கு போறேன்...: பாமக.,நிறுவனர் ராம்தாஸ் மாமல்லபுரத்தில் வரையறுக்கப்பட்ட நேரத்தையும் தாண்டி பேசியதை சட்டம் பார்த்துக்கொண்டுதான் இருக்கிறது என்று முதல்வர் சொன்னபோதே உஷராயிருக்கவேண்டியவர்,ஆமாம் அதுக்கென்ன,என் மீது நடவடிக்கை எடுத்துருவீங்களா என்று உசுப்பேத்திவிட்டார்,அதன்பிறகு அனுமதி பெறாமல் விழுப்புரத்தில் ஆர்ப்பாட்டம் நடத்தப்போய் கைதாகி தற்போது திருச்சி சிறையில் உள்ளார்.இப்போதாவது சும்மா இருக்கிறாரா...நான் அமைதியாக இருக்கச் சொன்னதால்தான் தொண்டர்கள் அமைதிகாக்கின்றனர் என்று சொல்லியுள்ளார்,இப்படி சொன்னதன் மூலம் அவரை அறியாமலே. நினைத்தால் வன்முறையை தூண்டிவிடுவேன் என்று சொல்வது போலாகிவிடுகிறதே.படம்:ரமேஷ்,விழுப்புரம்.
10 / 20
அதுக்கும் இதுக்கும் என்ன சம்பந்தம்...: திமுக தலைவர் கருணாநிதியின் மூத்த மகன் மு.க.முத்துவின் மனைவி.,தனக்கு தன் பிள்ளை அறிவுநிதியாலும் மருமகள் மற்றும் சம்பந்தியால் ஆபத்து என்று ஆட்டோவில் வந்து போலீஸ் கமிஷனரிடம் மனு கொடுத்துள்ளார்.,இது தொடர்பான செய்தியை படித்தவர்கள் யாருக்குமே கண்ணீர்வரும்.,ஆனால் ஆறுதலாக இருக்கவேண்டிய கணவர் மு.க.முத்துவோ, மனனவிக்கு மறதி நோய் என்று சொல்லியுள்ளார்...நிருபர்களிடம் ‘தெளிவாக’ பேசியவருக்கு அந்த நோய் இருக்குமா என்று தெரியவில்லை,அப்படியே இருந்தாலும்,அந்த நோய்க்கும், போலீசில் தந்த புகாருக்கும் எந்த தொடர்பும் இல்லையே...
11 / 20
எங்க அப்பன் குதிருக்குள் இல்லை...: மாமல்லபுரத்தில் சித்திரை திருவிழா கொண்டாட சென்னை கிழக்கு கடற்கரை சாலை வழியாக சென்றவர்கள், குடித்துவிட்டு ஒட்டல்களில் சாப்பிட்டுவிட்டு காசு கொடுக்காமல் சென்றதுடன், தட்டிக்கேட்டவர்களுடன் தகராறும் செய்துள்ளனர்.,போதும் போதததற்கு வாகனங்களையும், வீடுகளையும் கூட தீவைத்து கொளுத்தினர்.இந்த சம்பவம் தொடர்பாக சட்டமன்ற கூட்டத்தொடரில் சிறப்பு கவன ஈர்ப்பு தீர்மானம் கொண்டுவரப்பட்டு, பலரும் கண்டனம் தெரிவித்து பேசினர்.,இப்படிப்பட்ட அடாவடித்தனத்தில் இறங்கியது யார் என்று தெரியாத நிலையில் பாமக எம்.எல்.ஏ.,காடுவெட்டி குரு எழுந்து, எங்களுக்கும் அந்த சம்பவத்திற்கும் எந்த சம்பந்தம் இல்லை என்று ஆரம்பித்து பேசாக்கூடாததை எல்லாம் பேசக்கூடாதமுறையில் பேசினார்.,யாருமே குற்றம் சுமத்தாத போதிலும் ‘எங்க அப்பன் குதிரைக்குள் இல்லை’ என்ற ரீதியில் காடுவெட்டி குரு பேசுகிறார் என்று முதல்வர் பேசியதும்,‘ ஒ...இவர்கள்தானா ,அவர்கள்’ என்று தெரியாதவர்களும் நடந்த வன்முறைக்கு யார் காரணம் என்று தெரிந்து கொண்டார்கள்.
12 / 20
ஆத்தி...எம்புட்டு நல்லவரு...: மதுரை எம்.பி.,தேர்தலின் போது ஓட்டுக்கு பணம் கொடுத்து வெற்றி பெற்றார் என்று முன்னாள் மத்திய அமைச்சரான அழகிரி மீது கம்யூ. கட்சியினர் போட்டுள்ள வழக்கு விசாரணையின் போது, நானா? ஓட்டுக்கு பணம் கொடுத்தேனா? ஆரத்தி தட்டுல பணம் போட்டேனா? ஐயயோ அபாண்டமுங்க... நான் அப்படி செய்யவும் இல்லை, நமக்கு அதெல்லாம் என்னன்னே தெரியாதுங்கய்யா.”..என்ற ரீதியில் பதில் வந்திருக்கிறது... ஆத்தி எம்புட்டு நல்லவரு...இவர போயி அபாண்டமாக சொல்லாதீக... வாய் வெந்துடும்.
13 / 20
என்ன பேசறீங்க...: இந்திய எல்லையில் அத்துமீறி சீனா படையினர் ஊடுருவி முகாமிட்டுள்ளனர்.,நமது நாட்டின் பாதுகாப்பை கேள்விக்குறியாக்கும் விதத்தில் மட்டுமல்ல கேலிக்குறியாக்கும் விதத்திலும் நடந்து கொண்டுள்ள இவர்களை அடித்து துரத்தாமல் அடுத்த மாதம் சீனா சுற்றுப்பயணம் செய்யும் போது இந்த பிரச்னையை பேசிதீர்ப்பேன் என்று சொல்லியுள்ளார் நம்ம வெளியுறவு துறை அமைச்சர் சல்மான் குர்ஷித்.,எது எதைத்தான் ஒத்திப்போடுவது,பேசித்தீர்ப்பது என்ற விவஸ்தையே இல்லையா?நீங்க பேசிதீர்ப்பதற்குள் இன்னும் கொஞ்சம் இடத்தையும் சேர்த்து பட்டா போட்டுவிடுவார்கள்,பட்டா...
14 / 20
என்னவோ நினைச்சோம்...: மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி மீது நிறைய எதிர்பார்ப்புகள் இருந்தது,இவரது ஆட்சி நாட்டிலேயே முன்மாதிரியாக இருக்கப்போகிறது என்று நிறையவே நினைத்தோம்.,ஆனால் ஆட்சிக்கு வந்தது முதலே அவர் எதிர்க்கட்சிகளை சாடுவதையே வழக்கமாகக் கொண்டுள்ளார். சொல்லிக்கொள்ளும்படியாக எதுவும் இல்லை எனும் போது வருத்தமே மேலிடுகிறது.கார்ட்டூனிஸ்டை கைது செய்ததில் துவங்கி கோல்கட்டா ஐபிஎல் அணியை ஏதோ தேச அணியை பாராட்டுவது போல பாராட்டியது எல்லாம் இன்னும் ‘மெச்சூரிட்டி’ இல்லையோ என்று எண்ண வைத்துள்ளது.இப்போது சாரதா நிதி நிறுவன தலைவர் சதீப்தாசென் , திரிணாமுல் காங்.எம்பிக்கள் மிரட்டியதை போட்டு உடைத்துள்ளார். ஆத்திரத்தையும், ஆவேசத்தையும் எப்போதாவது காட்டினால் நன்றாக இருக்கும் எப்போதுமே என்றால்
15 / 20
நீங்க முதல்ல பயன்படுத்துங்கய்யா...: நாட்டில் உள்ள 43 சதவீதம் இளைஞர் சக்தியை பயன்படுத்தினாலே இந்தியா வல்லரசாகிவிடும் என்று உ.பி.,முதல்வர் அகிலேஷ் யாதவ் முன்னிலையில் பேசியதெல்லாம் சரி,நீங்கள் உங்கள் கட்சியில் உள்ள இளைஞர்களை முதல்ல நல்ல முறையில் பயன்படுத்துங்க, குறைந்தபட்சம் குடிக்காமல் இருக்கச் சொல்லுங்க...கோடி ....... கூடும் விழாவில் டாஸ்மாக் விற்பனை பல மடங்கு எகிறுகிறது என சட்டமன்றத்தில் புள்ளிவிவரத்தோடு சொல்லி,சொல்லி சிரிக்கிறாங்களே உங்க காதுல விழுகுதாங்கய்யா...
16 / 20
நடக்குதா பார்க்கலாம்...: சென்னை வந்துள்ள உ.பி.,முதல்வரும்,முலாயம்சிங் யாதவின் மகனுமான அகிலேஷ் யாதவ் பத்திரிகையாளர்களிடம் பேசுகையில் பா.ஜ.,மற்றும் காங்.கட்சிகள் மக்கள் செல்வாக்கை இழந்துவிட்டன.அதிலும் காங்.கட்சிக்கு இனி வாய்ப்பே இல்லை என்றும் அடிதட்டு மக்களின் பிரச்னை தெரியாத ராகுல் பிரதமர் வேட்பாளராக சான்ஸே இல்லை இனி மூன்றாவது அணிக்குதான் பிரகாசமான எதிர்காலம் உள்ளது என்றும் சொல்லியுள்ளார்., கூடவே இருந்த தொல்லை கொடுக்கும் அப்பா முலாயம்சிங்கிற்கு பிரதமர் ஆசை காண்பித்து அவரை டில்லிக்கு கிளப்ப நினைக்கிறார், நடக்குதா பார்க்கலாம்...
17 / 20
ஒண்ணும் அவசரமில்லீங்க...: அதிமுக ஆட்சியில் நத்தம் விஸ்வநாதன் மின்சாரத்துறை அமைச்சரானதில் இருந்து சந்தித்துவரும் ஒரே பிரச்னை மின்வெட்டுதான்,அவர் சொல்லிவரும் ஒரே பதிலும் விரைவில் பிரச்னை தீர்க்கப்படும் என்பதுதான்.,இந்த ஜீன் மாதத்திற்குள் என்று அடித்து சொல்லிவந்தவர், நடந்துவரும் சட்டமன்ற தொடரின் போது ஜீன் மாதம் சிரமம்தான், அநேகமாக இந்த ஆண்டு இறுதிக்குள் தீர்க்கப்படும் என்று இப்போது சொல்லிவருகிறார்.,பிள்ளைகளுக்கு தேர்வு முடிஞ்சு போச்சு இனி என்ன அவசரம் மெதுவாப்பார்த்து செய்யுங்கண்ணா...
18 / 20
வாங்க பாஸ் நாம அப்படியா பழகினோம்...: பல லட்சம் கோடி நாட்டுக்கு நஷ்டம் ஏற்படக்காரணமான 2ஜி ஸ்பெக்ட்ரம் ஊழல் தொடர்பாக கைதாகி சிறை சென்று, தற்போது ஜாமீனில் உள்ள முன்னாள் மத்திய அமைச்சர் ராஜாவே எல்லாவற்றுக்கும் பொறுப்பு.,நடந்த விஷயத்தில் பிரதமருக்கும்,அமைச்சர் சிதம்பரத்திற்கும் பொறுப்பு இல்லை என்று பார்லிமெண்ட கமிட்டி கூறியதை அடுத்து, இதுவரை கூட்டணி தர்மத்தை(!)முன்னிட்டு அமைதியாக இருந்த ராஜா தற்போது பொங்கியெழுந்துள்ளார்,நடந்த விஷயம் அனைத்தும் பிரதமருக்கும்,சிதம்பரத்திற்கும் தெரியும், இது தொடர்பான ஆதாரம் என்னிடம் உள்ளது,இதை கோர்ட்டில் தாக்கல் செய்வேன் என்று சொல்லியுள்ளார்.‘வின்னர்’ படத்தில் வடிவேலுவை மாட்டிவிடும் திருடன் ஒருவன் “வாங்க வாங்க பாஸ் நமக்கு அடிவாங்குறது புதுசா...நாம அப்படியா பழகிருக்கோம்...இப்ப விட்டுட்டு போறீங்களே” என்பான்... அந்த காமெடிதான் இப்போது நினைவிற்கு வருகிறது.
19 / 20
பஞ்சர் ஒட்ட எவ்வளவுணா?: படவிளக்கம்:சென்னை எழும்பூர் தொகுதி தே.மு.தி.க., எம்.எல்.ஏ.,வும் தற்போது சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளவருமான நல்லதம்பி தனது பழைய சைக்கிள் கடையில் உட்கார்ந்து பஞ்சர் ஒட்டுவது,காற்று அடிப்பது,சைக்கிள் ரிப்பேர் செய்வது போன்ற பழைய வேலைகளை செய்துவருகிறார்.சஸ்பெண்ட் ஆனதால் சிபாரிசு கடிதம் கொடுத்தல் போன்ற மக்கள் பணியை செய்யமுடியவில்லை என்ற வருத்தம் இருக்கு...காசு வாங்க காத்து அடியுங்கண்ணா,அதுவும் மக்கள் தொண்டுதான்...
20 / 20
நல்லாத்தானே போய்கிட்டு இருந்துச்சு...: மோடியே அடுத்த பிரதமர் என்ற ரேஞ்சுக்கு எங்கும் அவர் புகழ் பாடிக்கொண்டு இருக்கும் வேளையில், பா.ஜ.க.,வுடன் பல ஆண்டுகளாக கூட்டணி வைத்துள்ள ஐக்கிய ஜனதா தளத்தின் கூட்டத்தில் தற்போது ஒரு முடிவெடுத்துள்ளனர்,கடந்த 2002ல் குஜராத்தில் நடந்த கலவரத்தில் சரியாக கடமையைச் செய்ய தவறியதால், மோடியை பிரதமர் வேட்பாளராக ஏற்கப்போவது இல்லையம் .,அப்புறம் அவரது கட்சியைச் சேர்ந்த பீகார் முதல்வரான நிதிஷ்குமாரையும் பிரதமராக பார்க்கும் எண்ணம் இல்லையாம்.,அப்புறம் யார்தான் உங்களுக்கு ஒகே என்றால், அப்புறம் பார்க்கலாம் அதுவரை அத்வானிக்கு ஒகே என்கின்றனர்.
Advertisement