புகைப்பட ஆல்பம்:

‘பொங்கலோ பொங்கல் !
1 / 20
வண்ண, வண்ண பானைகள் தயாராகிறது.
2 / 20
விவசாயத்திற்கு உறு துணையாக இருக்கும் இந்த மாடுகளுக்கு மாட்டுப் பொங்கல் கொண்டாடப்பட்டது.சென்னையில் வளர்க்கப்படும் மாடுகளுக்கு அலங்காரம் செய்து பழமை மாறாமல் பண்டிகையை கொண்டாடியது இந்த குடும்பம்.இடம்: வால்டாக்ஸ் சாலை.
3 / 20
விருதுநகர் மார்கெட்டில் மஞ்சள்குழை ஆர்வமுடன் வாங்கும் பெண்கள்.
4 / 20
மதுரை பெண் போலீசார் பொங்கலிட்டு மகிழ்ந்தனர்.
5 / 20
திருவள்ளூர் அடுத்த அரண்வாயல் பிரதியூஷா கல்லூரியில் பொங்கல் விழாவில் மாணவ, மாணவியர் பொங்கல் வைத்து கொண்டாடினர்.
6 / 20
பிடித்துப்பார்., நிறுத்திப்பார் என்ற காட்சி.,
7 / 20
நீயா? நானா ? : பாலமேட்டில் நடந்த ஜல்லிக்கட்டில் யார் பலம் பெரிது என பரிசோதிக்கப்படுகிறது.
8 / 20
காளையுடன் மல்லுக்கட்டும் வீரர் ஒருவர்.
9 / 20
அவனியாபுரத்தில் நடந்த ஜல்லிக்கட்டில் இளம் காளையரை பதம் பார்க்கிறது ஒரு காளை.
10 / 20
சென்னையில் நடந்த பொங்கல் விழாவில் மேயர் சுப்பிரமணியன் பங்கேற்றார்.
11 / 20
தமிழக சுற்றுலா மையம் சார்பில் நடந்த பொங்கல் விழாவில் வெளிநாட்டினர் உற்சாகமாக பங்கேற்றனர்.
12 / 20
ஆவடி, மகாலட்சுமி மகளிர் கல்லூரியில், மாணவிகள் தமிழக கலாசார முறைப்படி சேலை அணிந்து, மண் பானையில் பொங்கல் வைத்து கொண்டாடினர்.
13 / 20
சென்னை தி.நகரில் உள்ள சிறுமலர் செவித்திறன் குறையுடையோர் மேல்நிலைப்பள்ளியில் நேற்று பொங்கல் பண்டிகை கொண்டாடப்பட்டது. பள்ளி தோழர்களுடன் ஆட்டம் பாட்டம் என உற்சாகமாக பொங்கலை கொண்டாடிய மாணவ மாணவிகளுடன் ஐகோர்ட் நீதிபதி ராமசுப்பிரமணியன்.
14 / 20
சென்னையில் உள்ள பெரும்பாலான கல்லூரிகள் மற்றும் பள்ளிகளில் கொண்டாடப்பட்டது.விழாவில் உறியடியில் உற்சாகமுடன் கலந்து கொண்ட மாணவியர் பட்டாளம். இடம்: பாரிமுனை.
15 / 20
சென்னையில் மகளிர் ஆணையம் சார்பில் நடந்த பொங்கல்விழா.
16 / 20
திண்டுக்கல் மாவட்டம் சாணார்பட்டி ஒன்றியம் வீரசின்னம்பட்டியில் கரும்புகள் அறுவடை செய்யப்பட்டு மார்க்கெட்டிற்கு அனுப்பும் பணியில் விவசாயிகள்.
17 / 20
சென்னை கோயம்பேட்டில் விற்பனைக்கு குவிந்த கரும்புக்கட்டுக்கள்.
18 / 20
சென்னை ஐகோர்ட் வக்கீல்கள் சார்பில் நடந்த பொங்கல் கலைவிழா.
19 / 20
பாளையங்கோட்டை சித்த மருத்துவக்கல்லூரி மாணவிகள்.
20 / 20
தமிழர் திருநாளாம் பொங்கலை முன்னிட்டு கீழக்கரை பொங்கல் முத்துப்பேட்டை கவுசானல் கலை மற்றும் அறிவியல் கல்லூரி மாணவிகள் பொங்கலிட்டு மகிழந்தனர்.
Advertisement