தமிழகம்ஆல்பம்:

19-Jun-2012
1 / 20
மக்களின் மிக முக்கிய தேவைகளில் ஒன்று மின்சாரம் இப்படி பராமரிப்பில் என்றால் என்ன ஆகும். மின் தட்டுப்பாட்டால் பராமரிப்பு என்ற பெயரில் மாதத்துக் ஒருமுறை முழுநேர மின் துண்டிப்பு செய்யப்படுகிறது. மின் துண்டிக்கப்பட்ட பராமரிப்பு நாளிலாவது இது போன்ற பாதிப்புகளுக்குள்ளான பிள்ளர் பாக்சுகளை சரி செய்யாதது ஏன். இடம்- சிந்தாதரிப்பேட்டை மே டே பார்க் அருகில்.
2 / 20
பரமக்குடி பாரதிநகர் மெயின் ரோட்டில் மின்கம்பம் சேதமடைந்துள்ளது.
3 / 20
விருதுநகர் அருகே மெட்டுக்குண்டு குடியிருப்பு பகுதியில் தேங்கியுள்ள கழிவுநீரால் துர்நாற்றம் வீசுகிறது.
4 / 20
பெரியகுளம் தாசில்தார் அலுவலக வளாகத்தில் உள்ள மழைமானி செயல்பாடின்றி புதர் மண்டியுள்ளது.
5 / 20
பெரியகுளம் தாசில்தார் அலுவலகம் பின்புறம் உள்ள கழிப்பிடம் பராமரிப்பின்றி புதர்மண்டி காணப்படுகிறது.
6 / 20
தினமலர் நாளிதழில் வெளியான படங்களின் எதிரொலியாக திண்டுக்கல் போலிசாரின் வாகனங்களில் ஒட்டபட்டிருந்த கறுப்பு பிலிம்கள் ஜெயசந்திரன் எஸ்.பி., உத்தரவால் அகற்றப்பட்டது.
7 / 20
திருப்புத்தூர் சீதளி குளத்தில் தூர்வாரப்பட்ட மண்ணை லாரியில் மூடி எடுத்துச் செல்லாததால் ரோடு முழுவதும் சிதறி வாகனங்களில் செல்வோருக்கு சிரமத்தை ஏற்படுத்துகிறது.
8 / 20
திருத்தங்கல் சத்யா நகரில் எம்.பி., தொகுதி வளர்ச்சி நிதியில் ஏற்படுத்தப்பட்ட ஆழ்துளை குழாய் பயன்பாடின்றி முடங்கியுள்ளது.
9 / 20
விருதுநகர் விஸ்வநாததாஸ் காலனியில் சமுதாயகூடம் கட்டும் பணி பாதியில் நிறுத்தப்பட்டதால், மாடுகளை கட்டி வைத்துள்ளனர்.
10 / 20
சென்னையில் பல்வேறு இடங்களில் மழைநீர் கால்வாய் அமைக்கும் பணி ஆமை வேகத்தில் நடந்து வருகின்ற நிலையில், பெரம்பூர் ரங்கசாயி தெருவில் மழைநீர் கால்வாய் புதியதாக அமைக்கப்பட்டும், ஒரு சில இடங்களில் பணி நிறைவு பெறாமல் விபத்து அபாயத்தில் திறந்தே கிடக்கின்றன.
11 / 20
எப்போது ஏலம்...: சென்னை தலைமைச் செயலகத்தில் பயன்படுத்தப்படாமல் வீணாகிப்போகும் கம்ப்யூட்டர், பேக்ஸ் மிஷின், யு.பி.எஸ்., பிரிட்ஜ் உள்ளிட்ட மர சாமான்கள். இப்படி வீணா போவதை விட ஏலமாவது விட்டால் அரசு வருமானம் தானே.
12 / 20
கேட்க நாதியில்லை என்றால் இப்படித்தான்...: சென்னை சிந்தாதரிப்பேட்டை மேம்மால ரயில் நிலையத்தின் மதில் சுவற்றில் உள்ள இரும்பு கம்பிகள் கொஞ்சம் கொஞ்சமாக களவாடப்பட்டு வருகிறது. சிந்தாதரிப்பேட்டை மேம்மால ரயில் நிலையத்தின் மதில் சுவற்றல் இரும்புகள் திருடப்பட்டு பொலிவிழந்து காணப்படும் அவலம்.
13 / 20
கீழ்க்கட்டளை சந்திப்பு அருகில் மேடவாக்கம் மெயின்ரோட்டில் ஓட்டுனரின் கவனக்குறைவால் கடைகளுக்குள் புகுந்த மாநகர பஸ் ஒன்று இயந்திரம் மூலம் மீட்கப்படுகிறது.
14 / 20
தார்பாய் போடாமல் செல்லும் மணல் லாரிகள். இடம்: மேடவாக்கம் மெயின்ரோடு.
15 / 20
நன்மங்கலம், அரசினர் உயர்நிலைப் பள்ளியில் வகுப்பறை வசதியில்லாததால் மர நிழலில் கல்விகற்கும் மாணவ, மாணவிகள்.
16 / 20
திறப்பு விழா எப்போது? மதுராந்தகத்தில் 20 லட்ச ரூபாய் மதிப்பில் கட்டப்பட்ட, நகராட்சி நவீன ஆடு அறுப்புக் கூடம், நான்கு ஆண்டுகளாகியும் திறக்கப்படாமல் மூடிக்கிடக்கிறது.
17 / 20
பட்டினப்பாக்கம் அரசுக் குடியிருப்பு பகுதிகளில், ஒரு குப்பை மேடு உருவாகி வருகிறது. எங்கிருந்தோ வரும் ரப்பீஸ்கள், இப்பகுதிகளை குப்பை மேடாக மாறும் முன் தடுப்பார்களா?.
18 / 20
மழைக் காலம் நெருங்கி வருவதால், கலங்கரை விளக்கம் ரயில் நிலையம் அருகில் உள்ள கால்வாய்களை சீரமைத்தால், மழை வெள்ள நீர் எளிதில் வழிந்தோடிவிடும். செய்வார்களா?
19 / 20
சென்னை வியாசர்பாடி அருகே பேசின்பாலத்தில் பயணிக்கும் குப்பை லாரி மற்றும் ஆயில் டேங்கர்களால், சாலையில் தினமும் ஆயில் கொட்டப்படுகிறது. இதனால் பைக் ஓட்டிகள் விழுந்து வாரிசெல்கின்றனர். ஆயில் மீது மண்ணை கொட்டும் போக்குவரத்து போலீஸ்காரர்.
20 / 20
ராஜபாளையம் பீமராஜா ரோட்டில் வாறுகால் தண்ணீர் தேங்குவதால், சுகாதார கேடு ஏற்படுகிறது.
Advertisement