தமிழகம்ஆல்பம்:

05-டிச-2017
1 / 6
பேசட்டும் மனச்சாட்சி!: நம் மூதாதையர்கள், தங்களுக்கு சொந்தமான தண்ணீர் இருந்த போதும், எதிர்காலச் சந்ததியினரின் வாழ்வாதாரத்திற்காக, ஊருக்கு ஊர் குளங்களை வெட்டி வைத்திருந்தனர். நகரமயமாக்கலால் குளங்களை நெருங்கிய கான்கிரீட் கட்டடங்கள், குட்டைகள் போலச் சருக்கிவிட்டன. நாகரீகம் படைத்தவர்கள்... நீர்நிலைகளை உருவாக்கிய நம் முன்னோரா... இல்லை. அவற்றை சீரழித்துக் கொண்டிருக்கும் நாமா? இந்தக் குற்றச்சாட்டுக்கான புகைப்படச் சாட்சியை, வாசகர்கள் கண்முன் நிறுத்தவே இக்காட்சி. இனி, பதில் சொல்லட்டும் உங்கள் மனச்சாட்சி. இடம்: செல்வசிந்தாமணி குளம், செல்வபுரம், கோவை.
2 / 6
ஆர்.கே., நகர் தொகுதியில் மாநகராட்சி சார்பில் பொருத்தப்பட்ட கண்காணிப்பு கேமிரா
3 / 6
ஒக்கி புயல் தாக்கத்தால் பாம்பன் சின்னபாலத்தில் கடல் உள்வாங்கியதால் நீரின்றி தத்தளித்த கடல் சிப்பிகள்.
4 / 6
சிங்கம்புணரி அருகே சிவபுரிபட்டி சிவன் கோவிலில் 108 சங்காபிேஷகம் நடந்தது.
5 / 6
போடி சி.பி.ஏ., கல்லூரியில் நடந்த என்.சி.சி., முகாமில் துப்பாக்கி சுடும் பயிற்சியில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு கல்லூரி தலைவர் சுப்பிரமணியன் பரிசு வழங்கினார்.
6 / 6
மதுரை கொட்டாம்பட்டி அருகே மேற்கூரை பெயர்ந்து விழும் நிலையில் உள்ள ஆர்.ஐ., அலுவலகம்.