தமிழகம்ஆல்பம்:

24-Nov-2012
1 / 20
வைரவிழாவை முன்னிட்டு சென்னை தலைமை செயலகத்தில் புகைப்பட கண்காட்சியை, முதல்வர் ஜெயலலிதா துவக்கி வைத்து பார்வையிட்டார்.
2 / 20
சத்ய சாய்பாபாவின் 87வது பிறந்த நாளை முன்னிட்டு ஆர்.ஏ.புரம், சுந்தரத்தில் இருந்து சூரிய பிரபையில் அலங்காரத்துடன் புறப்பட்ட பாபா வீதிகளை வலம் வந்து பக்தர்களுக்கு அருள் பாலித்தார்.
3 / 20
ஊட்டி மத்திய மண் மற்றும் நீர்வள பாதுகாப்பு மைய வளாகத்தில், நிலச்சரிவை தடுக்கும் வகையில்,"சணல் வலை' அமைக்கப்பட்டு, ஆய்வு நடந்து வருகிறது.
4 / 20
சூரிய மின்சக்கதி உற்பத்தி குறித்து முதலீட்டாளர்கள் மற்றும் மின் பகிர்மான கழகத்தின் கூட்டம் சென்னை தலைமை மின்சார வாரியத்தில் நடந்தது.இதில் அலைமோதிய முதலீட்டாளர்கள் கூட்டம்.
5 / 20
குன்னூரை சேர்ந்த மணப்பெண் கவிதாவிற்கு பணி நியமன ஆணையை, மாவட்ட கல்வி அலுவலர் லட்சுமணன் வழங்கினார். அருகில், கல்வி அலுவலரின் நேர்முக உதவியாளர் சந்திரன் மற்றும் கணவர் பாஸ்கர் உள்ளனர்.
6 / 20
கோவை வ.உ.சி., உயிரியல் பூங்காவில், விலங்குகளின் சிறப்பு மற்றும் செயல்பாடு குறித்து, பள்ளி மாணவர்களுக்கு செயல்முறை விளக்கம் அளிக்கப்பட்டது. முதலைகுட்டியை ஆர்வமுடன் பார்க்கும் குட்டீஸ்.
7 / 20
உடுமலை அருகே திருமூர்த்திமலையில், நெடியதாய் வளர்ந்து, மண்ணுக்கு நிழல் போர்வை தரும் மரங்கள், தென்றல் காற்றால் சுற்றுலா பயணிகளை தாலாட்டவும் தவறுவதில்லை.
8 / 20
மஞ்சள் பயிரில் செம்மரி நோயை தடுக்கும் வகையில் ஊடுபயிராக செம்மஞ்செடி நடப்பட்டுள்ளது. இடம்: கொளாநள்ளி, ஈரோடு.
9 / 20
திருச்சி கலெக்டர் அலுவலகத்தில் நடந்த விவசாயிகள் குறைதீர்க்கும் கூட்டம் கலெக்டர் ஜெயஸ்ரீ தலைமையில் நடந்தது. அருகில், டி.ஆர்.ஓ., தியாகராஜன்.
10 / 20
'திண்டுக்கல் குடகனாறு சுற்றுலா பங்களா மரத்தில், கூட்டமாக தொங்கும் பழம்திண்ணி வெளவால்கள்.
11 / 20
நாமக்கல்லில் நடந்த டெங்கு காய்ச்சல் விழிப்புணர்வு பேரணியில் பங்கேற்ற பல்வேறு கல்லூரி மாணவ, மாணவியர்.
12 / 20
தர்மபுரி அருகே கலவரம் நடந்த கிராமத்தில், பெண்ணை கடத்தி கலப்பு திருமணம் செய்ததாக தெரிவிக்கப்பட்ட புகார் குறித்து, சம்பந்தப்பட்ட பெண் திவ்யா நேற்று, தர்மபுரி ஜே.எம்., 2 நீதிமன்றத்தில் ஆஜராக பலத்த போலீஸ் பாதுகாப்புடன் வந்தார்.
13 / 20
தி.மு.க.,மாஜி அமைச்சர் வீரபாண்டி ஆறுமுகம் உடல் நலக்குறைவு காரணமாக இறந்ததையடுத்து, சேலம் நகரில் கடையடைப்பு போராட்டம் நடத்தப்பட்டதையடுத்து, பள்ளிக்கும் விடுமுறை அளிக்கப்பட்டது. இதனால் பெற்றோரே, தங்கள் குழந்தைகளை அழைத்து செல்ல பள்ளியை முற்றுகையிட்டதால், பள்ளிகள் முன் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.
14 / 20
உடுமலை சிவசக்தி காலனி அரசு உயர்நிலைப்பள்ளியில், குழந்தைகள் தினவிழாவையொட்டி கோலப்போட்டி நடந்தது.
15 / 20
பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி, தமிழ்நாடு தொடக்கபள்ளி ஆசிரியர் கூட்டணி கோவை கிளை சார்பில், கோவை செஞ்சிலுவை சங்கம் முன் நேற்று முன்தினம் இரவு ஆர்ப்பாட்டம் நடந்தது.
16 / 20
உடுமலை பாரதியார் நூற்றாண்டு அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளியில், ஒன்றிய அளவிலான வாழ்வியல் திறன் கல்வி போட்டிகள் நடந்தது.
17 / 20
ஆட்டம் காணும் அவுட்போஸ்ட்: திண்டுக்கல் பஸ்ஸ்டாண்டில் அமைக்கப்பட்ட, போலீஸ் அவுட் போஸ்ட் சேதமடைந்துள்ளது.
18 / 20
பழநி அய்யம்புள்ளி பகுதியில் இலைசுருட்டு புழுவால் பாதிக்கப்பட்டுள்ள நெல் நாற்றுகள். உள்படம்:இலை சுருட்டு புழு.
19 / 20
சாத்தூர் வெங்கடாசலபுரம் கே.கே. நகரில், தரையை தொடும் தூரத்தில் செல்லும் உயரழுத்த மின்சார வயர்களால்,விபத்து அபாயம் உள்ளது.
20 / 20
ராமநாதபுரம் சேதுபதி சீதிக்காதி விளையாட்டு அரங்கில் நடந்த மண்டல அளவிலான வாலிபால் போட்டியில் மானாமதுரை ஒ.வி.எஸ்., பள்ளியும், அருப்புக்கோட்டை எஸ்.பி.கே., பள்ளியும் மோதியது.
Advertisement