தமிழகம்ஆல்பம்:

03-Dec-2012
1 / 20
பண்ணைக்காடு பேரூராட்சி பள்ளதடி ரோட்டில் கட்டப்பட்ட பெண்கள் சுகாதார வளாகம் சேதமடைந்து பயனற்றுள்ளது.
2 / 20
ஆத்தூர் ஆதிதிராவிட மாணவர்கள் விடுதி அருகே, குப்பை தேங்கி சுகாதாரகேடு ஏற்படுகிறது.
3 / 20
திண்டுக்கல் ஸ்பென்சனர் காம்பவுண்டில், குடிநீர் கேட் வால்வு திறந்த நிலையில் உள்ளது
4 / 20
திண்டுக்கல் நாகல்நகர் புதூர் 5வது தெருவில், கற்கள் பெயர்ந்துள்ளது.
5 / 20
தாண்டிக்குடி முத்தாலம்மன் கோயில் திருவிழாவில் பக்தர்கள் சேறு பூசி நடனமாடி ஊர்வலம் வந்தனர்.
6 / 20
மார்கையன்கோட்டை அரசு மேல்நிலைப்பள்ளியில், சுற்றுச்சுவர் இல்லாததால் இரவு நேரங்களில் சமூக விரோதிகளின் கூடாரமாகிறது.
7 / 20
ஆண்டிபட்டி பேரூராட்சி கொண்டமநாயக்கன்பட்டி காலனியில், அடி குழாய் அருகே கொட்டப்பட்டுள்ள குப்பை அள்ளப்படாததால் பயண்படுத்த முடியாத நிலையில் உள்ளது.
8 / 20
திருப்புவனம், அல்லிநகரம் விவசாயி நாராயணன் வீட்டில் இரு கன்றுகளை ஈன்ற பசு.
9 / 20
அருப்புக்கோட்டை புது பஸ் ஸ்டாண்டில் போதிய இருக்கை வசதியில்லாததால், பயணிகள் தரையில் அமரும் நிலை உள்ளது.
10 / 20
ராமநாதபுரத்தில் இதுபோன்று நடுரோட்டில் "ஹாயாக' திரியும் கால்நடைகளால் போக்குவரத்து இடையூறு ஏற்படுகிறது. இடம்: பிள்ளையார்கோயில் பஸ் ஸ்டாப் அருகே.
11 / 20
ஏழாயிரம்பண்ணை அருகே கீழசெல்லையாபுரம் ரோட்டோர கல்குவாரி பகுதியில், தடுப்புசுவர் இல்லாததால் விபத்து அபாயம் உள்ளது.
12 / 20
உத்தமபாளையம் காளாத்தீஸ்வரர் கோயிலில் ராகு-கேது பெயர்ச்சியை முன்னிட்டு, ராகுபகவான்-சிம்ஹிதைதேவியுடனும், கேது பகவான்-சித்திரலேகாதேவியுடனும் திருக்கல்யாண கோலத்தில் பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.
13 / 20
சபரிமலை செல்லும் பக்தர்களுக்கு,அய்யப்ப சேவா சமாஜம் சார்பில் வழங்கப்படும் அன்னதான திட்டத்திற்காக, தேவாரம் மார்க்கெட்டில் இருந்து இலவசமாக காய்கறிகள் அனுப்பப்பட்டன.
14 / 20
ஸ்ரீராமபுரம்-மதுரை ரோட்டோரத்தில், தடுப்புசுவர் இல்லாத கிணற்றால் விபத்து அபாயம் உள்ளது.
15 / 20
காணாமல் போன சுகாதாரம்: ஸ்ரீராமபுரம் ஆரம்ப சுகாதார நிலையத்தின் பிரசவ விடுதி முன், குப்பை அள்ளப்படாமல் உள்ளது.
16 / 20
ஸ்ரீராமபுரம் குள்ளம்பட்டி காலனி கழிவுநீர் கால்வாய் மீது, தெருக்குழாய் அமைத்துள்ளதால், சுகாதாரக்கேடான சூழலில் குடிநீர் சப்ளை ஆகிறது.
17 / 20
திண்டுக்கல்வெள்ளபொம்மன்பட்டியில், தூண்கள் சேதமடைந் துள்ள குடிநீர் மேல்நிலைத்தொட்டி.
18 / 20
நிலக்கோட்டை நூத்துலாபுரம் கால்நடை மருந்தகம், புதர்மண்டி உள்ளது.
19 / 20
திண்டுக்கல் ராமநாதபுரத்தில், குடிநீர் குழாய் சரிசெய்ய தோண்டப்பட்ட பள்ளம் பல நாட்களாக மூடப்படாமல் உள்ளது.
20 / 20
விருதுநகர் பி.ஆர்.சி.,பணிமனை அருகே கால்வாய் புதர்மண்டி உள்ளது.
Advertisement