தமிழகம்ஆல்பம்:

05-Dec-2012
1 / 21
காஞ்சிபுரம் கச்சபேஸ்வரர் கோவிலில், வெள்ளித் தேர் தேரோட்டம், நேற்று கோலாகலமாக நடந்தது.
2 / 21
மழையால், பேரம்பாக்கம் பகுதியில் அறுவடைக்கு தயாராக இருந்த நெற்பயிர்கள்தண்ணீரில் மூழ்கி உள்ளன.
3 / 21
தாம்பரம் - முடிச்சூர் சாலையில் மழைநீர் தேங்கியதால், நேற்று காலை,போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.
4 / 21
வங்கக் கடலில் உருவாகியுள்ள, குறைந்த காற்றழுத்த தாழ்வால், சென்னையில் நேற்று வானம் மப்பும், மந்தாரமுமாக காணப்பட்டது. அவ்வப்போதுகருமேகங்கள் சூழ்ந்து, கனமழை பெய்வது போல தோன்றினாலும், மாலை வரை, லேசன மழையே பெய்தது. இடம்: பட்டினப்பாக்கம்.
5 / 21
டிச., 6, பாபர் மசூதி இடிப்பு தினம் என்பதால், திருப்பூர் ரயில்வே ஸ்டேஷனில் போலீஸ் பாதுகாப்புபோடப்பட்டுள்ளது. பயணிகள் மற்றும் அவர்களது உடமைகளை, பரிசோதித்தபின்பே, ரயில்வேஸ்டேஷனுக்குள் அனுமதிக்கின்றனர்.
6 / 21
ஜனாதிபதி வருகையையொட்டி, பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்த ஆலோசனை கூட்டம்,கோவை கலெக்டர் அலுவலக வளர்ச்சி மன்ற கூட்டரங்கில், கலெக்டர் கருணாகரன்தலைமையில் நேற்று நடந்தது.
7 / 21
வால்பாறை நகராட்சி சார்பில், பல லட்சம் மதிப்பீட்டில்கட்டப்பட்ட பூங்கா பூட்டியே கிடக்கிறது.
8 / 21
சுற்றுலா பயணிகள் சாலையில் வீசும் திண்பண்டங்களை ருசிப்பதற்காக, மசினகுடி அருகே,சாலையோர மரத்தில் "எதிர்பார்ப்புடன்' காத்திருக்கும் நீலகிரி லாங்கூர் குரங்குகள்.
9 / 21
திருநெல்வேலியில் நடந்த தமிழ்நாடு ஊர்க்காவல் படையினருக்கான விளையாட்டுப் போட்டியில் வெற்றிபெற்ற விழுப்புரம் சரக படையினரை கடலூர் மாவட்ட எஸ்.பி., ராதிகா பாராட்டினார். அருகில் வட்டார தளபதிகேதார்நாதன், துணை வட்டார தளபதி ஜெயந்தி ரவிச்சந்திரன்.
10 / 21
தமிழ்நாடு கரும்பு விவசாயிகள் சங்கத்தின் சார்பில் ரங்கராஜன் குழுவின் பரிந்துரைஏற்க எதிர்ப்பு தெரிவித்து விழுப்புரத்தில் போராட்டம் நடத்தப்பட்டது.
11 / 21
பெரியாறு-வைகை பாசனக்கால்வாயில் திறக்கப்பட்ட தண்ணீர், இருபது நாட்களில்நிறுத்தப்பட்டதால், வறண்டுள்ள கள்ளந்திரி கால்வாய்.
12 / 21
டெங்கு, சிக்குன்குனியா என, பல வியாதிகள் கொசுக்களால் பரவி உயிர்ப்பலிகள் ஏற்பட்டதால், தடுப்புநடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளது. அதேபோல், நகருக்குள் சுற்றித் திரியும் நாய்களால், ரேபிஸ் நோய்வரும் முன் நடவடிக்கை எடுக்க வேண்டும். இடம்: பழனிசெட்டிபட்டி.
13 / 21
இதுவன்றோ நன்றிக்கடன்... ஒரு ரூபாய் நாணயம் அளவுள்ள நெருஞ்சி மலரில், குறிஞ்சித் தேனை உறிஞ்சத்தேடும் இந்தத் தேனீ, நன்றிக்கடனாக உடல் முழுவதும் ஒட்டியுள்ள, மகரந்த தூளை மற்ற மலர்களுக்குஎடுத்து சென்று புதிய பூவிற்கு வித்திடுகிறது.
14 / 21
கோத்தகிரி அருகே கொட்டகம்பையில் 300 அடி பள்ளத்தில் உருண்ட தனியார் மினி பஸ்øOஉ மீட்கும் பணிநடைபெற்றது.
15 / 21
தமிழ்நாடு மருந்து மற்றும் விற்பனை பிரதிநிதிகள் சங்கத்தினர் சேலத்தில் எட்டு மணி நேர வேலை உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி, பேரணியாக செசன்றனர்.
16 / 21
தர்மபுரியில் பெய்த தொடர் மழையின் காரணமாக குடைக்குள் தஞ்சசம் அடைந்த வாறு செசன்ற பொதுமக்கள். இடம் : தர்மபுரி எஸ்.வி., ரோடு. அடுத்தபடம் 01எ: தர்மபுரி அரசு மருத்துவமனை எதிரில்.
17 / 21
செசன்னிமலையில் தயாராகும் மேட்டா ரக பெட்ஷீட்கள்.
18 / 21
ஆதிவாசி போராட்டம்: தமிழகத்தில் நிலவும் கடும் மின்வெட்டை கண்டித்து, திருச்சி மாவட்ட சி.ஐ.டி.யூ.,யை சேசர்ந்த தொழிலாளர்கள், நேற்று கலெக்டர் அலுவலகத்திற்கு ஊர்வலமாக வந்து மனு கொடுத்தனர். அப்போது, "ஜிம்பாலா.. ஜிம்பாலா.. ஜிம்பக்க. ஜிம்பா..' என்று காட்டுவாசிகள் போல வேடமணிந்த நபர்கள் தீப்பந்தம் பிடித்து ஆடி வந்தததை பார்த்து, "இவர்கள் உண்மையான காட்சிவாசிகளோ' என்றுக்கூறி மக்கள் சிரித்தனர்.
19 / 21
கோவை மாவட்ட வேளாண் இணை இயக்குனர்லட்சுமிராஜூக்கு இந்திராகாந்தி பிரியதர்ஷினி தேசியவிருது வழங்கப்பட்டது.
20 / 21
சிறந்த தொழில் முனைவோர் விருது வழுங்கும் விழா டி.ஐ.இ.சசார்பில் சென்னையில் நடைபெற்றது.இதில் முன்னாள் சர்வதேச பில்லியார்ட்ஸ் சாம்பியன் கீத் சேத்தி கலந்து கொண்டு டுவண்டி 19 இயக்குனர் கார்திகேயன் விஜயகுமாருக்கு இளம் சாதனையாளர் விருதினை வழங்கி பாராட்டினார்.
21 / 21
பழநியில் போலீஸ் சார்பில் வைக்கப்பட்டுள்ள வழிகாட்டி போர்டில், பாதை இல்லாத பக்கம் அம்புகுறி தவறாக காட்டப்பட்டுள்ளது. இடம்: காலேஜ் ஸ்டாப்.
Advertisement