தமிழகம்ஆல்பம்:

19-Dec-2012
1 / 20
இயற்கை அன்னையின் மடியில் இணைந்த ஜோடிகள்: அதிகாலை பொழுதினில், கதிரவன் விழித்தெழும் முன்,பறவைகள் இøரதேட, இணைந்து பறக்கும் காட்சி. இடம்: வால்பாறை டவுன் வாழைத்தோட்டம்.
2 / 20
திருவள்ளூர் தீர்த்தீஸ்வµர் கோவிலில் நடைபெற்ற திருவிளக்கு பூஜையில்,சிறுமியர் தாள விளக்குகளை, கையில் ஏந்தியபடி வீதி உலா வந்தனர்.
3 / 20
சுற்றுச்சூழலை பாதுகாக்க பிளாஸ்டிக்கை முற்றிலும் ஒழிக்க வேண்டும் என ஒரு பக்கம் பிரச்சாரம் நடந்து வரும் நிலையில், காலி "பெட்' (பிளாஸ்டிக்) பாட்டில்களை கொண்டு 2400 சசதுர அடியில் கட்டடம் கட்டும் முயற்சி துவங்கியுள்ளன.தமிழகத்தில் முதல் முறையாக சென்னை செங்குன்றம், பம்மதுகுளம் அருகே சரத்கண்டிகையில் கட்டப்படவுள்ள கட்டடத்திற்காக ஆயிரக் கணக்கான காலி பிளாஸ்டிக் பாட்டில்களில் மண் நிரப்பும் பணியில் ஊழியர்கள்.
4 / 20
சென்னை புறநகர் பகுதிகளில், மார்கழியை வரவேற்று, இரவு மற்றும் அதிகாலையில் தெருக்களை சுத்தம் செய்த வண்ணக்கோலம் இடப்படுகின்றன. இடம்:செசங்குன்றம், அங்கம்மன் கோவில் தெரு.
5 / 20
முழு ஆண்டுத்தேர்வில் நூறு சசதவீத தேர்ச்சியை நோக்கி மாநகராட்சிபள்ளிகளில் தற்போது மாணவர்களுக்கு மாலை நேர சிறப்பு வகுப்புகள் நடத்தப்படுகின்றன. இடம் : ஓக்கியம் துரைப்பாக்கம் கண்ணகி நகர்.
6 / 20
ஏரியில் திருட்டு மணல் எடுக்கப்பட்ட பகுதி போல் காணப்படுவது பாலாறு. கண்டுகொள்வோர் யாருமில்லை. அதனால் மணல் காணாமல்போய் களிமண் மட்டுமே தெரிகிறது. இடம்: பாலாறு, பினாயூர்
7 / 20
சென்னை உயர் நீதி மன்ற வளாகத்தில் தமிழ்நாடு மாநில சட்டபணிகள் ஆனையம் மற்றும் சென்ட்ரல் பேங்க் ஆப் இந்தியா, இணைந்து மக்கள் நீதிமன்றத்தை சென்னை உயர் நீதிமன்ற தலைமை நீதிபதி எம். ஒய்.இக்பால் துவக்கி வைத்து உரையாற்றினார்.
8 / 20
மாவட்ட ஆட்சித் தலைவர்களின் சிறப்பு மாநாடு சென்னை தலைமைச் செயலகத்தில் முதல்வர் தலைமையில் நேற்று நடந்தது. மாநாட்டின் இரண்டாவது நாளை, முதலமைச்சர் ஜெயலலிதா கலந்து கொண்டு துவக்கிவைத்தார். உடன் தலைமைச் செயலர் தேபேந்திரநாத் சாரங்கி, உள்துறைச் செயலர் ராஜகோபால் மற்றும் அமைச்சர்கள்.
9 / 20
கோவை கரும்பு இனப்பெருக்க நிறுவனம் கடந்த 1912ம் ஆண்டு துவக்கப்பட்டது. இந்நிறுவனத்தின் நூற்றாண்டு விழா கரும்பு இனப்பெருக்க நிலையத்தில் நேற்று நடந்தது. பயிர் மேம்பாட்டு மையத் தலைவர் பிரேமசந்திரன் வரவேற்றார்.
10 / 20
திண்டுக்கல் சுற்றுவட்டார பகுதிகளில் இந்தாண்டு கரும்பு சாகுபடி பரப்புஅதிகரித்துள்ளதால், ஒரு மாதத்துக்கு முன்பாகவே, திருப்பூருக்கு விற்பனைக்குவந்துள்ளன; ஒரு ஜோடி 30 ரூபாய் முதல் 50 ரூபாய் வøர விற்கப்படுகிறது
11 / 20
பள்ளி செல்லா குழந்தைகளுக்கான வாழ்வியல் திறன் பயிற்சி, எஸ்.எஸ்.ஏ., சார்பில்திருப்பூரில் நேற்று நடந்தது.
12 / 20
கடலூர் மாவட்டத்தில் புதிதாக நியமனம் செய்யப்பட்ட ஆசியர்களுக்கான சிறப்பு பயிற்சி முகாமில் சி.இ.ஓ., ஜோசப் அந்தோணிரõஜ் பேசினார். முகாமில் பங்கேற்ற ஆசிரியர்கள்.
13 / 20
சூலூர் விமான படைத்தளத்தில் நடந்த நிகழ்ச்சியில்,விமான படைப்பிரிவுகளுக்கான சிறப்பு தபால் உறையை, ஜனாதிபதி பிµணாப் முகர்ஜி வெளியிட்டார்.
14 / 20
இளையான்குடியில், ஆடுவதைசெய்யும் கட்டடம் செயல்பாடின்றி கிடப்பதால், தெருக்களில் இறைச்சி கழிவுகளை கொட்டுவதால், சுகாதாµக்கேடு ஏற்படுகிறது
15 / 20
ரõமநாதபுரம் ஓம்சக்தி நகர் வடக்குப்பகுதியில் ரேõட்டின் குறுக்கே மரம் விழுந்து பல நாட்களாகியும்அப்புறப்படுத்தாததால், போக்குவரத்திற்கு இடையூறாக உள்ளது.
16 / 20
விருதுநகர் ரõமமூர்த்தி ரேõட்டில் உள்ள மின்கம்பத்தில், போதையில் ஏறிய பால் வியாபாரி ரங்க ரõஜ். கயிறு கட்டி இழுத்து மீட்பு பணியில் ஈடுபட்ட அப்பகுதியினர்.
17 / 20
கொடைக்கானலில் மழை பொய்த்ததால் வெள்ளிநீர் வீழ்ச்சியில் தண்ணீர் கொட்டுவதுகுறைந்துள்ளது.
18 / 20
பழநி ஐஸ்வர்யா கருத்தரித்தல் மையத்தில் நடந்தடெஸ்ட்டியூப் பேபி சிகிச்சை வாµவிழாவில்டாக்டர் சந்திரலேகா பேசினார்.
19 / 20
கடும் பனிமூட்டம்:சேலத்தில் கடந்த சிலநாட்களாக, கடும் குளிர் காணப்படுவதால், காலை எட்டு மணி வரை நகரை சூழ்ந்திருந்த பனி மூட்டம்.
20 / 20
ரூ.பத்து கோடி மதிப்பில் கட்டப்பட்டு விரைவில் திறப்பு விழா காண உள்ள ஒருங்கிணைந்த வணிக வரி அலுவலக கட்டிடம். இடம்: பிச்சார்ட்ஸ் சாலை, அஸ்தம்பட்டி.