தமிழகம்ஆல்பம்:

23-Dec-2012
1 / 20
திருச்சி, புதுக்கோட்டை மாவட்ட பழநி பாதயாத்திரை பக்தர்கள் செல்லும் அய்யலூர்- எரியோடு ரோடு பராமரிப்பின்றி உள்ளது.இடம்: சவடகவுண்டன்பட்டி.
2 / 20
பழநி அருகே பாப்பம்பட்டி பெருமாள் கோயில் தெருவில் சாக்கடை தேங்கி சுகாதாரகேடு ஏற்படுகிறது.
3 / 20
திண்டுக்கல் அருகே நல்லாம்பட்டியில் நூலகம் செயல்பாடின்றி உள்ளது.
4 / 20
ஏ.வெள்ளளோடு அருகே பாப்பனம்பட்டி பெண்கள்சுகாதார வளாகம் செயல்பாடின்றி பூட்டியே உள்ளது.
5 / 20
காரைக்குடி புதிய பஸ் ஸ்டாண்ட் பிளாட்பார தளம் உடைந்துள்ளதால்,பொதுமக்கள் கால்தவறி விழும் நிலை உள்ளது.
6 / 20
விருதுநகர் செந்திகுமார நாடார் கல்லூரியில் நடந்த, கலைசங்கமம் விழாவில், மாணவியரின் நடனம் இடம்பெற்றது.
7 / 20
விருதுநகர் சிதம்பரநாடார் பெண்கள் ஆங்கில பள்ளியில் நடந்த, கலாசார விழாவில், மாறுவேடம் அணிந்து வந்த மாணவியர்.
8 / 20
காளையார்கோவில்-மரக்காத்தூர் ரோடு மண் ரோடாக இருப்பதால் வாகனங்கள் செல்லும் போது ஏற்படும் புழுதியால் போக்குவரத்துக்கு சிரமமாக உள்ளது.
9 / 20
சிவகங்கை நேருபஜாரில் ஆக்கிரமிப்பு பெருகி வருவதால் வாகனங்கள் செல்வதற்கு இடையூறாக உள்ளது.
10 / 20
போலீசார் கண்டுகொள்ளாததால், சரக்கு வாகனத்தில் அளவுக்கு அதிகமாக வைக்கோல் ஏற்றி செல்வது தொடர்கிறது. இடம்:நரிக்குடி.
11 / 20
விருதுநகர் அருகே சுந்தரலிங்கபுரத்தில், சாக்கடை கால்வாய் இல்லாததால், கழிவுநீர் ரோட்டில் தேங்கியுள்ளது.
12 / 20
பூரண மதுவிலக்கு அமல்படுத்தகோரி, நடைபயணம் @மற்கொள்ளும் ம.தி.மு.க., பொதுச் öŒயலாளர் வை@கா, @நற்று விருதுநகர் வந்தார்.
13 / 20
நரிக்குடி அருகே மிதலைக்குளம் பகுதியில், தாழ்வாக செல்லும் மின் வயரால் விபத்து அபாயம் உள்ளது.
14 / 20
விருதுநகர் அருகே வடமலைகுறிச்சி ரோட்டோர பாலத்தில் தடுப்பு இல்லாததால், விபத்து அபாயம் உள்ளது.
15 / 20
விருதுநகர் நான்குவழிச்சாலை பாவாலி பிரிவு அருகே, கவுசிகா ஆற்றின் நீர்வரத்து பாதையை மறித்து, கொட்டி வைத்துள்ள குப்பை.
16 / 20
ராமநாதபுரம்-தேவிபட்டினம் கிழக்கு கடற்கரை சாலையில் மாடுகள் சாவகாசமாக திரிவதால், வாகன ஓட்டிகளுக்கு சிரமம் ஏற்படுகிறது.
17 / 20
ராமநாதபுரம் அரண்மனை சாலையில் கட்டட இடிபாடுகள் கொட்டப்பட்டுள்ளன. போக்குவரத்திற்கு இடையூறு ஏற்படுத்துபவர்கள் மீது நடவடிக்கை எடுக்க @வண்டும்.
18 / 20
மழையின்றி கருகிய நெல் பயிர்கள், மாடுகளுக்காவது பயன்படட்டுமே என மேய்ச்சலுக்கு விடப்படுகின்றன. இடம்: கடலாடி அருகே புரசங்குளம்.
19 / 20
தேனி ஜி.எச்., ரோட்டில் முறிந்து விழுந்த மரம் ரோடு முழுவதையும் அடைத்துக்கொண்டதால்,வாகன ஓட்டிகள் சுற்றிச்சென்றனர்.
20 / 20
வருஷநாடு அருகே ஒட்டனை காளியம்மன் கோவில் தெருவில், பாலம் இடிந்து சேதமடைந்துள்ளது.
Advertisement