தமிழகம்ஆல்பம்:

24-Dec-2012
1 / 20
வேடசந்தூர் அழகாபுரி அணையில் மணல் திருட்டால் ஏற்பட்ட பள்ளங்கள்.
2 / 20
தாடிக்கொம்புலிருந்து பள்ளப்பட்டி செல்லும் ரோடு சேதமடைந்து உள்ளது.
3 / 20
திண்டுக்கல் நாகல்நகர் ரவுண்டானா அருகே, குடிநீர் குழாய் சரிசெய்ய தோண்டப்பட்ட பள்ளம் மூடப்படாமல் உள்ளது.
4 / 20
மணலூர் ஊராட்சி கொங்கபட்டியில் @ராட்@டாரம் குப்பையில் தீ வைப்பதால், பாதிப்பு ஏற்படுகிறது.
5 / 20
திண்டுக்கல் மேட்டுபட்டி சந்தை ரோட்டில் உள்ள சாக்கடை வாய்க்காலில் பிளாஸ்டிக் குப்பை தேங்கி உள்ளது.
6 / 20
காரைக்குடி அரசு மருத்துவமனை பொது வார்டில், போதிய படுக்கை வசதி இன்றி, நோயாளிகள் தரையில் படுத்துள்ளனர்.
7 / 20
கிறிஸ்துமஸ் பண்டிகையொட்டி, விருதுநகரில் ஒரு வீட்டில் அலங்கரித்து வைக்கப்பட்டுள்ள குடில்.
8 / 20
நரிக்குடி திருப்புவனம் ரோட்டில் தாழ்வாகச் செல்லும் மின்வயரால் விபத்து அபாயம் உள்ளது. இடம்: நாலூர் விலக்கு வில்வநாதர் கோவில் அருகே.
9 / 20
காரைக்குடி அரசு மருத்துவமனை டெங்கு வார்டு முன், கொசு உற்பத்தியாகும்,இளநீர் மட்டைகள் குவிந்துகிடக்கின்றன.
10 / 20
சிவகங்கை முத்துச்சமி நகரில் கழிவுநீர் @தங்கிசுகாதாரக்@கடு ஏற்படுகிறது.
11 / 20
சிவகங்கை, திருவள்ளுவர் தெருவில் கால்வாய் மூடப்படாமல் விபத்து அபாயம் உள்ளது.
12 / 20
அருப்புக்கோட்டை நகராட்சி 1 வது வார்டில் உள்ள ஓடையில் கழிவு நீர் தேங்கியதால், அருகேயுள்ள வீடுகளில் உள்ள அடிகுழாய்களில் தண்ணீர் துர்நாற்றம் வீ”கிறது.
13 / 20
சிவகாசி அருகே வெற்றிலையூரணி துணை சுகாதார நிலையம் பலமாதங்களாக செயல்படாமல் உள்ளது.
14 / 20
கூமாப்பட்டி, வத்திராயிருப்பு மெயின் ரோட்டில் மூலக்கரை கண்மாயில் தடுப்புச் ”வர் இல்லாததால், தார்ரோடு அரிப்பு ஏற்பட்டு போக்குவரத்திற்கு பாதுகாப்பற்ற நிலையில் உள்ளது.
15 / 20
விருதுநகர் - சாத்தூர் நான்குவழிச்சாலையில் எம்.ஜி.ஆர்.,ரோடு பிரிவில், இரண்டு அரசு பஸ்கள் மோதி விபத்திற்குள்ளானது. இதில் 12@பர் காயமடைந்தனர்
16 / 20
ராமநாதபுரம் சக்கரக்கோட்டை, தர்மமுனீஸ்வரர் கோயில் அருகில் உள்ள, ஐந்து கண் பாலத்தின் தடுப்புச்சுவர் இடிந்துள்ளதால் விபத்து அபாயம் ஏற்பட்டுள்ளது. சுவரை சீரமைக்க நெடுஞ்சாலை துறையினர் நடவடிக்கை எடுப்பார்களா.
17 / 20
மண்டலமாணிக்கத்தில் கடும் குடிநீர் தட்டுப்பாடு நிலவுவதால் ஆங்காங்கே குடிநீர் குழாய்கள் அருகில் காலி குடத்துடன் பெண்கள் கடும் வெயிலில் காத்திருக்கின்றனர்.
18 / 20
வருஷநாடு கடமலைக்குண்டில் கட்டி முடிக்கப்பட்டு பல மாதங்களாக பூட்டப்பட்ட நிலையில் உள்ள நூலகம்.
19 / 20
பழநி தேக்கந்தோட்டம் பகுதி, கொடைக்கானல் மலையடிவாரத்தில் பாக்குமரங்கள் காய்த்து குலுங்குகின்றன.
20 / 20
வடமதுரை மீனாட்சிசுந்தரேசுவர் கோயிலில் உள்ள ஐயப்பன் மணி மண்டபத்தில், மண்டல பூஜையை முன்னிட்டு, 108 சங்கு, 108 கலச அபிஷேகம் நடந்தது.
Advertisement