தமிழகம்ஆல்பம்:

26-Dec-2012
1 / 18
குடிமைப்பயிற்சி முகாம், ஜெயந்தி கல்வியியல் கல்லூரி சார்பில், திருப்பூர்கணபதிபாளையத்தில் நடந்து வருகிறது. அதில், கோலப்போட்டி நேற்று நடந்தது;"தினமலர்' நாளிதழில் வெளிவந்த, கிறிஸ்துமஸ் சாண்டா கோலத்தை தத்ரூபமாகபோட்ட பெண்.
2 / 18
துறைமுக நிர்வாகம் நடத்திய பேச்சுவார்த்தை தோல்வியில் முடிந்ததால், "டிரெய்லர்' லாரி உரிமையாளர்களின் போராட்டம் நேற்று இரண்டாவது நாளாகவும் நீடித்தது. போராட்டம் தொடர்வதால், துறைமுகத்தில் சரக்கு பெட்டகங்கள் (கன்டெய்னர்) முடங்கி, வர்த்தகம் பாதிக்கப்படும் அபாயம் ஏற்பட்டுள்ளது.
3 / 18
மாமண்டூர் பெரிய ஏரியை ஆக்கிரமித்து பயிர் செய்து வரும் விவசாயிகள் பலர்,பதிவு செய்யப்படாத நில ஆவணங்களை காட்டி, நிலங்களை விற்று வருகின்றனர். இதே நிலை நீடித்தால், இந்த ஏரியும் மாயமாகும் அபாயம் ஏற்பட்டுள்ளது
4 / 18
திருத்தணி முருகன் கோவிலில், மார்கழி கிருத்திகை மற்றும் அரசு விடுமுறையை ஒட்டி, மலைக்கோவிலில் குவிந்த பக்தர்கள்.
5 / 18
பொங்கல் பண்டிகைக்கு இன்னும் இரண்டு வாரங்களே உள்ள நிலையில் சிதம்பரம் பகுதியிலிருந்து சென்னை கோயம்பேடு சந்தைக்கு கரும்பு வரத்து துவங்கியுள்ளது.இருபது கரும்புகள் கொண்ட ஒரு கட்டு கரும்பு தற்போது 200 ரூபாய்க்கு விற்கப்படுகின்றன.விளைச்சல் அதிகமாக உள்ளதால் பண்டிகை நெருக்கத்தில் விலை குறையும் என வியாபாரிகள் தெரிவித்தனர்.
6 / 18
பெசன்ட்நகர் அன்னை வேளாங்கன்னி ஆலயத்தில் கிருஸ்துமஸ் திருவிழா கொண்டாடப்பட்டது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சிறப்பு பிரார்த்தனை செய்தனர்.
7 / 18
தண்டையார்பேட்டை சரகத்தில் உள்ள அரசு மற்றும் தனியார் பள்ளியில் படிக்கட்டு பயணத்தால் ஏற்படும் விபரீதங்கள் குறித்து போக்குவரத்து போலீசார் விழிப்புணர்வு பிரசாரம் மேற்கொண்டனர்.
8 / 18
பொங்கல் பண்டிகையை முன்னிட்டு நாமக்கல் அடுத்த அலங்காநத்தத்தில் நடக்கவுள்ள ஜல்லிகட்டுக்காக அப்பகுதி இளைஞர்கள் தங்களது காளை மாடுகளுக்கு பயிற்சி கொடுக்கும் பணியில் ஈடுபட்டுள்ளனர்.
9 / 18
கிறிஸ்துமஸ் திருவிழாவை முன்னிட்டு ப.வேலூர் பகுதி குழந்தைகள் கிறிஸ்துமஸ் தாத்தா வேடம் அணிந்து கேக் வெட்டி கொண்டாடினர்.
10 / 18
கிறிஸ்துமஸ் பண்டிகையை முன்னிட்டு, புதுக்கோட்டை தூய இருதய ஆண்டவர் பேராலயத்தில், ஏசுபிரான் பிறந்த குடில் போல் அமைக்கப்பட்டிருந்தது.
11 / 18
ஸ்ரீரங்கம் ரங்கநாதர் கோவில் வைகுண்ட ஏகாதசி ராப்பத்து இரண்டாம் நாளான நேற்று, கவுரிமான் தொப்பாரக்கொண்டை அலங்காரத்தில், நம்பெருமாள் ஆயிரங்கால் மண்டபத்தில் ஆஸ்தானமிருந்து பக்தர்களுக்கு ஸேவை சாதித்தார்.
12 / 18
ஈரோடு சப்தஸ்வரங்கள் இசை பயிற்சி பள்ளி, லிட்டில் ஸ்டார் கிட்ஸ் பள்ளி இணைந்து நடத்திய கிறிஸ்துமஸ் நிகழ்ச்சியில் கிறிஸ்துமஸ் தாத்தா, தேவதைகள் போல வேடமணிந்த மாணவ, மாணவிகள்.
13 / 18
மேட்டூர் அடுத்த செங்காட்டூர் கிராமத்தில் விபத்தில், தரை மட்டம் ஆன வாணவெடி ஆலைகட்டட இடிபாடுகளில், தொழிலாளர் கொண்டு வந்த மதிய உணவு சிதறி கிடக்கிறது.
14 / 18
மீண்டும் பழசு: தற்போது தொடரும் மின்தடையால் பம்ப் செட் வைத்து தண்ணீரை பாய்ச்ச முடியாத நிலை உள்ளது.இருக்கும் தண்ணீரை வைத்தாவது பயிர்களை காப்பாற்றுவோம் என இரவை மூலம் தண்ணீர் பாய்ச்சும் நாலுகோட்டை விவசாயிகள்.
15 / 18
ராமநாதபுரம் ஜெபமாலை அன்னை ஆலயத்தில் நடந்த, கிறிஸ்துமஸ் சிறப்பு பிரார்த்னையில், ஏராளமானோர் பங்கேற்றனர். உள்படம்: சிறப்பு திருப்பலி நடத்திய பங்குத்தந்தை ராஜமாணிக்கம்.
16 / 18
அன்னூர் மன்னீஸ்வரர் கோவில் தேரோட்ட நிகழ்ச்சி நேற்று நடந்தது. இதில், திரளான பக்தர்கள் பங்கேற்றனர். உள்படம்: அருந்தவச்செல்வி உடனமர் மன்னீஸ்வரர் தேருக்கு எழுந்தருளினார்.
17 / 18
கோவை என்.சி.சி., குரூப் 4 தமிழ்நாடு பட்டாலியன் பயிற்சி முகாம், கோவை, ராமநாதபுரம் ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில் நடக்கிறது. சுகாதார விழிப்புணர்வு குறித்த பயிற்சி வகுப்பு நேற்று நடந்தது. இதில் பங்கேற்ற மாணவர்கள்.
18 / 18
எமரால்டு அணைக்கு தண்ணீர் கொண்டு வரும், முக்கிய நீர்பிடிப்பு பகுதியான போர்த்திஹாடா வறண்டு விடும் சூழ்நிலைக்கு மாறி வருகிறது.
Advertisement