தமிழகம்ஆல்பம்:

27-Dec-2012
1 / 16
வெப்பத்தால் வாடிய வானம், மாலை நேரத்தில் ஓய்வெடுக்க சென்ற சூரியனுக்கு விடை கொடுத்து அனுப்பிய இடம் தேனி மேற்கு தொடர்ச்சிமலை.
2 / 16
காரியாபட்டி மாரியம்மன் கோயில் அருகில் உள்ள கட்டண கழிப்பறையில், செப்டிக் டேங்க் வசதியின்றி, அதன் கழிவுகள், திறந்த வெளியில் தேங்குவதால், பக்தர்கள் பாதிக்கின்றனர்
3 / 16
விருதுநகர் அருப்புக்கோட்டை ரோட்டை, கதிரடிக்கும் களமாக மாற்றுவதால், விபத்துக்களுக்கு துணைபோவது தொடர்கிறது. இடம்: பாலவநத்தம்.
4 / 16
விருதுநகர் படேல் ரோட்டில் கழிவுநீர் தேங்கி சேறும், சகதியுமாக காணப்படுகிறது.
5 / 16
மூணாறு அருகே கன்னிமலை எஸ்டேட்டில், கன்னியம்மன் கோயில் திருவிழாவையொட்டி, பக்தர்கள் பறவைக் காவடி மற்றும் முளைப்பாரி எடுத்து நேர்த்தி கடன் செலுத்தினர்.
6 / 16
தேவாரம் பகுதியில் மரவள்ளிக் கிழங்கு சிப்ஸ் தயாரிக்கும் பணியில் ஈடுபட்டுள்ள பெண்.
7 / 16
ராமேஸ்வரத்தில், எப்.சி., சான்று இல்லாமல் சவாரி ஏற்றி சென்றதற்காக, போலீஸாரால் பறிமுதல் செய்யப்பட்ட ஆட்டோக்கள்.
8 / 16
பழநி கிரிவீதி ரோப்கார் ஸ்டேஷன் அருகே தள்ளுவண்டி,வாகனங்கள் நிறுத்துவதால் போக்குவரத்திற்கு இடையூறு ஏற்படுகிறது.
9 / 16
நிலக்கோட்டை காமாட்சிபுரத்தில் குடி நீர் தட்டுப்பாடு நிலவுதால் சிறுமிகள் கிணற்று சுவற்றின் மேல் நின்று ஆபத்தான முறையில் தண்ணீர் எடுக்கின்றனர்.
10 / 16
அரசு போக்குவரத்து கழகத்தில் புதிதாக அறிமுகப்படுத்தப்பட்டுள்ள "தள்ளு வண்டி' மாடல் பஸ். இதற்கு டீசல் தேவையில்லை. தள்ளிகிட்டே ஊர் போய் சேர்ந்திடலாம் போல... இடம்: தேனி குன்னுர் ரோடு.
11 / 16
பச்சைப்பசேல் நெல்வெளி, காய்ந்த புல்வெளியாக மாறியது ஏனோ. இடம் :சிவகங்கை கொரட்டி)
12 / 16
விருதுநகர் வி.வி.எஸ். திருமண மண்டபத்தில் நடந்த, மண்டல பூஜையையொட்டி, சிறப்பு அலங்காரத்தில் அருள்பாலித்த ஐயப்ப சுவாமி
13 / 16
விருதுநகர் கே.வி.எஸ். பள்ளி மைதானத்தில் நடந்த, தேசிய மாணவர் படை கூட்டு பயிற்சி முகாமில் அணிவகுத்து சென்ற மாணவர்கள்.
14 / 16
கோயிலில் செயல்படும் சிவகங்கை கண்ணங்குடி ஒன்றிய துடுப்பூர் துவக்கப்பள்ளி.
15 / 16
சிவகங்கை கல்லூரணியில் மூன்று கிராம மக்கள் பங்கேற்ற திருவிளக்கு பூஜை நடந்தது.
16 / 16
ராஜபாளையம் மலையடிபட்டி வடக்கு தெரு குடியிருப்பு பகுதியில் செல்லும் கழிவுநீர் ஓடை, கொசு உற்பத்திக்கு துணைபோகிறது.
Advertisement