தமிழகம்ஆல்பம்:

28-Dec-2012
1 / 20
முதுகுளத்தூர் அருகே பரளையாற்றின் கரைகள் ஆக்கிரமித்து விவசாயம் செய்வதற்காக மண்ணைக்கொட்டி சமன்படுத்தி உள்ளனர்.
2 / 20
திண்டுக்கல் மேட்டுபட்டி சந்தை ரோட்டில் உள்ள சாக்கடை வாய்க்காலில், பிளாஸ்டிக் குப்பைகள் தேங்கி உள்ளது.
3 / 20
சிவகங்கை முத்துசாமிநகர் குடியிருப்பு பகுதியிலிருந்து வரும் கழிவு நீர் செல்ல வழியின்றி அவ்வையார் தெருவில் தேங்கியுள்ளது.
4 / 20
ராஜபாளையம் ரயில்வே ஸ்டேஷனில், நடைபாதை மேம்பால பணி முடியாததால், பயணிகள் டிராக்கில் இறங்கி செல்வது தொடர்கிறது.
5 / 20
விருதுநகர் அரசு அருங்காட்சியகத்தில், மணல் ஓவியம் வரைவது குறித்து பயிற்சி அளிக்கப்பட்டது.
6 / 20
பழநி-உடுமலைரோடு தாளையம் ரயில்வே கேட் அருகே, புழுதி கிளம்புவதால் வாகன ஓட்டிகளுக்கு சிரமம் ஏற்படுகிறது.
7 / 20
தேனி அரைபடித்தேவன்பட்டியில் காலிபிளவர் பயிரிடப்பட்டுள்ளது. (உள்படம்) பூச்சிகள் தாக்குதலுக்கு உள்ளான பூ.
8 / 20
திண்டுக்கல் நந்தவனபட்டி வள்ளலார் காலனியில், கழிவுநீர் தேங்கி சுகாதாரகேடு ஏற்படுகிறது
9 / 20
சிவகங்கை பழைய அரசு ஆஸ்பத்திரி ரோட்டில் சாக்கடை கால்வாய் கட்டுவதற்காக ரோட்டை மறித்து மண் கொட்டப்பட்டுள்ளது. அந்த வழியாக செல்ல முடியாமல் மக்கள் அவதிப்படுகின்றனர்.
10 / 20
மேய்ச்சல் நிலமானது:சிவகங்கை அருகேயுள்ள சாத்தனியில் தண்ணீரின்றி நெற்பயிர்கள் கருகியதால் ஆடுகளை விவசாயிகள் மேய விட்டனர்.
11 / 20
மழையில்லாததால் நடப்படாமல் வருஷநாடு வன அலுவலகத்தில் வளர்ந்து வரும் மூங்கில் கன்றுகள்.
12 / 20
வடமதுரை வேல்வார்கோட்டை அரசு உயர்நிலைப்பள்ளி விளையாட்டு மைதானம் பயன்பாடின்றி புதர்மண்டி கிடக்கிறது.
13 / 20
திண்டுக்கல் ராஜாக்காபட்டியில் குவிந்துகிடக்கும் குப்பையால் சுகாதாரகேடு ஏற்படுகிறது.
14 / 20
பழநி கிரிவீதி ஏ.டி.எம். பாதையை மறைத்து, கடைகள் வைக்கப்பட்டுள்ளதால் பக்தர்களுக்கு சிரமம் ஏற்படுகிறது.
15 / 20
டி.நாகனி கிராமத்தில் தண்ணீர் வராததால், காலிகுடங்களுடன் பெண்கள்,திருவாடானை தாலுகா அலுவலகத்தை முற்றுகையிட்டனர்.
16 / 20
சின்னமனுர் பகுதியில் சுற்றித்திரியும் தெருநாய்களால் பொதுமக்கள் அவதிப்படுகின்றனர்.
17 / 20
தேனி காந்திநகர் 2வது தெருவில், சாக்கடைநீர் செல்ல வழியில்லாமல் ரோட்டில் செல்வதால் நடப்பதற்கு சிரமப்பட்டு சென்ற சிறுவன்.
18 / 20
கண்டமனூர் மெயின் ரோட்டில் சாக்கடையில் குப்பை தேங்கி கழிவுநீர் செல்ல வழியில்லாமல் கொசு உற்பத்தி மையமாக உள்ளது.
19 / 20
பெரியகுளம் வடகரையில், வராகநதி தடுப்புச் சுவர் சேதமடைந்ததால், விபத்து ஏற்படும் நிலை உள்ளது.
20 / 20
டெங்கு அபாயத்தால் பல்வேறு பகுதிகளிலிருந்து எடுத்து வரப்பட்ட டயர்களை இங்கு குவித்து வைத்தால் மட்டும் டெங்கு வராதா. இடம்:சிவகங்கை மதுரை முக்கு குடிநீர் தொட்டி.
Advertisement