தமிழகம்ஆல்பம்:

30-Dec-2012
1 / 20
கோவை கொடீசியாவில் தினமலர் நாளிதழ் நடத்திய கோலப்போட்டியில் வெற்றி பெற்றவர்களுக்கு சத்யா குழும மண்டலமேலாளர் முருகேசன்,விஜய் பார்க் இன் நிர்வாக இயக்குனர் கோவை ரமேஷ் கோடீசியா தொழிற் காட்சி வளாகத் தலைவர் கணபதி லலித்கலாச் சேத்ரா இயக்குனர் ரவிராஜ் முதல்வர் நிர்மலா ஆகியோர் பரிசுகளை வழங்கினர்.
2 / 20
சென்னை மெட்ரோ ரயில் பணியில், கோயம்பேடு சந்தை அருகே அமையவுள்ள, பணிமனை முதல் வடபழனி சந்திப்பு வரையிலான, மேம்பாலப் பாதையில் மூன்று ரயில் நிலையங்களை இணைக்கும் விதமாக, தண்டவாளம் அமைக்கும் பணி முழுமையாக முடிக்கப்பட்டுள்ளது. மேலும், மின் கேபிள்கள் அமைக்க, பக்கவாட்டு சுவர்களில் கம்பங்கள்அமைக்கும் பணியும் முடிந்துள்ளது.
3 / 20
பல்லாவரம் வேல்ஸ் பல்கலைகழகம் சார்பில் நடந்த சிறப்பு பட்டமளிப்பு விழாவில் பல்கலைகழகம் சார்பில் வழங்கப்பட்ட டாக்டர் பட்டத்தை முன்னாள் இந்திய தேர்தல் கமிஷனர் கிருஷ்ணமூர்த்தி, இந்திய பாதுகாப்பு அமைச்சகத்தின் விஞ்ஞானி சிவதானுபிள்ளை , முன்னாள் இந்திய கிரிக்கெட் அணியின் கேப்டன் சவ்ரங் கங்குலிக்கு வழங்கினார் . உடன் பல்கலைகழகத்தின் வேந்தர் ஐசரிகணேஷ்.
4 / 20
நேற்று காலை பெய்தமழையால் குரோம்பேட்டை ஜி.எஸ்.டி.,சாலையில் தேங்கிய மழைநீரில் நீந்த வரும் வாகனங்கள்.
5 / 20
குறைந்த காற்றழுத்த தாழ்வுநிலை உருவாகி உள்ளதால் சென்னையில் நேற்று மழை பெய்தது. இடம் சென்னை சென்ட்ரல்.
6 / 20
திருவாலங்காடு வடாரண்யேஸ்வரர் கோவிலில் நடந்த ஆருத்ரா தரிசனம் விழாவில், நடராஜருக்கு பஞ்சமிர்தம் அபிஷேகம் நடத்தி தீபாராதனை நடந்தது.
7 / 20
புத்தாண்டு விடுமுறையை ஒட்டி, சுற்றுலா பயணிகள் அதிகளவில் ஊட்டியில் முகாமிட்டுள்ளனர். தாவரவியல் பூங்கா, இத்தாலியன் பார்க்கில்உள்ள நூற்றாண்டு பழமையான பீரங்கி முன், ஆர்வத்துடன் படம் எடுத்துக்கொண்ட சுற்றுலாப்பயணிகள்.
8 / 20
இறந்த டில்லி மாணவிக்கு, குன்னூர் வியாபாரிகள் சங்கம் சார்பில், மெழுகுவர்த்தி ஏந்தி கண்ணீர்அஞ்சலி செலுத்தப்பட்டது.
9 / 20
ஊட்டி எச்.ஏ.டி.பி., மைதானத்தில், நீலகிரி மாவட்ட கால்பந்து சங்கம் சார்பில், நடந்த"பி' டிவிஷன் போட்டியில் லெவன் ஸ்டார் அணி, ஓரியண்டல் அணியை வென்றது.
10 / 20
கோவை, ராம்நகர், ஐயப்ப பூஜா சங்கத்தில் நடந்த 62ம்ஆண்டு விழாவில், சிறப்பு அலங்காரத்தில் ஐயப்பன் அருள்பாலித்தார்.
11 / 20
உலக எய்ட்ஸ் தினத்தை முன்னிட்டு கோவை வேளாண் பல்கலை., மாணவிகள் எய்ட்ஸ் விழிப்புணர்வு பேரணி நடத்தினர்.
12 / 20
வளைகரங்களின் மனித சங்கிலி; பெண்களுக்கு எதிரான கொடுமைகளை தகர்க்கட்டும்!டில்லியில் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்ட மருத்துவ கல்லூரி மாணவி இறந்தார். மாணவிக்கு அஞ்சலி செலுத்தும் வகையிலும், இதேபோல் பெண்களுக்கு எதிரான வன்கொடுமைகள் புரிவோர் மீது கடும் நடவடிக்கை எடுக்க வலியுறுத்தியும், திருப்பூர்மாநகராட்சி அலுவலகம் முன், நேற்று, மனித சங்கிலி போராட்டத்தில் ஈடுபட்ட "சேவ்' அமைப்பை சேர்ந்த பெண்கள்.
13 / 20
கடலூரில் நடந்த பன்னாட்டு லயன்ஸ் சங்க நிர்வாகிகள் சந்திப்பு விழாவில் கவிஞர்விஜய்க்கு மண்டலத் தலைவர் அழகப்பா மணி நினைவுப் பரிசு வழங்கினார்.
14 / 20
கள்ளக்குறிச்சியில் நடந்துவரும் மாநில கால்பந்து போட்டியில் நேற்று பெங்களூரு-விழுப்புரம் அணிகள் மோதின.
15 / 20
சேலம் ஏற்காட்டில் முதன்முறையாக நேற்று துவங்கிய இரண்டாம் பருவ குளிர்கால மலர் கண்காட்சியை கடும் பனி மூட்டத்துக்கு இடையே பார்வையிட்ட சுற்றுலாப் பயணிகள்.
16 / 20
இலங்கை கடற்படையால் பிடிக்கப்பட்டு நேற்று முன்தினம் விடுவிக்கப்பட்டநாகப்பட்டினம், காரைக்கால் மீனவர்கள், மண்டபம் வந்து சேர்ந்தனர்.
17 / 20
புத்தாண்டை வரவேற்ற பள்ளி மாணவர்கள்: சேலம், கருப்பூர் எஸ்.எஸ்.ஆர்.எம்.,பள்ளி மாணவ, மாணவியர் 500 பேர் இணைந்து 2013 ஆம் ஆண்டை வரவேற்றும் விதமாக பள்ளி வளாகத்தில் அணிவகுத்து பார்வையாளர்களை கவர்ந்தனர்.
18 / 20
ஈரோட்டில் நடந்த, சி.பி.எஸ்.சி., பள்ளிகளுக்கு இடையேயான தடகளப் போட்டிகளில் வென்ற, பெருந்துறை சாகர் இன்டர்நேஷனல் பள்ளி மாணவர்களுடன் பள்ளி தாளாளர் செசளந்திரராஜன், முதல்வர் அரசுபெரியசசாமி.
19 / 20
திருச்செங்கோடு சுகுந்தகுந்தலாம்பிகை உடன்மர் கைலாசநாதர் கோவிலில் ஆருத்ரா தரிசன விழாவை முன்னிட்டு 1008 சங்காபிஷேகம் நடந்தது.
20 / 20
இந்தியா பாகிஸ்தான் அணிகள் மோதும் ஒருநாள் தொடர் இன்று சென்னையில்துவங்குகிறது. இதற்கான கோப்பை அறிமுக விழாவில், பங்கேற்ற இந்தியா,பாகிஸ்தான் அணி கேப்டன்கள் தோனி, மிஸ்பா உல் ஹக்.
Advertisement