தமிழகம்ஆல்பம்:

09-Jan-2013
1 / 20
பரமக்குடி வைகை ஆற்றில் திருடப்படும் மணலால், காவிரி கூட்டு குடிநீர்குழாய் உடைப்பு ஏற்பட்டு குடிநீர் வீணாகியது.
2 / 20
கடலூரில், தமிழ்நாடு நுகர்வோர் வாணிபக் கழக குடோனில் பொங்கல் பண்டிகையையொட்டி இலவசமாக வழங்கப்படும் சர்க்கரையை பேக்கிங் செய்யும் பணி நடந்தது.
3 / 20
கடலூர் ஒன்றியத்தைச் சேர்ந்த குமளங்குளம் ஊராட்சியில் கடந்த சில மாதங்களுக்குமுன் போட்ட குடிநீர் போர்வெல், மோட்டார் பொருத்தப்படாததால் முட்களால்மூடப்பட்டுள்ளது.
4 / 20
திருவெண்ணெய்நல்லூர் அடுத்த பையூர் அரசு குவாரியில் மணல் வழங்காததை கண்டித்து திருவண்ணாமலை லாரி உரிமையாளர்கள் நுழைவு வாயிலில் லாரிகளை வரிசையாக நிறுத்தி முற்றுகையில் ஈடுபட்டனர். இடம்: அண்டராயநல்லூர்.
5 / 20
கோமுகி அணை தண்ணீர் இன்றி வறண்டதால் அணையின் உட்பகுதியில்விவசாயிகள் வெள்ளரி விதைகளை விதைத்தனர்.
6 / 20
விக்கிரவாண்டி டோல்கேட் பகுதியில் லோடு வாகனங்கள் வரிசையாகநிறுத்தப்படுவதால் விபத்துகள் ஏற்படும் அபாய நிலை உள்ளது.
7 / 20
பந்தலூர் அருகே சேரங்கோடு சின்கோனா பகுதியில் உள்ள தடுப்பணையில் தண்ணீரின் அளவு வெகுவாக குறைந்துள்ளது.
8 / 20
கோவை நகரில் விதிமுறைகளை மீறி, கட்டடங்களின் மீது பொருத்தப்பட்டிருக்கும் விளம்பரப் பலகைகள். படம்: அரசு மருத்துவமனை பஸ் ஸ்டாப்.
9 / 20
பந்தலூர் அருகே பிதர்காடு வனச்சரகத்திற்கு உட்பட்ட சேலக்குன்னா வனப்பகுதியில் எதிர் தீபோட்டு தீ தடுப்புக்கோடுகள் அமைக்கும் பணி நடந்து வருகிறது.
10 / 20
ஊட்டி தாவரவியல் பூங்காவில் உள்ள குளத்தில் தூர் வாரும் பணி நடந்து வருகிறது.
11 / 20
இது எங்க பூமியாக்கும்...பகல் நேரத்தில் வால்பாறை பெரியகல்லார் எஸ்டேட் காவடிப்பாலம் பகுதியில் முகாமிட்ட காட்டு யானைகள் கூட்டம்.
12 / 20
பொள்ளாச்சி மார்க்கெட் பகுதியில், சரக்கு லாரிகளின் போக்குவரத்து அதிகரிப்பதால்,அடிக்கடி போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது.
13 / 20
திருப்பூர், தாராபுரம் ரோட்டில் இருந்து கே.பி.ஜி., நகர் செல்லும் தார்ரோடுபெயர்ந்திருக்கிறது; போக்குவரத்துக்கு சிரமமாக உள்ளது.
14 / 20
ஈரோடு கருங்கல்பாளையம் குழந்தைகள் மையத்தில், தளம் அமைக்கும் பணி நடப்பதால் குப்பைகளுக்கு மத்தியில் குழந்தைகள் அமர வைத்துள்ளனர்.
15 / 20
ஈரோடு ஈ.வி.என்., ரோடு எல்.கே.எம்., மருத்துவமனை எதிரே குடிநீர் மெயின் குழாய் உடைந்து சாலையில் வள்ளம் போல் ஓடும் குடிநீர்.
16 / 20
காலைக்கதிர்' செய்தி எதிரொலி... ப.வேலூர் அருகே ஆனங்கூர் ராஜ வாய்க்காலில் ஆகாயத் தாமரை தேங்கியுள்ளதால் தண்ணீர் எளிதில் ஆவியாகும் சூழல் நிலவி வருகிறது என கடந்த 3ம் தேதி "காலைக்கதிர்' நாளிதழில் படத்துடன் செசய்தி வெளியானது. அதன் எதிரொலியாக சம்மந்தப்பட்ட வாய்க்காலில் ஆகாயத் தாமரை அகற்றப்பட்டது.
17 / 20
சேலம் பனமரத்துப்பட்டி பைபாஸ் மேம்பாலத்தின் தடுப்பு சுவர் உடைந்த நிலையில் உள்ளதால், விபத்து ஏற்படும் அபாயம் உள்ளது.சசம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
18 / 20
தேனிமசூதி தெருவில், கட்டி முடிக்கப்பட்டுள்ள மின்சார சுடுகாடு செயல்படத்துவங்குவது எப்போது.
19 / 20
வில்லாபுரம்ஹவுசிங் போர்டு காலனியில், பராமரிப்பு இல்லாத செம்மண்ரோடு. அடுத்தபடம்: சமூகவிரோதிகளின்கூடாரமாக மாறிய காலிகுடியிருப்புகள்.
20 / 20
நகர் போக்குவரத்து போலீஸ் "பேஸ்புக்' முகவரியை, கமிஷனர் சஞ்சய் மாத்தூர் துவக்கிவைத்தார். அருகில் கலெக்டர் அன்சுல் மிஸ்ரா.
Advertisement