தமிழகம்ஆல்பம்:

10-Jan-2013
1 / 20
லட்சிய ஓட்டம்: ஊட்டி எச்.ஏ.டி.பி.,மைதானத்தில் நடந்துவரும் ராணுவ ஆட்சேர்ப்பு முகாமில், உடற்தகுதி தேர்வு ஓட்டத்தில் பங்கேற்ற இளைஞர்கள்.
2 / 20
பிளாஸ்டிக் பைகளை ஒழிக்க வலியுறுத்தி, பொதுமக்களிடையே விழிப்புணர்வு சேலம் மவுன்ட் மேரி பள்ளி மாணவ, மாணவியர், கலெக்டர் பங்களாவிலிருந்து பேரணி சென்றனர்.
3 / 20
பொங்கலை முன்னிட்டு சென்னையிலிருந்து தென் மாவட்டங்களுக்கு இயக்கப்படும் சிறப்பு பேருந்துகளுக்கான முன் பதிவு துவங்கியதையடுத்து, கோயம்பேடு புறநகர் பேருந்து நிலையத்தில் முன் பதிவு செய்ய குவிந்த மக்கள்.
4 / 20
சென்னை நுங்கம்பாக்கம் மாநகராட்சி மண்டல அலுவலகம் எதிரில் உள்ள, குழந்தைகள் விளையாட்டு திடல் பராமறிப்பு இன்றியும், சுற்று சுவர்கள் இடிந்து சமூக விரோதிகளின் புகலிடமாக மாறியுள்ளது.
5 / 20
சென்னை - பெங்களூரு தேசிய நெடுஞ்சாலையில், ஸ்ரீபெரும்புதூர் ராஜிவ்காந்தி நினைவு மண்டபம் எதிரில், மூடப்படாத நிலையில், விபத்து ஏற்படுத்தும் மழைநீர் கால்வாய்.
6 / 20
மேம்பாலம் நுழைவுப் பகுதியில் ஓலை கீற்றால் அமைக்கப்பட்டுள்ள தடுப்புகள்.
7 / 20
மயிலாப்பூரில் உள்ள ரேஷன் கடையில், பொருள்கள் போடததால், அப்பகுதி மக்கள் கடும் கோபத்திற்கு ஆளாகினர். அப்போது போலீசார் வந்து பொதுமக்களிடம் ஆறுதல் கூறி, கடைக்குள் சென்று பார்த்தால், ஊழியர்கள் யாருமின்றி கடை விரிச்சொடி கிடந்தது. இதனால் அப்பகுதி மிகவும் பரபரப்பாக காணப்பட்டது.
8 / 20
வியாசர்பாடி மூர்த்திங்கர் சாலை சந்திப்பில் உள்ள ஏரிக்கரை பகுதி. இங்கு தான் 400 சதுர அடி வீதம், 960 குடியிருப்புகள் அமையவுள்ளது.
9 / 20
மேற்கு தாம்பரம் ரங்கநாதபுரம் 7 வது தெருவில் மாடி வீட்டில் உள்ள பால்கணி அருகே அபாயகரமாக செல்லும் மின்வயர்.
10 / 20
திருத்தணி அடுத்த அகூர் காலனி கிராமத்தில் இருந்து சுடுகாட்டிற்கு செசல்லும் சாலை தார்ச்சாலையாக மாற்றுவதற்கு, ஜல்லிக் கற்கள் கொட்டி எட்டு மாதங்கள் ஆகியும் பணி துவக்கப்படாமல் உள்ளது.
11 / 20
இப்படி, போக்குவரத்து விதிமுறைகளை மீறினால், விபத்தை தவிர்ப்பது எப்படி?இடம்: கோவை, அவிநாசி ரோடு மேம்பாலம்.
12 / 20
ஊட்டி நஞ்சநாடு பகுதியில் உள்ள நீர் பிரி முகடு பகுதிகளில், பிற மாநில பயிற்சி வன அதிகாரிகள் களப் பயிற்சியில் ஈடுபட்டனர்.
13 / 20
கோவை, கரும்புக்கடை அருகே, தரமற்ற அரிசி வினியோகம் செய்ததை கண்டித்து, பொதுமக்கள் ரேஷன் கடையை முற்றுகையிட்டனர்.
14 / 20
பந்தலூர் அருகே கூலால் இடலச்சேரி பகுதியில், நீரோடையிலிருந்து தனியார் நிலத்துக்கு தண்ணீரை திருப்பி விட, விதிகளை மீறிஅமைக்கப்பட்டுள்ள குழாய்.
15 / 20
பொள்ளாச்சி நகராட்சி பெண்கள் மேல்நிலைப்பள்ளியின் பின்புறம் உள்ள மைதானம்பராமரிப்பின்றி புதர்மண்டி காட்சியளிக்கிறது.
16 / 20
பெண்கள் மீதான பாலியல் வன்முறையை கண்டித்து, மகளிர் அமைப்புகள், தொண்டுநிறுவனங்கள் சார்பில் திருப்பூரில் நேற்று ஊர்வலம் நடத்தப்பட்டது.
17 / 20
சேலம் ராசிபுரத்தில் கட்டப்பட்டுள்ள ரயில்வே மேம்பாலம் அருகே, சர்வீஸ் ரோடு இணைப்பு துண்டிக்கப்பட்டதால், மயானத்துக்கு செல்வோர் கடும் சிரமத்துக்குள்ளாகும் நிலை ஏற்ப்பட்டுள்ளது.
18 / 20
நாமக்கல் அடுத்த நல்லிபாளையத்தில் சுகாதாரம் இல்லாத நிலையில் செசயல்படும் கருவாட்டு ஆலையை மூடக்கோரி நல்லிபாளையம் போலீஸ் ஸ்டேஷன் முன் மறியல் போராட்டத்தில் ஈடுபட்ட மக்கள்.
19 / 20
திருச்சி அண்ணா ஸ்டேடியத்தில், செசயற்கை புல்வெளியுடன் கூடிய, புதிய டென்னிஸ் மைதானம் அமையவுள்ள இடத்தை, திருச்சி சசரக டி.ஐ.ஜி., அமல்ராஜ் நேற்று பார்வையிட்டு ஆய்வு செசய்தார்.
20 / 20
ஈரோட்டில் மின்வெட்டை கண்டித்து, சிட்கோவில் குக்கர் தயாரிக்கும் ஆலையில் பணி நிறுத்தப்பட்டு வெறிச்சேõடி காணப்பட்டது.
Advertisement