தமிழகம்ஆல்பம்:

19-Jan-2013
1 / 20
வெளுத்தது வைகை: பரமக்குடி வைகை ஆற்றில், நாணல்கள் காடு போல வளர்ந்துள்ளன.
2 / 20
திருப்புத்தூர் நின்ற நாராயண பெருமாள் கோயில் வருஷாபிஷேகத்தையொட்டி சுவாமி ஸ்ரீதேவி,பூமாதேவியுடன் மின்விளக்கு அலங்காரத்தில் காட்சியளித்தார்.
3 / 20
விருதுநகர் , அருப்புக்கோட்டை அருகே ஏ. கல்லுப்பட்டி கிராமத்தில், பயன்பாடின்றி மூடப்பட்டு கிடக்கும் நூலகம்.
4 / 20
விருதுநகர் , ஆமத்தூர் அருகே சிதம்பராபுரம் வெள்ளூர் ரோட்டை சீரமைக்க, கற்கள் கொட்டப்பட்டு பல மாதங்களாகியும், பணி துவங்கவில்லை.
5 / 20
நாங்களும் "டைவ்' அடிப்போம்ல..: தாய் எட்டடி பாய்ந்தால் குட்டி பதினாறு அடி பாயும் என்பார்களே.. அது இது தானோ...இடம்: விருதுநகர் வெள்ளூர் கண்மாய்.
6 / 20
திண்டுக்கல் , வடமதுரை- நல்லமனார்கோட்டை இடையே, லக்கம்பட்டியில் ரோடு மிகவும் சேதமாகியுள்ளதால், போக்குவரத்து சிரமம் உள்ளது.
7 / 20
திண்டுக்கல், தாண்டிகுடி அருகே கே.சி.பட்டியில் உள்ள பெண்கள் சுகாதார வளாகம் பயனற்று பூட்டப்பட்டுள்ளது.
8 / 20
முல்லைக்கு தேர் கொடுத்தான் பாரி என்பது வரலாறு. ஆனால் நல்ல நிலையில் உள்ள அரசு வாகனங்களை கூட, கொடி படர்வதற்காக கண்டம் பண்ணி விட்டார்களோ இக்கால பாரிகள். இடம்: விருதுநகர் கலெக்டர் அலுவலகம்.
9 / 20
தேனி , ஆண்டிபட்டி அருகே திம்மரசநாயக்கனூர் பகுதியில், நோய் தாக்குதலுக்குள்ளான பப்பாளி மரங்களில் விளைச்சல் பாதித்துள்ளது.
10 / 20
சுற்றுலா பகுதியான தேனி மாவட்ட வைகை அணை பூங்காவில், சேதமடைந்துள்ள மின்சார விளக்கு.
11 / 20
தேனி அருகே வீரபாண்டியில் , வறட்சியால் தண்ணீரின்றி பட்டுப்போன தென்னை மரங்கள்.
12 / 20
பழைய மூணாறில் செயல்பட்டு வரும் கேரள அரசு பஸ் டெப்போவிற்கு புதிதாக கட்டி முடிக்கப்பட்ட அலுவலக கட்டடம், செயல்படுவதில் கால தாமதம் ஏற்பட்டு வருகிறது.
13 / 20
வீணாகும் குடிநீர்: காஞ்சிபுரம்-வந்தவாசி சாலையில், வேதாசலம் நகர் எதிரே உள்ள கால்வாய் வழியே செல்லும் குடிநீர் குழாயில் உடைப்பு ஏற்பட்டு, பல வாரங்களாக குடிநீர் வீணாகி வருகிறது.
14 / 20
சென்னை காமராஜர் சாலையில் உள்ள காந்தி சிலை புனரமைத்து திறந்தனர்.
15 / 20
சென்னையில் பனியின் தாக்கம் அதிகமாக காணப்பட்டது. இடம்:காமராஜர் சாலை.
16 / 20
கிருஷ்ணகிரி, மேல்சோமார் பேட்டை முல்லை நகரில், சாக்கடை கழிவு நீர் சாலையில் செல்வதால் சுகாதார சீர்கேடு ஏற்படும் நிலையுள்ளது.
17 / 20
ஈரோடு, மாணிக்கம்பாளையம் வள்ளி சேம்பர் காம்ளெக்ஸ் ரோட்டில் குடிநீர் குழாய் உடைந்து தண்ணீர் வீணாகி, சாலையும் மோசமாகி வருகிறது.
18 / 20
ஆண்டு முழுவதும் சாலை பாதுகாப்பு வாரவிழா கொண்டாடினாலும், வாகன ஓட்டிகள் திருந்தவே வாய்ப்பில்லையா....?. இடம்:எம்.ஜி.ஆர்., சிலை சிக்னல் - ஈரோடு.
19 / 20
நாமக்கல் நகர் பகுதியில் சேகரிக்கும் குப்பைகளை நகராட்சி ஊழியர்கள் சிலர் கமலாய குளத்தில் கொட்டி சுகாதார சீர்கேடு ஏற்படுத்தி வருகின்றனர்.
20 / 20
சேலத்தில் வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த மணிமுத்தாறு, தற்போது குப்பை கிடங்காக மாறிவருகிறது.
Advertisement