தமிழகம்ஆல்பம்:

20-Jan-2013
1 / 20
பழநியில், சோதனையின் போது, பிடிபட்ட தனியார் மெட்ரிக் பள்ளி வாகனத்தில், அதிக எண்ணிக்கையில் பயணம் செய்த மாணவர்கள்.
2 / 20
தொடரும் விதிமீறல்: சரக்கு வாகனத்தில் ஆட்களை ஏற்றக்கூடாது என தெரிந்தும், இதுபோன்று ஆட்களை ஏற்றி செல்லும் டிரைவர்களை போலீசார் கண்டுகொள்ளாதது ஏனோ...இடம்: ஆமத்தூர் சிதம்பராபுரம் ரோடு.
3 / 20
திண்டுக்கல் -திருச்சி ரோட்டில் விபத்தை ஏற்படுத்தும் வகையில் மண் மேவியுள்ளது.
4 / 20
திண்டுக்கல் பஸ் ஸ்டாண்டில் போலீஸ் அவுட் போஸ்ட் அருகே இடையூறாக நிறுத்தப்பட்டுள்ள வாகனங்கள்.
5 / 20
விருதுநகர் அரசு ஆஸ்பத்திரி பெண்கள் பிரிவு பகுதியில், செப்டிக் டேங்க் மூடி இல்லாமல் திறந்து கிடக்கிறது. விபத்து ஏற்படும் முன் நடவடிக்கை எடுப்பார்களா...?
6 / 20
சிவகங்கை பஸ் ஸ்டாண்டில் பஸ்கள் நிறுத்துமிடத்தில் இரு சக்கர வாகனங்களை நிறுத்தக் கூடாது என்று போர்டு வைத்திருந்தும் மீறி வாகனங்கள் நிறுத்தப்பட்டுள்ளது.
7 / 20
தேனி மாவட்டம், கூடலூர் கே.ஜி., பட்டி, பெரியாற்று பாலம்.(உள்படம்) பாலத்தின் அடிப்பகுதியில் அரிப்பு ஏற்பட்டுள்ளது.
8 / 20
தேனியில் பதஞ்சலி யோகா,ஸ்போர்ட்ஸ் டெவலப்மென்ட்ஸ் வெல்பர் அசோசியேஷன் சார்பில், மாவட்ட அளவிலான யோகா போட்டி நடந்தது.
9 / 20
இடியாப்ப சிக்கல்: ராமநாதபுரம் சாலைத்தெருவில் "ஒன்வே'யில் விதிகளை மீறி ஆட்டோக்கள் செல்வதால் போக்குவரத்திற்கு இடையூறாக உள்ளது.
10 / 20
சிவகங்கை ஆயுதப்படை மைதானம் 48 காலனி அருகே ரோடு முழுவதும் பெயர்ந்துள்ளதால் வாகனங்கள் செல்ல சிரமமாக உள்ளது.
11 / 20
சிங்கம்புணரி பெரிய கடைவீதியில் இருபுறத்திலும் வாகனங்களை நிறுத்துவதால் அடிக்கடி போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது.
12 / 20
தேனி பஸ்ஸ்டாண்ட் அருகே, ரோடு கற்கள் பெயர்ந்து போக்குவரத்திற்கு லாயக்கற்ற நிலையில் உள்ளது.
13 / 20
உங்கள் சந்தோஷத்திற்காக, பிறரை பாதிப்படையச் செய்யலாமா?. வெடியை நடுரோட்டில் வெடித்தால், வாகன ஓட்டிகள் எப்படி செல்வார்கள். இதை சற்று யோசித்தால் நல்லது.இடம்:தேனி பெரியகுளம் ரோடு.
14 / 20
புதிதாக பணி நியமனம் செய்யப்பட்ட பட்டதாரி ஆசிரியர்களுக்கு,தேனியில் நடந்த பணியிடை பயிற்சி முகாமில்,அனைவருக்கும் கல்வி இயக்க கூடுதல் முதன்மைக் கல்வி அலுவலர் ராஜேந்திரன் பேசினார்.
15 / 20
ராமநாதபுரம் மாவட்டம், பரமக்குடி அருகேயுள்ள கரைமேல்குடியிருப்பு பகுதிக்கு ரோடு அமைக்காததால், சேறும், சகதியுமாக உள்ளது.
16 / 20
தேவிபட்டினம் கடலடைத்த ஆதிஜெகநாதப்பெருமாள் கோயிலில், புனர்பூசத்தை முன்னிட்டு சுவாமி ஸ்ரீதேவி, பூதேவியுடன், வெங்கடாஜலபதி அலங்காரத்தில் அருள்பாலித்தார்.
17 / 20
திருவள்ளூர் மாவட்டம், பள்ளிப்பட்டு அடுத்த பொதட்டூர்பேட்டை பேரூராட்சியில் புதூர் கிராமத்தில் குளத்தை சுற்றி ஆக்கிரமிப்பு செய்துள்ளதால் மழைநீர் தேங்கி அப்பகுதியில் உள்ள ஆழ்துளை கிணற்றில் மண் கலரில் வரும் குடிநீர்.
18 / 20
சேலம் சத்திரம் மேம்பாலத்திலிருந்து லாரி மார்க்கெட் செல்லும் வழியில் சாக்கடை கால்வாய் கட்டும் பணிக்கு, மெகா பள்ளம் தோண்டப்பட்ட நிலையில், பணிகள் நடைபெறாமல் உள்ளது. செவ்வாப்பேட்டைக்கு செல்லும் பிரதான சாலை என்பதால் விரைவில் பணிகளை துரிதப்படுத்த வேண்டும்.
19 / 20
திருச்சி , ஸ்ரீரங்கம் ரங்கநாதர் கோவிலில், 600வது தேரோட்டத்துக்கு தயாராக உள்ள தேர்.
20 / 20
ஈரோடு மாவட்டம் நுழைவு வாயிலான நொய்யல் ஆற்றில் குப்பைகளை கொட்டி ஆற்றை மாசுபடுத்தி வருகின்றனர். நெடுஞ்சாலைத்துறையினர் எச்சரிக்கை பலகை வைத்து யாரும் கண்டு கொள்வதில்லை.
Advertisement