தமிழகம்ஆல்பம்:

30-Jan-2013
1 / 20
ஸ்டெல்லா மேரீஸ் கல்லூரியில், நேற்று மாணவியருக்கு நேற்று இலவச மடிக்கணினிகள் வழங்கப்பட்டன.
2 / 20
சீசன் துவங்கியுள்ள நிலையில் சென்னை கோயம்பேடு சந்தையில் விதையில்லா திராட்சை பழங்களின் வரத்து அதிகரித்து வருகிறது.நாக்பூர், சோலாபூர் உள்ளிட்ட பகுதிகளிலிருந்து கொண்டு வரப்படும் இப் பழங்கள் சில்லறை விலையில் கிலோ 50 ரூபாய்க்கு விற்கப்படுகின்றன.
3 / 20
மதுரவாயல் பைபாஸ் முதல் துறைமுகம் வரையிலான விரைவு மேம்பாலச் சாலைக்காக பூந்தமல்லி நெடுஞ்சசாலையில் கோயம்பேடு-மதுரவாயல் இடையே தூண்கள் அமைக்கப்பட்டது.இப்பணிக்கு தமிழக அரசு தடை விதித்துள்ள நிலையில் பணிகள் நிறுத்தப்பட்டதால் தூண்களின் மீது போஸ்டர்கள் ஒட்டியும், இடையே வாகனங்கள் நிறுத்தியும் சீரழித்து வருகின்றனர்.
4 / 20
பிளஸ்2 மற்றும் பத்தாம் வகுப்பு பொது தேர்வு மாதிரி வினா விடைத்தாள் புத்தகம் வாங்குவதற்காக, சென்னை நுங்கம்பாக்கம் டி.பி.ஐ., வளாகத்தில் நேற்று குவிந்த பெற்றோர்கள்.
5 / 20
அடிப்படை வசதியும் இல்லை... ஆசிரியரும் இல்லை தற்போது லேப்டாப்பும் இல்லை அதனாலத்தான் போரட்ட களத்தில் இறங்கிட்டோம். புரசைவாக்கத்தில் உள்ள அரசினர் தொழில்நுட்பக் கல்லூரியில் உள்ளிருப்பு போராட்டம் செய்யும் மாணவர்கள்.
6 / 20
கடலோர காவல் படையின் மருத்துவ முகாம் நேற்று நடந்தது. இதில் கடலோர காவல் படையினர்.
7 / 20
காஞ்சிபுரம் அடுத்த வெளியூர் ஏரியில், கரை அமைக்கும் பணி அரைகுறையாக உள்ளது.
8 / 20
வாலாஜாபாத்-வண்டலூர் சாலையில், ஊத்துக்காடு அருகே கொட்டப்பட்டுள்ள கற்கள், போக்குவரத்திற்கு இடையூறாக உள்ளன.
9 / 20
செய்யூர் உப்பளம் பகுதியில் தண்ணீர் தேங்கியுள்ளதால் உப்பள பணிகள் துவக்கப்படவில்லை.
10 / 20
பள்ளிப்பட்டு ஒன்றியம் வெளியகரம் கிராமம் அருகே குசா ஆற்றின் குருக்கே கட்டப்பட்டுள்ள தடுப்பணை உடைக்கப்பட்டு மழைநீர் முழுவதும் வெளியேறி வருகிறது.
11 / 20
சுவீடன் நாட்டு மாணவர்கள், ஊத்துக்கோட்டையில் போக்குவரத்து விதிகள் பற்றி, போக்குவரத்து போலீசார் ஒருவரிடம் கேட்டு அறிந்தனர்.
12 / 20
பசுமை நிழலில் காதல் மோகம் : பூத்துக் குலுங்கும் பூக்களுக்கு மத்தியில், பசுமை மரக்கிளையில் அமர்ந்து காதல் மொழிப்பேசும் இந்த பறவைகளின் பார்வை கோவை அழகை ரசிக்கிறதா ? இல்லை மழை பொழிவை எதிர்பார்க்கிறதா ? இடம்: பீளமேடு, விமான நிலையம்.
13 / 20
கோக்கால் கிராமத்திற்கு வரும் நீரை தடுப்பதால், விவசாயம் பாதிக்கப்பட்டுள்ளதாகபுகார் தெரிவித்து, மாவட்ட கலெக்டரிடம் மனு அளிக்க வந்த கோத்தரின ஆதிவாசிமக்கள்.
14 / 20
பொள்ளாச்சி - பாலக்காடு ரோட்டிலுள்ள, சுப்பேகவுண்டன்புதூரில் ரோடு இருந்தஇடம் தெரியாமல் கல் மட்டுமே கண்களுக்கு தெரிகிறது. இதில் பயணிக்கும்வாகன ஓட்டிகள் கடும் சிரமத்துக்குளாகி வருகின்றனர்.
15 / 20
திருப்பூர், வேட்டுவபாளையம் பகுதியில், 3.27 லட்சம் ரூபாய் மதிப்பில், புதிதாககட்டப்பட்டுள்ள அங்கன்வாடி மையம் திறக்கப்படாமல் உள்ளது.
16 / 20
கிருஷ்ணகிரியில் காவல் துறை சார்பில் நடந்த, சமூக நீதி விழிப்புணர்வு பேரணியில் பள்ளி மாணவியர்கள் பங்கேற்றனர்.
17 / 20
ஈரோட்டில் பள்ளி குழந்தைகளை கூடுதலாக ஆட்டோ மற்றும் மாருதி வேனில் ஏற்றி வந்தவர்களை வட்டார போக்குவரத்து ஆய்வாளர் ராமலிங்கம் தலைமையில் ஆய்வு செய்தனர். இடம்: கலைமகள் கல்வி நிலையம், ரோடு, ஈரோடு.
18 / 20
ஈரோடு சாஸ்திரி நகர் குடியிருப்பு மக்கள் அடிப்படை வசதி கோரி, ரேஷன் கார்டை திரும்ப ஒப்படைக்க, ஈரோடு கலெக்டர் அலுவலகம் வந்த பெண்கள்.
19 / 20
வாடிய பயிருக்கு உயிர்: திருச்சியை அடுத்த அதவத்தூர் சின்னக்குளம் பகுதியில், அறுவடைக்கு தயாராக இருக்கும் பயிர்களை காக்க, குடிநீருக்காக அமைக்கப்பட்ட, அடி பம்பு போர்வெல் குழாயில், டீஸல் மோட்டார் பொருத்தி நிலத்துக்கு நீர் பாய்ச்சும் விவசாயிகள்.
20 / 20
புதுக்கோட்டை ராஜகோபாலபுரம் பெரியார் நகரில், நகராட்சி சார்பில் ரோடு போடும் பணிகள் நடந்து வருகிறது. அப்பகுதி வீடுகளின் மட்டத்தை விட உயரமாக ரோடு போடப்படுவதால், சாக்கடை கழிவு நீர் வீடுகளை சூழ்ந்துள்ளது.
Advertisement