தமிழகம்ஆல்பம்:

31-Jan-2013
1 / 20
ஆண்,பெண் வேறுபாடின்மை, ஒருவருக்கொருவர் மரியாதை மற்றும் உலக அமைதியை வலியுறுத்தி தரமணியில் உள்ள எம்.ஏ.சிதம்பரம் செவிலியர் கல்லூரியில் இருந்து காந்தி மண்டபம் வரை கல்லூரி மற்றும் பள்ளி மாணவிகளின் பேரணி நேற்று நடந்தது.
2 / 20
மகாத்மா காந்தியின் நினைவு தினமான நேற்று அவருக்கு அஞ்சலி செலுத்தும் வகையில் சிக்னல் சந்திப்புகளில் 11 மணியளவில் இரண்டு நிமிடங்கள் போக்குவரத்து நிறுத்தி வைக்கப்பட்டது. இடம்: சென்னை புழல் சிறைச்சாலை சிக்னல்.
3 / 20
கோட்டூர்பரத்தில்"சென்னை அறிவியல் திருவிழா' என்ற கண்காட்சி நேற்று துவங்கியது.இதை ஆர்வமுடன் பார்வையிடும் மாணவர்கள்.
4 / 20
காஞ்சிபுரம் அடுத்த வில்லிவலத்தில் செயல்படாமல் உள்ள, துணை சுகாதார நிலையம்.
5 / 20
பராமரிப்பின்றி குடி மையமாக மாறிய, கால்நடை மருத்துவமனை கட்டடம்.
6 / 20
ரங்கோலிகோலம் போட்டியில் ஈடுபட்டு மகளிர் சுயஉதவிக்குழுவினர்.
7 / 20
திருத்தணி பைபாஸ் சாலையில் இருந்து சோளிங்கர் மற்றும் திருத்தணி பஜாருக்கு செல்லும் வளைவில் தடுப்புகள் (சென்டர் மீடியம்) அமைக்காததால் விபத்துக்கள் ஏற்படும் அபாயம் உள்ளது.
8 / 20
திருத்தணி வனச்சரகர் அலுவகம் கட்டி முடித்து பலமாதங்கள் ஆகியும் இதுவரை திறக்கப்படாமல் உள்ளது.
9 / 20
அன்னூர் அருகே காளக்குறிச்சியில், மழை இல்லாததாலும், நிலத்தடி நீர் மட்டம் மிகவும் கீழே சென்று விட்டதாலும், கரும்பு பயிர் கருகி விட்டது.
10 / 20
ஊட்டியில் மாவட்ட நிர்வாகம் மற்றும் தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் சார்பாக நடந்த மாரத்தான் ஓட்டத்தில், ஆர்வத்துடன் பங்கேற்ற மாணவர்கள்.
11 / 20
பொள்ளாச்சி தாலுகாவில், கடும் வெயில் வாட்டி வதைப்பதால், நீர்நிலைகள் வறண்டு போயுள்ளன. இதனால், மக்களுக்கு தண்ணீர் கிடைக்காமல் தவித்து வருகின்றனர். பொள்ளாச்சி அடுத்த மாக்கினாம்பட்டியில், ஊற்று நீரை பாத்திரத்தில் பிடித்து சிறிது, சிறிதாக சேகரித்து பயன்படுத்தும் நிலை ஏற்பட்டுள்ளது.
12 / 20
திருப்பூர் காங்கயம் ரோட்டை புதுப்பித்ததால், சென்டர் மீடியன் உயரம் குறைந்து,ரோடு மட்டத்துக்கு மாறியுள்ளது. அதனால், சென்டர் மீடியன் உயரத்தையும்அதிகப்படுத்த வேண்டிய கட்டாயம் ஏற்பட்டுள்ளது.
13 / 20
கலெக்டர் தலைமையில் நடந்த குறைகேட்புக் கூட்டத்தில், முந்திரி விவசாயி ஒருவர், தற்கொலை செய்து கொள்வதை தவிர வேறு வழியில்லை என கதறி அழுததால் பரபரப்பு நிலவியது.
14 / 20
கள்ளக்குறிச்சி காவல் நிலையத்தில் போலீஸ் பற்றாக்குறையால் பஸ் ஸ்டாண்டில் உள்ளபுறக்காவல் நிலையம் பூட்டிக் கிடக்கும் அவலநிலை.
15 / 20
பெரியகுளம் சோத்துப்பாறை அணையில் தண்ணீர் குறைந்து வருவதால் வெளியே தெரியும் பாறைகள்.
16 / 20
காரைக்குடி சுப்பிரமணியபுரம் 5வது வீதியில் பல ஆண்டுகளாக தார் ரோடுஅமைக்காமல் அப்படியே விடப்பட்டுள்ளதால் வாகன ஓட்டிகள் சிரமப்படுகின்றனர்.
17 / 20
ராமநாதபுரம் தங்கப்பா நகரில் வாடகை கட்டடத்தில் இடவசதியின்றி அங்கன்வாடி மையம் செயல்படுகிறது. குழந்தைகளுக்கான உணவும் வெட்டவெளியில்தான் தயாரிக்கப்படுகிறது.
18 / 20
தட்டுபாட்டிலும் இல்லை கட்டுப்பாடு...: மின் சிக்கனம் தேவை இக்கனம் என அரசு கூறினாலும், இதை கண்டுகொள்ளாது, சாத்தூர் நகராட்சி கூட்ட அரங்கில், யாருமே இல்லாத நிலையில், மின்விளக்குகளும், மின்விசிறிகளும் இயங்குகின்றன. நேரம்: காலை 11.30 மணி
19 / 20
மழையில்லாததால் பழநி நகராட்சி கோடைகால நீர் தேக்கத்தில் தண்ணீர் குறைந்து வருகிறது.
20 / 20
"மாமதுரை போற்றுவோம்' விழாவையொட்டி, கலெக்டர் அலுவலக சுற்றுச் சுவரில், மீனாட்சி கோயில் தொடர்பான அழகிய ஓவியங்கள் வரையும் பணி நடந்தது.
Advertisement