தமிழகம்ஆல்பம்:

01-Feb-2013
1 / 20
சேலம் அழகாபுரம் டைமண்ட் ரேய்ஸ் நர்சரி பள்ளியில், டேலண்ட் எக்ஸ்போ 2013 நிகழ்ச்சியில், சிறுவர் சிறுமியர் ஆர்வமுடன் பார்வையிட்டனர்.
2 / 20
போதிய மழையின்றி, அனைத்து ஆறுகளும் வறண்டு வரும் நிலையில், தேனி அருகே வீரபாண்டி முல்லையாற்றில் தண்ணீர் வரத்து குறைந்தது.
3 / 20
கொடைக்கானல் மலைப்பகுதியில் போதிய மழை இல்லாததால் வெள்ளிநீர்வீழ்ச்சியில் நீர்வரத்து குறைந்துள்ளது.
4 / 20
விஸ்வரூபம் படம் பிரச்சனையில் கமலுக்கு ஆதரவு தெரிவித்து நேற்று ஆழ்வார்பேட்டையில் உள்ள கமல் வீட்டிற்கு வந்த சிவக்குமார்,பிரபு உள்ளிட்ட நடிகர்கள்.
5 / 20
பரும்பாக்கம் பகுதியில் உள்ள சாலை சாலை பழுதடைந்துள்ளதால் தனி பாதை செல்லும் வாகன ஓட்டிகள்.
6 / 20
நடுவீரப்பட்டு ஊராட்சியில் துவக்கப்பள்ளி அருகே திறந்தவெளியில் ஆபத்தான நிலையில் உள்ள கிணறு.
7 / 20
மாமல்லபுரம் கடற்கரையில் எச்சரிக்கையை மீறி பயணிகள் குளிக்கின்றனர்.
8 / 20
காஞ்சிபுரம் அடுத்த சிறுவள்ளூர் கிராமத்திற்கு செல்லும் சாலை ஜல்லி கொட்டியே இரண்டு ஆட்சிகாலம் ஆனது. தார் போட இன்னும் எத்தனை காலம் ஆகுமோ?
9 / 20
திருவாலங்காட்டில் செயல்பட்டு வரும் திருத்தணி கூட்டுறவு சர்க்கரை ஆலை
10 / 20
திருத்தணி, பேருந்து நிலையத்தில் உள்ள பயணியர் இருப்பிட பகுதியை ஆக்கிரமித்து கடைகள் வைக்கப்பட்டுள்ளதால், பேருந்துக்காக காத்திருக்கும் பயணிகள், பெரும் சிரமத்திற்கு ஆளாகி வருகின்றனர்.
11 / 20
குனியமுத்தூர் அருகேயுள்ள நேரு விமானவியல் கல்லூரியில், "ஏரோபிளஸ் 2013' எனும், விமான கண்காட்சி நேற்று துவங்கியது. கண்காட்சியில் இடம்பெற்றுள்ள விமானங்களை ஆர்வமுடன் பார்வையிடும் மாணவியர்.
12 / 20
பொள்ளாச்சி புதிய பஸ் ஸ்டாண்டில் உள்ள ஆண்கள் கழிப்பிடம் பராமரிப்பில்லாததால், சுகாதாரமின்றி காணப்படுகிறது. இதனால், பயணிகளுக்கு தொற்றுநோய் பரவும் அபாயம்உள்ளது.
13 / 20
பாரதியார் பல்கலைக்கு நிலம் கொடுத்தவர்களுக்கு இழப்பீடு வழங்குதில் தாமதத்தை கண்டித்து, நேற்று கலெக்டர் அலுவலகத்தை பெண்கள் உட்பட பொதுமக்கள் முற்றுகையிட்டனர்.
14 / 20
மடத்துக்குளம் அமராவதி ஆற்றுப்பாலத்தில் விரிசல் ஏற்பட்டுள்ள பகுதியில் கல் வைக்கப்பட்டுள்ளது.
15 / 20
வறட்சியின் காரணமாக கடத்தூர் பகுதியில் மரவள்ளி கிழங்கு பயிருக்கு விலைக்கு லாரிகளில் தண்ணீர் வாங்கி விவசாயிகள் ஊற்றி வருகின்றனர்.
16 / 20
நவீன தீயணைப்பு கருவிகளுடன், கரூர் தீயணைப்பு துறைக்கு வந்துள்ள தீயணைப்பு டூவீலர் உள்ளிட்ட கருவிகளை இயக்குவது குறித்து, நிலைய அலுவலர் தியாகராஜன், தீயணைப்பு வீரர்களுக்கு பயிற்சியளித்தார்.
17 / 20
திருவையாறு சற்குரு தியாகராஜர் 166வது ஆராதனை விழாவின் முக்கிய நிகழ்ச்சியான பஞ்சரத்ன கீர்த்தனயை ஓரே மேடையில் அமர்ந்து அனைத்து இசை கலைஞர்களும் பாடி இசையஞ்சலி செலுத்தினர்.
18 / 20
சேலம் வீராணம் பகுதியில் குண்டு மல்லி பூக்கள் அதிகளவில் பூத்திருப்பதால் அதை பறிக்கு பணியில் ஈடுபட்டுள்ள தொழிலாளர்கள்.
19 / 20
விரைவில் துவங்கவிறுக்கும் டி.என்.பி.சி., தேர்வுக்காக நாமக்கல் - பரமத்தி சாலையில் உள்ள பழைய புத்தக்கடையில் 6, 7, 8ம் வகுப்பின் பழைய புத்தங்கள் விற்பணை சூடுபிடித்துள்ளது.
20 / 20
நட(பல)சாலி: ராமநாதபுரம் மாவட்டம் மண்டபம் ஒன்றியம் மேட்டுக்காரான் கிராமத்திற்கு செல்லும் ரோடு சேதமடைந்து 20 ஆண்டுகளாகி விட்டது. 15 ஆண்டுகளாக அரசு பஸ் நிறுத்தப்பட்டுள்ளதால் நடந்தே செல்லும் கிராம மக்கள்.