தமிழகம்ஆல்பம்:

07-Feb-2013
1 / 31
கோவை ஆலாந்துறை அருகே நாதேகவுண்டர் புதூரில், அளவுக்கு அதிகமான கரும்புகளை ஏற்றி சென்ற லாரி நிலை தடுமாறி ரோட்டில் கவிழ்ந்தது. அதிர்ஷ்டவசமாக இவ்விபத்தில், லாரி டிரைவர் உள்ளிட்ட தொழிலாளர்கள் காயமின்றி தப்பினர்.
2 / 31
பாலியல் துன்புறுத்தலில் இருந்து பாதுகாத்துக் கொள்ளும் வகையில் நேயம் அறக்கட்டளை சார்பில் பள்ளி மாணவிகளுக்கு விழிப்புணர்வு நிகழ்ச்சி நடத்தப்பட்டது. இடம்: ஆலந்தூர், நிதி பள்ளி.
3 / 31
தமிழ்நாடு அரசு இசைக் கல்லூரி கலை பண்பாட்டுத்துறை சார்பில் இரண்டு நாட்கள் தமிழ் இசை விழா நடத்தப்படுகிறது. விழாவின் முதல் நாளான மங்கள இசை நடந்தது.
4 / 31
எம்.ஜி.ஆரின் 96வது பிறநந்தநாளை முன்னிட்டு டாக்டர் எம்.ஜி.ஆர் ஜானகி பெண்கள் கல்லூரியில் 60 மாணவிகள் பங்கேற்ற பாரதியாரின் பெண்மையை மையப்படுத்தி "ஆடுவோமே பள்ளு பாடுவோமே'நவீன நாட்டிய நாடகம் நடைபெற்றது.
5 / 31
கள்ளக்குறிச்சி அருகே பங்காரம் லஷ்மி கல்வியியல் கல்லூரியில் நடந்த குடிமை பயிற்சி முகாமில் கலை நிகழ்ச்சியை கல்லூரி தலைவர் திருசங்கு துவக்கி வைத்தார்.
6 / 31
திட்டக்குடி அடுத்த அதர்நத்தத்தில் விலையில்லா பொருட்களை தமிழ் அழகன் எம்.எல்.ஏ.,வழங்கினார். அருகில் ஒன்றிய சேர்மன் கந்தசாமி.
7 / 31
விருத்தாசலம் தங்கம் பெரியசாமி கல்வியியல் கல்லூரியில் நடந்த குடிமை பயிற்சி முகாம் துவக்க விழாவில், டி.ஆர்.ஓ., ராஜேந்திரன் பேசினார்.
8 / 31
சிரித்து வாழ வேண்டும் : உலக சிரிப்பு தினத்தை முன்னிட்டு, ஊட்டி நகர விழிப்புணர்வு சங்கம் மற்றும் ஒய்.எம்.சி.ஏ., பள்ளி சார்பில் நடந்த நகைச்சுவை நிகழ்ச்சியில் சிரித்து மகிழும் மழலையர்.
9 / 31
இதய தெய்வத்தை, இதயத்தில் சுமந்து வந்த ராதாபுரம் தொகுதி தே.மு.தி.க., எம்.எல்.ஏ., மைகேல் ராயப்பன். இவரை பின் தொடர்ந்து படம் எடுக்க முற்பட்டபோது, இதயத்தில் இருக்கும் இதய தெய்வத்தை, முதலில் கையை வைத்து மறைத்தார் தொடர்ந்து படம் எடுக்கவே, கையை பாக்கெட்டிலிருந்து எடுத்துவிட்டார். முழுக்க நனைஞ்சாச்சு அப்புறம் முக்காடு எதுக்கு...!
10 / 31
'பாம்பன் ரோடு பாலத்தில், சீரமைப்பு பணிகள் மேற்கொள்வதற்கு வசதியாக, நகரும் இரும்பு சாரம் அமைக்கப்பட்டுள்ளது.'
11 / 31
பாராட்டு விழா: சி.ஏ., தேர்வில் சாதனை படைத்த பிரேமாவை பாராட்டி, விழுப்புரம் மாவட்டம் பெரிய கொள்ளியூர் பொதுமக்கள் பராட்டு விழா நடத்த ஏற்பாடு செய்துள்ளனர். அதையொட்டி சங்கராபுரத்தில் வைக்கப்பட்டுள்ள டிஜிட்டல் பேனர்.
12 / 31
'சிவகங்கை, இலுப்பக்குடியில் இந்தோ- திபெத் எல்லை பாதுகாப்பு படை பயிற்சி மையத்தில், பயிற்சி முடித்த போலீசார் விடை பெற்று செல்லும் விழாவில்,சந்தோஷமாக ஆடினர். '
13 / 31
திண்டிவனம் அடுத்த சிங்கனூரில் விவசாயி பயிர்செய்துள்ள கோஸ்.
14 / 31
கோவை அரசு கலை அறிவியல் கல்லூரியின் வணிகவியல் துறை மாணவர்களுக்கான சிறப்பு வணிகம் மற்றும் வங்கி சார்ந்த விழிப்புணர்வு கண்காட்சி கல்லூரி அரங்கில் நடந்தது
15 / 31
துணிவே துணை! டில்லியில் பஸ்சில் மருத்துவ மாணவி, பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டு கொல்லப்பட்ட சம்பவத்தை தொடர்ந்து, நாடு முழுவதும் பள்ளி, கல்லூரி மாணவியருக்கு தற்காப்பு கலை பயிற்சிகள் அளிக்கப்பட்டு வருகின்றன. கோவை, அல்வேனியா பள்ளியில் பயிற்சி பெறும் மாணவியர்.
16 / 31
கூடலூர் பாண்டியார் அரசு தேயிலை தோட்ட குடியிருப்பு அருகே காலை "ஹாயாக' உலா வந்த காட்டு யானைகள்.
17 / 31
புதிய குடிநீர் திட்டத்துக்காக ஆலோசிக்கப்பட்டுள்ள, தேவாலா மூச்சிக்குன்னு பகுதி அருவியின் ரம்மிய காட்சி.
18 / 31
கிழக்கே குளித்து எழுந்த வானின் நெற்றித் திலகம், வீட்டு ஜன்னல் கம்பிகளுக்கு தங்க முலாம் பூசி, இயற்கைகோடு இணைந்து பேசி, முகாரி பாட தயாராகி விட்டது மேற்கே. சந் திரனின் உதயத்துக்கு, இதோ பிறந்தது வழி. இடம்: பொள்ளாச்சி குள்ளக்காபாளையம்.
19 / 31
கோவிலில் ஏற்றியுள்ள அணையா தீபத்தின் சுடர் நீண்டு எரிவதை போன்று தோன்றிய அபூர்வ காட்சி.
20 / 31
கடும் பனி பொழிவினால் விருத்தாசலம் பகுதியில் முந்திரி பூக்கள் கருகும் நிலையில் உள்ளன.
21 / 31
திருக்கோவிலூர் அரசு மருத்துவமனையில் செவிலியர்கள் தங்கள் கோரிக்கையை வலியுறுத்தி, கருப்பு பேட்ஜ் அணிந்து மருத்துவ பணிகள் பாதிக்காத வகையில் போராட்டம் செய்தனர்.
22 / 31
திண்டுக்கல் மாவட்டம், புகையிலைப்பட்டியில் நடந்த ஜல்லிகட்டில் அடக்க வந்தவரை தூக்கி வீசும் காளை.
23 / 31
போக்குவரத்து விதியை மதிக்காத கட்சி முக்கியஸ்தர்கள். நாங்கள் ஆளும் கட்சியில்ல நம்பர் பிளேட்ல என்ன வேனும்னாலும் எழுதுவோம். எங்களுக்கு போக்குவரத்து விதி எல்லாம் கிடையாது. சட்டசபைக்கு வந்த ஆளும் கட்சி எம்.எல்.ஏ., வோட கார்தாங்க.
24 / 31
விழுப்புரத்தில் சொத்துவரி மற்றும் குடிநீர் வரி பாக்கி வைத்துள்ளவரின் வீட்டிற்கான குடிநீர் இணைப்பை நகராட்சி ஊழியர்கள் துண்டித்தனர்.
25 / 31
கள்ளக்குறிச்சி அடுத்த பொற்படாக்குறிச்சியில் அரசு இடம் ஆக்கிரமிப்பு, ஐகோர்ட் உத்தரவுப்படி அகற்றப்பட்டது.
26 / 31
வெறுமை: பறவைகள் சரணாலயமான ராமநாதபுரம் சக்கரக்கோட்டை கண்மாய் தண்ணீரின்றி, வறண்டு காணப்படுகிறது.
27 / 31
திருப்பூர் மாவட்டம், பல்லடம் ராயர்பாளையத்தில் உள்ள நூற்பாலை குடோனில் ஏற்பட்ட தீ விபத்தில், பஞ்சு பேல்கள் எரிந்து நாசமாகின.
28 / 31
தமிழ்நாடு ஊராட்சி மன்ற தலைவர்கள் கூட்டமைப்பு பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி, எழும்பூர், ராஜரத்தினம் ஸ்டேடியத்திலிருந்து பேரணியாக சென்றனர்.
29 / 31
விருத்தாசலம் பெண்ணாடம் சாலையில் போக்குவரத்திற்கு இடையூறாக உலர வைக்கப்பட்டுள்ள உளுந்துச்செடிகள்.
30 / 31
சின்னசேலம் அருகே தெங்கியாநத்தம் கிராமத்தில் நீர்த்தேக்கத்தொட்டி கட்டும் இடத்தில் இருந்த ஆக்கிரமிப்பு அகற்றப்பட்டது.
31 / 31
'பருவ மழை பொய்த்ததால் திண்டுக்கல், பழநி சட்டப்பாறை பகுதியில் சூரியகாந்தி செடிகள் கருகி வருகின.'