தமிழகம்ஆல்பம்:

08-Feb-2013
1 / 32
தர்மபுரி அடுத்த காரிமங்கலம் பகுதியில் அதிக அளவில் சாகுபடி செய்யப்பட்டுள்ள கோழிகொண்டை பூக்கள் பூத்து, அந்த வழியாக செல்வோரின் பார்வையை கவர்ந்து வருகிறது.
2 / 32
கிட்னி பாதிப்பிற்குள்ளான, விருதுநகர் மாவட்டம் காரியாபட்டி அருகே பி.தொட்டியங்குளம் கிராமத்தினர்.
3 / 32
ஊட்டி கீழ் கோடப்பமந்து நீர் தேக்கத்தில் தண்ணீரின் அளவு வெகுவாக குறைந்து காணப்படுகிறது.
4 / 32
குன்னூரில் நடந்த சுயஉதவிக்குழுவின் பொருட்காட்சியில் இடம் பெற்ற மண்பாண்டங்களைஆர்வத்துடன் வாங்கும் பெண்கள்.
5 / 32
உடுமலை அமராவதி அணை அருகேயுள்ள விளைநிலங்களில் சாகுபடி செய்யப்பட்ட நெற்பயிர் பசுமையாக காட்சியளிக்கிறது.
6 / 32
வால்பாறை அரசு கலைக்கல்லூரி மாணவியருக்கு ஆழியார் அறிவு திருக்கோவில் சார்பில் "காயகல்ப பயிற்சி' அளிக்கப்பட்டது.
7 / 32
சென்னையில் இருந்து கன்னியாகுமரி செல்லும் விழிப்புணர்வு சைக்கிள் ஊர்வலத்தினர் கடலூர் வந்தனர்.
8 / 32
ராமநாதபுரத்தில் காலை 7.45 மணிக்கு அதிக பனிப்பொழிவு காணப்பட்டதால் வாகனங்கள் முகப்பு விளக்கை எரியவிட்டுஊர்ந்து சென்றன. இடம்: ரயில்வே பீடர் ரோடு.
9 / 32
தேவகோட்டை வாரச்சந்தை அருகேயுள்ள பழைய நகராட்சி பள்ளி கட்டடம் பானைகள் வைக்கும் இடமாக மாறிவிட்டது.
10 / 32
ராமநாதரபுரம் அருகே பட்டணம்காத்தான் கிழக்கு கடற்கரை சாலையில் அமைக்கப்பட்ட ரயில்வே மேம்பாலத்தில் தரக்குறைவாக ரோடு அமைக்கப்பட்டதால் விரிசல் ஏற்பட்டுள்ளது. இதனால் இதன் வழியாக போக்குவரத்து தடை செய்யப்பட்டுள்ளது. இது தெரியாமல் வருபவர்கள் மண் கொட்டி வைக்கப்பட்ட இடம் வரை வந்து ஏமாற்றத்துடன் திரும்பி ராமநாதபுரம் நகர் வழியாக கீழக்கரை ரோட்டில் செல்கின்றனர்.
11 / 32
சிவகங்கை-திருப்புத்தூர் ரோட்டில் அரசு மகளிர் கல்லூரி அருகே மாடுகள் திரிவதால் போக்குவரத்துக்கு இடையூறாக உள்ளது.
12 / 32
கிருஷ்ணகிரி புதிய பஸ் ஸ்டாண்ட் அருகில், கள்ளச்சாராய ஒழிப்பு குறித்த நடந்த விழிப்புணர்வு பேரணியில், பங்கேற்ற மாணவியர்கள்.
13 / 32
திருவண்ணாமலை ஆயுதப்படை மைதானத்தில், போலீஸருக்கு நடந்த புத்தாக்க பயிற்சியில், யோகா பயிற்சி அளிக்கப்பட்டது.
14 / 32
ராமேஸ்வரத்தில் உள்ள மண்டபம் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி எண். 1ல், சமச்சீர் கல்வி, செயல்விளக்க பாட முறை குறித்து, மாணவர்களிடம் கேட்டறிந்த ம.பி., கல்விக்குழு உறுப்பினர்கள்.
15 / 32
பல்வேறு சர்சைக்கு பின் வெளிவந்த கமலஹாசன் நடித்த விஸ்வரூபம் திரைப்படம் வெளியான திரையரங்கு முன் கமல் ரசிகர்கள் நீர் பூசனிக்காய் ஆரத்தி எடுத்து ஆரவாரம் செய்தனர்.
16 / 32
கரூர் மாவட்ட குளித்தலையில் உயிரிழந்த தி.மு.க., முன்னாள் மாநில மகளிர் தலைவி பொற்செல்வியின் உடலுக்கு பொருளாளர் ஸ்டாலின் அஞ்சலி செலுத்தினார். அருகில் அவரது மனைவி துர்கா.
17 / 32
சேலம் மார்க்கெட்டில் விற்பனைக்கு குவிந்துள்ள காலி பிளவர் பூக்கள்.
18 / 32
நாமக்கல் வேளாண் உற்பத்தியாளர்கள் கூட்டுறவு விற்பனைச் சங்கத்தில் நடந்த பருத்தி ஏலத்தில் வளக்கத்தை விட பருத்தி மூட்டைகள் வரத்து அதிகரித்திருந்தது.
19 / 32
மோகனூர் கூட்டுறவு சர்க்கரை ஆலைக்கு, அதிகமான பாரம் ஏற்றிச் சென்ற லாரி நாமக்கல் மணிகூண்டு அருகே பழுதடைந்து நின்றதால் போக்குவரத்து சிறிது நேரம் பாதிக்கப்பட்டது.
20 / 32
நாமக்கல் அடுத்த வேட்டாம்பாடி கிராமத்தில் தொற்று நோய் தடுப்பு நடவடிக்கையாக, எர்ணாபுரம் ஆரம்ப சுகாதார நிலைய மருத்துவ அலுவலர் ராஜேந்திரன் தலைமையில் வீடுவீடாக சென்று புகை மருந்து அடிக்கப்பட்டது.
21 / 32
ஈரோடு 32வது வார்டு கணபதி நகர் குடியிருப்போர் நலச்சங்கம் சார்பில் குடிநீர் பிரச்னை உள்ளதாக, ஈரோடு மாநகராட்சிக்கு புகார் மனு கொடுக்க வந்திருந்தனர்.
22 / 32
கோவை கோனியம்மன் கோவிலில், மழை வேண்டி துறவிகள் மலர் அர்ச்சனை செய்து,சிறப்பு வழிபாடு செய்தனர்.
23 / 32
தஞ்சாவூர் மாவட்டம், திருவையாறு ஐயாறப்பர் கோவில் கும்பாபிஷேகத்தை முன்னிட்டு, தங்க முலாம் பூசப்பட்ட ராஜ கோபுர கலசத்தில் சிவாச்சாரியார்கள் புனித நீர் ஊற்றினர்.
24 / 32
சென்னை தி.நகரில் உள்ள பத்மஷேசாத்ரி பாலபவன் பள்ளியில் கல்வி கண்காட்சி துவங்கியது. இதில், மாணவர்கள் தயாரித்த ரோபோவை பார்த்து வியக்கும் பெற்றோர்கள்.
25 / 32
தர்மபுரி அரசு கலைக்கல்லூரியில், தமிழ்நாடு மாநில மகளிர் ஆணையம் சார்பில் நடந்த கருத்தரங்கில், பேராசிரியர் சரஸ்வதி பேசினார்.
26 / 32
பண்ருட்டி அடுத்த அங்குசெட்டிப்பாளையம் அன்னை வேளாங்கன்னி பாலிடெக்னிக் மற்றும் செயின்ட் ஆன்ஸ் பொறியியல் கல்லூரியில் அறிவியல் மற்றும் தொழில்நுட்ப கண்காட்சி நடந்தது.
27 / 32
ஜமீன்முத்தூர் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி சார்பில் சுகாதாரம் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில், மாணவ, மாணவியரின் பேரணி நடந்தது.
28 / 32
குரு வணக்கம்: திருச்சி தேசியக்கல்லூரி மைதானத்தில், தி.மு.க., ராஜ்யசபா எம்.பி.,சிவாவின் மகள் திருமணத்துக்கு வந்த நடிகை குஷ்பூ, தி.மு.க., தலைவர் கருணாநிதியின் காலில் விழுந்து வணங்கினார்.
29 / 32
தமிழக அரசின் தடை நீக்கப்பட்டதையடுத்து நடிகர் கமலின் 'விஸ்வரூபம்' திரைப்படம் தமிழகம் முழுவதும் வெளியானது. சென்னையில் கமலின் 'கட் அவுட்'டுக்கு பால் அபிஷேகம் செய்யும் ரசிகர்கள்.
30 / 32
ராமேஸ்வரம் தனுஷ்கோடி கோதண்ட ராமர் கோயில் அருகே தேங்கி நிற்கும் நீரில், குளிர் கால சீசனை அனுபவிக்க, ஆஸ்திரேலியாவில் இருந்து குவிந்துள்ள பிளமிங்கோ பறவைகள்.
31 / 32
கொடைக்கானலில் பெய்த பலத்த மழை காரணமாக, வெள்ளி நீர்வீழ்ச்சியில் தண்ணீர் வரத்து அதிகரித்து காணப்படுகிறது.
32 / 32
தூத்துக்குடியில், பறிமுதல் செய்யப்பட்ட, விஸ்வரூபம் உள்ளிட்ட, புதுப்பட திருட்டு 'விசிடி'க்கள்.
Advertisement