தமிழகம்ஆல்பம்:

21-Feb-2013
1 / 20
விருதுநகர் கல்வி மாவட்ட அளவிலான உலகத் திறனாய்வு விளையாட்டு போட்டியில், மாணவிகளுக்கான ஓட்டப்பந்தயம் நடந்தது. இடம்: மாவட்ட விளையாட்டு அரங்கம்.
2 / 20
சிவகங்கை மாவட்டம், தாயமங்கலம் மெயின் ரோடு வழியாக பிற பகுதிக்கு செல்லும் காவிரி கூட்டு குடிநீர் வால்வு பகுதியிலிருந்து வெளியேறும் தண்ணீரை குடத்தில் சேசகரிக்கும் சிறுவன்.
3 / 20
மத்திய அரசை கண்டித்து பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி தொழிற்சங்கத்தினர் ஸ்டிரைக்கில் ஈடுபட்டனர்.சிவகங்கை இந்தியன் வங்கியில் ஊழியர்கள் பணிக்கு வராததால் வெறிச்சோடி காணப்பட்டது.
4 / 20
விருதுநகர் படேல் ரோட்டில், குடிநீர் வால்வு தொட்டிதிறந்து கிடப்பதால், வாகனங்கள் விபத்தில் சிக்கும் நிலை உள்ளது.
5 / 20
தொழிற் சங்கம் சார்பில் நடந்த வேலைநிறுத்தம் காரணமாக, வத்திராயிருப்பு ஊராட்சி ஒன்றிய அலுவலகம் பணியாளர்கள் இல்லாததால், வெறிச்சோடி காணப்பட்டது.
6 / 20
திண்டுக்கல் ஏ.எம்.சி.ரோட்டின் இருபுறமும் ஆக்கிரமிப்புகள் இருப்பதால் போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது.
7 / 20
லாடனேந்தல் வீரமாகாளி அம்மன் கோயில் கும்பாபிஷேகம் நடந்தது. விழாவில் (இடமிருந்து) டி.ஐ.ஜி., ராமசுப்பிரமணியன்,வேலம்மாள் கல்வி நிறுவன தலைவர் எம்.வி.முத்துராமலிங்கம், லாடனேந்தல் ஊராட்சி தலைவர் எம்.வி.முத்துச்சாமி.
8 / 20
விருதுநகர் மாவட்டம், சாத்தூர் நான்குவழிச்சாலை சர்வீஸ் ரோட்டில் கற்கள் பெயர்ந்ததினால், ஏற்பட்ட பள்ளத்தில் வாகனங்கள் தத்தளித்து செல்கின்றன.
9 / 20
விருதுநகர் படேல் ரோட்டில் கழிவுநீர் தேங்கி சேறும், சகதியுமாக காணப்படுகிறது.
10 / 20
விருதுநகர் டி.டி.கே., ரோட்டில் வாறுகால் அமைக்க தோண்டப்பட்ட குழியில் தடுப்புகள் அமைக்காததால், விபத்து ஏற்படும் அபாயம் உள்ளது.
11 / 20
திண்டுக்கல் கோட்டை மாரியம்மன் கோயில் மாசித்திருவிழாவை முன்னிட்டு, அம்மன் ராஜராஜேஷ்வரி அலங்காரத்தில் பக்தர்களுக்கு அருள் பாலித்தார்.
12 / 20
விபத்து குறித்து எத்தனை முறை விழிப்புணர்வு ஏற்படுத்தினாலும், நேரத்தை குறைப்பதற்காக, அரசு பஸ் ஒரு வழிப்பாதையில் விதிமீறி எதிரில் செல்வதால், விபத்து அபாயம் உள்ளது. இடம்:விருதுநகர் நான்குவழிச்சாலை வடமலைக்குறிச்சி பிரிவு.
13 / 20
ராமநாதபுரம் மாவட்டம், முதுகுளத்தூர் அருகே புளியங்குடியில் பூட்டியே கிடக்கும் நூலகம்.
14 / 20
ராமேஸ்வரம் ராமநாதசுவாமி கோயிலின் துணை கோயிலான பால சவுந்தரி அம்மன் கோயிலில், கும்பாபிஷேகத்தையொட்டி கலசத்திற்கு புனித நீர் ஊற்றப்பட்டது.
15 / 20
தேனி மாவட்டம், வெண் பஞ்சு மேகக் கூட்டம்,மலைகள் முகடுகளில் தொட்டுத் தழுவி செல்லும் அழகே பேரழகு. இடம்:சின்னமனூர்.
16 / 20
தேனி லேக் ரோட்டில் , மழைநீர் தேங்குவதால் சகதிக்காடாக உள்ளது.
17 / 20
தேனி, போடி தீர்த்தத்தொட்டி அருகே மினி பஸ் மேற்கூரையில் அமர்ந்து ஆபத்தான பயணம் செய்கின்றனர்.
18 / 20
பெரியகுளம் செவன்த்டே மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி ஆண்டுவிழாவில், மாணவர்களின் கலை நிகழ்ச்சி நடந்தது.
19 / 20
அமைந்தகரை பூந்தமல்லி நெடுஞ்சாலையில் சமீபத்தில் பெய்த மழையால், மழை நீர் செல்ல வழியின்றி தேங்கி நின்றது.இதனால் பாதசாரிகள் ஆபத்தான நிலையில் சாலையின் நடுவே நடந்து சென்றனர்.
20 / 20
காஞ்சிபுரம் காமாட்சியம்மன் பல்லக்கில் வீதியுலா வந்தார். உள்படம்: மோகினி அலங்காரத்தில் வீதியுலா வந்த காமாட்சியம்மன்.
Advertisement