தமிழகம்ஆல்பம்:

22-Feb-2013
1 / 20
உலக தாய்மொழி தினத்தை முன்னிட்டு கல்லூரி மாணவியர், வளரும் தலைமுறைக்கு வழிகாட்டும் விதமாக தமிழ் வாழ்க' என எழுத்துக்களாக நின்று, தமிழை வளர்க்க, உறுதி மொழி எடுத்துக் கொண்டனர். இடம் : அண்ணாநகர், வள்ளியம்மாள் கல்லூரி.
2 / 20
ராமநாதபுரம் மாவட்டம் பாம்பன் சாலை பாலத்தில் பொருத்தப்பட்ட, நகரும் இரும்பு சாரம், சோதனை ஓட்டம் வெற்றிகரமாக முடிந்து,பாலத்தின் நடுப்பகுதி அருகே கொண்டு வரப்பட்டது.
3 / 20
சில நேரத்தில் இப்படியும் வேலை செய்ய வேண்டியிருக்கு, காஞ்சிபுரம் செவிலிமேடு பாலாற்றில், திருட்டு மணல் எடுத்ததால் பிடிக்கப்போன காவலர்களை கண்டு வண்டி உரிமையாளர்கள் ஓடியதால், மாட்டு வண்டியை காவல் நிலையத்திற்கு ஓட்டிச் செலும் போலீசார்.
4 / 20
இந்திய ரயில்வே சார்பில், சென்னை சென்டரல் ரயில் நிலையத்தில், புதிதாக துவங்கப்பட்டுள்ள துரித உணவகம்.
5 / 20
பழநிகோயில் மெட்டீரியல் ரோப்கார் பயன்பாட்டிற்கு வந்ததையடுத்து பஞ்சாமிர்தம் ஏற்றி செல்லப்பட்டது.
6 / 20
கடந்த ஆண்டு மழை பொய்த்ததால், சென்னைக்கு குடிநீர் வழங்கும் புழல் ஏரியில் தற்போது நீர் மட்டம் குறைவாகவே உள்ளது.
7 / 20
அபாயகரமான தடுப்பு : ராஜீவ்காந்தி சாலை எஸ். ஆர்.பி. டூல்ஸ் அருகில் சாலையில் இப்படி அபாயகரமாக இரும்பு தடுப்பை அமைத்துள்ளதால் விபத்து நிகழும் வாய்ப்பு உள்ளது. இதனை போக்குவரத்து போலீசார் கவனிப்பார்களா?
8 / 20
5வது ஹிந்து ஆன்மிகம் மற்றும் சேவைக்கண்காட்சியில் பொதுமக்களின் பார்வைக்காக வைக்கப்பட்டிருந்த சுவாமி ரதம்.
9 / 20
பழவேற்காடு பகுதியில் கடல் அரிப்பை தடுத்து, மீன் வளர்ச்சிக்கு உதவும் அலையாத்தி காடுகள் பழவேற்காடு பகுதியில் வனத் துறையினரால் வளர்க்கப்பட்டு வருகிறது.
10 / 20
"ஆவின்' நிறுவனம் சார்பில், புதிதாக தயாரிக்கப்பட்டுள்ள, மில்க் சாக்லெட்டை, முதல்வர் ஜெயலலிதா சென்னையில், அறிமுகம் செய்து வைத்தார்.
11 / 20
சேலம் - கரூர் அகல ரயில் பாதையில், சேலம் ஜங்ஷனிலிருந்து கரூர் வரை, அதிவேக ரயில் முன்னோட்டம் விடப்பட்டது.
12 / 20
கடலூர் மாவட்டம், விருத்தகிரீஸ்வரர் கோவில் மாசிமக உற்சவத்தில், விபசித்து முனிவருக்கு அருள்பாலித்த பின்னர் பஞ்ச மூர்த்திகள் அலங்கார வாகனங்களில் வீதியுலா புறப்பட்டது.
13 / 20
கோவை அவினாசி ரோட்டில் உள்ள கஸ்தூரி சீனிவாசன் அறநிலையத்தின் நான்காவது வெள்ளி விழா ஓவியக் கண்காட்சி நடந்தது, மாணவிகள் கண்காட்சியினை ஆர்வமுடன் பார்த்தனர்.
14 / 20
கோவை கரும்பு ஆராய்ச்சி நிறுவனம்-இந்திய ஆராய்ச்சி நிறுவனங்களின் சார்பில் தென்மண்டல அளவில் அனைத்து ஆராய்ச்சி நிறுவனங்களுக்கான விளையாட்டு மற்றும் தடகள போட்டி 3வது நாளாக நேரு ஸ்டேடியத்தில் நடந்தது. இதில் பெங்களூரு ஐ.ஐ.எச்.ஆர்.,அணி வீரர்களும்,கேரளா "சிபிசிஆர்ஐ' அணி வீரர்களும் மோதிக்கொண்ட காட்சி.
15 / 20
கோவை மாநகராட்சி பகுதிகளில் கட்டிடம் கட்டும் பணிக்கான அனுமதி குறித்த தகவல்கள் செல்போன் மூலம் எஸ்.எம்.எஸ்.,அனுப்பும் பணி துவங்கியது.
16 / 20
திருச்சி ஸ்ரீரங்கம் ரங்கநாதர் கோவில் மாசி தெப்போற்சவம் நேற்று முன்தினம் இரவு நடந்தது. நம்பெருமாள் சர்வ அலங்காரத்துடன் தெப்பத்தில் எழுந்தருளி, பக்தர்களுக்கு ஸேவை சாதித்தார்.
17 / 20
அரசு விரைவு பஸ்களில் "சேம் டே டெலிவரி' எனப்படும் 7"சி' கூரியர் சர்வீஸ் துவங்கப்பட்டுள்ளது. மாலை 7 மணிக்கு புக் செய்தால், காலை 7 மணிக்கு டெலிவரி செய்யப்படும். திருச்சி சென்ட்ரல் பஸ்ஸ்டாண்டில், புதிதாக துவங்கப்படள்ள கூரியர் சர்வீஸ் டெலிவரி கவுண்டரில், ஒருவர் பார்சல் புக் செய்கிறார்.
18 / 20
விலையோ குறைவு...விளைச்சலோ அதிகம்...விற்பனைக்கு தயாராக கொடி பந்தலில் திராட்சை கொத்துகள். இடம்:கம்பம் அருகே, சுருளிஅருவிரோடு.
19 / 20
கோடையின் தாக்கம்: கொளுத்தும் கோடை வெயில் தாக்கத்தால் இலைகள் எல்லாம் உதிர்ந்து விட்ட சோகத்தில் நிற்கும் மரம். இடம் நாகர்கோவில் கோர்ட் வளாகம்.
20 / 20
பல்வேறு வழக்குகளில் ஜப்தி செய்யப்பட்டு நாகர்கோவில் கோர்ட் வளாகத்தில் நிறுத்தப்பட்டுள்ள அரசு பஸ்கள்.
Advertisement