தமிழகம்ஆல்பம்:

05-Mar-2013
1 / 20
படியில் பயணம் நொடியில் மரணம் என எத்தனை முறை உரைத்தாலும் கேட்காதவர்கள் போல் மீண்டும் பேருந்தின் படியில் நின்று கொண்டு பயணம் செய்வது தொடர்ந்த வண்ணம் தான் உள்ளது. இடம் : வேளச்சேரி.
2 / 20
மதுரை மகாத்மாகாந்திநகர் அல்லிமலர் தெருவில் கிடந்தஆதார்அடையாளஅட்டைஒப்புகை சீட்டுகள்.
3 / 20
ஈரோடு, பூம்புகார் விற்பனை நிலையத்தில் வீட்டு உபயோக பொருள் கண்காட்சியை, ஈரோடு மாவட்ட தொழில், வணிக சங்க கூட்டமைப்பு தலைவர் சிவநேசன் துவக்கி வைத்து பார்வையிட்டார். அருகில் மேலாளர் கோபிகண்ணன்.
4 / 20
குண்டு மல்லி விலை குறைந்ததை தொடர்ந்து, கிருஷ்ணகிரி காந்தி ரோட்டில் சாலையோரங்களில் விற்பனைக்கு குவித்து வைக்கப்பட்டுள்ள குண்டு மல்லிப்பூக்கள்.
5 / 20
சேலம் புது பஸ் ஸ்டாண்டு கடைகளில் மாநகராட்சி அதிகாரிகள் சோதனை நடத்தி விதிகளுக்கு புறம்பாக புழக்கத்தில் உள்ள பிளாஸ்டிக் பைகளை பறிமுதல் செய்தனர்.
6 / 20
கள்ளக்குறிச்சியில் போக்குவரத்து போலீசார் வாகன தணிக்கை செய்து, முறையான ஆவணங்கள் இல்லாமல் ஓடிய இருசக்கர வாகனங்களுக்கு அபராதம் விதித்தனர்.
7 / 20
தேர்வில் வெற்றி பெற வாழ்த்து : தமிழகத்தில் அரசியல் கட்சி தலைவர்கள் , பிறந்தநாள் வாழ்த்துக்கு பேனர் வைப்பார்கள். ஆனால் பள்ளி மாணவர்கள் பொதுத்தேர்வு எழுதுவதற்கு வாழ்த்து தெரிவித்து டிஜிட்டல் பேனர் வைத்துள்ளனர். இடம் : விழுப்புரம் அடுத்த பானாம்பட்டு.
8 / 20
பஸ்சுக்குள்ள குடிநீர் குழாய் இல்லீங்க : சேலம் - புதுச்சேரி செல்லும் அரசு விரைவு "டப்பா' பஸ்சுல பட்டை உடைந்து டீசல் டேங்க் ஓட்டையாகி டீசல் ஒழுகியதால் அக்கம் பக்கத்தில் உள்ளவர்களிடம் குடங்களை வாங்கி டீசல்தாங்க பிடிக்கறாங்க. இடம்: கடலூர் மாவட்டம், பண்ருட்டி அடுத்த தட்டாஞ்சாவடி.
9 / 20
தியாகதுருகம் புறவழிச்சாலையில் உள்ள அபாயகரமான வளைவுடன் அமைக்கப்பட்டுள்ள பாலத்தில் அதிக வேகமாக வரும் வாகனங்கள் நெருக்கமாக செல்வதால்விபத்து அபாயம் தொடர்கிறது.
10 / 20
ஊத்துக்கோட்டை பேரூராட்சியில் உள்ள சாலைகளில் கால்நடைகள் அதிகளவில் சுற்றிதிரிவதால் வாகன ஓட்டிகள் அவதிப்படுகின்றனர்.
11 / 20
கிருஷ்ணகிரி மாவட்டம், ஓசூர் அடுத்த பீர்ஜேப்பள்ளியில், யானைகள் அடிக்கடிகடந்து செல்லும் பகுதியில், யானைகள் வருகையை முன் கூட்டி தெரிவிக்கும், "பிராக்சிமிட்டி டிடெக்டர்' என்ற அபாய ஒலி எழுப்பும் கருவியை வனத்துறையினர் பொருத்தியுள்ளனர்.
12 / 20
புட்லூர் ரயில் நிலைய கடவு பாதையில், சீரற்ற முறையில் பதிக்கப்பட்ட கற்களால், வாகன ஓட்டிகள் கடும் அவதிப்படுகின்றனர்.
13 / 20
திருத்தணி நகராட்சிக்கு உட்பட்ட பாபிரெட்டிப்பள்ளி பகுதியில் பேருந்துகள் நிற்காமல் செல்வதால் மாணவர்கள், நான்கு கி.மீ., தூரம் பள்ளிக்கு நடந்து செல்கின்றனர்.
14 / 20
தாம்பரத்தில் சமீபத்தில் திறக்கப்பட்ட " நம்ம டாய்லெட்' ( உள்படம்) டாய்லெட்டை பயன் படுத்தும் பொதுமக்கள் அங்கு வைக்கப்பட்டிருக்கும் நோட்டில் "கமெண்ட்ஸ் ' சை எழுதி வைக்கின்றனர்.
15 / 20
இரவில் கடும் குளிர் மற்றும் பகலில் வெய்யில் என பருவ நிலை தொடர்வதால் அதிகாலை வேளையில் சாலை எங்கும் ஒரே பனி மூட்டமாக காணப்படுகிறது. இடம் : பள்ளிக்கரணை.
16 / 20
சென்னை கோயம்பேடு புறநகர் பேருந்து நிலையத்தில் சி.எம்.டி.ஏ., வால் உணவகத்திற்காக ஒதுக்கப்பட்ட இடம் பயண்பாட்டிற்கு வராமல் உள்ளது.
17 / 20
ஆண்டவன் அழகை அள்ளிக் கொடுத்திருந்தாலும், ஜீவனை காத்துக் கொள்ள இயற்கை உணவளிக்க வேண்டுமே'என, கண்ணுக்கெட்டிய தூரம், காய்ந்து போன வயல்காடுகளில், பசிக்கு ஏதாவது தீவனம் கிடைக்கிறதா என ஏக்கத்துடன் தேடு திரியும் அழகிய மயில்கள். இடம்: கீரனூர் அருகே, திருச்சி - புதுக்கோட்டை சாலை.
18 / 20
பாம்பன் ரயில் பாலத்தில், கப்பல் மோதி சேதமடைந்த 121வது தூணில், தற்காலிகமாக அமைக்கப்பட்டுள்ள, இரும்பு கிரில் தூணை கடந்து செல்லும் ரயில்.
19 / 20
அய்யா வைகுண்டரின், 181வது அவதார தினத்தையொட்டி, திருச்செந்தூர் கடற்கரையில் உள்ள, அவரது பதியில், கடலில் பதமிடும் நிகழ்ச்சிக்காக, ஏராளமான அய்யா வழிபக்தர்கள் திரண்டனர்.
20 / 20
வேலூர் மத்திய சிறையில் காலணி தொழிற்கூடத்தில் ஷூ தயாரிப்பு பணியில் ஈடுபட்டுள்ள கைதிகள்.
Advertisement