தமிழகம்ஆல்பம்:

19.3.2013
1 / 20
சென்னையில் உள்ள அரசு மருத்துவ கல்லூரியை சேர்ந்த மாணவர்கள் இலங்கை தமிழர்களுக்கு ஆதரவாக வாயில் துணியை கட்டியவாறு மாவட்ட ஆட்சி தலைவர் அலுவலகம் அருகே போராட்டம் நடத்தினர்.
2 / 20
தம்பியின் கும்பாபிஷேகத்தை காண வந்த அண்ணன்கள்...! கோவை மருதமலையில் நேற்று நடந்த கும்பாபிஷேக விழாவின் போது அருகே உள்ள வன பகுதியில் ஜாலியாக உலா வந்த காட்டு யானைகள்
3 / 20
பட்டு நூலுக்கு கூடுதலாக 10 சதவீத வரி விதிக்கப்படுவதை கண்டித்து, நேற்று முதல் ஒரு வாரத்துக்கு பட்டு நூல் உற்பத்தியை நிறுத்துவது என சிறுமுகை வட்டார உற்பத்தியாளர்கள் முடிவு செய்துள்ளனர்.
4 / 20
இலங்கை தமிழர்பிரச்னைதொடர்பாக, மதுரையில்அனைத்து கல்லூரி மாணவர்களின்ஊர்வலம் நடந்தது.
5 / 20
முன்பெல்லாம் எங்கு மேய்ந்தாலும் பச்சை இலை,தழைகள் கிடைக்கும்... இப்போதோ, பாலிதீன் பைகள்தான் கிடைக்கின்றனவாம், இந்த ஆடுகளுக்கு.இடம்: ராமநாதபுரம் அருகே கூரியூர்.
6 / 20
காரைக்குடி அழகப்பா பல்கலை,.உடற்கல்வியியல் மைதானத்தில் கல்லூரி மாணவர்களுக்கான மாநில கால்பந்தாட்டம் போட்டி நடந்தது.
7 / 20
கண்டுகொள்ளாத காவல்துறை: போலீசார் கண்டுகொள்ளாததால், சரக்கு வாகனத்தில்ஆட்களை ஏற்றி செல்வது தொடர்கிறது. இடம்: சாத்தூர் நான்குவழிச்சாலை.
8 / 20
ஆண்டு முழுவதும் தண்ணீர் கொட்டும் ஒட்டன்சத்திரம் விருப்பாட்சி தலையூற்று அருவி தற்போது வறண்டுள்ளது. அடுத்த படம்: கடந்தாண்டு இதே மாதத்தில் அருவியில் நீர் கொட்டியது.
9 / 20
சின்னமனூர் அருகே கீழபூலாநந்தபுரம் செங்குளம் கண்மாய் நீர்வற்றி குட்டைபோல் மாறியது.
10 / 20
தங்களது குடியிருப்பு பகுதிக்கு குடிநீர் வழங்கக்கோரி நாமக்கல் மாவட்ட கலெக்டரிடம் மனு கொடுக்க காலிக்குடங்களை எடுத்து வந்த பெரியப்பட்டி எம்.ஜி.ஆர்., நகர் பொதுமக்கள்.
11 / 20
பங்குனி உத்திரம் திருவிழா துவக்கம்: சேலம் ஜாகிர்அம்மாபாளையத்தில் உள்ள காவடி பழனியாண்டவர் கோவிலில், நேற்று பங்குனி உத்திரம் கொடியேற்று விழா நடந்தது. முன்னதாக, பக்தர்கள் காவடி எடுத்து ஆடிப்பாடி வலம் வந்தனர்.
12 / 20
குழந்தை பெற்ற பெண்களுக்கு அரசு வழங்கும் நிதியை பெற சேலம், அரசு மருத்துமனையில் பல மணிநேரம் குழந்தைகளுடன் பெண்கள் காத்திருந்தனர்.
13 / 20
இலங்கை தூதரகத்தை முற்றுகையிட்டு 21 ஆம் தேதி ஆர்ப்பாட்டம் நடத்த உள்ள திருவண்ணாமலை அரசு கலைக்கல்லூரி மாணவர்கள் நேற்று சென்னை நோக்கி நடைபயணம் தொடங்கினர்.
14 / 20
திருப்பூர் மாநகராட்சி சார்பில் வாங்கப்பட்ட ஆம்புலன்ஸ்கள் பயன்படுத்தப்படாமல்,குமார் நகர் மேல்நிலை குடிநீர் தொட்டி வளாகத்துக்குள் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன.
15 / 20
வேலாயுதம்பாளையம் வலம்புரி சக்தி விநாயகர் கோவில் கும்பாபிஷேக விழாவில் கோமாதா பூஜை நடந்தது.
16 / 20
தஞ்சாவூர் கலெக்டர் அலுவலகத்தில் நடந்த குறைதீர் கூட்டத்தில் தேசிய மற்றும் மாநில அளவிலான வாலிபால் போட்டியில் வெற்றி பெற்ற மாணவியர்களுக்கு தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் சார்பில் விளையாட்டு உபகரணங்கள் வாங்கிட ரூபாய் ஆறாயிரத்துக்கான காசேசாலையை கலெக்டர் பாஸ்கரன் வழங்கினார்.
17 / 20
பருவமழை பொய்த்துப் போன நிலையில் வாட்டி வதைக்கும் வெயிலுக்கு தண்ணீர் தட்டுப்பாடு ஏற்படும் நிலை உருவாகியுள்ளது. தண்ணீரை வீணடிக்காமல் செமியுங்ளேன். தள்ளாத வயதில் உச்சி வெயில் மண்டையை பிளக்க தண்ணீரை சுமந்து வரும் பெரியவர். இடம் - கடற்கரை ரயில் நிலையம் எதிரே.
18 / 20
கடமை,கண்ணியம்,கட்டுபாடு, பொறுப்புள்ள போலிஸ் அதிகாரிதொப்பி எங்கே? இடம்:சென்னை மைலாப்பூர் கபாலீஸ்வரர் கோயில்
19 / 20
காஞ்சிபுரம் ஏகாம்பரநாதர் கோவிலில், சூரிய பிரபை உற்சவம் நேற்று காலை கோலாகலமாக நடந்தது.
20 / 20
பொன்னேரி அனுப்பம்பட்டு ரயில் நிலையங்களுக்கு இடையே உள்ள புலிக்குளம் ஆளில்லாத ரயில்வே கடவு பாதை.
Advertisement