தமிழகம்ஆல்பம்:

22-Mar-2013
1 / 20
மலர் தூவி வரவேற்பு: உடுமலை அருகே திருமூர்த்தி நகர் ரோட்டோரங்களில், மரங்களிலிருந்து விழும் மஞ்சள் நிற பூக்கள் மலர் தூவி வரவேற்பதை போன்று காட்சியளிக்கிறது.


2 / 20

பிளஸ் 2 தேர்வு காரணமாக, திண்டுக்கல் கோபால சமுத்திர மேற்கு கரை ரோட்டில், பள்ளிக்கு வரும் மாணவர்கள் மதியவேளையில் நீண்டநேரம், நிறுத்தப்படுவதால் விபத்து அபாயம் உள்ளது.


3 / 20

உடுமலை திருமூர்த்தி அணை தண்ணீர் இல்லாமல், நீர் மட்டம் குறைந்து வருவதால், குடிநீர் தட்டுப்பாடு ஏற்படும் அபாயம்உள்ளது.


4 / 20

தர்மபுரியில், நேரு யுவகேந்திரா சார்பில் நடந்த மாவட்ட இளைஞர் கலைவிழாவில்,தப்பாட்ட நிகழ்ச்சி பார்வையாளர்களை கவர்ந்தது.


5 / 20

தமிழகத்தில் அதிகரித்து வரும் மின் தடை காரணமாக ஜெனரேட்டர் பயன்பாடு அதிகரித்துள்ளது. இந்நிலையில் டீசல் விலை உயர்வு எதிரொலியாக, தற்போது பெரும்பாலான ஜெனரேட்டர்கள் காஸ் மூலம் இயக்கப்படுகிறது.


6 / 20

மாவட்ட வனத்துறை சார்பில் நாமக்கல் தெற்கு அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி வளாகத்தில் நடந்த உலக வன நாள் விழாவை, மாவட்ட வன அலுவலர் பத்மாவதி மரக்கன்று நட்டு துவக்கி வைத்தார்.


7 / 20

நாகை மாவட்டம் தரங்கம்பாடி தாலுக்கா சின்னங்குடி கிராமத்தில் இலங்ø கயில் நடந்த இனப்படுகொலை, இலங்கை கடற்படையால் தொடர்ந்து தமி ழக மீனவர்கள் தாக்கப்படுவதை கண்டித்து படகுகளில் கட லுக்குள் மீனவர்கள் கடல் நீரில் தொடர் பட்டினி போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.


8 / 20

வனவிலங்குகளுக்கு தண்ணீர் வழங்கும் வகையில், சிறுமுகை வனப்பகுதியில், வனத்துறையினர் சார்பில், வில்வகுட்டை என்ற இடத்தில், குளம் அமைக்கப்பட்டுள்ளது. இதில், தாகத்தை தணித்து கொள்ளும் வனவிலங்குகள்.


9 / 20

இது ரெகுலர் தான்: விதிமுறையை மீறி சரக்குவாகனத்தில் ஆட்களை ஏற்றிச் செல்வதை போலீசார் கண்டு கொள்ளாதது ஏனோ?. இடம்: பழநி பஸ் ஸ்டாண்ட் ரவுண்டானா.10 / 20

தேனி குன்னூர் அருகே, அறுவடை செய்யப்பட்ட மக்காச்சோளத்தை குவிக்கும் பணியில் ஈடுபட்டபெண்.11 / 20

பெரியகுளம் டி.கள்ளிபட்டி அருகே, ரோட்டோரத்தில் குப்பைக்கு தீ வைத்து எரிப்பதால் அப்பகுதி முழுவதும் புகைமண்டலமாக உள்ளது.


12 / 20

வறட்சியிலும் செழிப்பு: கல்குறிச்சி அருகே வலையங்குளத்தில், கிணற்று பாசனத்தில் வளர்ந்துள்ள சூரிய காந்தி பூக்கள்.13 / 20

காரியாபட்டி அருகே பெ.புதுப்பட்டி கிராமத்தினர் 2 கி.மீ., தூரம் உள்ள, குண்டாற்றில் 10 அடி ஆழத்தில் ஊற்று தோண்டி, காத்திருந்து தண்ணீர் பிடித்து செல்கின்றனர்.


14 / 20

கடலாடி ஊராட்சி ஒன்றிய அலுவலக வளாகத்தில் பாதுகாப்பின்றி கிடக்கும் இரும்பு கம்பிகள் மழை, வெயிலில் துருப்பிடித்து வீணாகி வருகின்றன.


15 / 20

கரூர் தாந்தோணியில் தமிழ்நாடு வனத்துறை சார்பில் நடந்த உலக வனநாள் விழா விழிப்புணர்வு கருத்தரங்கில் கலெக்டர் ஜெயந்தி இயற்கை வளங்களை பாதுகாப்பது குறித்து பேசினார்.


16 / 20

நாமக்கல் அடுத்த கல்யாணி பகுதி மக்களுக்கு வழங்குவதற்காக நாமக்கல் ஆர்.டி.ஓ., அலுவலகத்தில் இருந்து விலையில்லா மிக்ஸி, கிரைண்டர், ஃபேன் ஆகியவை கொண்டு செல்லும் பணியில் ஈடுபட்டுள்ள தொழிலாளர்கள்.


17 / 20

சேலத்தில் கோடை துவங்கும் முன்னரே நாளுக்கு நாள் வெய்யிலின் தாக்கம் அதிகரித்து வருவதை தொடர்ந்து, தொப்பி விற்பனை சூடு பிடித்துள்ளது. (இடம் : சேலம் அஸ்தம்பட்டி ரவுண்டான.18 / 20

இரத்த சோகை தாக்கப்பட்ட வரிக்கழுதை புலிக்கு இந்தியாவில் முதல் முறையாக வண்டலூர் உயிரியல் பூங்காவில் இரத்த மாற்று சிகிச்சை மேற்கொள்ளப்பட்டது.19 / 20

கும்மிடிப்பூண்டியில் உள்ள இலங்கை தமிழர் அகதிகள் முகாமில், இலங்கை பிரச்னை தொடர்பாக சிறியவர்கள் முதல் பெரியர்வகள் வரை ஆயிரத்துக்கும் மேற்பட்ட அகதிகள் உண்ணாவிரதம் போராட்டம் மேற்கொண்டனர்.20 / 20

இலங்கைக்கு எதிராக கடற்கரைச்சாலை உத்தண்டியில், கடல்சார் பல்கலைக்கழக மாணவர்கள் அடையாள உண்ணாவிரதம் இருந்தனர்.Advertisement