தமிழகம்ஆல்பம்:

26-Mar-2013
1 / 20
மேட்டுப்பாளையம் அருகேயுள்ள பாலப்பட்டி பகுதியில், பூத்துக் குலுங்கும் செண்டுமல்லி பூக்கள்.
2 / 20
பங்குனித் பெருவிழாசைகுவ முன்னிட்டு சென்னை அமைந்தகரை ஏகாம்பரேஸ்வரர் கோவிலில் பல்லக்கு உற்ச்சவம் நேற்று நடந்தது.இதில் காமாட்சி சகிதம் ஏகாம்பரேஸ்வரர் வீதி உலா வந்து பக்தர்களுக்கு அருள் பாலித்தனர்.
3 / 20
ஆர்.கே.பேட்டை பகுதியில், பரீட்சைக்கு படிக்கிறோம் என்ற போர்வையில், புத்தகத்தை மரத்தடியில் வைத்துவிட்டு, கொடுக்காப்புளி மரத்தில் பழம் பறிக்கும் மாணவர்கள்.
4 / 20
ராமநாதபுரம் அரசு டவுண்பஸ் 11ல் இருந்து வரும் கரும்புகை சுற்றுச்சூழலுக்கு மாசு ஏற்படுத்துகிறது. "மாசு, தூசு' என எதையும் லட்சியப்படுத்தாமல், விபத்திற்கு வழி வகுக்கும் வகையில், மொபைல்போனில் பேசியபடி டூவீலரில் செல்வோர், குடும்பத்தையும் கொஞ்சம் நினைக்க வேண்டும்.
5 / 20
மேற்கு தொடர்ச்சி மலையில் பலத்த மழை பெய்ததால், ராஜபாளையம்மலையடிவார அய்யனார்கோயில்ஆற்றில், நீர் வரத்துள்ளது.
6 / 20
சுகாதாரம் என்ன விலை: குடிநீர் குழாய் கசிவு நீரை பிடித்துச் öOஉல்லும் கிராமபெண்கள். இடம்: நரிக்குடி அருகே சாத்திசேரி.
7 / 20
வடுகபட்டி வராகநதியில், திருட்டுத் தனமாக மணல் அள்ளுவதால், நீர் நிலைபாதிக்கப்பட்டு வருகிறது.
8 / 20
சோமனூர் அருகே சாமளாபுரம் நொய்யல்ஆற்றில் பலஆயிரம் மீன்கள் செத்து மிதக்கின்றன.
9 / 20
உலக வனப்பெருக்க தினத்தை முன்னிட்டு, அகலார் குருகுலம் பள்ளி மாணவர்களுக்கு நீலகிரி கானுயிர் சங்கம் சார்பாக, முக்கூர்த்தி தேசிய பூங்காவில் விழிப்புணர்வு நிகழ்ச்சி நடத்தப்பட்டது
10 / 20
கூடலூர் புளியாம்பாறைமுண்டகுன்னுகிராம மக்கள்ஆற்றை கடக்க பயன்படுத்தும் தற்காலிகமரப்பாலம்.
11 / 20
உடுமலை, பொள்ளாச்சி பகுதிகளில், விவசாயத்தில் இணைத் தொழிலாக பட்டுப்புழு வளர்ப்பு கடந்த சில ஆண்டுகளில் வேகமான வளர்ச்சி பெற்றுள்ளது.தொழில் வளர்ச்சிக்கு வேகத்தடையாக அமைந்த விற்பனை பிரச்னைக்கு நிரந்தர தீர்வுகாண "ரீலிங் யூனிட்' அமைக்க வேண்டும் என பல ஆண்டுகள் கோரிக்கை கிடப்பில் போடப்பட்டுள்ளது.
12 / 20
டெல்டா மாவட்டங்களில் கொள்முதல் செய்யப்பட்ட நெல் மூட்டைகள், திருப்பூர் நுகர்பொருள் வாணிப கழக கிடங்கில் இருப்பு வைக்கப்பட்டுள்ளன.
13 / 20
ஏ.கே.ஆர்., பள்ளி மாணவர்களுக்கு, நிகான்ஷிட்டோ ரியு கராத்தே அமைப்பு சார்பில், கராத்தே திறனாய்வு தேர்வு நடந்தது; மாணவ, மாணவியருக்கு பள்ளி முதல்வர் பிரபா சான்றிதழ், பெல்ட் வழங்கினார்.
14 / 20
கழிப்பிடம் கட்டித்தரக்கோரி, திருப்பூர் பள்ளபாளையம் அண்ணா நகர் பகுதி பொதுமக்கள், கலெக்டர் அலுவலகத்திற்கு கண்களில் கறுப்பு துணி கட்டிக்கொண்டு மனு கொடுக்க வந்தனர்.
15 / 20
ஈரோடு மாவட்டம் கொடுமுடி காவிரி ஆற்றில் தீர்த்தம் எடுப்பதற்காக நாள் ஒன்றுக்கும், பத்தாயிரத்துக்கும் மேற்பட்ட முருகன் பக்தர்கள் ஊர்வலமாக செல்கின்றனர்.
16 / 20
தர்மபுரி, அன்னசாகரம் சுப்பிரமணிய ஸ்வாமி கோவிலில் நடந்த திருக்கல்யாணத்தின் போது, வள்ளி, தெய்வானை சமேதரராய் முருகர் சிறப்பு அலங்காரத்தில் அருள் பாலித்தார்.
17 / 20
அரூர் அடுத்த கோட்டப்பட்டி பகுதியில் முகாமிட்டுள்ள யானைகள்.
18 / 20
சேலம் மாநகராட்சியில் 2013-2014ம் ஆண்டுக்கான பட்ஜெட்டை தாக்கல் செய்த மேயர் சவுண்டப்பன், மாநகராட்சி கமிஷனர் அசோகன், துணைமேயர் பன்னீர்செல்வம், நிதிக்குழுத்தலைவர் மாணிக்கம்.
19 / 20
மூடப்பட்டுள்ள வேலாயுதம்பாளையம் புகளூர் ரயில்வே கேட்டில் ஆபத்தான முறையில் நுழைந்து செசல்லும் பொதுமக்கள்.
20 / 20
பூமிதான் நமக்கு சாமி: சம்பா சாகுபடி விவசாயிகளின் காலை வாரியபோதும், அதை தாளடி சாகுபடியில் சரி செய்து விடலாம் என்ற நம்பிக்கையோடு, திருச்சி வயலூர் சாலை சீனிவாச நகர் பகுதியில் உள்ள வயலில் மறுநாற்று நடும் பணியில் ஈடுபட்டுள்ள பெண்கள்.