தமிழகம்ஆல்பம்:

29-Mar-2013
1 / 20
குன்னூர் சிம்ஸ் பூங்கா கண்ணாடி மாளிகையில் வைக்கப்பட்டுள்ள மலர் தொட்டிகள் மத்தியில் நின்று போட்டோ எடுத்து மகிழும் சுற்றுலா பயணிகள்.
2 / 20
திருச்சுழி நுகர்பொருள் வாணிப கிடங்கு சுற்றுச்சுவர் சேதமடைந்துள்ளது. இதை சீரமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.
3 / 20
பெட்ரோல் சிக்கனம் அவசியம் தேவைதான்,அதுக்குனு..... இப்படியா. இடம்: தேனிகான்வென்ட் பஸ்ஸ்டாப்.
4 / 20
மேற்குதொடர்சி மலையில் பெய்து வரும் மழையால், தேனி அருகே முல்லைப்பெரியாற்றில் தண்ணீர் வரத்துவங்கியுள்ளது.
5 / 20
கொடைக்கானல் கோக்கர்ஸ்வாக்கில், ஏராளமான பள்ளி மாணவ மாணவியர் மலை தழுவும் மேகங்களின் அழகை கண்டு ரசித்தனர்.
6 / 20
திருவண்ணாமலை மாவட்ட விளையாட்டு அரங்கில் அரசு அலுவலர்களுக்கு, நடந்த விளையாட்டு போட்டியில், மகளிர் பிரிவில் நடந்த ஓட்டப்பந்தய போட்டியில், வெற்றி இலக்கை நோக்கி முன்னேறும் பெண்கள்.
7 / 20
ஆக்கலும், அழித்தலும்; "தானே' புயல் மறுவாழ்வு திட்டத்தில் உற்பத்தி செய்பட்ட வி.ஆர்.ஐ.-3 ரக முந்திரி கன்றுகள் பல மாதங்களாக இடம் மாற்றம் செய்யபட்டதில் சேதமடைந்த முந்திரிகன்றுகள். இடம்: மண்டல ஆராச்சி நிலையம் விருத்தாசலம்.
8 / 20
மஞ்சூர் அருகே பென்ஸ்டாக்கில் மின்வாரியத்திற்கு சொந்தமான காட்சி கோபுர பூங்கா சிதிலமடைந்துள்ளது.
9 / 20
மஞ்சூர் அருகே பரமுலா சுற்றுவட்டார பகுதியில் நூற்றுக்கு மேற்பட்ட ஏக்கரில் காரட் விவசாயம் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
10 / 20
ஊட்டி நகர மன்ற அரங்கில், பிரச்னைகளுக்கு தீர்வு காண வலியுறுத்தி,கவுன்சிலர்கள் ரவி மற்றும் வினோத ஆகியோர் தரையில் அமர்ந்து போராட்டம் நடத்தினர்.
11 / 20
ரோட்டில் அதிவேகத்தில் இயக்கப்படும் வாகனங்களை கண்டறிய உதவும் "ஸ்பீடு ரேடார் கன்'.
12 / 20
நீலகிரி மாவட்டம் குன்னூர் அருகே உள்ள வெலிங்டன் கன்டோன்மென்ட் பகுதி ஏரியில், படகு சவாரி துவக்கப்பட்டது. இதில் உல்லாசமாக பயணிக்கும் சுற்றுலா பயணிகள்.
13 / 20
பூதூர் நியாய விலைக் கடைக்கு, தாமதமாக வந்த விற்பனையாளரை, பொதுமக்கள் கடை உள்ளே வைத்து பூட்டி, முற்றுகையிட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.
14 / 20
நெம்மேலி புயல் பாதுகாப்பு மைய கட்டடத்தில், பல்கலைக்கழக கல்லூரி இயங்கி வருகிறது.
15 / 20
அரசு நெல் கொள்முதல் விற்பனை நிலையம் செயல்பாடு சரியில்லாததால், தனியார் நெல் மண்டிக்கு அனுப்ப நெல் மூட்டைகள் ஏற்றப்படுகின்றன.
16 / 20
அரும்பாக்கம், பூந்தமல்லி நெடுஞ்சாலை பசுமை தீர்ப்பாயம் அலுவலம் அருகே சென்டர் மீடியன் தடுப்புகளை விலக்கிவிட்டு வாகனங்கள் கண்டபடி சாலையை கடக்கின்றன.இதனால் விபத்து ஏற்படும் அபாய நிலை ஏற்பட்டுள்ளது.
17 / 20
ஆந்திர மாநிலம் அனந்த்பூரிலிருந்து சென்னை கோயம்பேடு சந்தைக்கு கொண்டுவரப்படும் கிர்ணி பழங்கள் கிலோ 20 ரூபாய்க்கு விற்கப்படுகிறது.டீசல் விலை உயர்வால் தற்போது பழங்களின் விலையும் கனிசமாக உயர்ந்து வருவதாக வியாபாரிகள் தெரிவித்தனர்.
18 / 20
தேனி மாவட்டம், மயிலாடும்பாறை அரசு உயர்நிலைப்பள்ளியில், அனைவருக்கும் கல்வி இயக்கம் சார்பில், 2009 ல் துவக்கப்பட்ட புதிய வகுப்பறை கட்டடப் பணிகள், நிதி உதவியின்றி, முழுமையடையாமல் பாதியில் நிறுத்தப்பட்டுள்ளது.
19 / 20
பழநி பங்குனி உத்திரத் திருவிழாவை முன்னிட்டு, இரவு நடந்த வாணவேடிக்கை ஒளியில், ஜொலித்த மலைக்கோயில்.
20 / 20
ராமநாதபுரம் மாவட்டம் துரத்தியனேந்தல் கிராமத்தில், காவிரி குடிநீர் சப்ளை இல்லாததால், வைகை ஆற்றில் பள்ளம் தோண்டி ஊறும் தண்ணீருக்காக காத்திருந்து, அகப்பையில் சேகரிக்கும் பெண்கள்.
Advertisement