தமிழகம்ஆல்பம்:

04-Apr-2013
1 / 20
அனைவருக்கும் கல்வி இயக்கம் சார்பில், இடைநிற்றல் மற்றும் பள்ளி செல்லா குழந்தைகளுக்கான விளையாட்டு போட்டிகள் வடகோவை மாநகராட்சி மேல்நிலைப் பள்ளியில் நேற்று நடந்தது. ஓட்டப் பந்தயத்தில், இலக்கை நோக்கி சீறிப்பாயும் மாணவர்கள்.
2 / 20
பல்லாவரம் அடுத்த திருநீர்மலை ரங்கநாதபெருமாள் கோவில் தேரோட்டம் நேற்று நடந்தது. சிந்தாதிரிப்பேட்டை, ஆதிகேசவ பெருமாள் நேற்று தேரில் வீதி உலா வந்தார்.
3 / 20
ஆர்.கே.பேட்டை ஒன்றியத்தை சேர்ந்த, பீமாரெட்டியூரில் பயிரிடப்பட்டுள்ள பாலக்கீரை.
4 / 20
கால்நடைகள் ஓய்வெடுக்கும் இடமாக மாறிவிட்ட, பயணியர் நிழற்குடை. இடம் : முனுசாமிநாயுடு கண்டிகை கிராமம், பள்ளிப்பட்டு.
5 / 20
பாலாறு குடிநீரை குடங்களில் எடுத்து கொண்டு, அபாயகரமான முறையில் தண்டவாளத்தை கடந்து செல்லும் பெண்கள்.
6 / 20
கோவை, மதுக்கரை காந்திநகரிலுள்ள பால விநாயகர், பத்ரகாளியம்மன் கோவிலில், 66ம் ஆண்டு குண்டம் திருவிழா நேற்று நடந்தது. இதில் சுவாமி வேட்டைக்கு சென்று பரண் ஏறும் விழாவில் பன்றியின் மேல் ஏறி அதனை வெட்டி அம்மனுக்கு காணிக்கையாக்கினர்.
7 / 20
இலங்கை தமிழர்களை பாதுகாக்கக் கோரி, கல்லூரி மாணவர்கள் நடத்திய போராட்டம் காரணமாக காலவரையின்றி மூடப்பட்ட கல்லூரிகள் நேற்று திறக்கப்பட்டன. தங்கள் சொந்த ஊரிலிருந்து கல்லூரிக்கு திரும்பிய மாணவியர். இடம்: ரேஸ்கோர்ஸ் நிர்மலா கல்லூரி.
8 / 20
வெலிங்டன் ராணுவ மையத்தில் நடந்த பேரிடர் மேலாண்மை முகாமில், தேசிய ஆணைய படையினர், விஷ வாயு, ரசாயன கசிவு மற்றும் கதிர்வீச்சால் பாதிக்கப்பட்டவர்களை மீட்கும் நடவடிக்கைகள் குறித்து செயல் விளக்கம் அளித்தனர்.
9 / 20
குன்னூர் சிம்ஸ்பூங்காவில் உள்ள நர்சரியில் மலர் தொட்டிகளை பராமரிக்கும் பணியில் ஈடுபட்ட ஊழியர்கள்
10 / 20
உடுமலை நகராட்சி ருத்ரப்பநகர் பகுதியில் போர்வெல் குழாய் பயன்பாடின்றி குப்பை நிறைந்து காணப்படுகிறது.
11 / 20
மாணவர்களுக்கு தொடர் விடுமுறை விட்டாச்சு. இனி நமக்கு ஜாலி தான் என்று காரைக்குடி அரசு ஐ.டி.ஐ.,முதல்வர் அலுவலக வாசலில், ஜாலியாக தூங்கும் நாய்.
12 / 20
காரனில் பராமரிப்பின்றி உள்ள விளையாட்டு மைதானம்
13 / 20
சூட்டை தணிக்கும் வெள்ளரிக்கும், வெயில் ஆகாதாம். தனக்கும், அதற்கும் சேர்த்து, குடைவாசத்தில் வியாபாரிகள். இடம்: ராமநாதபுரம் புது பஸ் ஸ்டாண்டு.
14 / 20
மஞ்சள் நீராட்டு விழாவை முன்னிட்டு, சாத்தூர் மாரியம்மன் கோயிலில், புஷ்ப அலங்காரத்தில் அருள்பாலித்த அம்மன்.
15 / 20
வறட்சியிலும் செழிப்பு: பருவமழை பொய்த்தாலும், அருப்புக்கோட்டை அருகே கண்டமங்கலத்தில், நிலத்தடி நீரால் பூத்து குலுங்கும் செண்டு பூக்கள்.
16 / 20
விருதுநகர் பராசக்தி மாரியம்மன் கோயில் பங்குனி பொங்கல் விழாவை யொட்டி, மின்னொளியில் ஜொலிக்கும் கோபுரம்.
17 / 20
தேனி அருகே, வீரபாண்டி முல்லை பெரியாற்றில், ஆபத்தை உணராமல் சிறுவர்கள் தண்ணீரில் விளையாடுகின்றனர்.
18 / 20
சின்னமனூரில் இருந்து குச்சனூர் செல்லும் ரோட்டில், சோலையாக காட்சியளிக்கும் புளிய மரங்கள்.
19 / 20
மழையில்லாததால் ஒட்டன்சத்திரம் பரப்பலாறுஅணை வறண்டு, வெடித்துள்ளது.
20 / 20
வரிசை கட்டிய வாத்துக் கூட்டம், தண்ணீரில் தன்னை பார்க்குதா, துள்ளும் மீனை எதிர் பார்க்குதா? இடம்: வண்டியூர் கண்மாய்.
Advertisement