தமிழகம்ஆல்பம்:

08-Apr-2013
1 / 20
மதுரை மீனாட்சி அம்மன் கோயில் வடக்கு சித்திரை வீதி பூங்காவில் வெட்டப்பட்ட மரக்கிளைகள், பிளாட்பாரத்தில் குவிக்கப்பட்டு, அகற்றப்படாமல் உள்ளதால், தீப்பிடிக்கும் அபாயம் உள்ளது.
2 / 20
தினமலர் நாளிதழ், டாக்டர் எம்.ஜி.ஆர்., கல்வி மற்றும் ஆராய்ச்சி நிறுவன பல்கலைக்கழகம் இணைந்து வழங்கிய வழிகாட்டி கருத்தரங்கில் பேசிய ஞானசம்பந்தம்.
3 / 20
கோடை வெயில் சுட்டெரிக்கும் வேளையில் நேற்று காலையில், சூரியன் பனி மேக மூட்டத்தில் நிலவுபோல் காட்சியளித்தது. இடம்: காஞ்சிபுரம் பாலாறு.
4 / 20
வெயில் காலங்களில் பொதுமக்களின் வெப்பத்தை தணிப்பதற்காக, தர்பூசணி பழ சீசன் துவங்கி உள்ளது. இடம்: ராயப்‌பேட்டை.
5 / 20
சென்னையில் வெயிலின் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்த வண்ணம் உள்ளதால் அதிலிருந்து தப்பிக்க, வாகனத்தின் கீழ் ஓய்வெடுக்கும் வாகன ஓட்டிகள். இடம் : பெருங்களத்தூர்.
6 / 20
கிழக்கு தாம்பரம் சேலையூர் ஏரி அருகே இருக்கும் குடியிறுப்புகளில் இருந்து கொட்டப்படும் பிளாஸ்டிக் கழிவுகள் மற்றும் ஏரியை ஆக்கிரமிப்பாளர் ஆக்கிரமித்து குடிசைகளை போட்டுள்ளனர். (உள்படம்) உபரி நீர் வெளியே செல்லும் மதகு அருகே ஆக்கிரமிப்பு செய்ய பள்ளம் தோண்டப்பட்டுள்ளது.
7 / 20
ஆர்.கே.பேட்டை பகுதியில், கோடைவெயிலுக்கு இதமாக விவசாய கிணற்றில் ஆனந்த குளியல் போடும் சிறுவர்கள்.
8 / 20
நீதி கேட்டு நெடும்பயணமா? இடம்-பீளமேடு பி-06 குற்றப்பிரிவு,மற்றும் போக்குவரத்துபிரிவு போலீஸ் ஸ்டேஷன்.
9 / 20
ஒளியில் மிளிரும் வானத்தின் வண்ணத்தால் ஜொலிக்கும் பூமி.இடம் :குறிச்சி
10 / 20
முதுமலை புலிகள் காப்பகத்தில் தொடரும் வறட்சியினால், மரங்களில் இலைகள் உதிர்ந்து வெறும் கிளைகள் உள்ள காட்சியும், மாலை நேரத்தில் ரம்மியத்தை ஏற்படுத்துகிறது.
11 / 20
என்ன ரகசியமோ இவைகளுக்குள்... காதை கடிக்கின்றது காதல் கிளிகள். இடம்: பொள்ளாச்சி, மாக்கினாம்பட்டி.
12 / 20
உடுமலை அமராவதி வனச்சரகத்திற்குட்பட்ட பகுதியிலிருந்து வெளியே வந்து மூணாறு ரோட்டை கடக்கும் யானை கூட்டம்.
13 / 20
கடலூர் அண்ணா விளையாட்டு அரங்கில் மாவட்ட ஸ்கேட்டிங் கைப்பந்து சங்கம் சார்பில் மாவட்ட அணி தேர்வு போட்டி நடந்தது.
14 / 20
கடலூர் கலெக்டர் அலுவலகத்தில் நேற்று இரவு 6 அடி நீளமுள்ள நாகப்பாம்பு பிடிபட்டது.
15 / 20
பாரம் தாங்குமா: விளையாட்டுக்கும் ஒரு அளவு வேண்டும். இடம்:ராமநாதபுரம் அருகே தொருவளூர்.
16 / 20
தாண்டிக்குடி-பண்ணைக்காடு ரோடு கடுகுதடியில், அடிக்கடி விபத்துக்கள் நிகழும் "பேவர்பிளாக் டைல்ஸ்' அமைத்த பகுதி.
17 / 20
போதிய மழையில்லாததால் பழநி வரதமாநதி அணை நீர்மட்டம் குறைந்துள்ளது.நேற்றைய நீர் மட்டம் 31 அடி. (மொத்த உயரம் 65 அடி).
18 / 20
லோயர்கேம்ப் பென்னிகுக் மணிமண்டபம் பச்சை விளக்குகளால் அலங்கரிக்கப்பட்டு, இரவு நேரத்தில் கண்ணுக்கு விருந்தளிப்பதாக உள்ளது.
19 / 20
விருவீட்டில் கடுமையான வெயிலுக்கு காய்ந்து போன அவரைக் கொடி.
20 / 20
மதுரை சூர்யாநகர் மீனாட்சியம்மன் நகரில் அமைக்கப்படும் மழை நீர் சேகரிப்பு கால்வாயில், அடி குழாய் மூழ்கியதால், பொதுமக்கள் பயன்படுத்த முடியாத நிலை உள்ளது.
Advertisement