தமிழகம்ஆல்பம்:

15-Apr-2013
1 / 20
மதுரை அருப்புக்கோட்டை ரோடு, சுப்பலட்சுமி லட்சுமிபதி அறிவியல் கல்லூரியில், தலைவர் டாக்டர் ஆர்.லட்சுமிபதி தலைமையில், நாகர்கோவில் ஸ்காட் கிறிஸ்டியன் கல்லூரியின் முன்னாள் மாணவர்கள்,அவர்களின் குடும்பத்தினர் சந்திக்கும் நிகழ்ச்சி நடந்தது.
2 / 20
புத்தாண்டை ஒட்டி, திருத்தணி மலைக்கோவில் காவடி மண்டபத்தில் மூலவர்,சண்முகர், வள்ளி, தெய்வானை ஆகியோருக்கு, 1008 பால்குடம் ஊற்றி அபிஷேகம் நடத்தப்பட்டது
3 / 20
ஓலை கொட்டகையில் இயங்கும் ஆதம்பாக்கம் காவல் நிலையம்.
4 / 20
தமிழ் புத்தாண்டான நேற்று, சென்னை மயிலாப்பூர் அப்பர்சாமி கோவில் தெருவில் உள்ள கடும்பாடி அம்மன் கோவிலில், 108 பால் குடங்களுடன் பெண்கள் ஊர்வலமாக வந்தனர்
5 / 20
கடம்பாடியில், இருளர்கள் வசித்து வரும் குடிசை வீடுகள்.
6 / 20
பொன்னேரி அடுத்த, பொன்நகர் பகுதியில், தனியார் பள்ளி மாணவியர், பானை மீது நின்று யோகாசனம் செய்து காட்டினர்.
7 / 20
ஆர்.கே.பேட்டை அடுத்த, கிருஷ்ணாகுப்பம் ஏரிக்கரை பகுதியில் உள்ள மின்கம்பம்.
8 / 20
கோடை விடுமுறையில், பகல் நேரத்தில் அதிக நேரம் மின்வெட்டு ஏற்படுவதால், கணினி விளையாட்டு, "டிவி' தொடர்களை தவிர்த்து, சிறுவர்கள் தெருவில் பாரம்பரிய விளையாட்டான பம்பரம் விளையாடுவதில் ஆர்வம் காட்டி வருகின்றனர்.
9 / 20
மதுரை வெள்ளலூரில் நடந்த வெற்றிலை பிரி திருவிழாவில், அனைத்து மக்களுக்கும் வெற்றிலையை பிரித்து கொடுக்கப்பட்டது.
10 / 20
கோவை வ.உ.சி., மைதானத்தில் தமிழ்நாடு அரசு கலை பண்பாட்டுத்துறை மற்றும் கதிர் பொறியியல் கல்லூரி சார்பில் நடந்த "கிராமிய மனம்' விழாவின் நிறைவு நாளான நேற்று நடந்த, கரகாட்டம் பார்வையாளர்களை கவர்ந்தது.
11 / 20
பெரியாண்டிபாளையம், அகஸ்தீஸ்வரர் கோவிலில் நேற்று சித்திரைக்கனி விழா நடந்தது. இதில் நடந்த கலைநிகழ்ச்சியில், நடனமாடி அசத்திய மாணவி விஷாலினி.
12 / 20
பொள்ளாச்சி அடுத்த ஊஞ்சவேலாம்பட்டி மதுக்கடைக்கு பார் வசதி இல்லாததால், "குடி'மகன்கள் கடைக்கு முன்னரே அமர்ந்து மது அருந்துவது அவ்வழியில் செல்லும் பொதுமக்களுக்கு பெரிதும் இடையூறாகஉள்ளது.
13 / 20
வறட்சியின் எல்லை... கோடை வெயிலின் தாக்கம் உச்சத்தை எட்டியதை உணர்த்துகிறது இந்த வறண்ட காடுகள். இடம்: பொள்ளாச்சி நவமலை ரோடு.
14 / 20
திருப்பூர், சிறுபூலுவப்பட்டி அமர்ஜோதி கார்டன் அருகே குழாயில் உடைப்பு ஏற்பட்டுள்ளதால், பல நாட்களாக தண்ணீர் வீணாகி வருகிறது.
15 / 20
கூடலூர் கவுண்டகொல்லி ஆதிவாசி கிராமத்தில் உள்ள வீடுகள் முன், மண்புழு உரம் தயாரிக்கும் தொட்டிகளை அமைக்கும் பணியில் ஈடுப்பட்டுள்ள உள்ளூர் மற்றும் வெளி நாட்டை சேர்ந்த தன்னார்வலர்கள்.
16 / 20
தமிழ் புத்தாண்டை முன்னிட்டு கோவை, காட்டூர் முத்துமாரியம்மன் கோவிலில் நேற்று அம்மனுக்கு மூன்றரை கோடி ரூபாய் நோட்டுகளால் அலங்கரித்து பக்தர்கள் தரிசனம் செய்தனர்.
17 / 20
பண்ருட்டி அடுத்த மணம்தவிழ்ந்தபுத்தூரில் விவசாயிகள் பயிரிட்டுள்ள சப்போட்டா மரத்தில் பழங்கள் கொத்து கொத்தாக காய்த்துள்ளன.
18 / 20
பக்தர்கள் ஊர்வலம்: சின்னசேலம் மாரியம்மன் கோவிலில் நடந்த கும்பாபிஷேகத்தை தொடர்ந்து பக்தர்கள் பால்குடம், தீச்சட்டி ஏந்தி திருவீதியுலா வந்தன
19 / 20
நரிக்குடி அருகே கொட்டக்காட்சியேந்தலில், தண்ணீருக்காக, காலி குடங்களுடன் காத்திருக்கும் பெண்கள்.
20 / 20
பழநி அருகே பொட்டம்பட்டியில் கண்டுபிடிக்கப் பட்ட பழங்கால ஓடுகள்.
Advertisement