தமிழகம்ஆல்பம்:

21-Apr-2013
1 / 20
தி.மு.க., தலைவர் கருணாநிதியும், தே.மு.தி.க., தலைவர் விஜயகாந்தும், நேற்று சந்தித்துக் கொண்டனர். இந்த சந்திப்பின் போது, பரஸ்பரம் நலம் விசாரித்தும் கொண்டனர்
2 / 20
உடல் நல குறைவால் காலமான தினத்தந்தி அதிபர் சிவந்தி ஆதித்தனாரின் உடலுக்கு அஞ்சலி செலுத்தும் தினமலர் நிர்வாகிகள் ராமசுப்பு,ஆதிமூலம் மற்றும் கிருஷ்ணமூர்த்தி.
3 / 20
மதுராந்தகம் அடுத்த அண்டவாக்கம் ஊராட்சி நுழைவு சாலையில் மறியலில் ஈடுபட்ட வேடவாக்கம் கிராம மக்கள்.
4 / 20
நக்கீரன்' பத்திரிகையின் 25ம் ஆண்டு வெள்ளி விழாவில், "நக்கீரன் 25' ஆவணப்படம்வெளியிடப்பட்டது. இதை, ஓய்வு பெற்ற நீதிபதி சந்துரு வெளியிட, திருச்சி செல்வேந்திரன்பெற்றுக் கொண்டார். உடன், நக்கீரன் கோபால், கவிஞர் தமிழச்சி தங்கபாண்டியன், எழுத்தாளர் மனுஷ்யபுத்திரன், பிரபாவதி, எழுத்தாளர் லேனா தமிழ்வாணன் மற்றும் பலர்.
5 / 20
என்னங்க அப்படி பார்க்கிறீங்க...? பலாப்பழ சீசன் ஆரம்பிச்சிருச்சுல, முதல்ல நாங்க டேஸ்ட் பார்க்கறோம்... அப்புறம்தான் உங்களுக்கு. இடம்: கல்லாறு பழப்பண்ணை, மேட்டுப்பாளையம்.
6 / 20
சின்னதடாகத்தில் உள்ள பெரிய பள்ளம் தரிசு நில மேம்பாட்டு திட்டத்தில் தூர்வாரப்பட்டுள்ளது.
7 / 20
பூமலூர் ஊராட்சி, நடுவேலம்பாளையம் பகுதி பெண்கள், குடிநீர் கேட்டு, காலி குடங்களுடன் நேற்று சாலை மறியலில் ஈடுபட்டனர்.
8 / 20
கோவை தமிழ்நாடு வேளாண்மை பல்கலைக்கழகத்தின் 102வது ஆண்டு விளையாட்டு விழா நடந்தது, இதில் 400 மீட்டர் ஓட்ட பந்தயத்தில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு கோவை மண்டல பாஸ்போர்ட் அதிகாரி சசிகுமார் பரிசு வழங்கினார்.
9 / 20
முதுமலை புலிகள் காப்பகத்தில் தொடரும் வறட்சியினால், போதிய உணவு, தண்ணீர் கிடைக்காமல் யானைகள் மெலிந்து காணப்படுகின்றன.
10 / 20
சிதம்பரம் நடராஜர் கோவிலில் கோலாலம்பூர் பரத நாட்டியப் பள்ளி மாணவிகளின்நாட்டியாஞ்சலி நிகழ்ச்சி நடந்தது.
11 / 20
மாவட்டத்தின்பல்வேறு பகுதிகளில்விளைந்த குண்டுமிளகாய் வத்தல் சிவகங்கையில் தரம் பிரிக்கப்பட்டு பல்வேறு இடங்களுக்கு அனுப்பி வைக்கப்படுகிறது.
12 / 20
ராஜபாளையம் புது பஸ் ஸ்டாண்ட் கட்டண கழிப்பறையில், கட்டண விவர போர்டு மறைக்கப்பட்டுள்ளதால், அதிக கட்டணம் கொடுத்து பயணிகள் செல்லும் நிலை உள்ளது. அடுத்த படம்:பயணிகளுக்கான இருக்கை சேதமடைந்துள்ளது.
13 / 20
அவசரம் வேண்டாமே...: விருதுநகர் ரயில்வே காலனி ஆளில்லா லெவல் கிராசிங் பகுதியில் ரயில் வரும்போது, இதுபோன்று வாகனத்தில் செல்வது, விபத்திற்கல்லவா வழிவகுக்கும்.
14 / 20
தேனியில் குடிநீர் தட்டுப்பாடு நிலவும் சூழ்நிலையில், இப்படி குழாய் உடைந்து வீணாவதை தடுத்தால், மக்களின் தாகம் தீர்க்கலாமே. இடம்:தேனி பங்களாமேடு.
15 / 20
பெரியகுளம் ஒன்றியம்,அ.வாடிப்பட்டியில் வறட்சியால் காய்ந்து போன கொய்யா மரங்கள்.
16 / 20
பழநி -திண்டுக்கல் ரோடு விருப்பாட்சி மேடு அருகே, கண்ணாடி துகள்கள் சிதறிக்கிடப்பதால் வாகனங்களின் டயரை பதம் பாக்கிறது.
17 / 20
அழகர்கோவிலில் திறக்கப்படாத பெரியாழ்வார் நந்தவனப் பூங்கா.
18 / 20
மதுரை அருகே நரசிங்கம்பட்டியில், 17ம் நூற்றாண்டில் அமைக்கப்பட்ட சாவடி. அடுத்த படம்: சிதைந்து வரும் ஓவியங்கள். கடைசி படம்: "மெகா சைஸ்' நடுகல்.
19 / 20
குமாரபாளையம் அரசு மருத்துவமனை வளாகத்தில் நடைபாதை சிமெண்ட் கற்கள் பெயர்ந்து, நோயாளிகளின் பாதங்களை பதம் பார்க்கும் வகையில் உள்ளது.
20 / 20
திருவண்ணாமலை மாவட்ட தானிப்பாடி அடுத்த சின்னையம்பேட்டை, ரெட்டியாபாளையம், மலையனூர் செக்கடி உள்ளிட்ட கிராமங்களில், ஐந்து நாட்களாக முகாமிட்டு, விவசாய பயிர்களுக்கு சேதம் விளைவித்த காட்டுயானை கூட்டத்தை, நேற்று காலை கிராமமக்கள் பட்டாசு வெடித்து அருகே உள்ள போந்தை ராயண்டபுரம் வனப்பகுதிக்கு விரட்டிச்சென்றனர்.
Advertisement