'நதிகளை மீட்போம்':80009 80009 என்ற எண்ணிற்கு மிஸ்டு கால் கொடுங்கள்

|

Details:

சென்னை:'நதிகளை மீட்போம்' என்ற வாசகத்துடன், ஆயிரக்கணக்கான தன்னார்வலர்கள் மற்றும் பொதுமக்கள், தமிழகம் முழுவதும், சாலையோரம் அமைதியாக நின்று, விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.



நாட்டில் அழியும் நிலையில் உள்ள நதிகளை மீட்க வேண்டும்; அவற்றுடன், மிகுதியான நீர் செல்லும் நதிகளை இணைத்து, அனைத்து நதிகளையும் வற்றாத நதிகளாய் மாற்ற வேண்டும் என்ற எண்ணம், தற்போது பரவலாக, அனைத்து தரப்பினர் மத்தியிலும் எழுந்துள்ளது.



இது தொடர்பாக, பொதுமக்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில், தன்னார்வலர்கள் இணைந்து, 'நதிகளை மீட்போம்' என்ற, இயக்கத்தை உருவாக்கி உள்ளனர்.







தமிழகத்தில் உள்ள, 'நதிகளை மீட்போம்' இயக்கத்தினர், நேற்று காலை, 8:00 மணி முதல், 11:00 மணி வரை, முக்கிய சாலை ஓரங்களில், நீல நிற உடையணிந்து, 'நதிகளை மீட்போம்; பாரதம் காப்போம்' என்ற, வாசகம் இடம் பெற்ற அட்டையுடன், அமைதியாக நின்றனர்.






இது குறித்து, அவர்கள் கூறியதாவது:






நதிகள் பற்றிய விழிப்புணர்வு மக்களிடம் குறைந்து வருகிறது. அதனால், பல நதிகள் மாசடைந்து, பயன்பாடற்ற நிலையில் உள்ளன. நதிகள் அழிந்தால், நாகரிகம் அழியும். இதை, நாட்டு மக்களுக்கு அறிவிக்கும் விதமாக, இந்த விழிப்புணர்வு நிகழ்ச்சி நடத்தப்படுகிறது. இதில், தமிழகம் முழுவதும், 10 ஆயிரத்துக்கும் அதிகமானோர் பங்கேற்றனர்.






இந்த இயக்கத்திற்கு, கிராமம், நகரம் வித்தியாசமின்றி, லட்சக்கணக்கானோர், 'மிஸ்டு கால்' கொடுத்து, ஆதரவு தெரிவித்தனர். மேலும், விவசாயிகள், விளையாட்டு வீரர்கள், அரசியல் தலைவர்கள், சினிமா பிரமுகர்கள், தொழிலதிபர்கள் என, பல துறையினரும் ஆதரவு



தெரிவித்துள்ளனர்.இவ்வாறு அவர்கள் கூறினர்.இதற்கு ஆதரவு தெரிவிக்க விரும்புவோர், 80009 80009 என்ற எண்ணுக்கு, 'மிஸ்டு கால்' கொடுக்கலாம்.






மேலும் விபரங்களுக்கு, சென்னை ஆர்வலர்கள், 83000 11000 என்ற எண்ணிலும், பிற மாவட்டங்களை சேர்ந்தோர், 83000 21000, 83000 16000, 83000 57000, 96002 97449, 86374 98133 ஆகிய, எண்களிலும் பேசலாம் என, 'நதிகளை மீட்போம்' அமைப்பினர் தெரிவித்துள்ளனர்





வாசகர் கருத்து (75)

Kaliyan Pillai - Chennai,இந்தியா
13-செப்-201712:12:00 IST Report Abuse

Kaliyan Pillaiசைதாப்பேட்டை பாலத்தில் நீர்வழித்தடத்தை ஆக்கிரமித்து கட்டப்பட்டுள்ள ஆயிரக்கணக்கான குடிசைகளில் ஒரு குடிசையை முதலில் உங்களால் மூதேவிகளே? போரூர் ஏரியில் சித்தாலப்பாக்கம் ஏரியில் ஆக்கிரமித்து கட்டப்பட்டுள்ள கட்டிடங்களை உங்களால் இடித்துத் தள்ளமுடியுமா? 80009 80009 க்கு மிஸ்டு கால் கொடுத்தால் நதிகள் இணைந்து பாலாறும் தேனாறும் ஓடிடுமா?

Rate this:
0 members
0 members
0 members
Stalin - Kovilpatti,இந்தியா
13-செப்-201710:31:34 IST Report Abuse

Stalinபித்தலாட்ட வேலை இது

Rate this:
0 members
0 members
1 members
Srinivasan Kannaiya - muscat ,ஓமன்
13-செப்-201708:00:00 IST Report Abuse

Srinivasan Kannaiyaநதிகள் ஓடும் பாதை முழுவதும் பாதுகாக்கப்பட்ட இடமாக அறிவிக்கவேண்டும்... ஆற்றின் கரைகளில் குடி இருப்பது..கரைகளில் மண் அள்ளுவது... கரைகளில் குப்பை கொட்டுவது... நதிகளில் கழிவு நீர் கால் வாய்களை இணைப்பது... ஆற்றில் மணல் அள்ளுவது தவிர்க்கப்படவேண்டும்...

Rate this:
0 members
0 members
0 members
oliver - karimun,இந்தோனேசியா
12-செப்-201714:20:54 IST Report Abuse

oliverGREAT COMEDY BY BJP & CO,

Rate this:
2 members
0 members
10 members
P. SIV GOWRI - Chennai,இந்தியா
13-செப்-201710:13:50 IST Report Abuse

P. SIV GOWRIநல்லது செய்வது எல்லாம் இப்போ காமெடியா...

Rate this:
0 members
0 members
0 members
Ajai Jeyan - Marthandam,இந்தியா
12-செப்-201714:12:09 IST Report Abuse

Ajai Jeyanஅறிவாளிகளை மிஸ் கால் கூடுகிறது "ரலி போர் ரிவர்ஸ்" திட்டம் சப்போர்டுக்கு முதலில் திட்டம் என்னனு தெரிஞ்சுக்குங்க ,எதையும் தெரியாம கமெண்ட் பண்ற அறிவாளிகள் நெறய இருக்காங்க

Rate this:
2 members
0 members
3 members
Jeyaseelan - Abu Dhabi,ஐக்கிய அரபு நாடுகள்
12-செப்-201711:39:43 IST Report Abuse

Jeyaseelanஅங்க அடிச்சா இங்க எப்படிடா வலிக்கும்...... missed கால் கொடுத்தா எப்படிடா நதிகள் இணையும்.....? இது அரசாங்கம் கொள்கை ரீதியாக ஓட்டு அரசியலுக்கு அப்பாற்பட்டு எடுக்கவேண்டிய முடிவு, அந்த அளவுக்கு மக்கள் மேலும் இந்தியாவின் எதிர்காலத்தின் மீதும் அக்கறை உள்ள தலைவன் இப்போதைய இந்திய அரசியலில் இல்லை.

Rate this:
2 members
0 members
15 members
Srinivasan Kannaiya - muscat ,ஓமன்
12-செப்-201708:20:01 IST Report Abuse

Srinivasan Kannaiyaஇந்த விவகாரமும் காலப்போக்கில் மிஸ்டு கால் ஆகிவிடும்... நீங்கள் மட்டும் எஞ்சி இருப்பீர்கள்...

Rate this:
1 members
0 members
12 members
Rangaraj - Coimbatore,இந்தியா
12-செப்-201708:11:45 IST Report Abuse

Rangarajசுவாமி நம்மூரு நொய்யல் ஆத்த கொஞ்சம் சுத்தம் செஞ்சுகொடுத்தா உங்களுக்கு கோடி புண்ணியம் கூற ஏறி கோழி புடிக்காதவன் வானம் ஏறி வைகுந்தம் போரேன்னானாம் அந்த கதை

Rate this:
1 members
0 members
11 members
R Sanjay - Chennai,இந்தியா
11-செப்-201700:49:42 IST Report Abuse

R Sanjayஇனிமே மத்திய மாநில அரசுகளுக்கு "missed" கால் "missed" கை தான். கட்சி வரை இந்த காட்சிகள் ஆட்சி முடிந்த பிறகு ஊனமாகவே இருக்கும்.

Rate this:
2 members
0 members
11 members
Dol Tappi Maa - NRI,இந்தியா
09-செப்-201716:14:33 IST Report Abuse

Dol Tappi Maaயமுனை ஆற்றில் இதே போல சீன் போட்ட ஸ்ரீ ஸ்ரீ ரவிசங்கர் (அது என்ன இரண்டு ஸ்ரீ ) 10 வருஷம் நாசமாக்குவதை ஒரு மாதத்தில் ஆகிவிட்டார் என்று 100 கோடி அபராதம் விதிக்க பட்டது . பிஜேபி உடனே ஒரு சட்டம் இயக்கி அந்த NGT (national green tribunal ) அதிகாரத்தை பிடுங்கி விட்டார் . இப்படி போகுது தேச பக்தி

Rate this:
12 members
0 members
52 members
மேலும் 64 கருத்துக்கள்...

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login via Dinamalar:
( OR )Login with

New to Dinamalar ? Create an account

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)

மேலும் செய்திகள்