ஈஷாவின் நதிகளை மீட்போம் பேரணி கோவையில் துவங்கியது

|

Details:

கோவை: "நதிகளை மீட்போம், பாரதம் காப்போம்' என்ற கோஷத்துடன்,"ஈஷா' சத்குருவின் விழிப்புணர்வு பிரசார பயணம், கோவையில் இன்று (3 ம் தேதி) துவங்கியது.


"நதிகளை மீட்போம் பாரதம் காப்போம்' என்ற கோஷத்துடன், நதிகளை காப்பாற்றுவது குறித்த விழிப்புணர்வு பிரசாரத்தை, "ஈஷா' மையம் துவங்கியுள்ளது. அழிந்து வரும் நதிகளை காக்க, மக்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்தும் நோக்கில், சத்குரு ஜக்கி வாசுதேவ், கோவையில் துவங்கி, டில்லி வரை, கார் பயணம் மேற்கொள்கிறார்.

இன்று (3ம் தேதி) மாலை, 4:00 மணிக்கு, கோவை வ.உ.சி., மைதானத்தில், விழிப்புணர்வு பயண துவக்க விழா நடந்தது. துவக்கவிழா தினமலர் இணையதளத்தில் நேரடி ஒளிபரப்பு செய்யப்பட்டது. துவக்க விழாவில் முன்னாள் கிரிக்கெட் வீரர் சேவாக், பெண்கள் கிரிக்கெட் கேப்டன் மிட்டலிராஜ், அமைச்சர் வேலுமணி, பஞ்சாப் கவர்னர் வி.பி.சிங்.,பந்த்னே, வேளாண் பல்கலை துணைவேந்தர் ராமசாமி, கார் பந்தய வீரர் நரேன்கார்த்திகேயன் மற்றும் ஆயிரக்கணக்கான ஈஷா தொண்டர்கள் பங்கேற்றனர்.இயற்கையை அழிக்க உரிமை இல்லை: சத்குரு

விழாவில் ஈஷா யோகா மைய நிறுவனர் சத்குரு பேசுகையில் இயற்கையை அழிக்க யாருக்கும் உரிமை இல்லை என்று குறிப்பிட்டார். மேலும் நதிகளை காப்பது அனைவரது கடமை என்றார். மத்திய அமைச்சர் ஹர்சவர்தன்பேசுகையில் நதிகளை காப்போம் என்று அனைவரும் ஒன்றுபட வேண்டிய நிலைக்கு நாம் தள்ளப்பட்டுள்ளோம். அந்த அளவிற்கு நதிகள் மீதான அக்கறை குறைந்துள்ளது என்றார்.

30 நாட்கள் பயணம் வரும், அக்.2ல், டில்லியில் நிறைவடைகிறது. இந்தியா முழுவதும் உள்ள நதிகளை மீட்டு, கரையின் இருபுறமும், ஒரு கி.மீ., அகலத்துக்கு, மரக்கன்றுகள் நட்டு வளர்க்கவும் ஆலோசனை வழங்கப்பட்டுள்ளது. நதிகளை காக்கும் இப்பயணத்துக்கு, 80009 80009 என்ற எண்களுக்கு "மிஸ்டு கால்' கொடுத்து, மக்கள் தங்களின் ஆதரவை தெரிவிக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.வாசகர் கருத்து (16)

balakrishnan - coimbatore,இந்தியா
04-செப்-201709:49:55 IST Report Abuse

balakrishnanஇவரின் நோக்கம், மதிக்கப்பட வேண்டும், நதிகளை காக்கவேண்டும் என்ற அக்கறை இவருக்கு மட்டும் இருந்தால் போதாது, அனைவருக்கும் இருக்க வேண்டும் எல்லா நதிகளிலும் சாக்கடை கழிவுகள், சாயக்கழிவுகள், கலப்பது ஒரு தொடர் நடவடிக்கை ஆகிவிட்டது, பிளாஸ்டிக் கழிவுகளால் வேறு அழிவு, அரசியல்வாதிகளால், அவர்களின் ஆதரவோடு மக்களின் ஆக்கிரமிப்பு, மணல் அள்ளி நாசம் செய்வது, தண்ணியே இல்லாத குளத்தில் வழக்கமே இல்லாத விநாயகர் சிலை கரைப்பு என்ற ஒரு புது நடைமுறை மூலம் பெரிய மனிதர்களே வருட வருடம் லட்சக்கணக்கான சிலைகளை கரைத்து நாசம் செய்வது, எப்படி காப்பாற்றமுடியும், தேம்ஸ் நதி ஒரு காலத்தில் கங்கை நதி போல மிகவும் மோசமாக தான் இருந்தது, கட்சி வேறுபாடின்றி, அந்த மக்கள் ஒட்டுமொத்த பங்களிப்புடன் இன்று எப்படி மிளிர்கிறது, அதெல்லாம் நம் நாட்டில் நடக்குமா

Rate this:
0 members
0 members
1 members
grg - chennai,இந்தியா
04-செப்-201709:38:44 IST Report Abuse

grgroot cause of all problems is population increase. no politician is talking about this,

Rate this:
0 members
0 members
1 members
Srinivasan Kannaiya - muscat ,ஓமன்
04-செப்-201708:25:38 IST Report Abuse

Srinivasan Kannaiyaபூனைக்கு யார் மணி கட்டுவது என்ற நிலையில்... ஈஷா மணியை கையில் எடுத்து இருக்கிறது... பூனை கழுததை கொடுக்கிறதா பார்ப்போம்...மணி ஒலிக்கிறதா என்று பார்ப்போம்...

Rate this:
0 members
0 members
0 members
vbs manian - hyderabad,இந்தியா
04-செப்-201708:23:29 IST Report Abuse

vbs manianThe intension is good but it will not materialise in practice.This project wants a one kilometer corridor adjoining the rivers. But no farmer will part with his land near the rivers.Farmers believe only in meaningless agitations but will not cooperate with anything helpful on the ground.

Rate this:
0 members
0 members
0 members
ramasamy naicken - Hamilton,பெர்முடா
04-செப்-201701:07:16 IST Report Abuse

ramasamy naickenஇவர் தமிழ்நாட்டின் ராம் rahim.

Rate this:
0 members
0 members
0 members
S.ANAND -  ( Posted via: Dinamalar Android App )
04-செப்-201700:39:32 IST Report Abuse

S.ANANDநல்ல முயற்சிதான்.எல்லோரும் இந்த நல்ல செயலுக்கு ஆதரவு தரவேண்டும்.

Rate this:
0 members
0 members
0 members
Suman - Mayiladuthurai ,இந்தியா
03-செப்-201719:46:57 IST Report Abuse

Sumanவாழ்த்துக்கள்...

Rate this:
3 members
0 members
10 members
JEYAM தமிழன் JEYAM - Tamil Nadu,இந்தியா
03-செப்-201719:27:55 IST Report Abuse

JEYAM தமிழன் JEYAMநீங்கல்லாம் என்னதான் நல்லது செய்யுற மாதிரி நடிச்சாலும் உங்க மூஞ்சி காட்டிகொடுத்திடுதே... ரவிஷங்கருக்கு போட்டியா இவரு புறப்பட்டிருப்பாரு ன்னு நினைக்கிறேன்... ஒரு பத்ம விருதை அடுத்த வருடத்துக்கு புக் பண்ணியாச்சு போல....

Rate this:
16 members
0 members
16 members
Mal - Madurai,இந்தியா
03-செப்-201719:27:44 IST Report Abuse

MalGood start... Sir...

Rate this:
2 members
0 members
7 members
ilicha vaayan - chennai,இந்தியா
03-செப்-201719:25:52 IST Report Abuse

ilicha vaayanஇவருக்கு நல்லா காசு வசூல் ஆகும் மேலும் மத்திய அரசில் ஏதும் பதவி அல்லது ஆதாயம் கிட்டும்

Rate this:
5 members
0 members
9 members
மேலும் 6 கருத்துக்கள்...

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login via Dinamalar:
( OR )Login with

New to Dinamalar ? Create an account

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)

மேலும் செய்திகள்